எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 17, 2015

ஃப்ரூட் சாலட் – 138 - தில்லியில் ”அம்மா” உணவகம் – சங்கு - வைரம்


இந்த வார செய்தி:

 படம்: இணையத்திலிருந்து....

தமிழகத்தில் செயல்பட்டு வரும் “அம்மாஉணவகம் தில்லி அரசாங்கத்தினையும் கவர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மலிவு விலை உணவகங்களைப் போலவே தலைநகர் தில்லியிலும் உணவகங்கள் திறக்க திரு அர்விந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக 10 உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

அங்கே அம்மா உணவகம் என்றால் இங்கே பெயர் மட்டும் வித்தியாசம் – “ஆம் ஆத்மி உணவகம்”.  முதல் கட்டமாக 10 இடங்களில் தொடங்கப்படவுள்ள இவை, படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  அங்கே ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்தால், அதையே இங்கே கொடுக்க முடியாது. இங்கே அதிகமான மக்கள் உண்பது சப்பாத்தி என்பதால், சப்பாத்தி, சப்ஜி கொடுக்கப் போகிறார்கள். 

ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விலையில் உணவுகள் வழங்கப்பட இருக்கின்றன.  முந்தைய அரசாங்கத்தினால் “ஜன் ஆஹார்என்ற பெயரில் 20 ரூபாய்க்கு உணவு சில இடங்களில் வழங்கப்பட்டாலும் அவற்றின் தரம் பற்றிய எந்த கட்டுப்பாடும் இல்லாது இருந்தது. ஆம் ஆத்மி உணவகங்களில் தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு, தரமான உணவு வழங்கப்படப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.  கூடவே இந்த உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் [RO] கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வெகு விரைவில் திறக்கப்படவுள்ள இவ்வுணகங்கள் தொடங்குமுன்னர், தமிழகத்தின் அம்மா உணவகங்களையும் ஒடிசா மாநிலத்தில் அரசு நடத்தும் உணவகங்களையும் சென்று பார்த்து அதன் பின்னரே இம்முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. 

தில்லியில் இருக்கும் பல ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கூலித் தொழிலாளர்கள், நடைபாதையில் வசிக்கும் பல ஏழைகள் ஆகிய அனைவருக்கும் இத்திட்டம் மூலம் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  உணவகங்கள் திறந்த பிறகு தான் அவற்றில் கிடைக்கும் உணவின் தரம் எப்படி இருக்கும் என்று தெரியும்.

பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என!

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை. ஆனால் எல்லா பிள்ளைகளுமே, இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் வளர்க்கப்படுகிறார்கள்...

இந்த வார காணொளி:

சின்ன முதலீடு பெரிய லாபம்!

窩心小狗哪裡找! - 鍾意請廣傳/Please SHARE
<窩心小狗哪裡找!> - 鍾意請廣傳/Please SHARE//Very Sweet Puppy Dog...//那麼體貼,小編想要呀!Source: Kiatnakin Bank#dog #pet #bestfriend #love #happypeople“The best way to cheer yourself is to try to cheer someone else up” - Mark Twain
Posted by 開心快活人 on Thursday, May 21, 2015ஒரு கவிதை......

சங்கு
°°°°°°°°அலை ஒதுக்கிய சங்கு அறியும்
பிறப்பும் இறப்பும்
உடலின் வடிவத்துக்கு தான்
உயிரின் உருவத்துக்கு அல்ல என்று !

அடியாழத்தில் உணர்ந்த
பிரபஞ்சத்தின் அமைதியும்
அலை ஆர்ப்பரிக்கும்
அண்டத்தின் ஓசையும்
ஒரே மூலத்திலிருந்து
உதித்தவை தான் !

சூரியச் சுள்ளலும்
நிலவின் தண்மையும்
ஒரே நிகழ்வின் இரு
தன்மைகள் தான் !

