எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 12, 2015

”ஏரிகள் நகரம் – நைனிதால்” - எனது முதல் மின் புத்தகம்
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்தே என்னுடைய நண்பர்கள் பலரும் கேட்கும் கேள்வி – “உங்கள் எழுத்துகளை புத்தகமாக வெளியிடலாமே?என்பது தான்!  எனது பயணக் கட்டுரைகளை தொடர்ந்து படித்து உற்சாகமூட்டும் பின்னூட்டங்களை தரும் வலையுலக நண்பர்களும் அவ்வப்போது பயணக் கட்டுரைகளை நூலாக வெளியிடலாமே என யோசனைகள் தருவது வழக்கம்.  நண்பர்களை மட்டும் இங்கே சொல்லி அத்துடன் நிறுத்துவது சரியல்ல! எனது மனைவியும் அவ்வப்போது புத்தகம் வெளியிடுவது பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்!

என்னுடைய பயணக் கட்டுரைகளை வலைப்பூவில் தொடர்ந்து வாசித்து வரும் பல நண்பர்களும் புத்தகமாக அல்லது மின்புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதை நிறைய முறை சொல்லி இருக்கிறார்கள்.  குறிப்பாக மதுரைத் தமிழன், ரஞ்சனி நாராயணன், மது [கஸ்தூரி ரங்கன்], முரளிதரன் என ஒவ்வொருவரும் சொல்லியபடியே இருந்தார்கள். 


சில வருடங்களாகவே இப்படி கேள்விகள்/யோசனைகள் வரும்போதெல்லாம் அதைப் பற்றி சிந்தனை செய்வதே இல்லை.  புத்தகமாக அச்சில் வெளியிடுவதில் எனக்கு சில சிக்கல்கள் உண்டு என்று சொல்லி இந்த கேள்விகளை, யோசனைகளை தட்டிக் கழித்து விடுவது எனக்கு வழக்கமாகி விட்டது! 

இப்படியே இதிலிருந்து விலகியே இருந்த நான், சில நாட்களுக்கு முன்னர் அனைவரது யோசனைகளை கருத்தில் கொண்டு என்னுடைய சில பயணக் கட்டுரைகளை மின் புத்தகமாக வெளியிட முடிவு செய்தேன்.  அப்படி முதலாக எடுத்துக் கொண்டது உத்திராகண்ட் மாநிலத்திலுள்ள நைனிதால் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் சிலவற்றிற்கு நான் மேற்கொண்ட பயணம் பற்றி எனது எனது வலைப்பூவில் எழுதிய பயணக் கட்டுரைகளை.

WWW.FREETAMILEBOOKS.COM எனும் வலைத்தளத்தில் தொடர்ந்து பல மின் புத்தகங்களை வெளியிட்டு வரும் குழுவினரில் ஒருவரனான திரு ஸ்ரீனிவாசன் அவர்களது மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளச் சொன்னது ரஞ்சனிம்மா தான். நானும் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவர் உடனேயே பதில் அனுப்பினாலும், மின்புத்தக வெளியீட்டுக்கான ஆயத்த வேலைகளை நான் செய்து அனுப்ப சில மாதங்கள் ஆனது! ஒரு வழியாக சில நாட்களுக்கு முன்னர் அதைச் செய்து நண்பர் திரு ஸ்ரீனிவாசனுக்கு அனுப்ப, அவரும் அவரது குழுவினருமாக எனது “ஏரிகள் நகரம்-நைனிதால் பயணக் கட்டுரைகளை WWW.FREETAMILBOOKS.COM தளத்தில் 212-ஆவது மின் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.  நண்பர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் குழுவில் உள்ள மற்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

ஏரிகள் நகரம்-நைனிதால்மின் புத்தக வெளியீடு பற்றிய தகவலை http://freetamilebooks.com/ebooks/lake-city-nainital/ எனும் சுட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க


புது கிண்டில் கருவிகளில் படிக்க


குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க


பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க:


