எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 10, 2012

காசி விஸ்வநாதர் - விசாலாட்சி


திரிவேணி சங்கமம்காசி பயணம்பகுதி 3

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி - 1 பகுதி 2

புனித நதியாம் கங்கையின் மேற்குக் கரையில் இருக்கும் வாரணாசி, உலகின் மிகப் பழமையான நகரம். இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரம் என்றும் இதை அழைக்கிறார்கள்.[இது ரோடு தாங்க! அதுவும் மெயின் ரோடு!]


அப்துல் கலாமுடன் ஒரு கலக்கலான பயணத்தின் முடிவில் மேலே சொன்ன புகழ்பெற்ற நகருக்குள் நுழைந்ததுமே அடித்துப் பெய்த மழை எங்களைசில்லெனவரவேற்றது! சாதாரணமாகவே உத்திரப் பிரதேச நகரங்கள் அத்தனை சுத்தமிருக்காதுஅதிலும் மழையும் பெய்தால் கேட்கவே வேண்டாம். சாலை நடுவிலே பல குளங்கள். அவற்றைக் கடந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சற்று முன் இருக்கும் ஒரு வாகன நிறுத்துமிடத்தினை அடைந்தோம்.


[காசியில் எல்லோருக்கும் வழியுண்டு!][ரிக்‌ஷாவில் போவது யாருங்க!]


அங்கிருந்து இரண்டு ரிக்ஷாக்களில் கோவில் சென்றோம்.  சாதாரண ரிக்ஷாக்களை விட பயங்கர உயரம்.  இதில் பயணிக்கும்போது ஏதோ வானத்தில் பறப்பது போன்று தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!  வழியெங்கிலும் ரிக்ஷாக்கள், காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள், கடைகள் என கலகலவென்றிருக்கிறது ஊர்பத்து நிமிட பயணத்தில் கோவிலுக்கருகில் சென்று சேரும் எங்களை சிலர் பின் தொடர்ந்து இறங்கியவுடன் பிடித்துக் கொண்டார்கள்


[நான் முன்னால போறேன்...  நீங்க பின்னாலே வாங்க!]வரிசையில் நிற்க வேண்டிய அவசியமல்லாது மாற்று வழியில் அழைத்து செல்கிறோம்.  ”சாவன்மாதத்தின் காரணமாக நீண்ட வரிசை இருக்கிறதுஉங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் கொடுத்தால் போதுமென்கிறார்கள்இவர்களைப் பற்றி முன்பே இவ்வூர் நண்பர் சொல்லியிருந்ததால் அமைதியாக மறுத்தபடி முன்னேறுகிறோம். நாங்கள் மறுக்க, அவர்கள் மீண்டும் கேட்க, எனத் தொடர்கிறது நாடகம்

பெரும்பாலும் இங்கே நம்பிக்கையோடு வரும் பக்தர்களிடம்பண்டாக்கள்நிறையவே பணம் பிடுங்குகிறார்கள்வரும் பக்தர்களும் நேரக் குறைவின் காரணமாகவோ, வழி தெரியாத காரணத்தினாலோ, இவர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள்


[எடுக்காதே எடுக்காதே, என்ன ஃபோட்டோ எடுக்காதே!]


செல்லும் வழியெல்லாம் கடைகள்சிறிய சிறிய சந்துகள் வழியேதான் கோவிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறதுநான்கடி சந்துகளின் இருபுறமும் கடைகள், வீடுகள், போதாதற்கு இக்குறுகிய சந்தில்உனக்குப் போகணும்னா தாண்டிப் போ!” என அலட்சியமாகப் படுத்திருக்கும் மாடுகள்எல்லாவற்றையும் தாண்டிப் போய் சன்னதியை அடைகிறோம்.


[காசி விஸ்வநாதர்]நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் சன்னதியில், லிங்கரூபத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், விஸ்வேஸ்வரன்விஸ்வநாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இங்கே இருக்கும் சிவலிங்கம், பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்களுக்குள் ஒன்று. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மாயைகளையும், உலகின் பல்வேறு விதமான பந்தங்களையும் அறுத்தெரிய வல்லது. நாட்டின் பல இடங்களில் இருக்கும் மற்ற பதினொன்று ஜ்யோதிர்லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் தரவல்லதுஇந்தியர்கள் மட்டுமல்லாது உலகின் பலமூலைகளிலிருந்தும் பல நாட்டவர்களும் இங்கே வந்து சிவபெருமானின் அருளைப் பெறுகிறார்கள்.

எப்போதுமே கூட்டமாக இருக்கும் இக்கோவிலில்சாவன் கி மஹினாஎன்றழைக்கப்படுகின்ற ஆடியில் அதிகமோ அதிகம்காசி விஸ்வநாதர் சன்னதியில் கர்ப்பக்கிரகத்தினுள் அனைவரும் சென்று, நம் கைகளாலேயே சிவபெருமானுக்கு கங்கை நீராட்டி, வில்வ பத்திரத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து வெளியே வரும்போது மனதுக்குள் என்னவோ சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும்

ஆதி சங்கரர், துளசிதாஸ், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், குருநானக் போன்ற பல குருமார்கள் பூஜித்த சிவலிங்கம் இதுஇச்சன்னதியின் வரலாறு பற்றியும், இங்கே குடிகொண்டிருக்கும் காசி விசாலாட்சி, அன்னபூரணி பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


எச்சூஸ்மி.... இது என்னமோ கணக்கெல்லாம் போட்டு மேலே ஓடிட்டு இருக்கே... அது எதுக்கு?

