எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 24, 2012

ஃப்ரூட் சாலட்–9: சிறையிலும் படிக்கலாம், ராஜா காது கழுதை காது
இந்த வார செய்தி: படிப்பதற்கு மனது தான் அவசியம். வயதோ, இருக்குமிடமோ முக்கியமானதல்ல.   அந்த எண்ணமிருந்தால் சிறையிலிருக்கும்போது கூட முடியுமென நிருபித்திருக்கிறார் கொல்கத்தா அலிப்பூர் சிறையில் 18 வருடங்களாக இருக்கும் உத்தன் பால்

பதினெட்டு வருடங்களுக்கு முன் [B]பர்த்வான் நகரில் நடந்த ஒரு அரசியல் தகராறில் ஒரு வியாபாரியைக் கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதியான இவர் எம்.. பட்டம் பெற்றுள்ளார்.  நேதாஜி சுபாஷ் திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்திய பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாது தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்

கடந்த பதினெட்டு வருடங்களில் சிறையில் இவர் காட்டிய நன்னடத்தையாலும், எல்லாவிதமான விதிமுறைகளைக் கடைப்பிடித்ததாலும் இவரை விடுவிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருந்தாலும் [B]பர்த்வான் போலீஸ் இது ஒரு மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என விடுதலை செய்ய மறுக்கிறதாம்.  இதை விடக் கொடுமை என்னவெனில் முனைவர் பட்டம் பெற முயற்சி செய்த இவருக்குக் கிடைத்த தோல்வி தான்

ரபீந்த்ர பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற எழுதிய தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணலிலும் தேர்ச்சி பெற்று காத்திருந்த இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.  காரணம் இவர் ஒரு ஆயுள் கைதி என்பது தானாம்.  படிக்க ஆசைப் படுபவருக்கு கிடைக்கும் மரியாதை இது தான்.  அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கச் சொன்னால், பல பல்கலைக்கழகங்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரும்

இந்த சிறைச்சாலையில் இவரைப் போலவே இன்னும் சில படிப்பாளிகள் இருக்கிறார்கள்.  உத்பால் மண்டல் எனும் 49 வயதுக்காரர் இரண்டு எம்.. பட்டங்களும், பிஸ்வநாத் சர்கார் எனும் 38 வயது நபர் ஒரு எம்.. பட்டமும் பெற்றவர்கள்.  இதில் சர்கார் தனது இரண்டாவது எம்.. பட்டத்திற்கு முயற்சித்து வருகிறார்.  இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு 74 வயது இளைஞர் ஒருவர் சிறைக்கு வரும்போது ஒரு எம்.. டிகிரியுடன் வந்தவர், இரண்டாவது எம்.. பட்டத்தினை சிறையில் முடித்திருக்கிறார்.  இப்போது மூன்றாவதாக வங்காள இலக்கியத்தில் எம்.. பட்டம் பெற முயற்சித்து வருகிறாராம்.

ஒரு சிறிய தடுமாற்றத்தினாலோ, கோபத்தினாலோ குற்றங்கள் புரிந்து, சிறையில் திருந்தி வாழும் இவர்களுக்கு சீக்கிரமே விடிவுகாலம் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?

இந்த வார முகப்புத்தக இற்றை:உன் மௌனம் அழகானது தான்எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்தாள் பிரித்து மிட்டாய் பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தோடு!

ராஜா காது கழுதைக் காது!சிறுவயதில் ஒரு படம் பார்த்திருக்கிறேன். தங்கமலை ரகசியம் படத்திலென நினைக்கிறேன். அந்தப் படத்தில் ஒட்டுக் கேட்பவர்களுக்கு காது கழுதைக் காது மாதிரி ஆகிவிடும்.  ராஜாவுக்கே ஒரு முறை கழுதைக் காது ஆகிவிட, “ராஜா காது கழுதைக் காது எனச் சொல்வார்கள் எல்லோரும்.  சரி அது எதுக்கு இப்பன்னு கேட்கறீங்களா, எங்கேயாவது பயணம் செய்யும் போது, பேருந்திற்காகக் காத்திருக்கும்போது பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதைக் கேட்டால் சில சமயங்களில் நல்ல விஷயங்கள் கிடைக்கும்.  அப்படி கேட்ட சில விஷயங்கள் இப்பகுதியில் அவ்வப்போது வெளி வரும்இந்த வாரம்

ஒரு நாள் காலணிக்கு பாலிஷ் போடக் கொடுத்துக் காத்திருந்தேன். அங்கே என்னைப் போலவே வேறொருவரும் காத்திருக்கும்போது அலைபேசியில் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்ஹிந்தியில் அவர் பேசியதன் தமிழாக்கம்…. 

