வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

ஃப்ரூட் சாலட் – 141 – ஷாஹித் அஃப்ரிதி – பதிவர் சந்திப்பு – அழுகிய தக்காளிஇந்த வார செய்தி:கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும்கிரிக்கெட் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் நாட்டு நலனுக்காகவே செலவிட்டு வருபவர்.

கிராமங்களுக்கு சாலை போடுவது, புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது போன்ற அறப்பணிகளில் சாகித் அப்ரிடி ஈடுபட்டு வருகிறார். கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'தாருல் சுகான்' என்ற அமைப்புக்கு நேற்று சாகித் அப்ரிடி சென்றார்.

அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசியும் மகிழ்ந்தார். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காக  20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக சாகித் அப்ரிடி அளித்தார்.

-          விகடன் இணைய இதழிலிருந்து......

இந்தியாவுடன் நடக்கும் போட்டிகளில் இவர் கொஞ்சம் அதிகமாகவே பற்றுடன் நன்றாகவே விளையாடுவார். அதனாலேயே எனக்கென்னமோ இவரை கொஞ்சம் பிடிக்காது! ஆனாலும் இன்று இந்த செய்தி படித்தவுடன் அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுக்க நினைக்கிறது மனது.  வாழ்த்துகள் ஷாஹித் அஃப்ரிதி!

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:
தலைநகரில் ஒரு பதிவர் சந்திப்பு:

வரும் அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு நடக்கப் போவது பற்றி நேற்றிலிருந்து பதிவுகள் வெளிவந்தபடி இருக்கிறது.  விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும். ஆனால் இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது இந்த வாரத்தில் தலைநகர் தில்லியில் நடந்த பதிவர் சந்திப்பு பற்றி....  தலைநகர் வந்திருந்த பதிவர் ஒருவரை நான் சந்தித்தேன்.  சந்திப்பு பற்றி அவரே விரைவில் எழுதுவார் என நினைக்கிறேன்! தலைநகர் வந்த பதிவர் யார்! விரைவில் உங்களுக்குத் தெரிய வரும்!அடுத்த பயணக் கட்டுரை:


ஹிமாச்சல் பிரதேசம் சென்று வந்தது பற்றி எழுதியதை என் வலைப்பூவில் வெளியிட்டு சில நாட்கள் ஆகிவிட்டன. சென்று வந்த பயணங்கள் மூன்று உண்டு – குஜராத் மாநிலத்திற்கு நான்கு நாள் பயணம், வடகிழக்கு மாநிலங்களுக்கு 15 நாட்கள் பயணம் மற்றும் நம் தமிழகத்தின் கொடைக்கானலுக்கு ஒரு நாள் பயணம் – என மூன்று பயணங்கள் சென்று வந்ததும் அதில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் நிறையவே விஷயங்கள் உண்டு! சில நாட்களாகவே பதிவுகள் எழுதுவதிலும், சக வலையுலக நண்பர்களின் பதிவுகளை படிப்பதிலும் சில தடங்கல்கள்....  பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன!

எனது வேலைகள் ஒரு புறம் என்றால் அடுத்த பயணத் தொடர் என்ன என்று இதுவரை யாரும் கேட்கவில்லை என்பதும் உண்மை :)  

கேட்டாலும் கேட்காவிட்டாலும் இன்னும் சில தினங்களில் குஜராத் பயணம் பற்றிய கட்டுரைகள் வெளி வரும் என்ற செய்தியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வார காணொளி:

அற்புதமான இசை.... கேட்டு ரசியுங்களேன்.  மோகன்ஜி முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட காணொளி இது! அவருக்கு நன்றி..


Extraordinary super video. Don't forget to see this video.
Posted by Satya Krishnamurthy Hanasoge on Thursday, January 1, 2015படித்ததில் பிடித்தது:மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.

எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.

அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்! மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர். பெரியவர்களும் பகை மறந்து நடந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்
54 கருத்துகள்:

 1. தக்காளி அருமை ஐயா
  பகைமை உணர்வை தூரப் போடுவோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. படித்ததில் பிடித்தது !!! அருமை! காலையில் நல்லதோர் விடயம் அழகான உதாரணத்துடன்..!

  அஃப்ரிதி அட! போட வைக்கிறார்..எங்கள் பூங்கொத்தும்..

  இற்றை அருமை! உண்மைதானே! குறுஞ்செய்தியும்!

  (கீதா: நேற்றைய எனது திரிசங்கு...பதிவிற்கு ஏற்றது போல்...குறுஞ்செய்தி.!! )

  ஆம் விரைவில் வரும்! ஸ்ரீராம் இங்கேயே சொல்லிவிடுவார்..ஹஹஹஹ

  காணொளி அட! கடத்தில் ஜலதரங்கம் போல் அந்தப் பெண்மணி வாசிப்பது அசாத்தியம்! கடினமான ஒன்று. அப்பெண்மணிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! அவர் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும். அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!

