எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 9, 2015

சோம்நாத் – மோதிஜிக்குப் பிறகு!

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 5

முந்தைய பகுதிகள் – 1 2 3 4

பாம்பேதிரைப்படத்தில் வரும் பாடல்களுள் ஒன்றான “அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனேபாடல் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலரும் அதை ரசித்திருக்கவும், ரசிக்கவும் கூடும்! அப்படி ஒரு அழகை அரபிக்கடலோரத்தில் நானும் கண்டேன். ஆஹா என்ன அழகு! கண்களைக் கவரும் விதத்தில் இருந்தது நாங்கள் கண்ட அந்த இடம்! சோம்நாத்.......


 இரவு நேரத்தில் சோம்நாத் கோவில் 
படம்: இணையத்திலிருந்து...

பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களுக்குள் முதலாம் இடம்பெறும் சோம்நாத் – அஹமதாபாத் நகரிலிருந்து ஆரம்பித்த எங்கள் பயணம் இங்கே தான் அடுத்த நிறுத்தம்.  அரபிக்கடலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில் இயற்கைச் சீற்றங்களினாலும் அன்னிய படையெடுப்புகளினாலும் பல முறை சிதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இக்கோவிலின் தற்போதைய வடிவம் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.

பல்வேறு கதைகள் இக்கோவில் பற்றி சொல்லப்படுகின்றன. சந்திரன் [Moon] தக்‌ஷ பிரஜாபதியின் 27 மகள்களை மணந்து கொண்டிருந்தாலும், 27 மனைவிகளில் ரோஹிணியிடம் மட்டும் அதிகமாக பிரியத்துடன் இருந்து மற்றவர்களை கண்டுகொள்ளாது இருக்க, கோபம் கொண்ட தக்‌ஷபிரஜாபதி “நீ உன் ஒளியினை இழப்பாய்! இந்தா பிடி சாபம்என்று சாபம் கொடுத்துவிட சந்திரன், பிரபாச தீர்த்தம் என அழைக்கப்படும் இவ்விடத்திற்கு வந்து  சிவபெருமானை நோக்கி தவம் இருந்து இழந்த ஒளியை மீண்டும் பெற்றதாக ஒரு கதை.பகல் நேரத்தில் சோம்நாத் கோவில் 
படம்: இணையத்திலிருந்து...

தனக்கு ஒளியை மீண்டும் வழங்கிய சிவபெருமானுக்கு இங்கே கோவில் அமைக்க முடிவு செய்த சந்திரன், தங்கத்திலேயே கோவில் அமைத்ததாக வரலாறு.  முதன் முதலில் அமைக்கப்பட்ட கோவில் தங்கத்தில் அமைந்தாலும், அதன் அழிவிற்குப் பிறகு இராவணனால் வெள்ளியிலும், கிருஷ்ணனால் சந்தன மரத்தாலும் அமைக்கப்பட்டதாகவும் நம்பிக்கை.  தற்போதைய கோவில் கற்களால் ஆனது! தங்கத்திலிருந்து கற்களுக்கு வந்துவிட்டோம்!

பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றாலும், பொருட்கள் பாதுகாப்பு அறை மிகச் சிறிய அளவில் இருந்தது! அலைபேசி, புகைப்படக் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து கோவிலை நோக்கி நடந்தோம். தோல் பொருட்கள் [Belt, Purse, Handbag] போன்றவை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை! இதை பாதுகாப்பு அறை அருகிலேயே எழுதி வைக்காமல் கோவில் வாசலுக்குச் சென்றபிறகு சொல்கிறார்கள்! மீண்டும் வெளியே சென்று வைக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் வெளியே சென்று திரும்பவும் வரிசையில் நிற்க விரும்பாத பலர் தங்களது Belt-ஐ கழட்டி ஆங்காங்கே போட்டு வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது!


சோம்நாத் கோவில்
 Closer look of the gopuram
படம்: இணையத்திலிருந்து...

நாங்கள் சென்ற சமயம் மாலை நேரம் என்பதால் மாலை ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  பக்தர்களின் கூட்டம் அதிகம் என்பதால் விரைவாக அனைவரையும் வெளியே அனுப்பியபடியே இருந்தார்கள். இங்கேயும் திருப்பதி போல ஜருஹண்டி ஜருஹண்டி!தான்.  சில விநாடிகளில் வெளியே தள்ளி விடும் எந்தக் கோவிலிலும் நமக்கு திருப்தி கிடைப்பதில்லை.  மனக்கண்ணில் “அவனைவழிபட்டு திருப்தி அடைவது உத்தமம்.