வேற ஒண்ணுமில்ல! இது இந்த வலைப்பூவில் முன்னூறாவது பதிவுன்னு படம் ஓட்டி காமிக்கறாராம்... ரொம்பவே ஓவர்.... யாரும் கேட்பாரில்லையா?

சரி சரி... வாழ்த்து சொல்ற எல்லாருக்கும் முன்னாடியே ஒரு பூங்கொத்து கொடுத்துடுவோம்...

57 comments:

 1. முன்னூறுக்கு வாழ்த்துகள் ... காசி எப்ப போகப்போறேன்னு தெரியலை சீக்கிரம் போகணும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கார்த்திக்...

   //காசி எப்ப போகப்போறேன்னு தெரியலை // எல்லாம் வல்லவனுக்கே வெளிச்சம்...

   Delete
 2. அட, அதற்குள் முன்னூறா? நல்லாவே முன்னேறிச் செல்றீங்க!பிடியுங்க வாழ்த்துக்களை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   Delete
 3. நம் கைகளாலேயே சிவபெருமானுக்கு கங்கை நீராட்டி, வில்வ பத்திரத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து வெளியே வரும்போது மனதுக்குள் என்னவோ சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும்.

  முன்னூறாவது பகிர்வுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. காசு + ஈ = காசீ!

  இன்னும் மொட்டைத்தலைகளை போட்டோ பிடிக்கும் பழக்கம் விடலையா!)

  முன்னூறுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. //இன்னும் மொட்டைத்தலைகளை போட்டோ பிடிக்கும் பழக்கம் விடலையா!)//

   ஆரம்பிச்சது உங்க கிட்ட இருந்து... சீக்கிரமா விட்டுட முடியுமா?

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]

   Delete
 5. காசிவிஸ்வநாதர் தர்சனம் பெற்றுக்கொண்டோம்.


  இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 6. முன்னூறாவது பதிவுக்கு மூவாயிரம் வாழ்த்துகள். காசி பயணக்கட்டுரை அருமையாக இருந்தது. மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள ஆவல்.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 7. முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
  முன்னூறாவது பதிவு பக்திபூர்வமாக காசி பற்றி அமைந்தது சிறப்பு. விவரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி!

   Delete
 8. அன்புள்ள வெங்கட்ஜி,

  காசி விஸ்வநாதர் நல்ல தரிஸனம்.
  அருமையான அழகான பதிவு.
  300 க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
  பூங்கொத்துக்கு நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் இனிமையான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 9. Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 10. 300க்கு வாழ்த்துகள். காசி தரிசனம் கிட்டியது உங்களால்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 11. தங்கள் புண்ணியத்தில் காசி விஸ்வ நாதரை
  நேரடியாகச் தரிசிப்பதைபோலவேஅருமையான
  புகைப்படத்தில் தரிசித்தோம்
  மிக்க நன்றி
  முன்னூறு பதிவுகள் என்பது
  அதுவும் பயனுள்ள பதிவுகள் என்பது
  சாதாரண விஷயமில்லை
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. Replies
  1. தமிழ்மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி தரிசனம் காசின்றி ஓசியில் செய்துவிட்டோம்.நன்றி.
  முன்னூறுக்கு வாழ்த்துக்கள் இன்னும் முன்னேறுங்கள்
  த.ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 14. <a href="http://arthamullavalaipathivugal.blogspot.com a>

  முன்னூறு பதிவு நல்லபடியா முடிஞ்சது அப்படின்னா மொட்டை போட்டுகறேன்னு வேண்டிகிட்டு இருக்கீங்க .

  அதுக்காவே இந்த பூச்செண்டை தரலாம் , ஆல் த பெஸ்ட் ,

  இருந்தாலும் வாரனாசிலே மொட்டை போட்டுண்ட உடனேயே

  மத்த பதினோரு சிவ ஸ்தலங்களிலும் மொட்டை போட்டுக்கணும் அப்படின்னு

  சொல்வாகளே !!

  சுப்பு ரத்தினம்

  ReplyDelete
  Replies
  1. பாட்டு கேட்டேன் சுப்பு ஜி! நல்லாத்தான் பாட்டு போட்டு இருக்கீங்க..

   மொட்டையோடு இருப்பது அங்குள்ள ஒரு பண்டா. :) எங்களை மொட்டையடிக்க நினைத்தவரை படம் மட்டும் எடுத்துப் போட்டேன்...

   வாழ்த்துகளுக்கு நன்றி சுப்பு ஜி!

   Delete
 15. வாழ்த்துக்கள்

  காசி பற்றிய நல்ல பகிர்வு த.ம.7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete

 16. நோ ஜி பிளீஸ்.  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. //நோ ஜி பிளீஸ்.

