எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 14, 2015

ஃப்ரூட் சாலட் – 142 – குப்பை போடாதே! – Yummydrives.com – கண்ணகியின் தவறு!


இந்த வார செய்தி:

படம்:  இணையத்திலிருந்து....

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் கண்ட இடங்களில் தூக்கி வீசும் குப்பைகளை மனநல நோயாளி ஒருவர் ஓடோடிச் சென்று எடுத்து குப்பை தொட்டியில் கொண்டு போடுகிறார். அவரைப் பார்த்து பயணிகளும் குப்பையை கீழே போடத் தயங்குவதால் வத்தல குண்டு பஸ் நிலையம் இப்போது சுத்தமாக காணப்படுகிறது.

வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகளை வத்தலகுண்டு பேரூராட்சி துப்பு ரவுத் தொழிலாளர்கள் தினமும் காலையில் மட்டும் அகற்றுவர். மற்ற நேரங்களில் குப்பைகள் குவிந்து காணப்படும்

இந்நிலையில் கடந்த 2 மாதங் களாக வத்தலகுண்டு பஸ் நிலை யம் குப்பை இன்றி சுத்தமாகக் காணப்படுகிறது. இதன் பின்னணி யில் ஒரு மனநோயாளி உள்ளார். காலை முதல் இரவு வரை பேரூராட்சி குப்பை வண்டியுடன் பஸ் நிலைய வளாகத்தில் சுற்றித் திரியும் இந்த மனநோயாளி பயணிகள் வீசும் குப்பைகளை ஓடிச்சென்று எடுத்து குப்பைத் தொட்டியில் கொண்டு போடுகிறார்.

கண்ட இடங்களில் கூச்சமில்லாமல் போடும் குப்பைகளை மன நலம் பாதித்த ஒருவர் எடுத்து அகற்றுவதைப் பார்த்து தற்போது பஸ் நிலைய கடைக்காரர்கள், பயணிகள், குப்பையை திறந்த வெளியில் வீசத் தயங்குகின்றனர். வத்தலகுண்டு பஸ் நிலையம் வரும் பயணிகள், அப்பகுதி மக்கள் ஒரு மன நோயாளியால் மனமாற்றம் அடைந்திருப்பது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

இதுகுறித்து பஸ் நிலைய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் பிச்சை கூறியதாவது:

தூய்மை இந்தியாதிட்டத்துக் காக ஒருமுறை பஸ்நிலையத்தில் சிலர் ஒருநாள் முழுவதும் இருந்து குப்பைகளை ஓடி ஓடி எடுத்தனர். அவர்களைப் பார்த்து மனநிலை பாதித்த இவர் பஸ் நிலையத்தில் ஒரு குப்பையை விடுவதில்லை.

டீக்கடை, ஹோட்டலில் யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டார். நாங்கள், கடைக்காரர்கள், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அவருக்கு உணவு வாங்கிக் கொடுப்போம். இன்று அவரால் எங்கள் ஊர் பஸ் நிலையம் சுத்தமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

     தி இந்து தமிழ் நாளிதழிலிருந்து.....


இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களின் தினத்தினை நேற்றைய எச்சங்களுடன் தொடங்காதீர்கள். இன்றைய தினம் புத்தம் புதியது! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம். எழுந்திருக்கும் ஒவ்வொரு காலையும், நமது புதிய வாழ்வின் முதல் நாள் என்ற உணர்வுடன் தொடங்கட்டும்!

இந்த வார குறுஞ்செய்தி:

யாருக்கேனும் கெடுதல் செய்ய வேண்டுமெனில் மட்டுமே உங்களுக்கு வானளாவிய அதிகாரம் [தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் சொன்னதோ!] தேவை.  இல்லையெனில் அன்பு கொண்டே பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும்!

