இந்த வார செய்தி:
தில்லியின்
மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு இடம் உத்தம்நகர். அங்கே வசிக்கும் கவிதா என்பவருக்கு அடிக்கடி
வாந்தி வந்தது மட்டுமன்றி உடல் எடையும் தொடர்ந்து குறைந்து வரவே,
மருத்துவமனைக்குச் சென்று பல சோதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அப்போது தான் தனக்கு சிறுநீரகக் கோளாறு
இருப்பது தெரிய வந்திருக்கிறது. சிறுநீரக
மாற்றுச் சிகிச்சை ஒன்று தான் வழி என்று சொல்லி விட, கவிதாவின் தாயார் தனது சிறுநீரகத்தைத்
தருவதாகச் சொல்லி இருக்கிறார்.
அறுவை
சிகிச்சைக்கான நாளும் வர, கடைசி நேரத்தில் கவிதாயின் தாயார், தனது மகளுக்கு சிறுநீரகம்
தர முடியாது என்று சொல்லிவிட சிக்கல் கவிதாவிற்கு.... தனது வாழ்க்கை அவ்வளவு தான்
என்று யோசித்துக் கொண்டிருக்க, அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் குரல் ஒன்று கேட்டது!
”உங்கம்மா உனக்கு சிறுநீரகம் தராவிட்டால் என்ன,
உடைந்து போகக்கூடாது.... நானும் உனக்கு அம்மா தான்” என்று சொல்லி, தனது சிறுநீரகத்தினை
தானம் செய்ய முன்வரவே அவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள அவர் தானம் செய்ய முடியும்
என்று மருத்துவர்களும் கூறி விட்டார்கள்.
இரண்டு
வாரங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முடித்து சில நாட்கள் வரை
மருத்துவமனையில் இருந்தார்கள். தற்போது
இருவரும் வீட்டிற்கு திரும்பியாச்சு! மாமியார், மருமகள் இருவரும் நலம்!
இந்த
சிகிச்சை செய்த மருத்துவர்கள், இது வரை இது போன்று மருமகளுக்கு சிறுநீரகம் கொடுக்க
முன் வந்த மாமியார்களை கண்ட்தில்லை என்று சொல்லி மாமியாருக்கு பாராட்டு மழை
பொழிந்திருக்கிறார்கள்.
மருமகள்
மெச்சிய இந்த மாமியாருக்கு நமது சார்பிலும் ஒரு பூங்கொத்து!
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார குறுஞ்செய்தி:
ஆண்கள் எல்லாம் தெரிந்த மாதிரி நடிப்பதிலும், பெண்கள்
எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பதிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்!
-
யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் உண்மை மாதிரி தான் தோணுது!
:)
இந்த
வார காணொளி:
அம்மாவின் கையால் சாப்பாடு......
இந்த வார புகைப்படம்:
நல்ல மனம் வாழ்க! அடிக்கும் வெயிலில்
மனிதர்களுக்காவது தண்ணீர் வாங்கி குடிக்க முடிகிறது.... இவை என்ன செய்யும் என
யோசித்து இப்படி ஏற்பாடு செய்திருக்கும் அந்த நல்ல மனம் வாழ்க!
படத்தினை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்த
சென்னை பித்தன் ஐயாவிற்கு நன்றி.
மெட்ரோ மேனியா:
சென்னையில் மெட்ரோ வந்தாலும் வந்தது,
முகப்புத்தகத்திலும், செய்திகளிலும் மெட்ரோ மாட்டிக்கொண்டு முழிக்கிறது! அனைத்து
கட்சிகளும் தாங்களே மெட்ரோ கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்ள, மெட்ரோவில் பயணம்
செய்கிறோம் என பல அலப்பறைகள் கொடுக்க, ஒரு சில பயணிகள் மெட்ரோவில் பயணக் கட்டணம்
என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக
தெரிந்தாலும், தில்லியில் பயணித்த எங்களுக்கு இக்கட்டணம் அதிகமாகத்
தெரியவில்லை.
