வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

ஃப்ரூட் சாலட் – 8 – உயர்ந்த குடும்பம் – காதலிக்கு பரிசு:



[பட உதவி: கூகிள்]

உயர்ந்த குடும்பம்:  சராசரி மனிதன் ஐந்தரை அடி முதல் ஆறடி வரை இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ஆறடிக்கு மேல் இருந்தால் – அதுவும் குடும்பத் தலைவர் 7 அடி 1.5 அங்குலம் உயரமாக இருந்தால்?

இப்படி ஒரு குடும்பம் புனே நகரத்தில் இருக்கிறது.  பாரத மாநில வங்கியில் பணி புரியும் ஷரத் குல்கர்னியின் உயரம் 7 அடி 1.5 அங்குலம், அவரது மனைவி 6 அடி 2.6 அங்குலம்.  தாய் – தந்தையர் இத்தனை உயரமாக இருக்க, குழந்தைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த உயர்ந்த தம்பதிகளுக்கு இரு பெண்கள் – 6 அடி 4 அங்குலம் மற்றும் 6 அடி 1 அங்குலம்!

திரு குல்கர்னி அவர்கள் தனக்கு திருமணம் நடந்த கதையை சுவையாக இப்படி சொல்கிறார்: 

"என்னுடைய உயரத்தின் காரணமாக தகுந்த பெண்ணே கிடைக்காது போக, திருமணமே வேண்டாம் என முடிவு செய்திருந்தேன்.  நாட்டின் பல பாகத்திற்கும் கூடைப்பந்து விளையாடச் செல்வது வழக்கம். இப்படித்தான் ஒரு நாள் நடந்து வந்தபோது, எதிரே  வந்த பாட்டி என் உயரத்தினைப் பார்த்தவுடனே கேட்ட முதல் கேள்வி – “உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்பது தான்! 

நான் இல்லை என்று சொன்னவுடன், தனது பேத்தி 6 அடிக்கு மேல் எனச் சொல்லி, அவளைச் சந்திக்க பெற்றோருடன் வீட்டுக்கு அழைக்க, எனக்குதான் ஏனோ விருப்பமில்லாது, நண்பர்கள் வற்புறுத்தவே  தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். சில நாட்கள் கழித்து என் பெற்றோர்கள் அவர்களை அழைத்து பெண்பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்ய, அப்புறமென்ன? முதல் பார்வையிலேயே “கண்டதும் காதல்!”…. 

திருமணம் முடிந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் குல்கர்னி உயரத்தினால் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் நிறைய என்று சொல்கிறார் .  பொதுவாகவே ரயில், பேருந்துகள், கார் என எதிலும் பயணிக்க முடியாமல் ஸ்கூட்டரில் தான் பயணிக்க முடிகிறது, காலணிகள், உடைகள் எல்லாம் தங்களுக்காகவே தயார் செய்ய வேண்டியிருப்பதும் ஒரு விதத்தில் கஷ்டம் தான் என்றும் கூறுகிறார்.. 

இந்த உயர்ந்த குடும்பம் பற்றிய குறிப்பு “Limca Book of Records”-ல் வந்திருக்கிறது.  “Guinness Book of World Records” – ல் உயர்ந்த குடும்பம் என்ற ஒரு பிரிவு இல்லாததால் இன்னும் இவர்கள் பெயர் வரவில்லை.  இந்தப் பிரிவினை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறது.  சேர்ந்தால் நிச்சயம் கின்னஸில் இவர்கள் பெயர் வரும் நாள் தொலைவில் இல்லை!

இந்த வார முகப்புத்தக இற்றை:


காதலி:  என்னோட பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரப்போறீங்க?
காதலன்:  அதோ அங்க பாரு சிவப்பு கலரில் ஒரு கார் நிக்குது!...
காதலி: வாவ்…  ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு….
காதலன்:  அந்த சிவப்பு கலர்-ல உனக்கு ஒரு லிப்ஸ்டிக் வாங்கிட்டு வந்திருக்கேன்…. 

