எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 21, 2015

இரவுப் பயணமும் ஓட்டுனரின் தூக்கமும்!

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 7

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6

சோம்நாத் ஜ்யோதிர்லிங்கமும், முக்தி த்வாரகாவும் பார்த்துவிட்டு அன்றைய இரவு முழுவதும் பயணம் செய்து அதிகாலைக்குள் துவாரகா சென்று விடவேண்டும் என்பது தான் எங்கள் திட்டமாக இருந்தது. அதனால் தான் சோம்நாத் கோவிலில் இரவு நடக்கும் ஒலி ஒளி காட்சியைக் கூட பார்க்காமல் பயணித்தோம்.  சோம்நாத்-லிருந்து துவாரகா செல்ல கிட்டத்தட்ட 240 கிலோமீட்டர்.  சாலைகள் நன்றாக இருந்தாலும், இரவு நேரப் பயணம் என்பது சற்றே கடினமானது தான். அதுவும் பகல் முழுவதும் வாகனம் ஓட்டி வந்த ஓட்டுனருக்கு இரவிலும் வாகனம் ஓட்டுவது கடினம். 


படம்: இணையத்திலிருந்து....

இருந்தாலும் வாகன ஓட்டி வசந்த் [B]பாய் சோம்நாத் நகரில் மாலை சில மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டதால் தொடர்ந்து பயணிக்க நாங்களும் நினைத்தோம்.  அவரும் ஐந்து மணி நேரத்தில் சென்று விடலாமே என்று வாகனத்தினைச் செலுத்தினார்.  நல்ல வேகத்தில் வண்டி சென்று கொண்டிருக்க, ஓட்டுனர் இருக்கையின் அருகில் நான்.  நண்பரும் அவரது மனைவியும் பின் இருக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, நானும் தூங்கி விட்டால் ஓட்டுனருக்கும் தூக்கம் வந்து விடுமே என்று விழித்தபடியே அமர்ந்திருந்தேன். 

படம்: இணையத்திலிருந்து....

நடுவே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இரவு உணவை முடித்துக் கொண்டு மேலும் பயணத்தினைத் துவங்கினோம்.  வசந்த் [B]பாய் வழக்கம் போல மாவா மசாலாவை வாயில் திணித்துக் கொண்டு பயணத்தினை தொடர்ந்தார்.  இரவு பன்னிரெண்டு மணி சமயத்தில் அவரைப் பார்த்தால் கண்கள் இரண்டும் மூடிக்கொள்ளும் நிலை.  கஷ்டப்பட்டு தூக்கத்தினை துரத்திக் கொண்டிருந்தார்.  பாதி வழி என்பதால் எங்கும் தங்கவும் முடியாதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  அவருக்கும் அதே யோசனை தான் போல.....


படம்: இணையத்திலிருந்து....

சோம்நாத் நகரிலிருந்து துவாரகா செல்லும் போது பாதி வழியில் வருகிறது சற்றே பெரிய ஊர்!  இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தினை பெற்ற ஊர்! அந்த ஊர் வந்ததும், வசந்த் [B]பாய் அதற்கு மேல் வாகனத்தினைச் செலுத்துவது கடினம் என்றும் அதனால் அன்றைய இரவு அவ்வூரில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் காலையில் அங்கிருந்து துவாரகா நோக்கி பயணிக்கலாம் என்று சொல்ல, தூக்கத்தில் வாகனம் செலுத்தி ஏதாவது விபத்தில் சிக்குவதை விட தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் கொஞ்சம் புத்துணர்வுடன் பயணிப்பது நல்லது என முடிவு எடுத்தோம். 

அர்த்த ராத்திரியில் தங்குமிட வேட்டை துவங்கியது.  முதல் இடத்தில் இடம் ஏதும் இல்லை எனச் சொல்ல, பக்கத்திலேயே இன்னுமொரு தங்குமிடத்திற்குச் சென்று விசாரிக்க அங்கே இடம் இருந்தது. சரி என்று அங்கேயே தங்கி விட்டோம்.  அங்கே தங்கியது நல்ல முடிவு என்பதை வசந்த் [B]பாய்-இடம் பேசும் போது தெரிந்து கொண்டேன்.  பொதுவாக அவருக்கு இரவு நேரத்தில் தான் ஓட்டுனர் பணி என்றும், நேற்றைய இரவும் அவர் தூங்காது வாகனம் ஓட்டியதாகவும் சொல்ல, எங்களுக்கு அதிர்ச்சி.....

