திங்கள், 24 ஆகஸ்ட், 2015

[CH]சகடா – ஆல் இன் ஆல் அழகுராஜா

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 4

முந்தைய பகுதிகள் – 1 2 3

ராஜ பவனி!

குஜராத் மாநிலத்தில் நான் பார்த்த ஒரு மூன்று சக்கர வாகனத்தினைப் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். சென்ற பதிவில் சொன்னது போல குஜராத் மாநிலத்தில் சாலைகள் மிகவும் அருமையாக அமைத்திருப்பது மட்டுமல்லாது சீராக பராமரிப்பதும் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மாநில நெடுஞ்சாலைகள் என்ற பெயரில் பல மாவட்ட தலைநகரங்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.  இதனால் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வருகிறது.  இந்த சாலைகளில் பயணம் செய்யும் போது பயணம் விரைவில் முடிய வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை – அப்படியே பயணித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது!

தனிக்காட்டு ராஜா!

இந்த சாலைகளில், குஜராத் மாநிலத் தலைநகரான காந்திநகரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் இப்படி பிரதான சாலைகளில் மட்டுமே இயங்குகின்றன.  பிரதான சாலையிலிருந்து விலகி, கிராமங்களுக்குள் செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனால் இங்கே நிறைய மூன்று சக்கர வண்டிகள், பிரதான சாலைகளிலிருந்து கிராமங்களுக்கு பயணிக்கிறது. அப்படி இருக்கும் இந்த மூன்று சக்கர வண்டிகளுக்கு குஜராத்தி மொழியில் “[ch][g]கடா என்று பெயர் சொல்கிறார்கள்.

எதிரும் புதிரும்!

இப்படி கிராமங்களுக்குள் பயணம் செல்ல நமது ஊரில் இருக்கும் வசதிகள் போல பேருந்து வசதிகள் இல்லை என்றாலும், இப்படி ஒரு வசதியாவது இருக்கிறதே என்று நினைத்தேன்.  வேறு சில வட இந்திய நகரங்களில் இந்த வசதி கூட இல்லை. உத்திரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஜீப்-ல் 25 முதல் 30 பேர் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன்! ஒரு முறை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணமும் செய்திருக்கிறேன் – புளிமூட்டை கணக்காக மனிதர்களை அடைத்து வாகனங்களைச் செலுத்துவார்கள்! அதுவும் கண்மூடித்தனமான வேகத்தில்!


 போவாமா? ஊர்கோலம்?

மனிதர்கள் முதல், காய்கறிகள், உணவுப் பொருட்கள், ஆடு-மாடு-மீன், வீட்டுப் பொருட்கள் என இவற்றில் கொண்டு செல்லாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். பிரதான சாலையில் பயணிக்கும்போது பார்த்த பல வண்டிகளில் இப்படி எல்லா விதமான போக்குவரத்திற்கும் இந்த வண்டி பயன்படுத்துவதைப் பார்க்க முடிந்தது.  மனிதர்களும் நிறையவே பயணிக்கிறார்கள். உள்ளே அமர இடம் இல்லாதவர்கள் பின்னால் நின்றபடி பயணிக்கிறார்கள். ஓர் இடத்தில் பேருந்து ஒன்று Repair ஆகி நிற்க, அதை Tow செய்யவும் பயன்படுத்தியது ஒரு “[ch][g]கடாவை!  
 எங்கும் செல்வோம்! எப்படியும் செல்வோம்!

இந்த “[ch][g]கடா வண்டியைப் பார்க்கும்போதெல்லாம் இதில் பயணிக்கும் ஆசை வந்தது. ஓட்டுனர் இருக்கை அதிக உயரத்தில் இருக்க, பின் பக்கம் கொஞ்சம் சாய்ந்த மாதிரி இருக்கிறது. ஓட்டுனர்கள் ஏதோ ராஜா மாதிரி உட்கார்ந்திருக்கிறார்.  இந்த வாகனங்களை சிறப்பாக அலங்கரித்தும் வைத்திருக்கிறார்கள். பழைய என்ஃபீல்ட் புல்லட்டின் இஞ்சின் மட்டும் எடுத்து அதனை வைத்து இந்த வண்டிகளைச் செய்கிறார்கள். இதை இயக்க டீசல் பயன்படுத்துகிறார்கள்.  படபடவென்று ஒரு ஓசையுடன் இவை பயணிப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது.

