செவ்வாய், 28 ஜூலை, 2015

சலாம்..... திரு கலாம்.....இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகள் தன்னலமற்ற தொண்டு புரிந்த பாரத ரத்னா திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி......

இன்றைக்கு இணையம் முழுவதும் அவரது ஈடு இணையற்ற புகழை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்று ஷில்லாங் நகரில் உள்ள IIM செல்லும் வழியில் முன்னால் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்த வண்டியில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு இளைஞர் நின்றபடியே பயணிக்க, பின்னால் இருந்த வண்டியிலிருந்து கலாம் அவர்கள் அந்த இளைஞரை உட்கார்ந்து வரச் சொல்லும்படி தகவல் அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

அவரது வேலை நின்றபடியே ஆயுதம் ஏந்திக்கொண்டு, செல்லும் வழியில் பிரச்சனை ஏதும் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது என்று இருந்தாலும், தன்னால் ஒருவருக்கும் கஷ்டம் வரக்கூடாது என நினைத்த நல்ல உள்ளம். சேரும் இடம் வந்தபிறகு அந்த இளைஞரை தன்னிடம் அழைத்து வரச் சொல்லி, அந்த இளைஞரது கைகளை குலுக்கி, “என்னால் நீங்கள் நின்றபடியே வர வேண்டியதாகிவிட்டது.  உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும்... உணவு உண்டீர்களா? என்றெல்லாம் கேட்டு அவருக்கு நன்றியும் சொல்லி இருக்கிறார். இது நடந்தது அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்.....

இந்த நேரத்தில் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். 2002-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக பதவி ஏற்கப் போகிறார். அந்த நிகழ்ச்சிக்கு தனது பிறந்த ஊரிலிருந்து சில உறவினர்கள் வந்திருக்க, அவர் நினைத்திருந்தால், அரசு செலவிலேயே அவர்கள் அனைவரையும் தங்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்தது என்ன தெரியுமா?  தில்லியின் கரோல் பாக் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் உறவினர்களை தங்க வைத்தார். அந்த விடுதிக்கான தங்கும் வாடகையையும் அவரே தான் தந்தார்.

பதவிக்கு வருவதற்கு முன்னரே, அரசாங்க வசதிகளை பயன்படுத்த நினைக்கும், பயன்படுத்தும் பல அரசியல்வாதிகளையே பார்த்து இருந்த இந்திய மக்களுக்கு இவர் ஒரு புதிய பாதை காண்பித்தவர்.  அவரது இழப்பு நம் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு.

இன்று அதிகாலையிலேயே எனக்கு அலைபேசியில் அழைப்புகள் வரத் துவங்கின...... ஒன்றும் பெரிய விஷயமில்லை. அழைத்தவர்கள் தெரிந்து கொள்ள விரும்பியது இது ஒன்று தான் – “இன்றைக்கு அலுவலகம் உண்டா இல்லையா?  விடுமுறை என்று அறிவிப்பு வருமா?”   

கடுமையான உழைப்பாளியான திரு கலாம் அவர்களிடம் கேட்டிருந்தால் சொல்லி இருப்பார்.....  “நான் இறந்து போனால், துக்கம் அனுஷ்டிக்க, நீங்கள் விடுமுறை அறிவிக்க வேண்டாம். இன்றைய தினம் இன்னும் கடுமையாகவும், நாட்டுக்கு உண்மையாகவும் உழையுங்கள்.  எப்போதும் வேலை செய்யும் நேரத்தினை விட இன்னும் இரண்டு மணி நேரங்கள் அதிகமாக வேலை செய்யுங்கள்!”    அதையே தான் நானும் சொல்ல விரும்பினேன்.....

அக்னிச் சிறகுகள் தந்த திரு APJ அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா மறைந்தாலும் அவரது நினைவுகள் நம்மை விட்டு மறையாது. 

தோல்வி மற்றும் முடிவு பற்றி அவர் சொன்ன ஒரு கருத்தினை இங்கே கடைசியாகச் சொல்ல நினைக்கிறேன்.....

நீங்கள் தேர்வில் FAIL ஆகிவிட்டால் அதற்காக நிராசை கொள்ள வேண்டாம். Fail என்பதற்கு அர்த்தம் தோல்வி மட்டுமல்ல...  First Attempt in Learning.  அது போலவே END என்பதற்கு முடிவு என்பது மட்டும் அர்த்தமல்ல.....  Efforts Never Dies என்பதும் ஒரு அர்த்தம்!

வாழ்க நீ எம்மான்.....