நம்முடைய எழுத்து அச்சில் புத்தகமாக வந்து, அதை கைகளில் வைத்துப் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்த மின்புத்தகம் மூலம் கிடைக்காது என்று சொன்னாலும், இதிலும் மகிழ்ச்சி கிடைக்காமல் இருக்காது.  எனது முதல் மின்புத்தகம் வெளி வந்திருப்பதை என்னுடைய வலைப்பூவினை தொடர்ந்து படித்து பின்னூட்டங்கள் மூலம் உற்சாகப்படுத்தும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

முதல் முயற்சி என்பதால் சில தவறுகள் இருந்தால் அது என்னுடையது மட்டுமே அன்றி மின்புத்தகத்தினை வெளியிட்டு இருக்கும் நண்பர்களுடையது அல்ல.

என்னுடைய மேலும் சில பயணக்கட்டுரைகளை தொடர்ந்து மின்புத்தகமாக வெளியிடும் எண்ணமும் உண்டு என்பதையும் இங்கே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்!

புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

என்றென்றும் அன்புடன்....56 comments:

 1. (முதல்) மின்னூலுக்கு வாழ்த்துகள்..

  பதிவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. பதிவர் சந்திப்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாவிட்டாலும், “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” தங்களின் தளத்தையும் இணைக்கவும்... நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. கலந்து கொள்ள ஆசை இருந்தாலும் வாய்ப்பில்லை நண்பரே. கையேட்டில் எனது தளத்தையும் இணைக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்! அச்சுப்புத்தகங்கள் அருமை என்றாலுமே இந்தமாதிரி உள்ள பயணக் கட்டுரைகளுக்குப் பலம் சேர்க்கும் படங்களைச் சேர்க்க பதிப்பகத்தார் தயக்கம் காட்டுகிறார்கள். செலவு அதிகமாம்.

  மின்நூல்களில் இந்தப்பிரச்சனை இல்லாததால் படங்களோடு படிக்கும்போது மனநிறைவு கிடைக்கிறது.
  உங்கள் முதல் நூல் வெகு அழகாக வந்துள்ளது. நானும் ஜோதியில் கலக்கலாமா என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தால் நல்லது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   மின் புத்தக வெளியீடு சம்மந்தமாக தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

   Delete
  2. வாங்க, வாங்க துளசி, சீக்கிரம் ஜோதியில் கலந்திடுங்க!

   Delete
  3. அவர்களும் ஜோதியில் கலக்கட்டும்..... நானும் சொல்லி இருக்கேன் ரஞ்சனிம்மா...

   Delete
 4. வாழ்த்துக்கள் ஐயா
  இதோ தரவிறக்கம் செய்து கொள்கின்றேன்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. வாழ்த்துகள் வெங்கட். தரவிறக்கிக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. தங்களது எழுத்து நூலாக்கம் பெற்றதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. தங்களது பதிவைப் படிக்குமுன்பே தங்களின் மின்னூல் பற்றிய அறிவிப்பு எனது மின்னஞ்சலக்கு வந்துவிட்டது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. வாழ்த்துகள் வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. வெங்கட்ஜி ! தங்களது முதல் மின் நூல் வெளியாவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள், பாரட்டுகள்! தரவிறக்கம் செய்யப்படுகின்றது...மிக்க நன்றி!

  கீதா! ஆஹா கடைசில ரகசியம் வெளிவந்து விட்டது!!! உங்களைச் சந்தித்த பிறகு ஒவ்வொரு பதிவு எங்கள் தளத்தில் வெளியிடும் போதும் ரகசியத்தை வெளியிட்டுவிடலாமா என்று மண்டை குடையும்..ஹஹ சும்மா ஜி...இப்போது வெளியாகிவிட்டது தங்கள் நூலும்....மிக்க மகிழ்சி ஜி! நாங்கள் அடிக்கடிச் சொல்லுவதுண்டு வெங்கட்ஜி அவரது பயணக் கட்டுரைகளை வெளியில் கொண்டுவந்தால் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று...இப்போது முதல் புத்தகம் வெளிவந்து விட்டது..இனி அடுத்தடுத்து வெளிவர வேண்டும்,,கையில் ஏந்தும் புத்தகமாகவும்...