நீ யாரைப் பத்தி வேணா சொல்லு, ஆனா எங்க அம்மாவைப் பத்தி ஒண்ணும் சொல்லாத, ஏன்னா அவங்க உலகத்திலேயே நம்பர் 1 அம்மா

இந்த வார குறுஞ்செய்தி: நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களை எப்போதும் பார்க்கமுடியாத போதிலும், நமக்குத் தேவையானபோது நமக்காக இருப்பார்கள்!

படித்ததில் பிடித்தது:ஒரு ஏழை மனிதன் கடவுளிடம் கடவுளே, எனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், நான் அதில் பாதியைத் தருவேன்என எப்போதும் வேண்டிக் கொண்டே இருப்பார்.  எந்த பிரார்த்தனை தலத்துக்குச் சென்றாலும் இதே வேண்டுதல் தான். கடவுள் இவரது வேண்டுதலுக்கு செவிமடுப்பதாய்த் தெரியவில்லை. இப்படி வேண்டுதல் செய்து வரும் போது ஒரு நாள் அவருக்கு ஒரு ஐம்பது பைசா நாணயம் கீழே கிடைத்தது.  கீழே குனிந்து கையில் எடுத்த அவர் சொன்னார், “கடவுளே உனக்கு நன்றி. உன் பாதியை நீயே வைத்துக் கொண்டு என் பாதியை எனக்குத் தந்து விட்டாயே, என்னே உனது கருணைஎன்று சொல்லியபடியே சென்றார்

மீண்டும் வேறொரு ஃப்ரூட் சாலட்டோடு சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. மனம் திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசாங்கமும் / நீதிமன்றமும் முன்வரவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் நல்ல கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 2. வித்தியாசமான சுவையான செய்திகள்.

  நம்பர் 1 அம்மா - இப்பல்லாம் கேட்க அரிதானது. ஆச்சர்யம்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   //நம்பர் 1 அம்மா - இப்பல்லாம் கேட்க அரிதானது// அதனால் தான் பகிர்ந்தேன்.

   Delete
 3. A very good post, so much information. I appreciate your patience and eagerness, in writing.

  Namaskaram

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி பட்டு ராஜ்....

   தொடர்ந்து வருகை புரிய வேண்டுகிறேன்.

   Delete
 4. சுவையான புரூட்சலட்.  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 5. படிப்பதற்கு மனது தான் அவசியம். வயதோ, இருக்குமிடமோ முக்கியமானதல்ல.


  கனிந்த சுவையான ஃப்ரூட் சாலட்,,,பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. ராஜக்காது கழுதைக்காது .. பகுதிக்கு தலைப்பு சூப்பர்..:)

  ReplyDelete
  Replies
  1. தலைப்பினை ரசித்தமைக்கு நன்றி முத்துலெட்சுமி.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. அருமையான பதிவு. அபூர்வமான செய்திகள். தொடரட்டும் உங்கள் பணி / பாணி. வாழ்த்துகள்.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் மகிழ்ச்சியூட்டும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 8. அனைத்துப் பகுதிகளும் அருமை. ராஜா காது கழுதைக் காது - புதிய பகுதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. //ராஜா காது கழுதைக் காது - புதிய பகுதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.//

   தங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி கணேஷ்.

   தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 9. ”ராஜா காது கழுதைக்காது” ஜோக் “தங்கமலை ரகசியம்” என்ற சிவாஜி படத்தில் தான். நான் என் சிறுவயதில் மிகவும் ரஸித்துச் சிரித்த ஜோக் இது.

  ராஜா தன் காதை பிறர் பார்க்காமல் இருக்க டர்பன் கட்டியிருப்பார்.