ஆரத்தி சமயத்தில் அத்தனை பேரும் இறைவனுக்கு காண்பிக்கப் படும் ஆரத்தியை கோவிலின் உள்ளே இருந்து பார்ப்பது கடினம் என்பதால், கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய LED திரையில் உள்ளே நடக்கும் ஆரத்தியினை நேரடியாக ஒளிபரப்பி, கோவிலுக்கு வெளியே இருக்கும் மக்களும் பார்க்கும்படி வசதி செய்திருக்கிறார்கள்.  இது ஒரு நல்ல ஏற்பாடு.  கொஞ்சம் நிம்மதியாக வெளியே நின்று பார்க்கலாம். ஆனால் இங்கே வரும் மனிதர்கள் தங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிலும் தள்ளுமுள்ளு செய்வதைப் பார்க்கும்போது மனதில் வருத்தம் தான்!

எத்தனை பெரிய கோவில், எத்தனை பேரின் உழைப்பு இதனை கட்டுவதில் இருந்திருக்கும், என்று நினைக்கும்போது மனதில் ஒரு பிரமிப்பு வருமே அதற்காகவே பல கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம்.  இங்கேயும் அப்படியே.  கடற்கரையின் ஓரத்தில் இவ்வளவு பெரிய கோவில் கட்டி முடிக்க எத்தனை பேர் வியர்வை சிந்தியிருப்பார்கள் என நினைக்கும்போதே அவர்களுக்கு பூங்கொத்து தர விழையுமே நமது மனம்.

இக்கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே இன்னுமொரு கோவிலும் உண்டு. நமது ஊர் பாணியில் கோபுரம் இருக்க, அங்கேயும் சென்றோம். இங்கே அத்தனை மக்கள் இல்லை என்பதால் கொஞ்சம் நிதானமாக மனதை ஒருநிலைப்படுத்த முடிந்தது.  கோவிலில் ஒரே ஒரு பூஜாரி – வந்தால் வரட்டும், வரவில்லையென்றாலும் கவலை இல்லை எனும் கணக்கில் ஏகாந்த நிலையில் அமர்ந்திருந்தார்.  ஒரு வேளை அவர் தமிழரோ என தமிழில் பேச்சுக் கொடுக்க, சில சந்ததிகளாகவே இங்கே வந்து விட்ட தமிழர் என்பதால் தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டார்.

பொருட்கள் பாதுகாப்பு அறையில் வந்து நாங்கள் வைத்த பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தால் அங்கே கும்மிருட்டு! தட்டுத் தடுமாறி பொருட்களை எடுத்துக் கொடுத்தார் அந்த சிப்பந்தி. நேரம் ஆக ஆக ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவ, காத்திருந்த ஒருவர் சொன்னது – “மோதிஜி தில்லிக்குச் சென்றதால் இங்கே எல்லோருக்கும் துளிர் விட்டுவிட்டது போல!  முன்பெல்லாம் இப்படி ஆனதே இல்லை! திரும்பவும் குஜராத்திற்கு அவரை அழைக்க வேண்டும் போல!”  - மோதிஜி தில்லிக்கு வந்தே சில மாதங்கள் ஆன நிலையில் சொன்னது என்பதையும் [நாங்கள் சென்றது அக்டோபர் 2014] இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இப்படியாக ஜ்யோதிர்லிங்க ஸ்வரூபத்தில் சிவபெருமானை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை வரும் பதிவில் பார்க்கலாமா!

நட்புடன்


டிஸ்கிதொடரில் சற்றே இடைவெளி கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்த பகுதிகள் இனி தொடர்ந்து வெளிவரும்.  பதிவில் கொடுத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து..... 
 

38 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவுகளைத் தொடர்வதற்கும் நன்றி!

   Delete
 2. #“மோதிஜி தில்லிக்குச் சென்றதால் #
  தில்லி என்ன ஆப்பிரிகாவிலா இருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 3. புகைப்படங்கள் அருமை தொடர்கிறேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. ஹ்ம்ம் எத்தனை பேரின் உழைப்பு...உண்மை அண்ணா

  மோதிஜி தில்லியில் இருக்கிறாரா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 5. மீண்டும் ஒருமுறை மனப்பயணம் போனேன் உங்கள் பதிவால். இரவு ஒரு ஒளியும் ஒலியும் ஷோ உண்டே. பார்க்கலையா?

  ReplyDelete
  Replies
  1. ஒளியும் ஒலியும் பார்க்கவில்லை - இரவு தங்க துவாரகா சென்று விட திட்டம் இருந்ததால்! ஆனாலும் சென்றோமா? :) என்பது வரும் பதிவுகளில்!