இந்த வாரக் காணொளி:

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாங்க – அதுக்காக இப்படியா?



இந்த வார குறுஞ்செய்தி: 



[பட உதவி: கூகிள்]

Lovely thing to learn from water:  “Adjust yourself in every situation and in any shape.  But most importantly always find out your own way to flow!”.

படித்ததில் பிடித்தது:

ஒரு குரு இருந்தார்.  இளைஞனான அந்த ஊர் கோவில் பூசாரிக்கு குருவைக் கண்டால் பிடிக்க வில்லை.  மக்கள் கோவிலுக்கு வராமல் குருவின் உபதேசத்தை கேட்கப் போய்விடுவதால், அவனது வருமானம் குறைய ஆரம்பித்தது.

ஒரு நாள் குரு உபதேசித்துக் கொண்டிருந்தார்.  பூசாரி அவருக்கு எதிரில் வந்து நின்றான். “சாமியாரே…  நீ சொல்றதெல்லாம் பொய். நான் உன்னை மதிக்க தயாராயில்லை. உன்னோட ஒரு சொல்லு என்னைக் கட்டுப்பட்டு நடக்க வெச்சிட்டா உன்னை குருனு ஒப்புக்கறேன்.  சிஷ்யன் ஆயிடறேன். சவாலா?” என்று கேட்டான்.  “என்ன சொல்றேன்னே காதுல விழலை. கொஞ்சம் பக்கத்திலே வந்து சொல்லு” என்றார் குரு.  இளைஞன் நெருங்கிச் சென்று சொன்னான்.

“தம்பி வயசாயிடுச்சு.  காதுல விழலை.  என் வலப்பக்கம் வந்து நின்னு சொல்லேன்” என்று குரு பணிவுடன் கூறினார்.  இளைஞன் அவரது வலப்புறம் சென்று பேசினான். ‘ம்ஹூம். என் இடக்காது தான் வலக்காதை விட நல்லா கேட்கும் போலிருக்கு. கோவிச்சுக்காம இடப்பக்கமா வந்து சொல்லு’ என்றார்.



[பட உதவி: கூகிள்]

“என்னய்யா, பெரிய ரோதனையாப் போச்சு” என்று இடப்புறம் சென்று மறுபடியும் சவால் விட்டான் இளைஞன்.  குரு புன்முறுவலுடன் அவனைப் பார்த்து, “அதான் நான் சொன்னபடியெல்லாம் செஞ்சிட்டியே சிஷ்யா, உக்காரு. என் உபதேசத்தைக் கேளு. நீ ஆத்திரத்தோட வந்ததால, உன் அறிவு மழுங்கிப் போச்சு. அதனால நான் ஜெயிச்சுட்டேன். இதுவே நீ அன்போடு வந்திருந்தேன்னா, நான் தோத்திருப்பேன்” என்றார்.

ஆத்திரம் கண்களை மறைக்கும்.  நிதானம், நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொடுக்கும்!”

மீண்டும் அடுத்த ஃப்ரூட் சாலட்டுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



56 கருத்துகள்:

 1. வழக்கம்போல் சாலடின் சுவை அருமை
  குறிப்பாக காதலிக்குப் பரிசு
  குருவின் கதை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது உடனடி வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 2. உயர்ந்த மனிதன், நகைச்சுவை, நிதானத்தின் அருமை என ஃப்ரூட் சாலட் நன்றாக இருந்தது...

  (த.ம. 2)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ் மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. கதை அருமை... சாலட் சுவையாக இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக். உங்கள் வலைப்பக்கம் இன்று மாலை வரவேண்டும்....

   நீக்கு
 4. கதை இதுவரை கேள்விப்பட்டதில்லை. நன்றாய் இருந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 5. வரவர ஃப்ரூட் ஸாலட் அட்டகாசமா இருக்கு. வேண்டாமுன்னு தள்ள முடியாது போல இருக்கே:-)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வரவர ஃப்ரூட் ஸாலட் அட்டகாசமா இருக்கு. வேண்டாமுன்னு தள்ள முடியாது போல இருக்கே:-)))))//

   ஆஹா... :)

   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. லிப்ஸ்டிக் ஜோக் லிப்ஸில் புன்னகையை வரவழைத்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து
   மகிழ்ச்சியைத் தந்தது!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா ஜி!

