திங்கள், 27 ஜூலை, 2015

சப்பாத்தி – வட இந்திய கதை

வட இந்தியாவில் உள்ள சிறு கிராமம். கிராமத்திலிருக்கும் வீட்டில் உள்ள பெண் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் சப்பாத்தி செய்த வண்ணமே இருப்பார். எப்போது சப்பாத்தி செய்தாலும், குடும்பத்தினர் அனைவருக்கும் செய்வது மட்டுமல்லாது ஒரு சப்பாத்தியை அதிகமாகவே செய்து, அவற்றை தனது வீட்டு ஜன்னலின் திட்டுகளில் வைத்து விடுவாள். அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்கள் யாருக்காவது தேவையெனில் எடுத்துக் கொள்ளட்டும்  என அப்படி வைப்பது வழக்கம்.

அந்த கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் – அவருக்கென யாரும் கிடையாது. தள்ளாடும் வயது. கூடவே கூன் முதுகு வேறு.  கையில் குச்சியை வைத்துக் கொண்டு தரையில் ஊன்றியபடியே கூன் முதுகோடு, தலையை மட்டும் தூக்கியபடியே நடந்து செல்வார்.  ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்மணி வைத்திருக்கும் சப்பாத்தியை எடுத்துக் கொண்டு தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்

ஒவ்வொரு நாளும் இப்படி பெண்மணி சப்பாத்தி வைப்பதும் அந்த முதியவர் அதை எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து நடந்தது.  அது போலவே அந்த முதியவர் சப்பாத்தியை எடுத்துக் கொண்ட பின் தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்என்று சொல்வதும் தொடர்ந்தது.  இப்படிச் சொல்வது தவிர வேறு ஒரு வார்த்தை பேச மாட்டார் அந்த முதியவர்.

பல நாட்கள் இப்படி தொடர்ந்து நடக்க, சப்பாத்தி வைக்கும் பெண்மணிக்கு மனதில் கோபம் உண்டாயிற்று. “நானும் தினம் தினம் இப்படி சப்பாத்தி செய்து வைக்கிறேன். இந்த முதியவரும் அதை எடுத்துக் கொள்கிறார். ஆனாலும், அவருக்கு கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி இருக்கிறதா? வாயைத் திறந்து நன்றி என ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஏதோ தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்என்று சொல்லிப் போகிறாரே?என்று யோசிக்கத் துவங்கினாள்.

அந்த யோசனை அவளுக்கு இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது. அதிக கோபம் ஆபத்தான விளைவினை உண்டாக்குமே! அப்பெண்ணுக்கு அப்படி கொடுமையான யோசனை உண்டாயிற்று.

நன்றியில்லாத இந்த முதியவருக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நினைதாள். அடுத்த நாள் சப்பாத்தி செய்யும் போது அந்த முதியவருக்காக தயாரித்த சப்பாத்தியில் விஷத்தினைக் கலந்து தயாரித்தாள். ஜன்னல் திட்டில் வைக்கப் போகும்போது அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன. மனதின் ஓரத்தில் ஒரு சிந்தனை. என்ன காரியம் செய்கிறோம். இதை வைத்தால் அந்த முதியவர் இறந்து விடுவாரே?என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு சப்பாத்தியை நெருப்பில் போட்டுவிட்டு, வேறொரு சப்பாத்தியை ஜன்னல் திட்டில் வைத்தாள்.

அன்றைக்கும் அந்த முதியவர், சப்பாத்தியை எடுத்துக் கொண்டு தீவினை செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....  நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்என்று சொல்லியபடி சென்றார். பெண்மணியின் மனதில் நடந்த மாற்றங்களோ, தடுமாற்றமோ அப்பெரியவருக்கு தெரியாது. பெரியவர் ஏன் இப்படிச் சொல்லி விட்டுப் போகிறார் என்பதும் புரியாமலே இருந்தது.

