எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 18, 2015

பதிவர் சந்திப்பு – 2015 - மதுரைத் தமிழன் அளிக்கும் ஃபைவ் ஸ்டார் விருதுதமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு முதல் இரண்டு வருடங்கள் சென்னையிலும் மூன்றாம் வருடம் மதுரையிலும் நடந்திருக்க, நான்காம் வருடமான இவ்வருடம் புதுக்கோட்டையில் நடைபெறப் போகிறது. விவரங்கள் கீழே:

நாள்: அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் [ஞாயிறு]
நேரம்: காலை 09-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை.
இடம்: ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், Be Well மருத்துவமனை எதிரில், ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை.

தமிழகத்தில் இருக்கும் பதிவர்களும், வெளியூர் பதிவர்களும் இப்பொழுதே புதுக்கோட்டை செல்ல ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வசதியாக முன்னரே அறிவித்திருக்கிறார்கள்.  சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் படிவம் வெளியிட்டு இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் படிவத்தினை பூர்த்தி செய்யலாம்!

புத்தக வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள், விருதுகள் வழங்குதல் என பல சிறப்பான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.  விழாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015 எனும் நூலை தர இருக்கிறார்கள்.  வர முடியாத வலைப்பதிவர்களுக்கு மின் புத்தகமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதியும் தந்தால் நல்லது! விழா பற்றிய தகவல்கள் தொடர்ந்து புதுக்கோட்டை பதிவர்களின் தளங்களில் வெளியிடுவார்கள். 

சென்னையில் நடந்த இரண்டாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பதிவில் நான் எடுத்த பதிவர்களின் புகைப்படங்கள் எனது தளத்தில் உண்டு! பார்க்க விரும்புவர்களின் வசதிக்காக சுட்டிகள் கீழே:
கடந்த முறை மதுரையில் நடந்த மூன்றாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். இம்முறையும் கலந்து கொள்வது கடினம். அலுவலகத்தில் தணிக்கை ஆரம்பிக்க இருக்கிறது. ஆரம்பித்து விட்டால் விடுமுறை எடுப்பது கடினம். மேலும் இந்த மாதத்தின் இறுதியில் சில சொந்த வேலைகளுக்காக ஒரு வார விடுப்பில் திருச்சி வர முன்பதிவு செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்குள் மீண்டும் விடுப்பு கிடைப்பது கடினம்! கடைசி நேரத்தில் வந்தாலும் வரலாம்!

Five Star Blogger Awardமுன்னணி பதிவர்களில் ஒருவரான திரு மதுரைத் தமிழன் அவர்கள், தனது தளமான “அவர்கள் உண்மைகள்எனும் தளத்தின் மூலம் Five Star Blogger என சில பதிவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிமுகம் செய்ய இருக்கிறார். அவர் தொடர்ந்து படிக்கும் பதிவர்களை அறிமுகம் செய்து “Five Star Bloggerஎன்று தனது தளத்தில் அப்பதிவரின் வலைப்பூவிற்கான சுட்டியும் தரப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

முதல் Five Star Blogger-ஆக அவர் தேர்ந்தெடுத்திருப்பது என்னையும் எனது வலைப்பூவினையும்! என்று இங்கே சொல்லிவிடுகிறேன்! அவரது தளத்தில் இரண்டு வாரங்களுக்கு விருது பெறும் பதிவர்களின் வலைப்பூவிற்கான சுட்டி இருக்கும்.  இந்த இரண்டு வாரமாக எனது தளத்தின் சுட்டி இருக்கிறது. வரும் வாரத்தில் இந்த இடத்தில் வேறொரு பதிவரின் தளத்திற்கான சுட்டி இருக்கும்.

எனது தளம் பற்றி புகழ்ந்து எழுதி இருப்பது பார்த்து மனதில் நிறைந்த மகிழ்ச்சியும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் பயமும் வந்தது! தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வேண்டுமே என்ற பயம் தான்! முடிந்த வரை படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் தான் பதிவுகள் எழுதுகிறேன் என்றாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமே என்கிற பயம் தான்!