   இப்பதிவின் மூலம் மீண்டும் ஒரு முறை மனப்பயணம்..... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 6. சோம்நாத் செல்லும் ஆசையுள்ளது. தங்களின் பதிவு அந்த ஆசையை மேம்படுத்திவிட்டது. வாழ்த்துக்ள்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது நிச்சயம் சென்று வாருங்கள் ஐயா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. அருமையான பயண விவரங்கள் ஐயா
  தொடர்கின்றேன்
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. @ ஜம்புலிங்கம் ஐயா. நம்ம சோம்நாத் பதிவுகளையும் ஒரு பார்வை பார்த்துருங்க. குஜராத் பயணக்கதைகளில் எழுதுனது. சோம்நாத் ரெண்டு பதிவுகள்.

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/19.html

  வெங்கட்..... மாப்ஸ் ஃபார் விளம்பரம்!

  ReplyDelete
  Replies
  1. விளம்பரம் நல்லது! - எனக்கும் உதவும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 9. //“மோதிஜி தில்லிக்குச் சென்றதால் இங்கே எல்லோருக்கும் துளிர் விட்டுவிட்டது போல! முன்பெல்லாம் இப்படி ஆனதே இல்லை! திரும்பவும் குஜராத்திற்கு அவரை அழைக்க வேண்டும் போல!” //

  இப்போதும் அங்கே பா.ஜ.க ஆட்சிதானே நடக்கிறது? பின் ஏன் இந்த நிலை?

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. சோம்நாத் பற்றிய அரிய தகவல்களுடன் அழகிய படங்களுடன் இனிய பதிவு..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. தென்மாநில கோபுரங்களில் இருப்பது போன்ற சிற்ப வேலைப்பாடுகள் இல்லாத கோபுறமாக இருக்கிறதே?.

  ReplyDelete
  Replies
  1. வடக்கில் இருக்கும் கோபுரங்கள் வித்தியாசமாகத் தான் இருக்கும். நம் ஊர் போல சிற்பங்கள் கோபுரங்களில் இருப்பதில்லை.

   தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாஸிர் அசனப்பா.

   Delete
 12. பார்க்க நினைத்து பார்க்க முடியாமல் போகும் இடங்களி இதுவும் ஒன்று. உடலிலும் மனசிலும் தெம்பு இருக்கும் போதே பார்க்க விரும்பும் இடங்களைப்பார்த்து விட வேண்டும் உங்கள் மேல் சற்றுப் பொறாமையாகக் கூட இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சற்றே பொறாமை! :) நீங்களும் சென்று வரலாம். முடிந்த போது சென்று வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. அழகு தான்,,,,, தாங்கள் தந்துள்ள படமும், தொகுப்பும்,,, அருமை,
  வாழ்த்துக்கள், தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 14. உங்கள் பயணக்கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. நாங்கள் எப்போதாவது செல்லும் போது இந்த தகவல்கள் வழிகாட்டியாக
  இருக்கும். படித்து ரசித்தோம்.
  சுதா த்வாரகநாதன், புது தில்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   Delete
 15. ம்ம்ம்ம் மோதிக்கு முன்னால் சிமன்பாய் படேல் காலத்திலும், ஊர்மிளாபென் படேல் காலத்திலும் சோம்நாத் போயிருக்கோம். இப்போ மோதி அங்கே முதலமைச்சரா இருந்தப்போவும் போனோம். அப்போ மோதி பரோடாவுக்கு வந்திருந்தார். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. சோம்நாத் போய் வந்த விபரங்களை விரிவாக எழுதி இருக்கேன். நானும் முடிஞ்சால் சுட்டி தரேன். ஒரே சமயம் துளசியும் விளம்பரம் கொடுத்து நானும் விளம்பரம் கொடுத்தால் போணி ஆகணுமில்ல! அதான்! :)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எழுதியதன் சுட்டியும் தரலாமே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 16. //எத்தனை பெரிய கோவில், எத்தனை பேரின் உழைப்பு இதனை கட்டுவதில் இருந்திருக்கும், என்று நினைக்கும்போது மனதில் ஒரு பிரமிப்பு வருமே ..// ஆம் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. அருமையான முறையில் கோயிலைப்பற்றி விளக்கிவிட்டீர்கள்! படங்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. கூடவே வந்துண்டிருக்கேன். அப்புறம் அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 19. Wow! nice. When I was in GJ, I went only twice, here.... and thrice to Dwarka.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....