எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, July 30, 2015

சாப்பிட வாங்க: [GH]கேவர் – 900 கிராம்

படம்: இணையத்திலிருந்து....

சாப்பிட வாங்க பகுதியில் இன்று ஒரு ராஜஸ்தானிய இனிப்பு பற்றி பார்க்கப் போகிறோம். ராஜஸ்தானிய உணவு என்று சொன்னாலும், உத்திரப் பிரதேசம், ஹரியானா பகுதிகளிலும் இந்த இனிப்பு செய்கிறார்கள்.  பெரிய தட்டு  போன்று இருக்கும் ஆனால் நடுவில் ஓட்டையாக இருக்கும் இந்த இனிப்பை அடுக்கி வைத்திருப்பது பார்க்கும்போதே என்ன இது புதுசா இருக்கே என்று தில்லி வந்த புதிதில் அதிசயமாய் பார்த்ததுண்டு - பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்தது போல! ஒரு மெல்லிய துணியால் மூடி வைத்திருப்பார்கள்...  ஆனாலும் ஈக்கள் மேலே பறந்து கொண்டிருப்பதைப் பார்த்து, [gh]கேவர் வாங்கி சாப்பிடாமல் நகர்ந்து விடுவேன்.


தில்லி நகரில் “பழைய தில்லிஎன அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் சாந்த்னி சௌக் - இங்கே பல விதமான பாரம்பரிய உணவுக் கடைகள் உண்டு.  பரான்டே வாலி கலி என அழைக்கப்படும் மிகவும் புகழ் பெற்ற தெருவிற்கு அருகே இருக்கும் ஒரு இனிப்பு கடை – கன்வர்ஜி! 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இங்கே கோலோச்சுகிறது. ஒரு முறை சாந்த்னி சௌக் பக்கம் செல்லும் போது இந்த கடை வழியே செல்ல நேர்ந்தது. உள்ளே பார்த்தால் [gh]கேவர்....  கண் சிமிட்டி என்னை வா வா என்றது. ஆனது ஆகட்டும் என நானும் அதில் மயங்கி உள்ளே சென்று விட்டேன். பரவாயில்லை – மற்ற இடங்களைப் போல இங்கே ஈக்கள் மொய்க்கவில்லை. சுத்தமாக இருந்தது.

[gh]கேவர்.... இங்கே மூன்று நான்கு வகை [gh]கேவர் பார்வைக்கு வைத்திருந்தார்கள் – சாதா, மாவா, மலாய் [gh]கேவர்.  முதலில் சாதா [gh]கேவர் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். பிடித்திருந்தது. அதன் பிறகு மற்ற வகைகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி சாப்பிட அனைத்துமே பேரானந்தம் தந்தன.  அந்த முதல் முறைக்குப் பிறகு ஒவ்வொரு சீசனிலும் [gh]கேவர் சுவைப்பது வழக்கமாக இருந்தது. சீசனில் மட்டும் தான் கிடைக்கும் எனில் எப்போது?

பொதுவாகவே [gh]கேவர் தீஜ் திருவிழாவின் போது தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தீஜ் திருவிழா ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளிலும் கொண்டாடப்படும் இத் திருவிழா பற்றி பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம். இத் திருவிழா சமயத்தில் செய்யப்படும் முக்கியமான இனிப்பு [gh]கேவர் தான்.  ரக்‌ஷா பந்தன் சமயத்திலும் செய்வார்கள்.

தேவையான பொருட்கள்:

[gh]கேவர் செய்ய தேவையானது மைதா, மக்காச்சோள மாவு, நெய், சீனி, கொஞ்சம் பால், சோடா உப்பு. வட இந்திய இனிப்பு செய்யும்போது கேவ்ரா எசன்ஸ் என்று ஒன்றை இரண்டு மூன்று சொட்டுகள் சேர்ப்பார்கள்.  அது வேறொன்றுமில்லை – தாழம்பூ எசன்ஸ்! அலங்கரிக்க, பாதாம் துண்டுகள். 

எப்படிச் செய்யணும் மாமு?

[gh]கேவர் செய்ய கொஞ்சம் பொறுமை வேணும்! மைதா/சோள மாவு நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு வைக்க வேண்டும்.  நெய் சூடு செய்து அதிலே மாவு கொஞ்சம் கொஞ்சமா விட்டுக் கொண்டே இருக்க, [gh]கேவர் தயாராகும். சொல்லிப் புரிய வைக்கிறதை விட காணொளியா இருந்தா உங்களுக்கும் சுலபம் எனக்கும் சுலபம்! கொஞ்சம் நீண்ட காணொளி [18.14 நிமிடங்கள்] – வேலை அதிகம் என்பது அதிலிருந்தே தெரியும் உங்களுக்கு!  அந்த அம்மணி ஹிந்தியில் Blah Blah என்று சொல்லிக் கொண்டே போனாலும், கீழே ஆங்கிலத்தில் Sub Title வரும்! அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும்!