   நீக்கு
  2. ஆத்திரம் கண்களை மறைக்கும்.
   நிதானம்,
   நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொடுக்கும்!”

   சாதனைச் சுவை நிறைந்த சாலட்டிற்குப் பாராட்டுக்கள்..

   நீக்கு
  3. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. ஆஹா உயரத்தாலும் பிரச்சினைகளா? படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 8. வழக்கம் போல் ஃப்ரூட் சாலட் அருமை.. கலக்குங்க... (த.ம.5)

  பதிலளிநீக்கு
 9. படித்ததில் பிடித்தது கதை சொல்லிய கருத்து உண்மையில் மிகமிகப் பிடித்தது. இற்றை வழக்கம் போல் புன்னகையை மலரச் செய்தது. உயர்ந்த குடும்பம் பற்றி அறிந்ததிலோ புருவம் உயர்ந்தது. இப்படி பலவிதமான நல்ல ரியாக்ஷன்களை என்னுள்ளே கொண்டுவரும் ப்ரூட் சாலட்டோ அடிக்கடி சாப்பிட (படிக்கத்) தூண்டுகிறது. அசத்தல் வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் சுவையான கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 10. கடைசியில் சொல்லியுள்ள கதை அருமையாக உள்ளது, வெங்கட்ஜி.

  //ஆத்திரம் கண்களை மறைக்கும். நிதானம், நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொடுக்கும்!”//

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கதையை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   நீக்கு
 11. // அந்த சிவப்பு கலர்-ல உனக்கு ஒரு லிப்ஸ்டிக் வாங்கிட்டு வந்திருக்கேன்…. //

  ;))))) சூப்பர் ஜோக் தான்!

  பதிலளிநீக்கு
 12. //எதிரே வந்த பாட்டி என் உயரத்தினைப் பார்த்தவுடனே கேட்ட முதல் கேள்வி – “உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்பது தான்! //

  ஆஹா! உயர்ந்த மனிதருக்கு, அதிர்ஷ்டம் [பாட்டி ரூபத்தில்] தேடி வந்து, அழைப்புக் கொடுத்துள்ளது பாருங்களேன். மகிழ்ச்சியாக உள்ளது, வெங்கட்ஜி.

  [நான் இதுபோன்ற விசித்திரப் பிரச்சனைகள் உள்ளவர்களைப் பற்றியும், குள்ளமாகக் குறுக்கே படர்ந்து உள்ளவர்கள் பற்றியும், நிறைய ஆராய்ந்து, உலகில் பெரும்பாலோர் எல்லோருமே இது போல இருந்து விட்டால் அதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும், ரயில் பஸ் கார் விமானம் போன்றவற்றையெல்லாம், எவ்வாறெல்லாம் வடிவமைக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் யோசித்து, ஓர் நகைச்சுவைக் கதை எழுத ஆரம்பித்து அது பாதியில் நிற்கிறது.]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீக்கிரமே அந்தக் கதையை முழுசாக எழுதி வெளியிட வேண்டுகோள் விடுக்கிறேன் வை.கோ.ஜி! சீக்கிரம் பதிவா போடுங்க ப்ளீஸ்...

   நீக்கு
 13. காணொளிக்கும் என்னிடம் வேறுவிதமான ஓர் நகைச்சுவைச் சிறுகதை உள்ளது. ஆனால் வெளியிட மிகவும் வெட்கமாக உள்ளது. என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு ம்ட்டும் சொல்லியுள்ளேன். சிரியோ சிரி என சிரித்துள்ளனர்.