இந்த வார புகைப்படம்:ஆகஸ்டு மாத பிட் புகைப்படப் போட்டிக்கு தலைப்பாக ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும் என்று கொடுத்து நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (Amphibian) படங்களை போட்டிக்கு அனுப்ப கேட்டிருக்கிறார்கள். போட்டிக்கு அனுப்புகிறேனோ இல்லையோ, நான் எடுத்த ஒரு Amphibian-ஆகிய முதலையின் படம் இங்கே! படம் எடுக்கப்பட்டது சென்னையின் முதலைப் பண்ணையில்! வாயைத்திறந்தபடி என்னவொரு அழகு! :)

இன்றைய வாழ்த்து:கடல் பயணங்கள்தளத்தினில் எழுதும் நண்பர் சுரேஷ்குமார் அவர்கள் திரு கேபிள் சங்கர் மற்றும் கோவை ஜீவா அவர்களுடன் இணைந்து WWW.YUMMYDRIVES.COM எனும் புதிய தளத்தினை இன்றைக்கு அறிமுகம் செய்கிறார்கள்.  எந்த ஊரில் என்ன உணவு கிடைக்கும், அந்த ஊரில் என்ன சிறப்பான உணவு என பல தகவல்களை நமக்குத் தரப்போகும் இவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பூங்கொத்துகளும்!

இந்த வார காணொளி:

India Got Talent என்று ஒரு Reality Show, Colours Channel-ல் வந்து கொண்டிருந்த்து.   அதில் Prahlad Acharya எனும் நபர் நிழல்களின் மூலம் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களை பலரை நம் கண் முன்னே கொண்டு வந்தார்.  அந்த காணொளியை நீங்களும் பார்த்து ரசிக்க இதோ இங்கே.....
படித்ததில் பிடித்தது:பேச வேண்டிய நேரத்தில்
பேசியிருந்தால்
கேட்க வேண்டிய நேரத்தில்
கேட்டிருந்தால்
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்லியிருந்தால்
கழுத்து நகையையும்
கால் நகையையும்
கழட்டியிருக்க வேண்டாமே
தவறு செய்தவள் நீ
தண்டனை மன்னனுக்கா?

-   சுமதி

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்
52 comments:

 1. முதல் செய்தி நானும் பாஸிட்டிவ் பகுதிக்குத் தெரிவு செய்து வைத்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வணக்கம்,
  மனநலம் பாதித்தவர் செயல் உண்மையிலே மனதைத் தொட்டது.
  ஆம் நான் அடிக்கடி சொல்வது அவளின் தவறுக்கு மதுரை என்ன செய்யும் மன்னதான் என்ன செய்வான்,,,,,,,,
  அருமை,அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 3. அட்டகாசமான மசாலா சாட் வகை சாலட்! ஸ்பைஸி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 4. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு தகவலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. அனைத்தும் வழக்கம்போலஅருமையாக உள்ளது. குப்பையைத் தேடித் தேடி எடுப்பவர் பற்றிய செய்தி மனதில் ஆழப்பதிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. நல்லாருக்கே திகட்டாத ப்ரூட்சாலட்டுக்கு நன்றி....என் தோழியின் கவிதையையும் போட்டதற்கு சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 7. வணக்கம் நண்பரே மனநல நோயாளி ஒருவர் இப்படி நடந்து கொள்ளும் பொழுது குப்பையை வீசும் மற்றவர்கள்தான் மனநோயாளி என்று நினைக்கத் தோன்றுகிறது காணொளி மிகவும் அருமை
  நண்பரே நலம்தானே....?

  ReplyDelete
  Replies
  1. நலம் நண்பரே......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. மனநலம் பாதித்தவரை வாழ்த்துவோம்...
  கவிதை முகநூலில் படித்தேன்...
  மற்றவையும் சிறப்பு...
  அருமை அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. மனநிலை சரியில்லாதவங்களுக்குத்தான் சுத்தத்தின் முக்கியம் தெரியுது!