  ஆஹா அடுத்த பயணத் தொடர்!! காத்திருக்கின்றோம்....கேட்க வேண்டும் என்று இருந்தோம் ஆனால் உங்கள் பணிச் சுமை தெரிந்ததால் அதை விட்டுவிட்டோம்..ஆனால் ஆவலுடன் காத்திருக்கின்றோம் ...
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 3. காணொளியும் தக்காளி கதையும்
  மிக மிக அருமை
  எங்கும் வெளிக் கிளம்ப முடியாத சூழலில் தங்கள்
  பயணக் கட்டுரைகளே அதிகம்
  எங்களுக்கெல்லாம் அதிக
  ஆறுதல் அளித்துப் போகிறது
  என்பதை மனதில் கொண்டு தவறாது
  பயணக் கட்டுரைகளைத் தொடரவுமாய்
  அனைவரின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 4. "முத்துச் சரம்"
  ஒவ்வொரு செய்தியும் அவசியம் அறிய வேண்டியது அருமை நண்பரே!
  அதுசரி யாரது அந்த பதிவர்? அறியத் தந்திருந்தால் அகம் மகிழ்ந்திருப்போம்.
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   நீக்கு
 5. வணக்கம்,
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 6. அந்தப் பதிவர் துளசிதரன் தில்லையகத்துக் கீதாதானே. கீதா திறக்கப் பட்ட கதவைத் தள்ளி விடவில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   அவரே தான்!

   நீக்கு
 7. தக்காளிக் கதைகருத்து நன்று. காணொளி அருமை. மொத்தத்தில் ஃப்ரூட் சலாட் சுவையாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 8. தக்காளி உவமை, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பெரியவங்களுக்கும் தேவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 9. நாடு ஜாதி மதம் மொழி மறந்து ஷாஹித் அஃப்ரிதியை பாராட்டுவோம்
  குறுஞ்செய்தி அருமை
  காணொளி அற்புதம்
  தக்காளி கதை ஸூப்பர் நண்பரே... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 10. அஃப்ரிடிக்கு ஒரு சபாஷ். டெல்லி வந்த பதிவர் யாரென்று தெரியும் என்று சொல்லலாம் என்றால் அவரே ஶ்ரீராம் சொல்வார் என்கிறார்!!! எனக்கு வந்த வாய்ப்பு பறிபோய் விட்டது!!! தக்காளி கதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீங்கள் சொல்வீர்கள் என அவர்களே சொல்லிவிட்டார்களே! :)

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா
  எல்லாம் சிறப்பு.த.ம8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 12. தக்காளி கதை மிக நுணுக்கமான அறிவுரை... ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி.

   நீக்கு
 13. உங்கள் பயணக் கட்டுரைகள் சரளமான நடையில் படிக்க சுவாரசியமானவை. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி!

   நீக்கு
 14. தலைநகரில் ஒரு பதிவர் சந்திப்பு!விவரம் அறியக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 15. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாக இருந்தது. தங்களின் குஜராத் பயண கட்டுரைக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 16. தக்காளி கதை சூப்பர். பகைஉணர்வு,பழிவாங்குதல் இரண்டும் அழுகின தக்காளி மூட்டையேதான். ஒரு தக்காளி அழுகினால் கூட இருக்கும் எள்ளா தக்காளியும் அதே கதியைதான் அடையும். நல்ல கருத்தான கதை.. பதிவர் யார். படித்தாவது பதிவர்களை அறிந்து கொள்ளலாமே. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   சந்தித்த பதிவர் கீதா ஜி! [தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ்]

   நீக்கு
 17. மண் பானையை வைத்து சமைக்க மட்டுமல்ல ,இசையையும் உண்டாக்க முடியும் என்று நிரூபித்த அவருக்கு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 18. முகப்புத்தகம் புரிகிறது. இற்றை என்றால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இற்றை - Update.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 19. காணொளி அருமை.
  பகை மறந்து நடந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.//


  உண்மை, அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 20. தக்காளி கதை அருமை
  வகுப்பில் பகிர...
  தகவல்கள் ஜோர்
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 21. குறுஞ்செய்தி அருமை!
  எனக்கும் ஷாகித் அஃப்ரிதியைப்பிடிக்காது. ஆனாலும் செய்தியைப்படித்ததும் அவர் மீது மதிப்பு பெருகுகிறது. நானும் உங்களுடன் சேர்ந்து பூங்கொத்து தருகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 22. அனைத்தும் அருமை...

  இனிய சந்திப்பை அறிய ஆவலுடன் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

   நீக்கு
 23. சாலட்டை அதிகம் ரசித்தேன். வழக்கம்போல் அதிகமான செய்திகளுடனும் படங்களுடனும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 24. ஆஹா சூப்பரா இருக்கே இத்ன நாளா பாக்காம விட்டதுக்கு வருந்துகின்றேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 25. அப்ரிடியை எனக்கும் களத்தின் உள்ளே பிடிக்காது! அதே சமயம் அவரது சேவை உள்ளம் பாராட்டத்தக்கது. குட்டிக்கதை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 26. அப்ரிதி, இசை, பதிவர் சந்திப்பு என எல்லாமே அருமை...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....