சற்றே ஓய்வெடுக்கலாம்!

நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த நாள் பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாள். வழியில் நாங்கள் பார்த்த ஒரு கிராமத்தில் ஆட்டுச் சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆடுகள் வாங்க அப்படி ஒரு கூட்டம்.  சுற்றி இருக்கும் பல கிராமங்களிலிருந்து ஆடுகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் அங்கே குழுமியிருக்க, வியாபாரம் கண ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆடுகளை வாங்கியவர்கள் அவற்றை எப்படி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவார்கள் எனப் பார்த்தால் இருக்கவே இருக்கிறார் ஆல் இன் ஆல் அழகுராஜா! அவற்றின் பின் புறத்தில் இரண்டு மூன்று ஆடுகள் நின்றபடியே பயணம் செய்ய, பக்கவாட்டு இருக்கைகளில் அவற்றை வாங்கியவர்கள் உட்கார்ந்து கொண்டு ஆடுகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கம்பியைக் கூட பிடிக்காது ஜில்லென்று அமர்ந்திருக்கும் ஒரு பெண்!

பயணிக்கும் போது நடுநடுவே வசந்த் [B]பாயிடம் பேசிக் கொண்டே வந்தேன். சில குஜராத்தி (ગુજરાતી) சொற் பிரயோகங்களையும் கற்றுக் கொண்டேன்! கேம் [ch]சோ?என்றால் “எப்படி இருக்கீங்க?”,  “தமாரு நாம் சுன் [ch]சே?என்றால் உங்களுடைய பெயர் என்ன?“ஆனோ சு [b]பாவ் [ch]சேஎன்றால் “இது எவ்வளவு?” !  அவரிடம் கேட்க, வேகவேகமாக சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு ஹிந்தியில் நான் சொன்னேன் – “ஏம்பா இவ்வளவு வேகமா சொன்னா எனக்குப் புரியாது, கொஞ்சம் மெதுவா சொல்லிக் குடுப்பா!என்று! அதற்கும் குஜராத்தியில் சொல்லித் தந்தார்!  - “தமே மெஹர்பானி கரினே தோடு [dh]தீரே  [b]போல்சோ!

வண்டியில் பயணிப்பது மீன்கள்! கடலிலிருந்து அப்போது தான் பிடிக்கப்பட்ட மீன்கள் - மார்க்கெட் நோக்கிய பயணம்!

பார்ப்பதற்கு ஹிந்தி எழுத்துகளைப் போலவே இருந்தாலும் பல எழுத்துகளில் வித்தியாசம் இருக்கிறது.  கற்றுக் கொள்ள சுலபம் தான் என நினைக்கிறேன்.  தில்லி திரும்பிய பிறகு குஜராத்தி கற்றுக் கொள்ள நினைத்தேன் என்றாலும் இது வரை கற்றுக் கொள்ளவில்லை! அலுவலகத்தில் ஒரு குஜராத் மாநிலத்தவர் இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!


இது ஜீப் சவாரி! இதுவும் குஜராத்தின் சில மாவட்டங்களில் உண்டு!

ஆட்டோவில் இப்படியும் பயணிக்கலாம்!

இப்படியாக பயணித்து மாலை நாங்கள் சோம்நாத் வந்து சேர்ந்தோம்.  சோம்நாத் நகரில் பார்த்தது என்ன, அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமே!

நட்புடன்58 கருத்துகள்:

 1. சகடம் என்பது ஒரு வண்டி என்ற அர்த்த த்தில் நாலடியாரில் ஒரு பாட்டு வருகிறது நினைவிற்கு வருகிறதா? "செல்வம் சகடக்கால் போல் வரும்". என்பது பிரபலமான வாக்கியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
   பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க-
   அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம்
   சகடக்கால் போல வரும்!//

   செல்வம் வண்டிச்சக்கரம் போல உருளும். எனவே எருது பூட்டி ஏர் உழுது பெற்ற செல்வத்தைப் பலரோடு கூடி உண்டு மகிழ்க.