இது வரை 906 பதிவுகளும், கிட்டத்தட்ட 5 லட்சம் [4.83 லட்சம்] பக்கப் பார்வைகள் பெற்றிருந்தாலும் மேலும் மேலும் பதிவுகள் வெளியிடும் எண்ணம் குறையவில்லை.  அலுவலகத்தில் ஆணிகள் அதிகமென்பதால் ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதுவது கடினமாக இருக்கிறது.  முடிந்த போது பதிவுகள் வெளியிடுகிறேன்.

முதல் Five Star Blogger ஆக என்னைத் தேர்ந்தெடுத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வரும் வாரத்தில் அடுத்த Five Star Blogger-ஆக தேர்ந்தெடுக்கப் படும் நண்பருக்கு வாழ்த்துகள்! அது யார் என்பது மதுரைத் தமிழனுக்கே வெளிச்சம்!

விடை பெறுமுன்னர் உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக புதுக்கோட்டை பதிவர்கள் சந்திப்பிற்கு உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள திண்டுக்கல் தனபாலன் தளத்தின் சுட்டியை மீண்டும் ஒரு முறை இங்கே தருகிறேன்!


சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் தனது ஒவ்வொரு பதிவிலும் சொல்வதைச் சொல்லி பதிவினை முடிக்கலாம்!

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!60 comments:

 1. first FIVE STAR bloggerருக்கு வாழ்த்துக்கள் அண்ணா! அதற்கான முழுத்தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என்பது என் சிற்றறிவுக்கே புலப்படுகிறதே! உங்களுக்கு என் வாழ்த்துகள்! தமிழன் சகாவிற்கு இந்த தங்கையின் நன்றிகள்:) புதுகை உங்களை அன்புடன் எதிர்நோக்குகிறது:)

  ReplyDelete
  Replies
  1. //புதுகை உங்களை அன்புடன் எதிர்நோக்குகிறது// தங்கள் அன்பிற்கு நன்றி. வர ஆசை இருக்கிறது என்றாலும் வருவது கடினம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 2. விருது தந்த மதுரைத்தமிழனுக்கும், பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களது எழுத்துக்களால் பலர் ஈர்க்கப்பட்டுள்ளோம். பொருத்தமான தேர்வு. தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. வணக்கம்
  என்னங்க சொல்றீங்க ?
  நீங்கள் வேலையில் இருக்கீங்களா?
  உங்கள் வேலையே ஊர் சுற்றுவது என்று நினைத்தேன்.

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் வேலையில் இருக்கீங்களா?
   உங்கள் வேலையே ஊர் சுற்றுவது என்று நினைத்தேன்.//

   ஹா.ஹா... வேலையில் இல்லாவிட்டால் புவ்வாவுக்கு வழி ஏது! பயணம் செய்வது பணிச் சுமைகளிலிருந்து விடுபட மட்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 4. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு நன்றி மது.

   Delete
 5. மனம்நிறைந்த நன்றி வலைப்பதிவர் விழா குறித்து எழுதியமைக்கு.கட்டாயம் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. புதுகை பதிவர் சந்திப்பிற்கு வர ஆசை இருந்தாலும் வருவது கடினம்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா.

   Delete
 6. அருமை நண்பரே, அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள். இப்போதே வலைபதிவர்களை சந்திக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 7. வசிஷ்டர் வாயால் மகரிஷி என பட்டம் பெறுவது போல் மதுரைத்தமிழன் அவர்களால் ஐந்து நட்சத்திர பதிவராக முதலில் அடையாளம் காட்டப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. நான் முன்னனி பதிவர் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது.... பைவ் ஸ்டார் அவார்டை விட இந்த முன்னனி பதிவர் அவார்ட் அதிக வொர்த் ஆக இருக்கிறதே.... நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. அட நீங்களும் காலத்திற்கு தகுந்தாற்போல அட்டகாசமான தலைப்பைதான் வைச்சிருக்க்கீங்க

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தலைப்புகள் என்றும் அட்டகாசம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. நன்றிகள் பல...

  விருதிற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Truefriend.