தொடர்ந்து ஒரு இரவு, அடுத்த பகல் வாகனம் ஓட்டியிருக்கிறார்.  அதைத் தொடர்ந்து அடுத்த இரவும் பாதி நேரம் வாகனம் ஓட்டியிருக்கிறார்.  அதனால் தான் அத்தனை தூக்கம் வந்திருக்கிறது அவருக்கு.  நல்ல வேளை, இப்போதாவது சொன்னீர்களே என்று அவரை கடிந்து கொண்டு, அவரை அன்று இரவு முழுவதும் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொன்னோம்.  காலையில் எழுந்து அந்நகரிலிருந்து புறப்படலாம் என்று தங்குமிடத்தில் நித்ரா தேவியின் தாலாட்டில் கண்ணயர்ந்தோம்.

பொதுவாகவே இரவுப் பயணம் என்பது எனக்கு பிடித்தமான ஒரு விஷயம்.  சில ஓட்டுனர்கள் இரவுகளில் மட்டுமே வாகனம் செலுத்துவார்கள்.  பகல் நேரங்களில் தூங்கி, இரவு நேரங்களில் மட்டுமே வாகனம் செலுத்துவார்கள். இரண்டு மூன்று மணி வரை கூட அசராது ஓட்டும் இவர்களுக்கு அதிகாலை நேரத்தில் உறக்கம் வந்து விடும். அதனால் தான் பெரும்பாலான இரவு நேர ஓட்டுனர்களுக்கு, புகை பிடிப்பது, மாவா மசாலா, புகையிலை போடுவது என ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.  என்றாலும், அவர்களது உடல் எத்தனை நேரம் தான் இந்த சோதனைகளைத் தாங்கும்? 

ஒரு சில விநாடிகள் கண் அசந்து தூங்கி விட்டால், அவரும் அவருடன் பயணிக்கும் மற்றவர்களும் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேர்வதுண்டு.  பேருந்தில் இரவு நேரம் பயணிக்கும் போது பெரும்பாலான சமயங்களில் நான் உறங்குவதில்லை.  அதுவும் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் சமயங்களில் “பாவம் ஓட்டுனர் தூங்காமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறாரே என்று நானும் உறங்காமல் இரவு வேளைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் ஊர்களைப் பார்த்தபடியே பயணிப்பேன்.

பல சமயங்களில் பயணிக்கும் போது ஓட்டுனர், நான், நடத்துனர் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருக்க, மற்றவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். ஓட்டுனர் தேநீர் அருந்த வண்டியை நிறுத்துவார். நாங்கள் மூவர் மட்டுமே தேநீர் அருந்தியபடியே அவர்களது இரவு நேரப் பணியில் இருக்கும் கஷ்டங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்க, பயணிகள் வண்டி நின்றது கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருப்பார்கள். பல முறை இப்படி நடந்திருக்கிறது!

என்ன தான் இரவு நேரப் பயணம் பிடித்தது என்றாலும், ஓட்டுனருக்கு தூக்கம் வந்துவிட்டால், நடு வழியாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி சற்றே ஓய்வெடுத்துக் கொள்வது அவசியம்.  அப்படி இல்லை எனில் பக்கத்தில் இருக்கும் ஊரில் தங்குமறை ஏற்பாடு செய்து ஓய்வெடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது. சில பேருந்துகளில் முதல் பாதி இரவில் ஒரு ஓட்டுனரும், இரண்டாம் பாதி இரவில் வேறு ஓட்டுனரும் வண்டி ஓட்டுவதையும் பார்த்திருக்கிறேன்.

பயணம் இனிமையானது தான் என்றாலும் விபத்தில்லாமல் பயணிப்பதும், மேலும் பயணிக்க, உயிருடன் இருப்பதும் அவசியமாயிற்றே! 

எந்த நகரத்தில் தங்கினோம், அந்த இடத்தின் சிறப்பு என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமே!
 

நட்புடன்


50 comments:

 1. எந்த நகரம்? அறியக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எந்த நகரம் என அடுத்த பதிவில் சொல்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. காத்திருக்கிறேன் ஐயா
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Porbandar? Gandhiji's birth place??

  ReplyDelete
 4. உண்மைதான். நல்லவேளை இரவில் தொடர்ந்து பயணிக்கலை. நாங்களும் பயணத்தில் இரவு நேரத்தில் எங்கும் போவதில்லை. பகல் நேரத்தில் மட்டுமே பயணம். அதனால் நம்ம டிரைவர் சீனிவாசனுக்கு எங்களுக்கு வண்டி ஓட்டுவதுன்னா.... ரொம்ப நிம்மதின்னுவார்.

