ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வீதி உலாவும் சில காட்சிகளும்சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்களை எல்லாம் வலைப்பதிவு மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.  சில நாட்களாக பதிவு எதுவும் எழுத/வெளியிட முடியாத நிலை! பதிவுலகம், முகப்புத்தகம் என எதையுமே பார்க்காமல் இருக்க நேர்ந்தது!  அதுவும் ஒருவிதத்தில் சுகமாகத் தான் இருந்தது!  குஜராத் பயணக்கட்டுரையின் நான்காவது பகுதியை 24 ஆகஸ்டு [திங்கள்] அன்று வெளியிட்ட பிறகு இப்பக்கமே வரவில்லை! இடைப்பட்ட நாட்களில் இப்பதிவுக்கு வந்திருந்த கருத்துகளைக் கூட நேற்று முன்தினம் தான் வெளியிட்டேன்! அடுத்த பகுதிகள் வரும் வாரத்திலிருந்து வெளியிடுகிறேன்.  அதற்கு முன் இந்த ஞாயிறில் சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்!

இம்முறை திருவரங்கம் சென்ற போது மாலையில் ஒரு நாள் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளியே வந்து வானத்தினை அண்ணாந்து பார்க்க, அஸ்தனமாகும் சூரியன் வானத்தில் வர்ணஜாலம் செய்திருந்தது! ஆஹா பெரிய திரையில் வரைந்திருந்த ஓவியம் பார்க்கும் உணர்வு எனக்குள்!  வீட்டிற்கு விரைந்து வந்து காமிராவுடன் மீண்டும் கீழே வந்து எடுத்த சில புகைப்படங்கள் இங்கே!


இயற்கை வரைந்த ஓவியமோ!  பார்க்கப் பார்க்க பரவசம் தான்!

நேற்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி.  அலுவலகத்திலிருந்து திரும்பும்போது எங்கள் வீட்டின் அருகே இருக்கும் பிர்லா மந்திர் [லக்ஷ்மி நாராயண் மந்திர்] விழாக்கோலம் பூண்டிருந்தது கண்டேன்!  வீட்டிற்கு திரும்பி இரவு உணவை முடித்துக் கொண்டு காமிராவுடன் வீதிஉலா புறப்பட்டேன். விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பிர்லா மந்திரை எனது காமிராவிற்குள் சிறை பிடித்தேன்.  கிருஷ்ணர் வேஷத்தில் பல குழந்தைகளையும், ராதை வேஷத்தில் பல குழந்தைகளையும் பார்க்க முடிந்தாலும் அவர்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை! ஒரு இடத்தில் குழந்தை கிருஷ்ணனை தொட்டிலில் இட்டு தாலாட்டிக் கொண்டிருக்க அதையும் புகைப்படம் எடுத்தேன்! அப்படங்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு!விளக்குகள் அலங்காரத்தில் பிர்லா மந்திர் 


தொட்டிலை நீங்கள் கூட ஆட்டலாமே! ஜன்மாஷ்டமி முடிந்து விட்டது! அடுத்து நவராத்திரி! நவராத்திரிக்கான முஸ்தீபுகளும், வேலைகளும் ஆரம்பித்து விட்டன! கொல்கத்தாவிலிருந்து வந்திருக்கும் கலைஞர்கள் பொம்மைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்! அவர்கள் பொம்மை செய்யும் இடம் பிர்லா மந்திரை அடுத்த காளி மந்திர்! நேற்று அங்கேயும் சென்று சில புகைப்படங்கள் எடுத்தேன்! அவை இதோ உங்கள் பார்வைக்கு!


நவராத்திரிக்குத் தயாராகும் பிள்ளையார் சிலை! - கொஞ்சம் காத்திருந்தால் முழு உடையோடு ஃபோட்டோ புடிக்கலாமே! இப்படி எடுத்திட்டியேன்னு கேள்வி கேட்பாரோ!


இவரின் திறமைக்கு ஒரு பூங்கொத்து!  என்ன ஒரு பொறுமை இவருக்கு! செய்து கொண்டிருந்ததை சில நிமிடங்கள் பார்த்ததில் தெரிந்தது இவரது பொறுமை.....


பொம்மைகள் - முதல் கட்டத் தயாரிப்பில்!