தில்லியில் கடந்த சில வருடங்களாகவே குறைந்த பட்ச
கட்டணம் ஒன்பது ரூபாய் [ஒரு நிலையத்தில் புறப்பட்டு அடுத்த நிலையத்திலேயே
இறங்கினாலும்!]. இந்த கட்டணத்தை ஏற்ற வேண்டுமென மூன்று நான்கு வருடங்களாகவே மெட்ரோ
நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது! இன்னும் சில நாட்களில் ஏற்றப்போவதாக
செய்தியும் உண்டு! அதிக பட்ச தொலைவு செல்லும் போது ஆட்டோ அல்லது Call Taxi-ஐ விட நிச்சயம் குறைவான
கட்டணமாகவே இருக்கும். அதுவும் சூடு வைத்த சென்னை ஆட்டோக்களுக்கு இது எவ்வளவோ
மேல்! செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்றுவிடலாம் என்பது கூடுதல் வசதி.
படித்ததில் பிடித்தது:
வாடகைக் கார் ஒன்றில் பயணிக்கும் போது ஏதோ
கேட்பதற்காக ஓட்டுனரைத் தொட்டாராம் பயணி.
அவர் தொட்டவுடன், அலறிய ஓட்டுனர், தட்டுத்தடுமாறி, சாலையிலிருந்து விலகி
நடை பாதையில் சென்று சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு கடையை கிட்டத்தட்ட மோதும்
நிலைக்கு வந்து வண்டியை நிறுத்தினாராம்.
அடடா....
நான் சாதாரணமா தொட்டதுக்கே இப்படி ஆயிடுச்சே... என்று பயணி, ஓட்டுனரிடம் மன்னிப்பு
கேட்க..... அப்போது அந்த ஓட்டுனர் சொன்னாராம்......
....
....
....
....
உங்க மேல தப்பு ஒண்ணும் இல்ல! நேத்து வரைக்கும்
நான் ”சவ
ஊர்தி” ஓட்டிட்டு
இருந்தேன். இன்னிக்கு தான் பயணிகள் வாகனம் ஓட்டறேன்! பழைய நினைப்புல பயந்துட்டேன்!
யோசிக்கும் போதே டெரரா இருக்குல்லே!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இவ்வார செய்தி, முகப் புத்தக இற்றை,புகைப்படம், மெட்ரோ மேனியா அனைத்தையும் இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.....
நீக்குவாழ்க அந்த மாமியார்.
பதிலளிநீக்குசூப்பர் இற்றை.
குறுஞ்செய்தி : ம்ம்ம்ம்ம்...
நல்ல மனம் வாழ்க. சென்னையில் மூன்று நாட்களாக 106 டிகிரி!
மெட்ரோ செய்தியில் உங்கள் நிலையை ஆதரிக்கிறேன்.
ப.பி படித்திருக்கிறேன். மீண்டும் ரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமருமகளுக்கு தானம் வழங்கிய மாமனியார் போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குவியப்பான செய்தியாக இருக்கிறது
நன்றி ஐயா
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு
பதிலளிநீக்குஇந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாய் இருந்தது. குறிப்பாக மருமகளுக்கு சிறுநீரகம் தந்த மாமியார் பற்றிய தகவலையும் இந்த வார முகப்பு இற்றையையும் பகிர்ந்தமைக்கு நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குArumaiyana Takavalkal.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குவாழ்க மாமியார்...
பதிலளிநீக்குடெரரா தான் இருக்கு...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமாமியாரின் சிறுநீரக தானம் மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதின் அடையாளம்.
பதிலளிநீக்குநம்பிக்கையூட்டும் நல்ல தகவல்களை பகிர்வது அருமை தோழர்.
தொடருங்கள்
தம +
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குபடித்ததில் பிடித்த ஜோக் பிரமாதம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை,
அதிலும் உணவை வீணாக்காதீர்,,,,,,,,,
பதிவுக்கு வாழ்த்துக்கள்,
நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குஅனைத்தும் அருமை அண்ணா....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குமாமியார் வாழ்க!! நல்ல மனிதம் கொண்ட மாமியார்களும் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று...
பதிலளிநீக்குஇற்றை மிக மிக அருமை! டாப்...
குறுஞ்செய்தி...ஹஹ்ஹ
காணொளி தாய்மை பேசுகிறது....