  ReplyDelete
  Replies
  1. பயணம் செய்வது பிடித்தது என்றாலும், ஓட்டுனருக்கும் ஓய்வு வேண்டுமே......:)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. தொலைதூரப்பயணம் மேற்கோள்வோரும், ஓட்டுநரும் எச்சரிக்கையாக இருக்க உணர்த்தும் பதிவு. இவ்வாறாக பயணம் மேற்கோள்வோர் இவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. ஆம் கவனமாக இருப்பது அவசியம்.

  தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. //சில பேருந்துகளில் முதல் பாதி இரவில் ஒரு ஓட்டுனரும், இரண்டாம் பாதி இரவில் வேறு ஓட்டுனரும் வண்டி ஓட்டுவதையும் பார்த்திருக்கிறேன்.//

  கர்நாடக மாநில அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் இரண்டு வேலைகளும் தெரிந்தவர்களே பணியில் அமர்த்தப்படுகின்றனர். முதலில் வண்டியை ஓட்டும் ஓட்டுநருக்குத் தூக்கம் வருகையில் அதுவரை நடத்துநராக இருந்தவரை எழுப்பி வண்டியை ஓட்டச் சொல்லுகிறார். இவர் ஓய்வு எடுத்துக் கொள்வார்.

  ReplyDelete
  Replies
  1. திருவரங்கத்திலிருந்து சென்னை செல்லும் Classic பேருந்துகளிலும் ஓட்டுனர், நடத்துனர் என இருவரும் மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. பெரும்பாலும் நாங்கள் இரவுப் பயணம் மேற்கொள்வதில்லை. அதிகம் போனால் இரவு பதினோரு மணிக்குள்ளாகத் தங்குமிடம் போயிடுவோம். இது அந்த மலை மேல் அம்பாள் இருப்பாள், கிருஷ்ணரின் குலதெய்வம், அந்த ஊரா? இரண்டு, மூன்று முறை போயும் ஊர் பெயர் நினைவில் வரவில்லை. :) சென்ற முறை சென்றபோது கீழே இறங்கவே இல்லை! ஹிஹி, ஊர் பெயர் நினைவுக்கே வர மாட்டேங்குதே! "ஹ" வில் ஆரம்பிக்கும், ஹர்சித்தி மாதா?

  ReplyDelete
  Replies
  1. மலை மேல் அம்பாள்.... நீங்கள் சொல்லும் ஊர் எந்த ஊர் என எனக்கும் தெரியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 10. போர்பந்தரா இருக்கணும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 11. அதிவேகப் பேருந்துகளில் இங்கும் அப்படிதான்
  நடத்துனர் திடீரென ஓட்டுனர் இருக்கையில் இருப்பார்.
  ஓட்டுனர் திடீரென டிக்கட் வழங்குவார்..
  நல்ல பதிவு
  வாழ்த்துகள்
  ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுத உங்களை வேண்டுகிறேன்..
  தம +

  ReplyDelete
  Replies
  1. இப்படி இருவரும் பணிகளை கலந்து கட்டி செய்வது நல்ல விஷயம் தான். ஓய்வும் எடுக்க முடிகிறதே.....

   கட்டுரை எழுத அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. போட்டிக்கு இல்லை என்றாலும் எழுதுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.....

   Delete
 12. இரவு நேரப்பயணத்தை ரசிக்க பயணிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது போலும். சரியான ஓய்வு இல்லாமல் ஓட்டுவது பகல், இரவு இரு நேரங்களிலும் ஆபத்துதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 13. இரவு நேரப்பயணங்கள் சுகமானது தான்! ஆனால் இன்றைய காலத்தில் விபத்துக்கள் அதிகமாக நடப்பதும் இரவு நேரங்களில் தான்! சகோதரர் அதிக கவனமாக இருக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. கவனத்துடன் இருப்பேன் மேடம். தங்கள் அக்கறைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்

   Delete
 14. பஸ்களில் இரண்டு ஓட்டுனர் நடைமுறை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற பயண அனுபவங்களிலும் உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமாயின் கைமாற்றி விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. முக்கியமான விஷயம்தான்... தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. #இப்படி இருவரும் பணிகளை கலந்து கட்டி செய்வது நல்ல விஷயம் தான்#
  நீங்கள், பயணக் கட்டுரையின் இடையில் சொல்லியுள்ள ஆலோசனையும் நல்லதுதான் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 17. பல விபத்துகள், இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் நடக்கின்றன
  நீங்கள் விழிப்பானவர்தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 18. இங்கும் இப்போது பெரும்பாலும் இரு ஓட்டுநர்கள் மாறி மாறி இரவுப் பயணங்களில் பேருந்துகளை ஓட்டுகின்றனர். தனியார் பேருந்துகளில். அரசுப் பேருந்தில் அப்படி இல்லை.