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் நான் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூக்கத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

44 கருத்துகள்:

 1. ஆஹா! வானின் வர்ணஜாலமும் விளக்குகளின் ஜாலமும் அழகோ அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. புகைப்படங்களை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 4. வானத்தின் வர்ண ஜாலத்தையும், பொம்மை கலைஞர்களின் கை வண்ணத்தையும் திறம்பட படம் பிடித்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். ( என்னாலும் தொடர்ந்து முன்போல் வலைப்பக்கம் வர இயலவில்லை.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. பிள்ளையாரை அப்புறமாகப் பிடித்திருக்கலாம்.
  எனினும் - படங்கள் அனைத்தும் அழகாக - இனிதாக இருக்கின்றன..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 8. சில காட்சிகள் நேரில்பார்க்கும்போது அழகு. சில புகைப் படங்களில் அருமையான புகைப் படங்கள். வாழ்த்துக்கள்.சிலைகள் செய்யும் படங்களை வரிசையாகக் கொடுத்தால் செய்முறைகள் விளங்கும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலைகள் செய்யும் படங்களை வரிசையாகக் கொடுத்திருக்கலாம்! உண்மை... சிலைகள் வண்ணம் பூசிய பிறகு எடுத்து அதையும் வெளியிடுகிறேன்.... அப்போது வரிசையாகக் கொடுத்து விடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. வாருங்கள் வெங்கட்ஜி! அருமையான வர்ண ஜாலங்கள் தான்....

  பிர்லா மந்திர் அழகு!

  பொம்மைக் கலைஞர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். எப்படி அழகாகத் தயாராகின்றன இல்லையா...பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 10. வணக்கம்,
  இயற்கையின் கை வண்ணம் யாருக்கு வரும், அழகு,
  தங்கள் பகிர்வுக்கு நன்றிகள். தொடர்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 12. புகைப்படங்கள் ஸூப்பர் வாழ்த்துக்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 13. அண்ணா படங்கள் அனைத்தும் அழகு...
  அருமையா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 14. "ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்! ராத்திரி வாசலில் கோலமிடும்! வானம் இரவுக்கு பாலமிடும்! பாடும் பறவைகள் தாளமிடும்! பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ! இது ஒரு பொன் மாலைப் பொழுது!"

  ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்! ராத்திரி வாசலில் கோலமிடும்! வானம் இரவுக்கு பாலமிடும்! பாடும் பறவைகள் தாளமிடும்! பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ! இது ஒரு பொன் மாலைப் பொழுது!

  நல்லதொரு காமிராக் கவிதை! வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 15. கொள்ளை கொண்டுவிட்டது இயற்கைக் காட்சி!
  அப்புறம் தெய்வத் திருவுருவங்கள் அதுகூட அருமைதான்!

  நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோதரரே!

  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 16. ஸ்ரீரங்கத்து வானமும்,தில்லியின் விழாக்கோலமும் உங்கள் காமிராக் கவிதைகளாகி விட்டன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 17. வழக்கம்போல் புகைப்படங்களும் செய்திகளும் அருமை. முன்கூட்டியே நவராத்திரியைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 18. இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் புகைப்படங்கள் அனைத்தும் பேரழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   நீக்கு
 19. திருவரங்கம் to டெல்லி புகைப்படங்கள் ரசிக வைத்தன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 20. வானத்தின் படங்கள் சூப்பர் .

  ஓ, பொம்மைகள் இப்படித்தான் செய்யப்படுகிறதா ! பகிர்வுக்கு நன்றி வெங்கட் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 21. வானத்தின் வர்ணஜாலம் .....அழகு

  பிர்லா மந்திர் படங்களும் ....கண்ணனும் அற்புதம்

  எத்தனை அருமையான படைப்பாளிகள் நம்மிடம் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   நீக்கு
 22. படங்கள் அருமை, பிள்ளையார் சிலை பிள்ளையார் சதுர்த்திக்கோனு நினைச்சேன். வங்காளத்திலெல்லாம் காளி/துர்கை சிலைகள் தானே நவராத்திரிக்குச் செய்வாங்க? பிள்ளையார் இருப்பது புதுசா இருக்கு! மஹாராஷ்டிராவில் பிள்ளையார்களை வித விதமாகப் பார்க்கலாம். இப்போல்லாம் தமிழ்நாட்டிலும் பார்க்க முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நவராத்திரிக்காக போடும் பந்தலில், காளி தவிர, பிள்ளையாருக்கும் இடம் உண்டு! அங்கே முருகனுக்கும் இடம் உண்டு! [அவர்கள் கார்த்திக் என அழைக்கிறார்கள்!]

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....