நல்ல மனம் வாழ்க! ..சென்னை...தகிக்கிறது....பாலக்காட்டிலும் வெய்யில் கடுமைதான் என்றாலும் அவ்வப்போது மழை ....
படித்ததில் பிடித்தது வாசித்திருக்கின்றோம்....
மெட்ரோ ...துளசி சென்றதில்லை....கீதா : சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கட்டணம் ஓவர்தான்...நம்மூரில் சாதாரண மக்கள்தானே அதிகம் அரசு போக்குவரத்தை நம்பி இருக்கிறார்கள்....
எல்லாமே மிகவும் இனிமை அருமை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குI think Delhi metro fare is very cheap compared to Chennai Metro. 10 km stretch only 16 Rs.
பதிலளிநீக்குThe fares for the Delhi Metro is due for revision for more than a year and will be increased any time.....
நீக்குThanks for your visit Mr. Srinivasan.
மாமியார் வாழ்க. தரேன் என்று சொல்லி தராது விட்ட அம்மாவிற்கும் காரணம் ஏதாவது இல்லாமலா இருக்கும். என்ன அம்மாநீங்கள்.காரணம் சொல்ல வேண்டாமா படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது. ருசியான ஃப்ரூட் ஸேலட் அன்புடன்
பதிலளிநீக்குகாரணம் இருந்திருக்க வேண்டும்.... ஒரு வேளை அம்மாவிற்கு பயமாகக் கூட இருக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
இப்படியாக கொடுக்கும் மனத்தன்மை யாருக்கும் வராது....மற்றும் குறுஞ்செய்தி எல்லாம் அட்டகாசம் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஇந்த வார முகப்புத்தக இற்றை கவிதையின் மையக் கருத்து என் இதயத்தைத் தொட்டது. காரணம், எனது தாத்தா (அம்மாவின் அப்பா) ஒரு விவசாயி. சாப்பிடும்போது என்னையும் அறியாமல் சாதம் சிந்திவிட்டால் திட்டுவார்; “உனக்கு பள்ளிக்கூடத்திலே இதெல்லாம் சொல்லித் தர மாட்டாங்களா? “ என்பார்.
பதிலளிநீக்குத.ம.9
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குபடித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது, த்ஹயின் அன்பு சிலருக்கு உணவில்தான் தெரிகிறது போலு ம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குமருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கிய மாமியார் - உயிர் காத்த உத்தமி..
பதிலளிநீக்குஉண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியவர்..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குசுவையான சாலட்! பகிர்வுக்கு நன்றி! மாமியாருக்கு கண்டிப்பாக பூங்கொத்து தரலாம். சோற்றுப்பருக்கை சிந்திக்க வைத்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குபடித்துக் கொண்டே வந்தவன் அந்தப் புகைப்படம் பார்த்து திகைத்து விட்டேன்.நன்றி
பதிலளிநீக்குபழக் கலவையின் ஒவ்வொரு பாகமும் ருசி.தைத்திரிய உபநிடதம் சொல்கிறது”அன்னம் ந பரிசக்ஷீத” அதாவது உணவை வீணாக்காதே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குநல்ல இதயம் கொண்ட அம்மையாருக்கு நன்றிகளைக் கூறுவோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குமுதுகலைப் பட்டத்திற்கு மேல் எந்த பட்டமும் இல்லையா:)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குசோறை போதும் என்று சொல்வது எப்படி வீணாக்குவதாக ஆகும் ?
பதிலளிநீக்குதட்டில் போட்ட பிறகு, போதும் என சாப்பிடாமல் கொட்டுவது பலருக்கு வழக்கம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
மாமியார் ம்மருமகள் செய்தி அதிசயம்.
பதிலளிநீக்குமெட்ரோ கட்டணம் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நாற்பது ரூபாய் என்பது ரொம்ப அதிகம். 4 நான்கு பேருக்கு 160 . அதற்கு வீட்டில் இருந்தே ஆட்டோவில் சென்றுவிடலாம். என்ன சிக்னலில் சிக்காமல் நேரத்திற்கு சென்றுவிட முடியும் என்பதே
உணவை வீணாக்கக் கூடாது என்று சொன்னது அட்டகாசம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்கு