எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 31, 2015

ஃப்ரூட் சாலட் – 140 – இடிக்கப்படும் தாஜ்மஹால் – [BH]புட்டா - கலாம்


இந்த வார செய்தி:

இன்று PIXELS எனும் ஆங்கிலத் திரைப்படம் இந்தியாவில் வெளியிடப் படுகிறது. Science Fiction திரைப்படமான இதில் Adam Sandler நடித்திருக்கிறார். அன்னிய கிரக வாசிகள் சிலர் பூமி மீது போர் தொடுத்து பல சேதங்களை ஏற்படுத்துவதாக இதில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.  அதில் ஒரு காட்சியின் Teaser நேற்று வெளியிட்டு இருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குனர் Chris Columbus மற்றும் Adam Sandler.  இதில் வரும் ஒரு காட்சி தான் இன்று நாம் பார்க்கப் போகும் முதல் செய்தி.

காதல் சின்னம் தாஜ்மஹால் – அதன் முன்னர் ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்லி அவளுக்கு ஒரு பரிசு தருகிறான். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியுடன் அதை வாங்க நெருங்கும்போது அவள் காணும் காட்சி அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. என்ன காட்சி? வானத்தில் இருந்து வந்த சில விண்கலங்களிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகள் மூலம் காதல் சின்னமான தாஜ்மஹால் இடிக்கப்படுகிறது!

அந்த Teaser நீங்களும் பாருங்களேன்!
எப்படியாவது இந்தியாவின் காதல் சின்னத்தை அழித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏன்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

மூழ்கினால் தண்ணீரை குற்றம் சொல்கிறான்..... தடுக்கி விழுந்தால் கீழே கிடந்த கல்லைக் குற்றம் சொல்கிறான்..... மனிதன் எத்தனை விசித்திரமானவன்.....  தன்னால் எதையாவது செய்ய முடியாவிட்டால் விதியைக் காரணமாகச் சொல்கிறான்!
இந்த வார புகைப்படம்:[bh]புட்டா....  தற்போது தில்லியில் பல இடங்களில் இப்படி மக்காச்சோளம் சுட்டு விற்பது பார்க்க முடியும். சீசன் வந்துவிட்டால் அனைத்து இடங்களிலும் இப்படி திடீர் வியாபாரிகளை பார்க்க முடியும்! ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு மக்காச்சோளம் சுட்டு, அதன் மேல் மசாலா தடவி தருவார்கள் – எலுமிச்சை பாதியாக நறுக்கி அதனால் மசாலாவை தொட்டு சோளம் முழுவதும் தடவித் தருவார்கள்..... கேட்கும்போதே சாப்பிடணும்னு தோணுது இல்ல! படம் எடுத்தது தில்லியில் அல்ல! மேகாலயா மாநிலத்தில்!

தலைநகரிலிருந்து:சென்ற வாரத்தின் ஓர் நாள்...  கீழ்வீட்டிலே யாருக்கோ திருமணம். அன்று முகப்புத்தகத்தில் எழுதியது கீழே...  ரொம்ப கஷ்டம் சாமி!

கீழ் வீட்டில் கல்யாணம்.... இரவு 09.30க்கு மேல் தான் மாப்பிள்ளை ஊர்வலம் [bharaat] புறப்பாடு..... வாத்யக் கோஷ்டி நான்கரை மணிக்கே வந்து சேர்ந்தாயிற்று.... ஒரே மெட்டில் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்....... காது எப்படியாவது இந்த சத்தத்திலிருந்து எனக்கு விடுதலை கொடேன்என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது.... இந்த மாதிரி நேரங்களில் மட்டுமாவது காது கேட்காமல் இருந்தால் பரவாயில்லை! கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக தலைக்கு மேல் உட்கார்ந்து வேகவேகமாய் கொட்டுவது போல உணர்வு எனக்கு..... ஏதோ படத்தில் வடிவேலுவை நிற்க வைத்து வரிசையாக பலர் வந்து கொட்டுவார்களே அப்படி இருக்கிறது எனக்கு! ம்ம்ம்..... என்ன செய்யலாம்!

அடாது மழை பெய்தாலும் விடாது மேள தாளம், நடனம் என தொடர்ந்து கொண்டே இருந்தது!


இந்த வார காணொளி:

ஆசிரியர்கள்....  ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின்னாலும் இவர்களின் பங்கு மகத்தானது. அப்படி ஒரு ஆசிரியர் பற்றி சொல்லும் காணொளி. பாருங்களேன்!
படித்ததில் பிடித்தது:இராமேஸ்வரத்தின் கரையில்
எல்லோரும் மீன் பிடிக்க
கடலோடியபோது
நீ மட்டும்
தூண்டிலோடு
விண்மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாய்

நெருப்பாற்றில் நீந்தியதால்
உன் முதுகில் முளைத்தன
அக்னிச் சிறகுகள்.....

உறக்கங்களைத் துறந்துவிட்டு
கனவுகளின் இமைத் திறக்க
ஒவ்வொரு நொடியிலும் கரைந்தாய் இன்று
ஒவ்வொரு இந்தியனின்
கலையாத கனவாகி மறைந்தாய்

கலாம் என்பதை
காலம் என்றும் உச்சரிக்கலாம்
எல்லா காலத்துக்குமான
இணையற்ற ஆளுமை என்பதால்...