  வாழ்த்துகள்! பாராட்டுகள்! ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   கீதா ஜி!: மிக்க நன்றி. உங்களை நேரில் சந்தித்த போது சொன்னது! சில நாட்களுக்குப் பிறகு இப்போது வலைப்பூ மூலமாகவும் சொல்லி விட்டேன்! ரகசியத்தை காப்பாற்றியதற்கும் நன்றி! :)

   Delete
 10. வாழ்த்துக்கள் சார்.. என்னைக் கேட்டால் உங்கள் இந்திய சுற்றுப் பயணங்களை அச்சு இதழாகவே வெளியிடலாம் என்றுதான் கூறுவேன்... அவ்வளவு பயணம் அவ்வளவு அனுபவம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு.

   அச்சு இதழாக வெளியிடலாம் - நம்பிக்கை தரும் பின்னூட்டத்திற்கு நன்றி சீனு.

   Delete
 11. ஆஹா என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,,,,,,
  படிக்கிறேன்.
  இன்னும் பல நூல் படைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 12. இன்னும் பல மின் நூல்கள் வெளியிடுதற்கு நல்வாழ்த்துகள்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 13. எனது நாவல் ஒன்றை மின் நூலாக வெளியிடலாமா புத்தகமாக அச்சில் ஏற்றலாமா என்று முடிவு எடுக்க முடியாமல் திண்டாடுகிறேன் சாதக பாதகங்கள் தெரிவிக்கவும் கைட் செய்யவும் வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. உங்களது நாவலையும் வெளியிடலாம். தனி மடல் அனுப்புகிறேன்.

   Delete
 14. பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவசியம் வாசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. வாழ்த்துக்கள் சகோதரரே!

  உங்களின் முதற் பதிப்பு!..
  எத்தகைய மனச் சந்தோஷத்தைத் தந்திருக்கும் என்பதை
  உணருகிறேன்! இன்னும் இன்னும் பல பதிப்புகள் தொடர்ந்து செய்திட
  உளமார வாழ்த்துகிறேன்!

  தரவிறக்கிக் கொள்கின்றேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 16. எனக்கும் தங்களது பதிவைப் படிக்குமுன்பே தங்களின் மின்னூல் பற்றிய அறிவிப்பு எனது மின்னஞ்சலக்கு வந்துவிட்டது. படித்துவிடுகிறேன். நன்றி!...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.

   Delete
 17. வாழ்த்துகள் முதல் முயற்சிக்கு. நானும் தரவிறக்கம் செய்துகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 18. பதிவிறக்கம் செய்து படிக்கிறேன்!
  தொடரட்டும் சாதனை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 19. முதல் மின்னூலுக்கு வாழ்த்துகள், வெங்கட். மேலும் மேலும் பல மின்னூல்கள் வெளிவர வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 20. முதல் மின்னூலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
  இன்னும் உங்கள் எழுத்துக்கள் மின்னூலாக மட்டுமல்ல... புத்தகமாகவும் வெளிவரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 21. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் நடராஜன் ஐயா.

   Delete
 22. முதல் நூல்!!! வாழ்த்துகள் அண்ணா! கஸ்தூரியை குறிப்பிட்டு நினைவுகூர்ந்தமைக்கும் நன்றிகள்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 23. வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 24. என் எழுத்துகளை மின்னூல் ஆக்கி ,மின்னூல்களின் தரத்தை நான் குறைப்பதாய் இல்லை :)
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 25. வாழ்த்துக்கள் சார்.... தரவிறக்கிக்கொண்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   Delete
 26. வாழ்த்துக்கள்! புத்தக முகப்பு வடிவம் அழகு! குளுமை! மேலும் பல புத்தகங்கள் வெளிவரட்டும்!

  ReplyDelete
 27. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

  ReplyDelete
 28. Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றி சீனு.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....