   இந்தப் பாடலைத் தான் நீங்க சொல்றீங்க போல! முன்னர் படித்ததாய் நினைவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 2. வணக்கம் அய்யா
  அருமையான பயண அனுபவம் ...
  ஜோரான பயண புகைப்படங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 3. அருமையான சாலைகள் என்றால்
  பயணங்கள் சுகமானவைதானே
  நன்றி ஐயா
  தொடர்கிறேன்
  தம2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. “[ch]ச[g]கடா” தில்லியில் முன்பு ஓடியஃபட் ஃபட் ஊர்தியின் புது அவதாரம் என நினைக்கிறேன். தொடர்கிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபட்ஃபட் மாதிரி தான் என்றாலும் இதில் சில வித்தியாசங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 5. சக்டா இல்லைன்னா வாழ்க்கையே ஸ்தம்பிச்சுப் போயிரும் அங்கே! பராத் கூட சக்டாவில்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே!

  சகடா வாகனமும் அதில் பயணமும் கண்டு வியந்தேன்!
  சில படங்களில் அதில் பயணம் செய்பவர்களைப் பார்க்கும்போது
  திகிலாக இருக்கின்றது.

  மீண்டும் உங்கள் பயனக் கட்டுரைத் தொடரா... அடடா முன்னுக்கு போன
  பதிவுகளையும் படிக்க வேண்டுமே!
  பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோ!

  த ம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 7. அந்த ஊர்ல டிராஃபிக் போலீஸ் மாமூல் சிரமங்கள் இல்லை போலும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. அருமையான சாலைகள். வித்தியாசமான வண்டிகள். உங்கள் பதிவால் நாங்களும் குஜராத் சென்றோம். வித்தியாசமான மனிதர்கள், பழக்கவழக்கங்கள், நிகழ்வுகள். இதுதான் நம் இந்தியா. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. நம்ம ஊர் மீன்பாடி வண்டியை கொஞ்சம் மாற்றி அமைத்து இப்படி பயன்படுத்துகின்றனர் போலும்! வித்தியாசமான பயணம்தான்! அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 10. பயணம் எங்களுக்கும் சுகமாய் இனித்ததே ஜி நலம்தானே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. பயணம் செய்வது ஒரு கலையாகவே உங்களக்கு ஆகிவிட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 12. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 13. ஹரியானாவில் ‘ஜுகாட்’ வண்டியில் பயணம் செய்திருக்கிறேன்!
  அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜுஹாட் வண்டி... ஹரியானா, உத்திரப் பிரதேசம் என இரண்டு இடங்களிலும் பார்த்திருக்கிறேன் - ஆனால் பயணித்ததில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 14. சகடா .மிகப் பழமையான வார்த்தை. சகட யோகம் என்று கூடக் குறிப்பிடுவார்கள். பலவிதமான சக்கர வண்டிகள்
  வியப்பூட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 15. பயணம் செய்ய விருப்பம் இருந்தாலும் ஆபத்தும் கூடவே இருக்கும்போல !

