எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 21, 2015

ஃப்ரூட் சாலட் – 143 – புதிய ரயில் பெட்டிகள் – நடனத்துடன் துவங்கும் அலுவலகம் – மியாவ்.... மியாவ்....இந்த வார செய்தி:

சென்னையில் இருக்கும் ICF 50000-வது ரயில் பெட்டியை தயார் செய்திருக்கிறது.  தற்போது இருக்கும் பெரும்பாலான ரயில் பெட்டிகளில் மேலே இருக்கும் படுக்கைக்குச் செல்ல உங்களுக்கு பல வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்! கொஞ்சம் சுலபமாக மேல் படுக்கைக்குச் செல்லும் விதமாக படிகள் அமைத்திருப்பது நல்ல விஷயம்!பெட்டிக்குள் இருக்கும் தகவல்களை ப்ரைலி முறையிலும் கொடுத்திருப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருப்பது என நல்ல சில வசதிகள்.

புதிய வசதிகளுடன் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த ரயில் பெட்டி போலவே எல்லா ரயில் பெட்டிகளும் இருந்தால் நல்லது. பழைய பெட்டிகளையும் மாற்றம் செய்யவேண்டும். மேலும் பல வசதிகளையும், சுத்தமான பராமரிப்பும் செய்தால் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

ரேஷன் கார்டு ஃபோட்டோ 15 வருஷத்துக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்னு காட்டுது!

ஆதார் கார்டு ஃபோட்டோ 15 வருஷத்துக்கு அப்புறம் நாம எப்படி இருப்போம்னு காட்டுது!

மியாவ்.... மியாவ்....

சென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும் போது எங்கிருந்தோ மெல்லிய குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. எல்லா இடத்திலும் தேடினாலும் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை.  சற்றே மும்மரமாக தேடியதில் சுவற்றுக்குள் பதித்து வைத்திருக்கும் Safety Locker பக்கத்தில் இருக்கும் சிறிய இடைவெளிக்குள் இருந்து சத்தம் வருவது தெரிந்தது.  அங்கே பார்த்தால் மூன்று பூனைக்குட்டிகள்! அலுவலக நேரம் முடிந்ததும் இங்கே பூனையார் வந்து குட்டிகள் போட்டிருக்கிறார் போலும்!

ஒரு சிறிய தட்டில் பால் வைத்து வந்தோம்.  மூன்று நாட்களுக்குப் பிறகு குட்டிகளில் இரண்டினை எங்கோ எடுத்துச் சென்று விட்டது தாய்ப் பூனை. ஒரு குட்டி மட்டும் அங்கேயே. அதற்கு உடல் நிலை சரியில்லை போலும்! வைத்த பாலை தொடக்கூட இல்லை. தாயும் வரவே இல்லை. சோர்ந்து படுத்திருக்க, அலைபேசியில் விலங்குகளுக்கான மருத்துவமனையை அழைத்தோம். அவர்கள் வாகனத்தில் வந்து சேருவதாகச் சொல்ல, அந்தப் பூனைக்குட்டியை மிக பத்திரமாய் கொண்டு போய்க் கொடுத்தோம். 

அரை மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு!

போகும் வழியிலேயே பூனைக்குட்டி இறந்து விட்டதாம்!  அன்றைக்கு வெகு நேரம் நினைவில் பூனைக்குட்டியின் மியாவ்... மியாவ்.. கேட்டுக்கொண்டே இருந்தது.  அலுவலகத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்படும்போது தாய்ப்பூனை தனது குட்டியைத் தேடிக்கொண்டு வந்தது! Safety Locker அருகில் சுற்றிச் சுற்றி வந்த பூனையைப் பார்க்கும் போது அதன் சோகம் எங்களையும் ஒட்டிக் கொண்டது.... 

இந்த வார காணொளி:

தலைநகர் தில்லியின் அருகே இருக்கும் குர்காவ்ன் பகுதியில் இருக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் அலுவலகம்.  தினம் தினம் அலுவலகத்திற்கு காலையில் வந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை என்ன?  பாருங்களேன்!

VID-20150802-WA0005.mp4
A multinational company office... in Gurgaon...watch d video in the office they dance daily for 5 minutes before they start their work
Posted by Vishal Sharma on Sunday, August 2, 2015

இங்கும் பார்க்கலாம்! [முகப்புத்தக பயனராக இருந்தால்!]

https://www.facebook.com/video.php?v=10207318463702515

படித்ததில் பிடித்தது:

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவு செய்திருந்தார். அருகில் இருந்தவர்கள், “வெகுதூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே, பரவாயில்லையா? என்றனர்.

அதற்கு அவர், “உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களுமே வலிக்கும். எனக்கு ஒரு கால் மட்டும் தான் வலிக்கும்என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களை பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்
48 comments:

 1. லிங்க் வேலை செய்யவில்லை.

  கடைசி விஷயம் ப.பி மிகக் கவர்ந்தது.

  ரயில் பெட்டிகளில் அப்பர் பெர்த்துகளில் ஏற இன்னும் சுலபமான வழிகள் கண்டுபிடிக்கப்படலாம்!