  பரத்தை வீட்டுக்குப்போனப்பவேக் காலை உடைச்சு வீட்டுலே வச்சுருக்கணும். செய்யத் தவறிவிட்டாள். அவள் கொடுத்த சுதந்திரத்துக்காவே 'பலவீட்டார்' அவளைத் தலைக்குமேல் தூக்கிவச்சுக் கொண்டாடறாங்க:-(

  ReplyDelete
  Replies
  1. ”பலவீட்டார்” - அட!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 11. அழுக்கில்லாத மனம் படைத்த நோயாளி நலம் பெறட்டும்.
  வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல செய்திகளைப் படித்ததில் மிக மகிழ்ச்சி வெங்கட். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   Delete

 13. இந்த வார பழக்கலவையும் அருமை. வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் கண்ட இடத்தில் பயணிகளால் போடப்படும் குப்பைகளை, குப்பை தொட்டியில் எடுத்து போடுபவர் மன நோயாளி அல்ல. அவ்வாறு கண்ட இடத்தில் குப்பையை போடுபவர்கள் தான் மன நோயாளிகள்.

  நீங்கள் படித்ததில் பிடித்தது, எனக்கும் பிடித்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. காணொளி அருமை. கண்ணகி ஒரு பாரதீய நாரீமணி அல்லவா.?அப்படித்தான் இருப்பாள்.ஈருடக-- முதன்முறையாகக் கேள்விப்படும் வார்த்தை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. மன நோயாளியால் மனம் திருந்திய திண்டுக்கல் வாழ் மக்கள் . அவரை ஊர் ஊராக அழைத்து வரவேண்டும். சுமதியின் வரிகள் சிந்திக்க வைத்தது. அனைத்தும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 16. மனநோயாளி நோய் விரட்டுவது ( குப்பை களைவது) சிறப்பு. சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. சாலட்டினை சுவைத்து மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 18. "கே"வலனை மறைமுகமாக ஆதரித்த கண்ணகிக்கு நல்ல குட்டு! :) எனக்குள்ளும் இந்தக் கேள்வி சிலப்பதிகாரம் படிக்க ஆரம்பித்ததில் இருந்து உண்டு. கேள்வி கேட்டுத் திட்டும் வாங்கி இருக்கேன். பாண்டிமாதேவி தான் உண்மையான பத்தினி என்று பட்டி மன்றங்களில் வாதாடி இருக்கேன். :) நம்ம ஊராச்சே! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 19. மன நோயாளி நலம் பெறப் பிரார்த்தனைகள். தொடர்ந்து இதேசேவையைத் தொடரவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 20. தூய்மை இந்தியா ...ஒருநாள் கூத்தினால்,பல நாள் நன்மை ,அதுவும் மன நோயாளியால் ..விளங்கிடும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. கண்ணகி பற்றி புதிய பார்வையில்
  புதிய கோணத்தில்
  ஓர் கவிதை
  அருமை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 22. சுமதி அவர்களின் கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 23. கண்ணகி விசயம் வேறு எதோ ஒரு பெரிய சமூக நிகழ்வின் மறைக்கப்பட்ட மேல்பூச்சு.
  கவிஞர் சாந்தி கேட்டிருப்பது கவிதைக்கு அழகு ..
  யம்மிடிரைவ்ஸ் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி மது.

   Delete
 25. முதல் செய்தி எங்கள் ப்ளாகிலும் பாசிட்டிவ் செய்திகளில் இன்று (தான்) வாசிக்க நேர்ந்தது...

  அனைத்தும் அருமை....டாப் ...காணொளி....என்ன ஒரு திறமை மிகவும் வியப்பாக இருக்கின்றது..

  முதலை வாயைப் பிளந்து கொண்டு இருப்பதுமிக மிக அழகாக இருக்கின்றது. நீங்கள் போட்டிக்கு அனுப்பலாமே..

  படித்ததில் பிடித்தது அருமையான வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 26. மன நலம் பாதித்தவரால் மக்கள் குண நலன் மேம்பட்டது... எத்தகைய செய்தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....