செவ்வாய், 28 ஜூலை, 2015

நான் கர்ப்பமாயிருக்கேன்......படம்: இணையத்திலிருந்து.....

அவ்வப்போது குறும்படங்கள் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் பதிவுலக நண்பர்களின் நடிப்பில்/பங்களிப்பில் உருவான குறும்படமான Poet the Great படம் பார்த்து ரசித்தேன்.  நான் பார்த்தது குறும்படம் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தான். அதற்குள் படம் பற்றி பலரும் எழுதி விட்டதால் எனது பக்கத்தில் அது பற்றி எழுதவில்லை.  நல்லதோர் குறும்படம் எடுத்திருந்த நண்பர் துளசிதரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இன்றைக்கு நாம் இங்கே பார்க்கப்போவது நேற்று நான் பார்த்த வேறு குறும்படம் பற்றி தான்.  குறும்படங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது தலைப்பே வித்தியாசமாக இருக்க, அந்தப் படத்தினைப் பார்க்க முடிவு செய்தேன்.  மொத்தம் 12 நிமிடம் 18 விநாடிகள் தான் இக்குறும்படம் பார்க்க உங்களுக்குத் தேவையான நேரம். 

படத்தின் நாயகன் கனவு காண்கிறார். எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷமாச்சு, அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை இல்லையே எனக்கு என தான் வணங்கும் பரவச முனிகளிடம் புலம்புகிறார். அதற்கு அவர் “குடிச்சு குடிச்சு உன் உடம்பிலுள்ள முக்கிய நரம்பு கெட்டுப்போச்சு.  உனக்கு குழந்தை பிறப்பது கடினம். ஆனால் நான் உனக்கு ஒரு வரம் தரேன். உன்னையே கர்ப்பமாக்கி விடுகிறேன்!” 

கனவில் கலவரமாகி எழுந்தால், அவரது மருத்துவ நண்பர் அலைபேசியில் அழைத்துச் சொல்கிறார் – “குடிச்சு குடிச்சே உன் உடம்பை கெடுத்துக்கிட்டேயே.....  இனிமேலாவது குடிக்காதே....  நான் வெளிநாட்டுக்கு ஆராய்ச்சி விஷயமா போறேன். அது வரைக்கும் குடிக்காம இருந்தா, நீ பிழைக்க வழி இருக்கு....  என்று சொல்கிறார். 

அதன் பிறகு கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் அனைத்து கஷ்டங்களும் இவருக்கு வருகிறது – குமட்டல், வாந்தி என அனைத்தும்..... கடைசியில் என்ன நடந்தது..... அவருக்கு குழந்தை பிறந்ததா? வேறு எதுவும் ட்விஸ்ட் உண்டா?  கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள் என்றாலும்......  முடிவில் சொல்லும் விஷயம் .....  ?

என்னதான் ஆகுது?  பாருங்களேன்!
என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? குறும்படத்தினை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

நட்புடன்30 கருத்துகள்:

 1. பிறகுதான் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. ஜெபஜெபா.. கஜகஜா.... :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   வாழ்த்துகள் குறும்படக் குழுவினருக்கு உரித்தானவை!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 5. ஹா... ஹா... பரவச முனிகள் ஹா... ஹா...

  மயில் வாகனம் + அவரின் நண்பரின் நடிப்பும் நல்லாயிருந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. காமெடியா, அப்ப பார்த்து விடலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 8. பொதுவாக குறும்படங்களைத் தனியேதான் பார்ப்பேன் இம்முறை மனைவியுடன் பார்த்து ரசித்தேன் நல்ல நகைச்சுவைப் படம் /எல்லோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 10. மிகவும் இரசித்துப் பார்த்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 12. விரைவில் பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 13. ஹா.... ஹா...
  ஜெப... ஜெப... கஜ..கஜா...
  வெங்கட் ஜி இந்தப் படம் பார்த்திருக்கின்றோம். செம காமெடி... எங்கள் ப்ளாகில் வெள்ளிக்கிழமை வீடியோவில் பகிரப்பட்டிருந்ததாக நினைவு! ஸ்ரீராம் மறந்து விட்டாரோ?!!!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் முதல் முறை பார்த்தேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 14. ஹா ஹா ஹா :) நண்பரின் மனைவி பெயர் ரஞ்சிதா ,அவர், பரவச முனிகள் பக்தை...ஏதோ உள்குத்து போல் தெரியுதே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 15. தற்போதெல்லாம் சினிமாவைவிட குறும்படங்கள் ரசிக்கும்படி உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணிமாறன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....