  ReplyDelete
  Replies
  1. காணொளி என்னுடைய முகப்புத்தகப் பக்கத்திலும் இருக்கிறது. இங்கேயும் இப்போது அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். முகப்புத்தகத்திலிருந்து Embed செய்ய முடியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சுட்டியை மத்தியானமாப் பார்க்கிறேன். செய்திகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 3. Replies
  1. மியாவ்.... :(

   சில நாட்களுக்கு Safety Locker பக்கம் போகவில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 4. அருமைஅருமை
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. ஆமாம், புது ரயில் பெட்டிகலும் சுகாதாரமும் பயணத்தை இனிமையாக்கும். லூயி ஸ்மித் இற்றை மிகப் பிடித்தது.
  பாவம் அந்த பூனைக்குட்டியும் தாய்ப்பூனையும் :-(

  காணொளி பிறகு பார்ப்பேன்..
  சுவையான ப்ரூட் சாலட் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 6. இந்த வார பழக்கலவையில், குறுஞ்செய்தியும் , படித்ததில் பிடித்ததும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. தன் பலவீனங்களை பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

  பழ-மொழியுடன் ப்ரூட் சாலட் அருமை..!

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. தற்போது நலம் தானே?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. பூனைக் குட்டி விஷயம் மனதை நெருடியது..

  ReplyDelete
  Replies
  1. நெருடல் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. செய்திகள் அருமை பூனை மனதை கணக்கச் செய்து விட்டது இந்த அலுவலகத்தில் வேலைகள் நடக்கிறதா....
  நானும் எனது அலுவலகத்தில் ''ஜொள்''லிப் பார்க்கிறேன் அரேபியர்கள் சம்மதித்தால் சரிதான் மாறாக எனது சீட்டைக் கிழித்தால் நீங்கள்தான் பஞ்சாயத்துக்கு வரவேண்டியதிருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. இந்த அலுவலகத்தில் அதிகமாகவே வேலைகள் நடக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. இன்றைய எல்லா பகுதிகளும் என்னைக் கவர்ந்தது..... முகப்புத்தகத்தில் பகிர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 11. இவ்வார புரூட் சாலட்டில் மனதைத் தொட்டது பல்லால் சைக்கிள் ஓட்டுதல். நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. ரயில் பயணங்களை மகிழ்வாக்க நிறைய மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும். பெர்த் ஏற நண்பர் ஸ்ரீராம் ஒரு நல்ல யோசனை சொல்லியிருந்ததாக நினைவு...

  இற்றை அருமை...குறுஞ்செய்தியை ரசித்தோம்....

  காணொளி சுவாரஸ்யமாக இருக்கின்றது...எல்லாருமே இளம் வயதினர் போலும்...தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள ..ஒரு விதத்தில் நல்ல யோசனையாகத்தான் இருக்கின்றது...நன்றாகப் பயிற்சி செய்தது போல ஆடுகின்றனர்....

  பாவம் மியாவ்...பொதுவாக குட்டிக்கு உடம்பு சரியில்லை என்றால் தாய் அதை மாற்றுவதில்லை. அதற்குத் தெரிந்து விடும் போல...பாலும் கொடுப்பதில்லை. ஆனால் குட்டி அந்த இடத்தில் இல்லை என்றால் தேடித் தவிக்கும்...மியாவ் என்றாலும் பௌ பௌவ்வாக இருந்தாலும்..

  படித்ததில் பிடித்தது அருமை...வெற்றி அதுதான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. ரயில் பெட்டி ஜோரு! பூனைக்குட்டி இறந்தது சோகம்! தன்னம்பிக்கை தந்தது படித்ததில் பிடித்தது! அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. நல்லாத் தான் ஆடி இருக்காங்க! ஆட்டுவித்தவர் யாரோ! :)

  ReplyDelete
  Replies
  1. ஆட்டுவித்தவர் யாரோ? யாமறியேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 15. பழக் கலவையை ஒரு ஆக்க பூர்வமான சிந்தனையுடன் முடித்திருக்கிறீர்கள்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 16. நம் அலுவலகமும் இருக்கிறதே என்று புலம்ப வைக்கிறது ,கொலைவெறி டான்ஸ் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 17. சுவாரஸ்யமான நல்ல விடயங்களின் பகிர்வு!
  அனைத்தும் சிறப்பு!

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  த ம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 18. நல்ல செய்திகள் - பூனைச்செய்தி தவிர.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 19. நல்ல செய்திகள்... பூனைக்குட்டி வருத்தமளித்தது,,,
  டான்ஸ் ஆடும் அலுவலகம் முகப்புத்தகத்தில் பார்த்தேன்...
  கடைசி செய்தி அருமை... தன்னம்பிக்கை போற்றுவோம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 20. Replies
  1. பாவம் தான் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 21. நாம் நினைத்தும் பார்க்காத இடங்களில் பூனை குட்டிகளை ஈன்று விடும் . ஒருகால் சைக்கிள் வீரர் பாராட்டுக்குரியவர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 22. விடியோ அட்டகாசம். நன்றாக வேலையும் பார்ப்பார்கள் என்று நம்புவோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 23. ரயில் பெட்டி இவ்ளோ சுத்தமா இருக்கு?? என்ன ஆச்சரியம்!! மாடலுக்காக வைத்திருக்கும் புது பெட்டியோ?

  ReplyDelete
  Replies
  1. முதல் பாராவில் சொல்லி இருக்கிறேன் பாருங்கள் ஹுசைனம்ம....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 24. அனைத்துமே அருமை! ' படித்ததில் பிடித்தது ' மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....