38 கருத்துகள்:

 1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. மிக மிக அருமையான அஞ்சலி! வார்த்தைகள்! நாமும் நமது தலைமுறையும் நம்மால் இயன்ற வரை அவரது கனவுகளை நனவாக்க முயன்றோம் என்றால் அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி, மரியாதை

  வாழ்க எம்மான்! நம் மனதை வீட்டு நீங்காத மாமனிதர்! இறுதி வரிகள் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 3. கலாம் அவர்களைப் பற்றி இப்பொழுது தான் நிறையத் தெரியவருகிறது. மாமனிதர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 4. First Attempt in Learning = FAIL
  Efforts Never Dies = END

  தோல்வி மற்றும் முடிவு பற்றி கலாம் அவர்கள் சொன்னது கருத்தல்ல! நம்பிக்கை நாதம்! இளைஞர்களுக்கு அது ஓர் ஊக்க சக்தி!
  மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அஞ்சலியில் நாமும் பங்கேற்போம்.
  த ம 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   நீக்கு
 5. நம் காலத்திலும் ஒரு மாமனிதர் இருந்தார் என்ற பெருமைக்கு சான்றாக இருந்த பெருமகனாருக்கு அஞ்சலி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாம்.....

   நீக்கு
 6. வணக்கம்

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது வலைப்பூவையும் எனது மகளின் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சாம்.

   நீக்கு
 7. பேரிழப்பு. அவரை அதிகம் துன்புறுத்தாமல் அல்லா தன்னிடம் அழைத்துக் கொண்டார். நம் நாட்டின் மிகப் பெரிய இழப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. Fail மற்றும் End சொற்களுக்கு பொருள் அருமை. உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன் அன்னாருக்கு அஞ்சலி செலுத்த.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. உண்மைதான் ஐயா
  ஒரு மாமனிதரை இழந்திருக்கிறோம்
  இழப்பு நமக்குத்தான்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. வணக்கம் வலைச்சரம் ஊடாக வந்தேன். இப்படியொரு மனிதநேயம் மிக்க ஒருவரை காண்பது அரிது அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். நன்றி ! வலைச்சர அறிமுகத்திற்கு வாழத்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இனியா.

   நீக்கு
 11. //வாழ்க நீ எம்மான்.//

  ஆச்சரியம்... நானும் இந்த வரிகளுடன் தான் நான் எழுதிய கட்டுரையை முடித்திருந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 12. fail, end க்கு அவர் சொன்ன அர்த்தங்கள் அருமை! அருமையான மனிதரை இயற்கை எடுத்துக் கொண்டது! ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 13. அப்துல் கலாம் அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரைப் பற்றிய சிறப்பான செய்திகள்.
  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 14. fail end போன்ற வார்த்தைகளுக்கான வியாக்கியானம் முன்பே படித்தது. ஆனால் அதைச் சொன்னது கலாம் அவர்கள் என்று இப்போதுதான் தெரிந்தது. அஞ்சலியில் நானும்கரைகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 15. அன்னாரின் சிறப்புகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 16. இவரைப் போன்ற மாமனிதர் ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் நமக்குப் பெருமை! கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 18. மிகச் சிறப்பான அஞ்சலி. இவரைப் போன்ற மாமனிதரை இனி என்று காண்போம்?
  2020 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற அவரது கனவினை நனவாக்குவது ஒவ்வொரு இந்தியனின் கடமை. எல்லோரும் சேர்ந்து பாடுபடுவோம்.

  பதிலளிநீக்கு
 19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

  பதிலளிநீக்கு
 20. பாசிடிவ் சிந்தனை இருந்த, அதை மாணவர்களிடத்தில் விதைத்த மனிதன். வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்தவர். தான் உயர்ந்த இடத்தை அடைந்தபோது, அதை வைத்து, மக்களுக்கு எப்படிப் பயனுள்ளதாகச் செய்யலாம் என்று எண்ணி அதனைச் செய்தவர். அவர் எப்போதும் நினைவுகூறப்படுவார்.

  எப்படி அரிய மாணிக்கங்களெல்லாம், வாரிசு இல்லாமல் போகிறார்கள்? (காமராசர், எம்.ஜி.யார், கலாம்) மக்களையே தங்கள் வாரிசாக எண்ணவேண்டும் என்ற இறையின் ஏற்பாடாக இருக்குமோ? எல்லாத் தலைவர்களுக்கும், தாங்கள் போகும்போது, மக்களிடம் spontaneousஆக இத்தகைய பெயரும், வருத்தத்தையும் பெறவேண்டும் என்பதற்கு, கலாமின் இறுதி ஒரு உத்வேகமாக அமைந்தால் இந்தியர்களுக்கு நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....