  இரவுப் பயணம், ஓட்டுநர் தூக்கத்தில் பயணம் அனுபவம் உண்டு....பேருந்தில்...

  நான் கார் ஓட்டுவதாக இருந்தால் தவிர்த்துவிடுகின்றேன் இல்லை என்றால் நன்றாகத் தூங்கிவிட்டுத்தான் ஓட்டுகின்றேன். சமீபத்தில் மட்டும்தான் பைக்கில் வேறு வழி இல்லாமல் பயணித்து....அரைத் தூக்கத்தில்....ம்ம்

  கீதா: நான் இரவுப் பயணம் என்றால் தூங்கவே மாட்டேன் பேருந்தில், காரில் என்றால். ஊர்களை வேடிக்கப் பார்ப்பதில், இரவு நேரத்துச் சாலைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதுவும் ஓட்டுநரின் அருகில் முன் பக்கம் இருந்து முன் பக்கத்துக் காணாடி வழி சாலையைப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும்.

  நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 19. சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்! இரவு பயணம் எனக்கும் பிடிக்கும் என்றாலும் ஓட்டுனருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பது அவசியம்தான்! ஒருமுறை எங்கள் கார் ஓட்டுனரும் ஒரு நொடி கண் அசந்துவிட்டார். உடனேயே காரை அருகில் இருந்த ஓர் டீக்கடையில் நிறுத்தி டீ அருந்தி ஓர் அரை மணி நேரம் கழித்து பின்னர் புறப்பட்டோம். அதிகாலைப்பொழுது என்பதால் தங்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 20. இரவு தூக்கம் எத்தனை முக்கியம் என்பதை பலமுறை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்.
  ஒருமுறை நண்பர்கள் ஒன்று சேர்ந்து சென்னையில் நடக்கும் திருமணத்திற்கு காரில் சென்றோம். காரை நான்தான் ஓட்டினேன். என்னைத் தவிர வேறு யாருக்கும் கார் ஓட்டத்தெரியாது என்பதால் முழுப் பயணமும் நானே ஓட்டினேன். இரவு முழுவதும் தூக்கமில்லை. மறுநாள் திருமணம். பகல் முழுவதும் அப்படியே போனது. இரவில் மீண்டும் மதுரையை நோக்கிப் பயணம். கஷ்டப்பட்டு மேலூர் வரை ஓட்டி வந்துவிட்டேன். அதன்பின் முடியவில்லை. தூக்கம் அமுக்கியது. வண்டியை ஓரம் கட்டி ஒரு மணி நேரம் தூங்கியப் பின் தான் மீண்டும் புறப்பட்டோம். இன்றைக்கும் இது மறக்க முடியாத அனுபவம். தங்களின் பதிவு மீண்டும் அதை நினைவு படுத்திவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 21. அருமை நானும் கூடவே வருகிறேன் கடைசி என்பதால் ஜி விட்றாதீங்க...

  ReplyDelete
  Replies
  1. கூடவே வருவது மகிழ்ச்சி தருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 22. முன்பு மாயவரத்திலிருந்து கோவை போகும் இரவு ஸ்ஸில் இரண்டு ஓட்டுனர் இருப்பார். ஒருவர் திருச்சியில் இறங்கி விடுவார். திருச்சியிலிருந்து வேறு ஒரு ஓட்டுனர் ஓட்டுவார்.

  இரவு நேரத்திலும் அதிகாலையிலும் பயணம் மேற் கொள்ளும் போது கவனமாய் இருப்பது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 23. இரவு நேரத்ட்க்ஹில் மட்டுமல்ல உடல் சோர்ந்து விட்டால் பகலிலும் தூக்கம் கண்களைத் தழுவும். காரில் பயணிக்கும் போது முன் இருக்கையில் தூங்குவது தவறு. என் மகன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் என்றால் ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

  ReplyDelete
  Replies
  1. நானும் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது தூங்குவதில்லை..... ஓட்டுனருடன் பேசிக் கொண்டு வருவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 24. நல்ல வேளை, இரவில் ஓய்வெடுத்துச் சென்றீர்கள்..ஓட்டுனர்கள் நன்கு தூங்கி பின் வாகனம் ஓட்டினாலே பல விபத்துகள் தவிர்க்கப்படும்.

  ReplyDelete
  Replies
  1. அசதியுடன் வாகனம் ஓட்டினால் விபத்து தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....