  இன்னும் ஒட்டக வண்டியைக் காணோமே !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒட்டக வண்டி தானே.... வரும்..... அதுவும் வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 16. இந்திய யுவான் சுவாங் நீங்கள்தான். உங்கள் பயணங்களும் பயணக் குறிப்புகளும் படங்களும் அருமையோ அருமை. பட்ங்களுக்கு நீங்கள் கொடுக்கும் கம்மேன்ட்கள் அனைத்தும் சுவாரசியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யுவான் சுவாங்..... அவர் எங்கே நான் எங்கே..... நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய நண்பரே......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 17. 1980 களில் குஜராத்தில் பரோடா சென்று அங்கிருந்து வனக்புரி தெர்மல் பவர் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறேன் பஸ்ஸுகள் எல்லாம் பாடாவதி. சாலை ஒழுங்கும் அறவே கிடையாது. ஒருமுறை ஆந்திரா விஜயநகரிலிருந்து ஒரிஸ்ஸா சுனாபேடாவுக்கு பஸ்ஸில் பயணித்தேன் ஆடு கோழி எல்லாம் சக பயணிகள் இதையெல்லாம் பார்க்கும் போது தென் மாநிலங்கள் எவ்வளவோ தேவலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தெற்கில், குறிப்பாக தமிழகத்தில் பேருந்து வசதிகள் அதிகம் தான். இங்கே அத்தனை முன்னேற்றம் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 18. சின்ன வயதில் பழைய இரட்டை மாட்டு வண்டியில் பயணிப்பதை சக்கடா வண்டிப் பயணம் என்போம். பக்கோடா தின்று கொண்டே, அக்கடா என்று சக்கடா வண்டியில் பயணிப்பதன் சுகமே அலாதி. ஆனால் வீடு வந்ததும் உடம்பு முக்கடா முனகடா என்று கடமுடாதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முக்கடா... முனகடா! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 19. இதுக்குக் கொடுத்த கருத்து காக்கா கையிலா? போகட்டும்! இந்தச் சகடா பற்றிச் சொன்ன நினைவு இருக்கு! ஆனால் இங்கே பதிவாகவில்லை.அது வேறே பதிவோ! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு முந்தைய பதிவில் சொல்லி இருப்பீங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 20. ஆம்தாபாதிலிருந்து நேரே சோம்நாத்திற்குப் பேருந்துகள் உண்டு. நாங்க பரோடாவிலிருந்தே சென்றிருக்கிறோம். துவாரகை நாலைந்து முறைகளும் சோம்நாத் மூன்று (இரண்டு?)முறைகளும் போனோம்! பரோடாவில் இருந்தபோது 2010 ஆம் ஆண்டில் தான் டகோர் துவாரகா ஆட்டோவிலேயே சென்றோம். ஆட்டோக்காரர் ரொம்பவே குறைவான கட்டணத்துக்கு வந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேருந்துகள், ரயில்கள் ஆகிய இரண்டுமே இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றது நண்பரின் காரில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 22. காலில் சக்கரம் கட்டியிருக்கிறீர்களா? அடேயப்பா. அழகான படங்களே பாதி விவரம் சொல்லி விடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலில் சக்கரம்! :)) இருந்தால் நன்றாக இருக்கும்! இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்ல முடியுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   நீக்கு
 23. சகடா படங்கள் அருமை, அந்தவண்டியில் பயணம் செய்தீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வண்டியில் பயணம் செய்யவில்லை..... செய்ய ஆசையிருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோம்திம்மா.

   நீக்கு
 24. ச்சகடாவுக்கு நல்ல பெயர்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா... பயணத்தின் சிறு அம்சங்களையும் விட்டுவிடாமல் நுட்பமாய்க் கவனிப்பதோடு தேவையான தகவல்களையும் திரட்டி மிக அழகாக எழுதுகிறீர்கள்.. கூடுதல் ரசனையாய் நேர்த்தியான படங்கள். பாராட்டுகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பாராட்டுகளுக்கு நன்றி கீதமஞ்சரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 25. சூப்பர் பயணம்! சகடா வண்டி,,,நம்ம ஊரில் குதிரைவண்டி, மாட்டு வண்டி, பின்னர் மீன் வண்டி, ஜீப் பயணம் போன்று செய்ததுண்டு...பாண்டிச்சேரியில் கிட்டத்தட்ட இதே போன்று ஆனால்டீசல் எஞ்சின் சப்தம் பயங்கரமாக இருக்கும்,,,டெம்போ என்று சொல்லுகிறார்கள். பல சிறிய ஊர்க்ளையும் இணைக்கின்றது....
  தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாண்டிச்சேரி டெம்போவில் பயணம் செய்ததுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 26. உங்கள் பயணக் கட்டுரைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்... எங்களையும் அங்கு பயணிக்க வைக்கும் கட்டுரைகள் அவை...
  இதில் படங்கள் இன்னும் உயிர்ப்பாய்...
  வாழ்த்துக்கள் அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்

   நீக்கு
 27. அழகிய படங்கள் அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 28. இந்தப் புதுவிதமான வாகனம் நன்றாகத்தானிருக்கிறது! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நீங்கள் ஆரம்பத்தில் சொல்லியது போலவே சாலைகள் புகைப்படங்களில் வெகு அழகாகத்தெரிகின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....