இனி-
பகுத்தறிவாளனும் சொல்லக் கூடும்
இராமேஸ்வரம் புனிதத் தலமென்று.....


மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்


44 comments:

 1. காணொளி இரண்டும் கண்டேன்
  தலைப்பையும் தாஜ்மகால் இடிபடுவதையும்
  காண கிராபிக்ஸ் ஆனாலும் கூட
  மனம் அதிரத்தான் செய்தது
  கவிதை மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன்.. பிறகு புரிந்தது.. தாஜ்மஹால் .

  ReplyDelete
  Replies
  1. நேற்றைய முன் தினம் நாளிதழில் படிக்கும் போது எனக்கும் அதே உணர்வு!


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்.

   Delete
 5. தாஜ்மகாலை இடித்துப் பார்க்கவேண்டும் என்ற குரூர ஆசை ஏனோ? இவர்களுடைய கற்பனை எங்கெங்கு செல்லுமோ எனத் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. அனைத்துமே அருமையான பதிவுகள்.. என்னுடைய கவிதையை படித்ததில் பிடித்தது பகுதியில் வெளியிட்டமைக்கு நெகிழ்வான நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   Delete
 7. அனைத்தும் அருமை. டீசர் பயமுறுத்துகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 8. மக்காச்சோளம் நினைத்தாலே நாக்கில் நீர் ஊறுகிறது...! கவிதை மிகவும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. டீசர் ஏனிப்படிக் கொடுமையாய் இருக்கு ஆங்கிலப் படங்கள் போல ஹ்ம்ம்.

  சோளம் அங்கே இருந்தபோது சாப்பிட்டு இருக்கோம். லெமன் வித் காலா நமக். :)

  ஆசிரியர்கள் பற்றிய காணொளி அருமை :)

  கலாம் கவிதை அருமை சகோ :) பாரதி குமாருக்கு எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 10. ப்ரூட் சாலட் மிகவும் அருமை.
  கலாம் கவிதை கலக்கல்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 12. தாஜ்மகால் இடிப்பு பயமுறுத்தும் கூடவே அந்த எண்ணம் ஏன் என வருந்தப்பட வைக்கும் டீசர்.... ஆசிரியை குறித்த அருமையான குறும்படம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 13. தாஜ்மகால் இடிக்கப்படுவதை தாங்க முடியவில்லை. கிராபிக் ஆக இருந்தாலும் கூட!
  காணொளிகள் இரண்டுமே நன்றாக இருந்தது. கூடவே இருந்த பலவற்றையும் பார்த்து ரசித்தேன். கலாம் பற்றிய கவிதை மனதை நெகிழ்த்தியது. அருமையான ப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 14. ஏனோ டீசர் ரசிக்க முடியவில்லை. சில நேரங்களில் இந்த நாய்ஸ் பொல்யூஷன் சகிக்க முடியாது. க(கா)லாம் கவிதை ரசிக்க வைத்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. கலாம் ஐயா பற்றிய கவிதை அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி rmn

   Delete
 16. அருமையான சாலட்! கவிதை என்னையும் கவர்ந்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. வணக்கம்

  இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சாமானியன். இன்றைய வலைச்சரம் பார்த்து விட்டேன். நன்றி.

   Delete
  2. கலாம் கவிதை அருமை! நன்றி நண்பரே!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. சமீபத்தில் வெளியான ஹோம் திரைப்படத்தில் உலக அதிசயங்கள் அனைத்தும் காற்றில் மிதந்து கொண்டு இருக்கும் ..
  பல்வேறு படங்களில் பிரமிடுகள் தகர்க்கப் படும் காட்சிகள் உண்டு
  அது ஒரு குறியீடு அவ்வளவே இது உங்களுக்கும் தெரியும் என்றே நினைக்கிறன்
  மார்ஸ் அட்டாக்கில் இதுபோல ஒரு காட்சி உண்டு...
  வெங்கட்டுக்கு தெரியாதாக்கும் ...
  பதிவின் முதல் வரிகள் ஒரு வாசக தூண்டில் அவ்வளவுதானே...
  நைஸ் வெங்கட்ஜி.
  தம +

  ReplyDelete
  Replies
  1. வாசகத் தூண்டில்! :)))

   கற்றது கை மண்ணளவு.... கல்லாதது உலகளவு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 19. காலத்தால் அழியாத நினைவுசின்னம் அழிக்கபடுவது போல் காட்டுவது அதிர்ச்சி.
  மற்றவைகளை எல்லாம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 20. பிக்சல்ஸ் பற்றிச் சொல்லிய விதம் அருமை ஆனால் அந்த டீசர் ..ம்ம்ம்..

  இற்றை அருமை..

  சோளம் இதே போன்று சென்னையிலும் கிடைக்கின்றது... (கீதா)

  காணொளிகள் அருமை..

  கலாம் பற்றிய கவிதை மனதைத் தொட்டது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 21. என்னவெல்லாமோ கற்பனைகள் இந்த ஆலிவுட்காரர்களுக்கு!
  தில்லியில் கல்யாணத்தின்போது எங்கள் வீட்டு வாசலையும் அடைத்து ஷாமியானனா போட்டு அதனால் அவஸ்தைப்பட்டது நினைவுக்கு வருகிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....