கடலிலே பிறந்து
கடலிலே அழியும்
அலையை வேடிக்கை பார்க்கிறது
கரை ஒதுங்கிய சங்கு !!!

~~~~~
ஸ்ரீ ~~~~~

அருமையான கவிதை. எழுதிய தோழி ஸ்ரீமதிக்கு வாழ்த்துகளும் பூங்கொத்தும்!

படித்ததில் பிடித்தது:

மலைகளினூடே பயணம் செய்து கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி. அங்கே ஒரு அருவியின் அருகே அவருக்கு விலைமதிப்பில்லாத உயர்ந்ததோர் வைரக்கல் கிடைக்க, அதை எடுத்து தனது துணி மூட்டைக்குள் வைத்துக்கொண்டார். அடுத்த நாள், அவரது பயணத்தில் பசியோடிருந்த ஒரு மனிதரைக் கண்டார். அவர் மூதாட்டியிடம் ஏதாவது கொடுக்கச் சொல்லிக் கேட்க, தனது துணி மூட்டையிலிருந்து தேடி அந்த வைரக்கல்லைக் கொடுத்தாராம். 

என்கிட்ட இது மட்டும் தான் இருக்கு.... எடுத்துக்கோ..... இதை வைத்து உன் வாழ்வில் முன்னேறு....” 
வைரக்கல்லை, அதிலிருந்து வீசும் ஒளியைக் கண்ட அந்த வழிப்போக்கர், தனக்குக் கிடைத்த வைரம் கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்க முடியும் என்று சந்தோஷத்தோடு மூதாட்டியிடம் விடை பெற்றுச் சென்று விட, மூதாட்டி எந்த வித உணர்வுகளும் இல்லாது தன் வழியே சென்று கொண்டிருந்தார். 
சில நாட்களுக்குப் பிறகு, அந்த வழிப்போக்கர், மூதாட்டியிடம் வந்து, “தாயே...  இந்த விலைமதிப்பில்லாத வைரத்தினை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து வாங்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு யோசித்துப் பார்க்கும்போது இந்த கல்லின் விலையை விட, அதன் விலை தெரிந்தும், மிகச் சாதாரணமாக எடுத்து என்னிடம் கொடுக்க உங்களால் முடிந்ததே...  அந்த குணத்தினை எனக்கும் கொடுங்கள். அது தான் இந்த கல்லின் விலையை விட பல மடங்கு உயர்ந்தது. எனக்கும் அந்த ஈகை குணத்தினையும், அறிவையும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

 ஓவியம்: ரோஷ்ணி.

அனைத்து நண்பர்களுக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. அட...! அம்மா புகழ் எங்கும்...!

  அருமையான கவிதை...

  சிறப்பான கதை... ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. அம்மா உணவகம் போல் ஆம் ஆத்மி உணவகமா? நல்ல திட்டம்...
  கவிதை அருமை.
  அனைத்தும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 3. அடுத்து 'டாஸ்மாக்'கை ஆம் ஆத்மி தொடங்காமல் இருந்தால் சரிதான் :)

  ReplyDelete
  Replies
  1. அரசு நடத்தும் கடைகள் இங்கே முன்னரே இருக்கிறது பகவான் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. இப்போது அம்மா உணவகம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் அம்மாவிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்.
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 5. காணொளியை ரசித்தேன். நல்ல விளம்பர உத்தி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. அம்மா புகழ் பாரெங்கும் பரவி இருக்கு போல! ரோஷ்ணி வரைந்திருக்கும் ஓவியம் அழகு, அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 7. ஆ ஆ உ - நல்ல விஷயங்களைக் காப்பியடித்தல் தவறே இல்லை!

  முபுஇ - என்னவொரு தத்துவம்!

  இவாகு - உண்மை, உண்மை!

  இவாகா - இந்த மாதிரி நாய் எங்கே கிடைக்கும்? ப்ளீஸ்... எனக்கொண்ணு!

  ஒக - நன்று.

  பபி - அபாரம். சகோதர, சகோதரிகளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. ஓவியம் அருமை. சபாஷ் ரோஷ்ணி.

   Delete
  2. இந்த மாதிரி நாய் எங்கே கிடைக்கும்?..... தகவல் தெரிந்த உடன் உங்களுக்கு தான் முதலில் சொல்வேன்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. ரோஷ்ணியிடன் சொல்கிறேன்.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. அனைத்துக் அருமை, ரோஷ்ணியின் படம் அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 9. தகவல்கள் அருமை
  ரோஷ் ஜோரும்மா ...
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 10. அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 11. அட! ஆம் ஆத்மி உணவகம்....நல்ல விடயம் தானே....!! இப்படி நல்ல விடயங்கள் பரவினால் நல்லதுதான்...பொறுத்திருந்து பார்ப்போம் தரம்...

  இற்றை செம தத்துவம்!!

  குறுஞ்செய்தி ஆமாம்...

  காணொளி...சூப்பர் நாய்...அழகு அழகோ அழகு! எங்கருந்து பிடிச்சாங்களோ...!!!

  சங்கு கவிதை அருமை

  படித்ததில் பிடித்தது வைரம் நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது...அருமை..

  ரோஷ்ணிக்குட்டிக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்.....மேன் மேலும் தன் கலையை வளர்த்துக் கொள்ள...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. கதையும் கவிதையும்
  மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 15. இந்த வார பழக்கலவையை இரசித்தேன்! குறிப்பாக அந்த முகப்பு புத்தக இற்றை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. படித்ததில் பிடித்தது, படித்ததில் எனக்கும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. அம்மா என்றாலும் சரி ஆத்மி என்றாலும் சரி....எப்படியாகிலும்...ஏழைகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையில் தரத்தினை தாழ்த்தாமல் வழங்கினால் மக்கள் பாராட்டும் என்றும் கிடைக்கும்...ஆத்மி இப்போது புரிந்து கொள்ளத்தொடங்கியிருக்கிறது..வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராதா ஜி!

   Delete
 18. வழக்கம் போல சாலட் ருசிகரம்! குட்டிக்கதையும் கவிதையும் மிகவும் ரசித்தேன்! ரோஷ்ணியின் ஓவியம் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 19. வழக்கம் போல சுவையான சாலட்! குட்டிக்கதையும் கவிதையும் ரசித்தேன்! ரோஷ்ணியின் ஓவியம் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 20. அட்டகாசமான சாலட் அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....