   Delete
 12. நட்சத்திர விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
  பதிவர் சந்திப்புக்கு வருகை தந்து விருது தரப்போகிறார் மதுரைத்தமிழன் என்று நினைத்து வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்படி நினைத்துதான் வந்தேன்... ஆனால் வெங்கட் இப்படி தலைப்பை வைச்சு ஏமாற்றுவார் என நினைக்கவில்ல .... அவருக்கும் நாம் பூரிக்கட்டை பார்சல் அனுப்ப வேண்டியதுதான்

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
  3. //பூரிக்கட்டை பார்சல் அனுப்ப வேண்டியது தான்!// ஆஹா “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”.... அனுப்புங்க, நமக்கும் கொஞ்சம் தேவையா இருக்கு! பயன்படுத்திக் கொண்டிருக்கும் பூரிக்கட்டை உடையும் நிலையில் இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தை சரவணன்.

   Delete
 14. பதிவர் விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

  விருதுக்கும் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. வெறும் விருதுதானா ?ஆயிரம் டாலராவது தர வேண்டாமா :)

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம் டாலருக்கு பதில் கொஞ்சம் பூரிக்கட்டைகள் அனுப்ப இருக்கிறார். உங்களுக்கு பங்கு வேண்டுமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 16. மனம் நிறைந்த வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 17. Replies
  1. அட! தொடர்ந்து கருத்துரை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்! :)

   Delete
 18. மிக்க மகிழ்ச்சி
  தாங்கள் குடும்பத்துடன் சென்னையில் கலந்து கொண்டு
  சிறப்பித்த நினைவுகள் இன்னமும் பசுமையாய்
  மனதில் பதிந்துள்ளது
  அனேகமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
  பதிவர்களாக இருப்பது தங்கள் குடும்பம் மட்டும்தான்
  என நினைக்கிறேன்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. சென்னை சந்திப்பில் உங்களைச் சந்தித்தது இன்னும் நினைவில்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 19. சரியான தேர்வுதான் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 20. இந்த சந்திப்பில் இம்முறை கலந்து கொள்ள முடியாது என்று தான் நினைக்கிறேன்! பைவ் ஸ்டார் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 21. எடுத்த எடுப்பிலேயே நக்ஷத்திரப் பதிவாளர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். உங்கள் வரவையும் எதிர்பார்க்கிறேன். அக்டோபர் கூட்டத்துக்குச் செல்ல முடியுமா, முடியாதா என்பதை இப்போதே சொல்ல இயலாது! :( அந்த நேரம் சூழ்நிலை அமைவதைப் பொறுத்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 22. வணக்கம் ஜி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்
  இணைப்புகள் அனைத்திற்க்கும் சென்று வந்தேன் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 23. Five star award பெற்றதற்கு வாழ்த்துகள் அண்ணா.
  புகைப்படத் தொகுப்பைக் காண மீண்டும் வருவேன்.
  சென்ற வருடம் நான் சென்று பல நட்புக்களைப் பெற்றேன், உங்களைப் பார்க்க முடியவில்லை.
  ஆனால் கீதாவின் பதிவில் உங்களைப் பார்த்தது போலத்தான் இருந்தது. :-)

  ReplyDelete
  Replies
  1. சென்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 24. பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்...
  ஐந்து நட்சத்திர பதிவராக திரு. மதுரைத் தமிழன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 25. பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டால் நல்ல புகைப்படங்களை இங்கே பார்வையிடலாம் :)

  முதல் நட்சத்திர பதிவாளராகத் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 26. வணக்கம் !
  விருது பெற்றுக் கொண்ட தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !பதிவர் சந்திப்பிற்கான அறிவிப்புக் கண்டேன் மிக்க மகிழ்ச்சி பதிவர் சந்திப்பும் சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள் .பதிவர்கள் ஒற்றுமை
  ஓங்கட்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 27. Five Star Blogger என்பது சிறந்த புது முயற்சி. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   Delete
 28. விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 29. ஐந்து நக்ஷத்திரப்பதிவரான உங்களுக்கு என் வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....