சனி, 26 செப்டம்பர், 2015

காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது!



கமல்ஹாசன் நடித்த படத்தில் இப்படி ஒரு பாட்டு இருப்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.....  ஆனாலும் இப்ப சொல்லித் தான் ஆகணும்....  ஆமாங்க காசு மழை கொட்டப் போகுது.  உங்களுக்கும் இந்த காசு மழையில் நனைந்து கொஞ்சம் காசு சேர்க்க ஆசை இருக்குமே!  ஆசை யாருக்குத் தான் இருக்காது சொல்லுங்க!

பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளினால் தான் பலருக்கும் துன்பம் ஏற்படுகிறது என்று சொல்வார்கள்.  “ஆசையே துன்பத்திற்கு காரணம்என்று சொன்னார் புத்தர் பெருமான். இருப்பினும் தற்காலத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு விஷயம் சத்குரு சொல்லும் “அத்தனைக்கும் ஆசைப்படு!

வலைப்பதிவர்களான நமக்கும் ஆசை இருக்கணுமே... அதுவும் பரிசு பெறும் ஆசை யாருக்குத் தான் இல்லை. நாம் எழுதும் எழுத்துகள், பாராட்டுகளைப் பெறும்போதே மனதில் மகிழ்ச்சி ததும்புகிறதே. பாராட்டுகள் மட்டுமல்லாது பரிசுத் தொகையும் கிடைத்தால்.....  அது இன்னும் அதிக மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை!

இப்படி ஒரு வாய்ப்பு பதிவர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.  புதுகையில் நடக்கப்போகும் பதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் அறிவீர்கள். புதுகை பதிவர் சந்திப்பினை ஒட்டி தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்துகிறது.  மொத்தம் ஐந்து வகைப் போட்டிகள். போட்டிகளுக்கான முதல் பரிசு ரூபாய் 5000/- இரண்டாம் பரிசு ரூபாய் 3000/- மூன்றாம் பரிசு ரூபாய் 2000/.  ஐந்து போட்டிகளுக்குமான மொத்த பரிசுத் தொகை ரூபாய் 50000/-. 



போட்டிகளுக்கான விவரங்கள் கீழே.... 

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
(கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன)

கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், இணையத்தில் தமிழ், கையடக்கக் கருவியில் தமிழ் (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போன்ற வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி

பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...


போட்டிக்கான விதிமுறைகள் :


(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.

(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். போட்டிக்கான கட்டுரையைத் தற்போதே வெளியிட விரும்பாதவர்கள் அதைத் தெரிவித்து, தங்கள் கட்டுரையை மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். போட்டிக்கான இறுதிநாள் முடிந்தவுடன் இணையத்தில் கட்டாயம் வெளியிட்டு இரு தினங்களில் இணைப்பை அனுப்பினால் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படும்.

(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு 11.59க்குள்)

(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com

(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.



என்ன நண்பர்களே....  போட்டி பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?  இன்னும் என்ன தயக்கம்? திறவுங்கள் உங்கள் கணினியை.... உங்கள் சிறப்பான எண்ணங்களை விரல்கள் மூலமாக விசைப்பலகையில் நடனமாட விடுங்கள்.  சிறப்பானதோர் படைப்பை உருவாக்குங்கள்....  வெற்றி உங்களுடையதாகட்டும்.....

இன்னும் ஐந்தே நாட்கள் - இன்றையும் சேர்த்து ஐந்து நாட்கள் தான் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.  தலைப்பிற்கொன்றாய் பதிவுகளை வெளியிட்டு போட்டிகளில் வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.....

பதிவர் விழா சிறக்கட்டும்.....

நட்புடன்


24 கருத்துகள்:

  1. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவலுகும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. போட்டியில் பங்குகொள்ள வலைபதிவர்களை அலைத்தவிதம் அருமை. நான் இரண்டு கட்டுரைகளை சமர்பித்திருக்கிறேன். ஐந்து கட்டுரைகளாவது எழுத வேண்டும் என்று இலக்கு. நேரம் ஒத்துழைக்க மறுக்கிறது. பார்ப்போம் எத்தனை முடிகிறது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  4. உங்கள் வீட்டு சார்பாக நீங்கள் மூவரும் கலந்து கொண்டால் மொத்தம் 15 பதிவுகள் வந்துவிடுமே அதுமட்டுமல்ல வெற்றி வாய்ப்புகளும் உங்கள் பக்கம் வீச அதிக வாய்ப்புக்கள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் யாரும் எழுதப் போவதில்லை! மனைவியும் மகளும் இணையத்திலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக விலகி இருக்கிறார்கள்..... நானும் எழுதுவது கடினம். போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. வலைப்பதிவர் சந்திப்புப் போட்டி குறித்து
    பகிர்ந்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகக நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. தங்களின் பங்களிப்புக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. நான் எழுதப் போவதில்லை ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. சிறப்பாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
    பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னைப் பித்தன் ஐயா.

      நீக்கு
  9. தாங்கள் பகிர்ந்த விதம் அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  10. நான் கலந்து கொண்டால் மற்றவர்களுக்கு பாதிப்பு தரும் என்பதால் எழுதவில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  12. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....