  
படம்: இணையத்திலிருந்து....

தில்லியில் மட்டும் தான் கிடைக்கும் என்று இல்லை. சென்னையிலும் சில வட இந்திய இனிப்பு கடைகளில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் [gh]கேவர் கிடைக்கிறது. கிடைக்காதவங்க என்ன பண்றது என்று அங்கலாய்க்க வேண்டாம் – இங்கே பார்த்து மானசீகமா சாப்பிடுங்க!டிஸ்கி: அது என்னப்பா தலைப்புல 900-கிராம்!  அதுல என்ன ஒரு கஞ்சத்தனம்! இன்னும் 100 கிராம் போட்டு ஒரு கிலோவா தரக் கூடாதா? அது வேறொண்ணும் இல்லை! இது கொஞ்சம் ஸ்பெஷல் பதிவு! அதான் Symbolic-ஆ தலைப்பில் 900! புரிஞ்சிருக்குமே!  ஆமாங்க இது என்னோட 900-வது பதிவு! இது வரை என் பதிவுகளை படித்து கருத்துரைத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி!


30 comments:

 1. தாழம்பூ எசன்ஸ் மட்டும் தான் இல்லை...

  அட... விசயம் இது தானா...? 900-வது பதிவிற்கும், மேலும் சிறக்கவும் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. நடுவில அது எதுக்கு ஓட்டை? விசாரிக்கலயா?

  ReplyDelete
  Replies
  1. காணொளி பார்த்தா உங்களுக்கு புரியும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. அழகாக இருக்கிறது பண்டம்.
  அருமையாக இருக்கும் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
  செய்முறை இவ்வளவு நீளமாக இருக்கிறதே...
  அதுதான் கொஞ்சம் யோசனை.:)

  இனிப்புடன் 900 தொட்ட நீங்கள் விரைவில் மிகுதி நூறையும் எட்டிவிடுங்கள்!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.....

   Delete
 4. 900 பதிவிற்கு வாழ்த்துகள்....புதுமையான இனிப்பை சுவைக்க ஆசை...செய்து பார்க்கிறேன் சகோ
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 5. வணக்கம்,
  தங்கள் பதிவு அருமை, புதிய உணவு வகை,
  வாழ்த்துக்கள் 900 கிராம் அய்யோடா 900 பதிவிற்கு, இன்னும் புதிய பல வகை உணவுடன் வாருங்கள்,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 6. 900!!! அட!! கலக்குங்க அண்ணா! நாங்க கேவர் எடுத்து கொண்டாடுறோம்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 7. மானசீகமாக, அதேசமயம் திருப்தியாக சாப்பிட்டோம். நன்றி.
  கலாமைப்பற்றி வெளிநாட்டுப்பத்திரிக்கைகளில் வந்த செய்தியைக் காண வாருங்கள்.
  http://www.drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_12.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினையும் படிக்கிறேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. புதுசா இருக்கு!

  900 மாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. 900 வது பதிவிற்காக கொடுத்திருக்கும் ஸ்பெஷல் தின்பண்டம் geவர் போலவே உங்கள் பதிவுகளும் இனிப்பாக, பல சுவையான விஷயங்களைச் சொல்லும் பதிவுகளாக பரிமளிக்கின்றன. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 10. கேவர் செய்து சாப்பிடுகிறோமோ இல்லையோ 900-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். தெரிவிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. கேவர் பதிவோடு 900 ஓவரா? க்ளாப்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 12. கேவர் 900 எனக்கு போதலே ,சீக்கிரம் இன்னும் நூறாவது வேண்டும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. வாழ்த்துக்கள் 900ஆவது பதிவுக்கு. விரைவில் ஆயிரம் எட்டட்டும்.

  கேவர் செய்முறை நன்றாகச் சொல்லியுள்ளார்கள். மொழி ஒரு தடையாக இல்லை. இத்தனை பொரித்த 'நெய்/மைதா கலவை, ஜீனிப் பாகு... Recipe for disaster என்று சொல்வதுபோல், டயபடீசுக்கு வேறு எதுவும் தேவையில்லை.

  அதுசரி. நீங்கள் வேற..எல்லா வகையிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு சூப்பர் என்று சொல்லிவிட்டீர்கள். ஒவ்வொரு மானிலத்திலும் பயணம் செய்து, அந்த மானில உணவுவகைகளைச் சுவைப்பது ஒரு நல்ல அனுபவம்தான். ம்.ம்..நெட்டில் பார்த்தாலே சாப்பிட்ட திருப்தி வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 14. 900! மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  கேவர் செய்முறை அறிந்து கொண்டோம். இங்கே கிடைக்கிறது பார்த்திருக்கிறேன். சுவைத்தும் விடுகிறேன்:).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. கேவர் பார்த்திருக்கேன். சாப்பிட்டதில்லை. :) 900 பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....