  அப்படியும் அவருக்கு தலைமுடி வெட்டும் ஒருவனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்துவிடும். இரகசியத்தை யாரிடமாவது சொன்னால் அந்த நாட்டு ராஜா மூலம் அவன் தலை சீவப்படும் எனச் சொல்லி அவனை எச்சரித்திருப்பார்கள்.

  இந்த இரகசியத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால் அவனுக்கு தலையே வெடித்துவிடும் போல ஆகிவிடும். சொல்லாததால் அந்தக் காமெடியன் வயிறும் வீங்கிப்போகும்.

  பிறகு ஒரு குழிவெட்டி அந்தக்குழியிடம் ரகசியத்தைச் சொல்லிவிட்டு, மரம் நடுவான், அவன்.

  அந்த மரம் வளர்ந்து அதிலிருந்து ஓர் மத்தளம் செய்யப்படும்.

  அரச சபை நிகழ்ச்சியொன்றில் அந்த மத்தளத்தை அடிக்கும் போது ’ராஜா ... காது ... கழுதைக் ... காது’ என ஒலி வரும்.

  கோபத்தில் அந்த ராஜா மத்தளத்தை வாங்கி கீழே போட்டு உடைப்பார்.

  உடைந்த அதன் ஒவ்வொரு தூள்களும் ’ராஜா காது கழுதைக் காது’ என பலக்கக் கத்துவதாகக் காட்டுவார்கள். ஒரே சிரிப்பான காட்சி அது.

  10 வயதில் பார்த்த இந்தப்படம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

  அந்தப்படத்தில் குழந்தையான சிவாஜியை காட்டிலுள்ள யானைகளே வளர்க்கும்.

  இன்றைய தங்கள் பதிவில் அனைத்தும் அருமை, வெங்கட்ஜி. vgk

  ReplyDelete
  Replies
  1. தங்கமலை ரகசியம் - சிறு வயதில் பார்த்திருக்கிறேன். உங்கள் நினைவாற்றல் அசத்துகிறது...

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

   Delete
  2. இது பழைய கிரேக்க/ஏசாப் கதை. மைதாஸ் அரசனைப் பற்றியது.
   தமிழ்ல சுட்டுட்டாங்களா? பலே.

   Delete
  3. ஓ... அந்தக் காலத்திலேயே சுடறப் பழக்கம் இருந்துருக்கு! தகவலுக்கு நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 10. ஃப்ரூட் சாலட் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி!

   Delete
 11. ஃபுரூட் சாலட் நல்ல சுவை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 12. படிப்பதற்கு மனதிருந்தால் போதும் என்பதை நிருபித்த உண்மைகளை பதிவிட்டுள்ளீர்கள் பாராட்டுக்கள்.ராஐ◌ா காது பத்தி எனது பாலர் வயதிலும் கேட்டதுண்டு.

  படித்தலில் பிடித்தது எனக்கும் பிடித்திருக்கு.வாழ்த்துக்கள் சொந்தமே!சுவை அருமை!சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிசயா.

   Delete
 13. முதல் செய்தி நல்ல பாசிட்டிவ் நியூஸ்.
  இற்றை அழகு
  எல்லோருக்குமே அவங்கம்மா தங்கம்மாதான் இல்லையா!
  மனிதன் தன் சாமர்த்தியத்தைக் கடவுளிடமும் காட்டுகிறான்தான்!

  ReplyDelete
  Replies
  1. //முதல் செய்தி நல்ல பாசிட்டிவ் நியூஸ்.//

   எங்கள் பக்கத்திலும் பாசிட்டிவ் படித்து ரசித்தேன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. ஃப்ரூட் சாலட் செய்திகள் தொகுப்பு சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ ஆசியா உமர்.

   Delete
 15. Replies
  1. update என்பதைத் தான் இற்றை என்று சொல்கிறார்கள். வார்த்தை எடுத்தது தில்லி பதிவர் முத்துலெட்சுமி அவர்களின் தளத்திலிருந்து....