  மொத்தத்தில் இன்றைய ஃப்ரூட் சாலட் அருமை. பாராட்டுக்கள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட உங்கள் கதை வெளியிடுவதில் என்ன வெட்கம்... அப்படி இருந்தால், எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்களேன் :) நானும் சிரிக்க வழிவகுக்கலாமே :))))

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி சங்கவி.

   நீக்கு
 15. உயர்ந்த விஷயங்கள்தான்!

  இற்றை - சிரிப்பு. பாவம் காதலி!

  காணொளி காலைதான் பார்க்கணும்!!

  குறுஞ்செய்தியும் சூப்பர்.

  பாவம் சிஷ்யன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 16. சாலட்டின் சுவை அருமை! உயர்ந்து குடும்பம்... இவர்களுக்கு இந்திய பஸ்சில் பயணிப்பது படு கஷ்டமாக இருக்குமே! (TM 10)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும், தமிழ்மணத்தில் பத்தாம் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பர் வரலாற்று சுவடுகள்.

   நீக்கு
 17. "always find out your own way to flow!" - மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   நீக்கு
 18. குறு சிஷ்யன் இது போன்ற கதைகளைக்ம் கேட்டு எத்தனை நாளாயிற்று. சிலருக்கு உயரமாய் இருப்பது பிரச்சனை சிலருக்கு உயரம் இல்லாமல் இருப்பது பிரச்னை ( நான் என்ன சொன்னேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு!

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 20. காணொளி கண்டு மகிழ்ந்தேன்!
  "நீ ஒரு உண்மை சொன்னால் நானொரு உண்மை சொல்வேன்!"
  இன்னொரு உண்மையைப் பகிர்ந்து கொள்ள (இருந்தால்) இருவருக்குமே தைரியம் வருமா?! இதில் எந்தப் பொய் பெரியது, யார் தியாகி?!!!
  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதில் எந்தப் பொய் பெரியது, யார் தியாகி?!!!//

   இரண்டு பேருமே ஒத்துக்கொண்டார்களே.... அது தான் நல்ல விஷயம். மறைத்து வைப்பது பின்னர் பெரிய பிரச்சனைக்கும் பிரிவுக்கும் காரணமாகும்...

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 21. ஆத்திரம் கண்களை மறைக்கும். நிதானம், நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொடுக்கும்!”//

  நல்ல கருத்து.

  ஃப்ரூட் சாலட் நல்ல சுவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 22. ஆத்திரம் கண்களை மறைக்கும். நிதானம், நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொடுக்கும்!”

  அருமையான சாலட் அசத்தலாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 23. உயரமான ஷரத் குல்கர்னி பணி புரிவது, நான் பணி புரிந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற செய்தியும், இந்த உயர்ந்த குடும்பம் பற்றிய குறிப்பு “Limca Book of Records”-ல் வந்திருக்கிறது.
  என்ற தகவலும் எனக்கு பெருமையாக ( எங்கள் வங்கி ஊழியர் என்பதால் ) இருக்கிறது. தங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 24. தலைவா

  ஆத்திரம் கண்களை மறைக்கும். நிதானம், நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொடுக்கும்!” - அருமைய்யா

  ஃப்ரூட் ஸாலட் உண்மையாவே இனிக்கிறது. மேலும் இனிக்க வாழ்த்துக்கள்.

  விஜயராகவன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 25. ஃப்ரூட் சாலட் சுவையாக இருக்கிறது!

  எங்கள் குடும்பத்திலும் ஆறடிக்கு மேல் ஒரு பையன் இருக்கிரார். வயது 33 ஆகியும் இன்னும் பெண் அமையவில்லை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வயது 33 ஆகியும் இன்னும் பெண் அமையவில்லை!!//

   சீக்கிரமே அவருக்கு விவாகம் முடிய பிரார்த்திக்கிறேன்.

   நானும் ஆறடிக்கு மேல் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   நீக்கு
 26. என்னதான் சொல்லுங்க, அந்த இளம் வழுக்கையோட அழகே தனிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீங்களும் அந்தக் கட்சி... அதனால தான் வழுக்கையின் அழகை ரசிக்கறீங்க.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....