   சுப்பு ரத்தினம்//

   ஓகே...

   Delete
  2. காசிக்கு போனா ஒன்னை விடுங்க அப்படின்னு சொல்வாக
   நம்ம எதை விடறது?
   ஒன்னை விடு அப்படின்னு சொன்னா சனங்க உடனே கத்தரிக்காய் வாழைக்காய்
   எதுனாச்சும் விட்டுட்டு வர்றாங்க
   ஒன்னை விடு அப்படின்னா அது வாழைக்காய் கத்தரிக்காய் பாகற்காய் இல்லை
   அது ஒன்னை விடுவும் இல்லை.
   உன்னை விடு.
   நான் நம்ம நினைச்சுட்டு இல்லையா அத விட்டுடு அப்படின்னு சொல்றாக
   நான் நமது அப்படின்னு கிடையாது எல்லாம் அந்த தான் என்கிற பக்குவம் வரணும்
   இல்லை என்றால் காசிக்கு போய் என்ன பிரயோஜனமும் இல்லை.
   MEENACHI PAATTI

   Delete
  3. //நான் நமது அப்படின்னு கிடையாது எல்லாம் அந்த தான் என்கிற பக்குவம் வரணும். இல்லை என்றால் காசிக்கு போய் என்ன பிரயோஜனமும் இல்லை. //

   சரியாச் சொன்னீங்க மீனாட்சி பாட்டி... ஆனா பெரிய பெரிய மஹான்களே சறுக்கிய இடமிது இல்லையா! சாதாரணமான மனிதரெல்லாம் எம்மாத்திரம்! இன்னும் பக்குவம் வரணும்...

   திருவிளையாடல் படத்தில் வரும் “நான், எனது என்பதே நமக்கெதற்கு!” என்பது தான் நினைவுக்கு வந்தது.

   தங்களது வருகைக்கும் நல்ல கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீனாட்சி பாட்டி.

   Delete
 17. வாழ்க்கைல நான் போன காசி யாத்திரை கல்யாணத்தில் தான்.

  சோம வார சிவன் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. //வாழ்க்கைல நான் போன காசி யாத்திரை கல்யாணத்தில் தான். //

   நம்மில் பலர் நிலையிது தானே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாஸ் கோபாலன்.

   Delete
 18. 300 பதிவுகள்! மனமார்ந்த வாழ்த்துக்கள்! காசி தரிசனம் அற்புதம்!பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 19. வாழ்த்துகள் 300க்கு

  நான் பார்க்காத பல இடங்கள் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்..

   அட என்ன ப்ரொஃபைல் ஃபோட்டோ மாத்திட்டீங்களா? அஜு-நாட்டி வந்துட்டாங்க போல!

   Delete
 20. படங்களும் விவரிப்பும் அருமை.

  /எடுக்காதே எடுக்காதே, என்ன ஃபோட்டோ எடுக்காதே!/

  விட்டிருவோமா நாம:)?

  முன்னூறுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. //விட்டிருவோமா நாம:)?//

   அதானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 21. 300 வது பதிவுக்கு வாழ்த்துகள் திரு வெங்கட். உங்கள் காசிப் பயணம் எங்களையும் கூட அழைத்து செல்வது போல இருக்கிறது!
  எளிமையான நடையும், புகைப்படங்களும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 22. 300க்கு வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி கலாநேசன்... நலம்தானே...

   Delete
 23. உள்ளே கனன்று கொண்டிருக்கும் காசிக் கனலை ஊத்தி பெரிதாக்கி விட்டீகள் வெங்கட். எப்போது கிடைக்குமோ அந்த பாக்கியம் ?
  பகிர்விற்கு நன்றி
  300 வது பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

   Delete


 24. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பூங்கொத்துக்கு நன்றி.

  நம் கைகளாலேயே சிவபெருமானுக்கு கங்கை நீராட்டி, வில்வ பத்திரத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து வெளியே வரும்போது மனதுக்குள் என்னவோ சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும். //

  ஆம், உண்மை . சொல்ல முடியாத ஆனந்தம் ஏற்படுவதை நானும் உணர்ந்து இருக்கிறேன் வெங்கட்.
  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 25. முன்னூறாவது பதிவு. வாழ்த்துக்கள் ஜீ.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ராசன்....

   Delete
 26. நீங்கள் பதிவு போட்டவுடன் எனக்கு மின்னஞ்சல் மூலம் வர என்ன செய்ய வேண்டும்?
  என் மின்னஞ்சல் முகவரியை எங்கே பதிய வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னுடைய மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைங்கம்மா...

   என் பதிவில் Follow by mail விட்ஜெட் வேலை செய்வதில்லை. அதனால் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை அனுப்பினால் நான் பதிவிடும் போது உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 27. அன்புள்ள வெங்கட்,

  உங்கள் புண்ணியத்தில் அருமையான காசி விஸ்வநாதர் தரிசனம். 300-க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்...


  அன்புடன்,
  பாலஹனுமான்

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....