   தங்களது வருகைக்கு நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 16. அழகிய பொருத்தமான தலைப்பு வெங்கட்.. ஃப்ரூட் சாலட்... இனிப்பும், ச்சட்ப்பட் மசாலா போன்ற விறுவிறுப்பும் குறையவில்லை....

  தவிர்க்க இயலா கோபத்தில் வெளிபடும் வார்த்தைகள் எதிரில் இருப்போரின் மனதை குத்தி கொன்றுவிடும்.. அதோடு அந்த நட்போ அல்லது உறவோ பிரிந்துவிடும் அபாயமும் உண்டு... அதே கோபத்தில் கத்தி எடுத்து குத்தி விட்டாலோ உயிர் போகும் அபாயம் உண்டு... சரி கோபத்தில் செய்தவை என்றாலும் குற்றம் குற்றம் தான் என்று நக்கீரர் பாணியில் சொல்லி தண்டனையையும் ஏற்று சிறைக்கு சென்று வெந்து வேகாததை தின்று அங்கே தரும் வேலைகளை செய்து அரட்டை அடித்து நினைவுகளை (வேண்டியதை வேண்டாததை) அசைப்போட்டு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல குணங்களையும் மறந்து இன்னும் அக்கம் பக்கம் இருப்போரின் தீய சகவாசத்தில் இன்னும் கொஞ்சம் தீயதை கற்றுக்கொண்டு ரௌடியாக வெளியேறுவார் சிறையில் இருந்து என்பதை பொய்யாக்கிவிட்டது உங்களின் இந்த கட்டுரை வெங்கட்.... தவறை ஒப்புக்கொண்டு சிறைக்கு சென்றாலும் அங்கு படித்து பட்டமும் பெற்று நன்னடத்தையால் மன்னிப்புப்பெற்று வெளியே வந்து மறுவாழ்வு வாழ அவருக்கு இந்த வாய்ப்பு கண்டிப்பாக நல்லது... அரசியல்வாதிகளுக்கு என்னென்னவோ பட்டங்கள் கொடுக்கின்றனர் அவர்கள் மக்களுக்கு நன்மை செய்தாரோ இல்லையோ.... இது போன்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு முனைவர் பட்டம் தருவதில் தவறில்லை... அதை உரக்கச்சொல்லி இவருக்காக பரிந்துரைப்போர் யாரேனும் உண்டோ அதும் தெரியவில்லை... ஆனால் எல்லாத்தையும் தூக்கி சாப்பிடறமாதிரி இளைஞர் 74 வயதுள்ளவர் 2 பட்டங்கள் பெற்றுவிட்டு இப்ப மூன்றாவதாக வங்காளத்தில் எம் ஏ பட்டத்துக்கு படித்துக்கொண்டிருப்பவருக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.. ஆச்சர்ய துளி பெருகுகிறதுப்பா... படிக்க வயசோ உடல் அசௌகரியமோ அவசியமில்லைன்னு நச் நு சொல்லிட்டுதே உங்க கட்டுரை... ஹாட்ஸ் ஆஃப் வெங்கட்.... முன்னேறவேண்டும் திருந்தி நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்போருக்கு முன்னுதாரணமாய் திகழும் இதுப்போன்றோருக்கு என் சல்யூட்... பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் வெங்கட்...


  //உன் மௌனம் அழகானது தான்… எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன் – தாள் பிரித்து மிட்டாய் பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தோடு!//

  அழகிய உதாரணம் ரசிக்க வைத்தது...

  // ராஜா காது கழுதை காது //

  நானும் இந்த படம் டிவில ஸ்கூல் படிக்கும்போது பார்த்தது.. விழுந்து புரண்டு சிரித்து சிரித்து அம்மாவிடம் தலையில் கொட்டு வாங்கினது நினைவுக்கு வருகிறது... நாவிதன் அந்த ரகசியத்தை தன்னோடு வைத்துக்கொள்ளாமல் தன் மனைவியிடம் சொல்ல அந்த மனைவியோ அந்த ரகசியம் சொல்லலன்னா தன் வயிறே வெடித்துவிடும் என்ற அச்சத்துடன் குழி தோண்டி அதைச்சொல்ல அது மரமாகி அந்த மரத்தில் செய்த மத்தளம் தட்டும்போது ராஜா... காது....கழுதை... காது....