அன்று மாலை அவளது வீட்டின் வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. வாயிலில் அவளது மகன் நின்று கொண்டிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்னர் வேலை தேடி வெளியூர் சென்ற மகன் – திரும்ப வந்திருக்கிறான். கிழிந்து போன உடை, மெலிந்த தேகம், என பஞ்சத்தில் அடிபட்டவன் போல காட்சி தருகிறான். உள்ளே வந்ததும் அன்னையிடம் சொல்கிறான் “இன்னிக்கு நான் இங்கே உயிரோட வந்ததே பெரிய விஷயம். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் முன் நான் பசியில் துவண்டு விழ இருந்தேன். அங்கே ஒரு கூன் முதுகு பெரியவர் இருந்தார். அவரிடம் ஏதாவது உணவு தரச் சொல்லிக் கேட்டேன். அவர் நான் தினமும் சாப்பிடுவது ஒரு சப்பாத்தி மட்டும் தான். இன்றைக்கு என்னை விட அதிகமாய் உனக்குத் தான் தேவை. நீ சாப்பிடுஎனக் கொடுத்தார். அவர் கொடுக்காவிடில் அங்கேயே எனது உயிர் பிரிந்திருக்கும் என்று சொல்ல, பெண்மணிக்கு பயங்கர அதிர்ச்சி.

தான் மட்டும் அந்த பெரியவருக்கு விஷம் வைத்த சப்பாத்தியைக் கொடுத்திருந்தால், நம் மகன் அல்லவா இன்று அதை சாப்பிட்டு இருப்பான். என்ன காரியம் செய்ய இருந்தேன்  என்று தன்னையே திட்டிக் கொண்டார்.  அப்போது தான் அந்தப் பெரியவர் தினமும் சொல்லும் வாசகத்திற்கான அர்த்தமும் புரிந்தது!

நாம் செய்யும் நல்ல விஷயத்திற்கான பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து நல்லதே செய்வோம். நமக்கும் நல்லதே நடக்கும்!டிஸ்கி:  ஹிந்தி மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.....

56 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 3. அருமையான கருத்து ஐயா
  நல்லதே செய்வோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. நாம் செய்யும் நல்ல விஷயத்திற்கான பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து நல்லதே செய்வோம். நமக்கும் நல்லதே நடக்கும் என்ற தங்களின் வரிகளை நூற்றுக்கு நூறு ஒத்துக்கொள்கிறேன். அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. அருமை! மிக மிக அருமையான வாழ்க்கைப்பாடத்தில் உயர்ந்த படிப்பினையைச் சொல்லும் கதை! வெங்கட் ஜி! வேறு வார்த்தைகள் இல்லை! சொல்லுவதற்கு...பகிர்வுக்கு மிக்க நன்றி!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 6. ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” மிக அருமையான கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள் செல்வா பேரரசன்....

   உங்களது முதல் வருகையோ....? மகிழ்ச்சி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   நீக்கு
 9. இம்மாதிரி நிகழ்வுகளை வாழ்க்கையிலும் காணலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 11. அருமை மிக அருமை சகோ. எதிர் பாராமல் நல்லது செய்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 12. கதை நல்லாருக்கு. படத்துல, பெண்மணியின் வலது கை சரியாகப் போடவில்லை. சப்பாத்தியை எப்படித் தட்டுகிறார் என்பது புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்....

   நீக்கு
 13. கதையில்தான் இப்டியெல்லாம்.......நிஜத்தில் வேறுமாதிரியாக..இருக்கிறது. நாட்டில் தீவினைதான் கோலோச்சுகிறது அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜத்தில்.... :((((

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

   நீக்கு
 15. சப்பாத்தியில் ஒரு வாழ்வியல் நீதி..! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 16. நல்லதொரு பகிர்வை தமிழாக்கம் செய்து தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 21. கதை மனதைத் தொட்டது. தமிழாக்கமும் இயல்பாகவே சிறப்பாக இருந்தது. நன்றி.
  த.ம.14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 22. வாவ்!! மிக அருமையான கதை! நாளை என் வகுப்பு இந்த கதையோடுதான் தொடங்கப்போகிறது. நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கதை உங்கள் வகுப்பு குழந்தைகளுக்குச் சொல்லப் போகிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 23. கதையின் சிறப்பை உணரவைத்த சிறந்த மொழிபெயர்ப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி bandhu ஜி!

   நீக்கு
 24. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 25. அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 26. முடிவைப் படித்ததும் திக்கென்று ஆகிவிட்டது. நல்லகாலம், அந்தப்பெண் விஷ சப்பாத்தியை நெருப்பில் போட்டுவிட்டு நல்ல சப்பாத்தியை கிழவருக்கு வைத்தாள். கிழவரின் வார்த்தைகள் இந்தக் கதையைப் படிக்கும் எல்லோருக்குமே ஒரு பாடத்தை சொல்லியிருக்கிறது. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 27. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   நீக்கு
 28. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிதம்பரம் துரைசாமி ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....