  ராஜா அதிர்ச்சியாகி அதை வாங்கி போட்டு உடைக்க ஒவ்வொரு துண்டும் கதறும் ராஜா காது கழுதை காது என்று வேகமாக.. என்ன ஒரு சிந்தனை க்ரியேட்டிவிட்டி அந்த டைரக்டருக்கும் வசனகர்த்தாவுக்கும் எல்லோரையும் ரசிக்க வைத்த மிக அருமையான நகைச்சுவை காட்சி அது...

  குறுஞ்செய்தி மிக அருமை.. உண்மை கூட...

  படித்ததில் பிடித்தது....

  மனிதன் இறைவன் கிட்டயே தன் சாதுர்யத்தை காட்டிட்டான் பார்த்தீங்களா...

  ஃப்ரூட் சாலட் ரசிக்கவும் வைத்தது ருசிக்கவும் வைத்தது...

  பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வெங்கட்... தொடர அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete
 17. அப்பப்பா.... உங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் சகோ... ஒவ்வொரு பகுதியையும் ரசித்து தங்களது இனிய கருத்துரைகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.

  இனியும் தொடர்ந்து வந்து உங்கள் கருத்துகளை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, வருகை தந்து கருத்துகளைச் சொன்னதற்கு நன்றியும் சகோ மஞ்சுபாஷிணி.

  ReplyDelete
 18. காலை நேர‌ உற்சாக‌த்தை அதிக‌ரித்த‌து உங்க‌ ப்ரூட் சால‌ட்!
  சூழ‌ல் இட‌ம் கொடாம‌லும் ப‌டிப்பின் மேலான‌ ஆர்வ‌மிருப்ப‌வ‌ர்க‌ள் போற்ற‌த்த‌க்க‌வ‌ர்க‌ள். கால‌மும் நேர‌மும் அவ‌ர்க‌ளுக்கு கைகொடுக்க‌ பிரார்த்திப்போம். ராஜா காது க‌ழுதைக் காது த‌லைப்பு வெகு பொருத்த‌மான‌ அழ‌கு. முக‌ப்புத்த‌க‌ வ‌ரிக‌ள் ப‌ட‌ம் போன்றே மென்ன‌ழ‌கு. குறுஞ்செய்தி தெம்ப‌ளிப்ப‌தாய். முடிப்பில் முறுவ‌ல் நிர‌ந்த‌ர‌மாய் இன்று முடிய‌ இருக்க‌ட்டும்.

  ReplyDelete
  Replies
  1. //சூழ‌ல் இட‌ம் கொடாம‌லும் ப‌டிப்பின் மேலான‌ ஆர்வ‌மிருப்ப‌வ‌ர்க‌ள் போற்ற‌த்த‌க்க‌வ‌ர்க‌ள்.//

   உண்மை சகோ...

   பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 19. சமீபத்தில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகனும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற செய்தி வந்துள்ளது. திஹார் போன்ற சிறைச்சாலைகளில் கைதிகளால் நடத்தப்படும் தொழிற்சாலைகளும் சிறப்புர நடைபெற்று வருகின்றன.
  அவர்களும் மனிதர்கள் தானே. என்ன அவர்கள் குற்றம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மற்றவர்கள் செய்த குற்றம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  நல்ல கலவை....

  ReplyDelete
  Replies
  1. சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் பலர் குற்றவாளிகளே இல்லை! குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி தானே....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு... [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 20. தங்கமலை ரகசியம்னு ஒருபடம் வந்திருக்கா?? குழந்தைங்க படமா?? :))))

  நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களை எப்போதும் பார்க்கமுடியாத போதிலும், நமக்குத் தேவையானபோது நமக்காக இருப்பார்கள்!//

  இது ரொம்பப் பிடிச்சது. ராஜா காது கழுதைக் காது நல்லாவே ரசிச்சேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 21. ஃப்ரூட் சாலட் சாப்பிட்டுட்டே படிச்சேன் என்பது சிறப்புச் செய்தி. :))))))

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் ஒரு ப்ளேட் ஃப்ரூட் சாலட் பார்சல் அனுப்புங்க கீதாம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....