திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பஞ்ச் துவாரகா - பயணிக்கலாமா?

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 1


 படம்: இணையத்திலிருந்து....

பஞ்ச் துவாரகா....  ஆங்கில Punch அல்ல! ஹிந்தி பஞ்ச்! அதாவது ஐந்து....  ஐந்து துவாரகைகள் – துவாரகா, [B]பால் கா தீர்த், டாகோர்ஜி, ஷ்யாம்லாஜி மற்றும் ஸ்ரீநாத்ஜி! ஆகிய ஐந்து இடங்களே பஞ்ச் துவாரகா என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்தில் நான்கு குஜராத் மாநிலத்திலும் ஸ்ரீநாத்ஜி ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்ளன.  பெரும்பாலானவர்கள் இந்த பஞ்ச் துவாரகா பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கடினமான பயணம் – ஒவ்வொரு இடத்திற்கும் இடையிலான தொலைவு சற்றே அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒரு நாள் பேச்சு வாக்கில் பஞ்ச் துவாரகா செல்ல நினைத்திருப்பதாகச் சொல்ல, போகும் போது எனக்கும் சொல்லுங்கள், முடிந்தால் நானும் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். சில நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கும் போது பஞ்ச் துவாரகா பயணம் உறுதியாயிற்று.  அந்த சமயத்தில் விமானப் பயணத்திற்கான சில சலுகைகளும் அறிவிக்கப்பட உடனடியாக மூன்று பேருக்கு தில்லி – அஹமதாபாத் – தில்லி பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்து விட்டார்.  

பயணம் செய்ய வேண்டிய நாள் வருவதற்கு முன்னரே அங்கே என்னென்ன பார்க்க வேண்டும், எங்கே தங்குவது என்ற எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை. நண்பரே எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டதால் எனக்கு எந்த வேலையும், கவலையும் இல்லை! பல பயணங்கள் சென்றிருந்தாலும், குஜராத் மாநிலத்திற்கு இதுவே முதல் பயணம். குஜராத் மாநிலம் பற்றி பலரும் பலவிதமாய் சொல்லிக் கேட்டிருக்கும் எனக்கு நேரடி அனுபவம் கிடைக்கப் போகிறது என மனதில் நினைத்துக்கொண்டேன்.

பஞ்ச் துவாரகா என்பதில் இருக்கும் இடங்கள் என்ன என்று மேலே சொன்னேன். அவை பற்றிய சில குறிப்புகளை பயணிப்பதற்கு முன்னரே பார்க்கலாமா?


படம்: துவாரகா - ஜகத் மந்திர்

துவாரகா: 108-திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. மதுராவினை ஆண்டு வந்த கிருஷ்ணர் அவ்விடத்தினை விட்டு விலகி துவாரகாவில் தான் தனது ராஜ்ஜியத்தினை உருவாக்கினார். துவாரகா – துவார் என்றால் கதவு. கா என்பதற்கு ப்ரஹ்மா அதாவது மோக்ஷம்.  துவாரகா என்பதற்கு மோக்ஷத்தின் கதவு என்ற பொருள் – இங்கே பயணம் செய்து கிருஷ்ணனை த்யானிப்பவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன என நம்பிக்கை. இவ்விடத்தின் அருகிலேயே [B]பேட் த்வாரகா, கோம்தி த்வாரகா, ருக்மிணி த்வாரகா, நாகேஷ்வர் போன்ற ஸ்தலங்களும் உண்டு.  கோமதி ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் ஜகத் மந்திர் த்வாரகா பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


படம்: இணையத்திலிருந்து....
[கிருஷ்ணரும், அவர் பாதங்களில் அம்பு எய்த ஜராவும்]

[B]பால் கா தீர்த்:  முக்தி த்வாரகா என அழைக்கப்படும் இடம் இது. ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான சோம்நாத் அருகில் இருக்கும் இடம் இது. ஜரா எனும் வேடன் கிருஷ்ணரின் பாதங்களை மானின் பாதங்கள் [பறவையின் அலகு எனவும் சிலர் சொல்வதுண்டு] என நினைத்து அம்பு விட அது கிருஷ்ணரின் பாதங்களில் புகுந்தது. அதன் மூலமாகவே விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தின் முடிவும் வந்தது.  இந்த இடத்தில் தான் கிருஷ்ணர் கடைசியாக இருந்தார் என்பதால் இவ்விடத்தினை முக்தி த்வாரகா என்றும் அழைக்கிறார்கள்.  


படம்: டாகோர்ஜி கோவில் ஒரு தோற்றம்

டாகோர்ஜி:  அஹ்மதாபாத் நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம் டாகோர்ஜி என அழைக்கப்படும் இடம். கிராமிய சூழலில் அமைந்திருக்கும் அழகான கோவில்.  அஹமதாபாத் நகரிலிருந்து மும்பை செல்லும் NE-1 [National Expressway-1] வழியாகச் சென்றால் இங்கே சுலபமாகச் சென்றடைய முடியும். துவாரகாவில் வந்து வழிபடமுடியாத வயதானவருக்காக கிருஷ்ணபகவான் கோவில் கொண்டதாக ஒரு கதையும் உண்டு! இங்கே விசேஷமாக தங்கத்தில் துலாபாரம் இருக்கிறது.


படம்: ஷாம்லாஜி கோவிலின் ஒரு தோற்றம்

ஷாம்லாஜி:  மிகவும் பழமையான கோவில். மேஷ்வோ நதிக்கரையில் இருக்கும் இக்கோவிலை கடவுள்களின் சிறிபியான விஸ்வகர்மா ஒரே இரவில் கட்டியதாகவும் சில கதைகள் உண்டு. குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் இருக்கும் இந்த கோவிலும் மிக அழகான கோவில். இங்கே நவம்பர் மாதத்தில் நடக்கும் ஷாம்லாஜி மேளா மிகவும் பிரசித்தி பெற்றது.  நாங்கள் சென்ற போது கோவிலை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருந்தது. பழைய கோவில்களை அவ்வப்போது செப்பனிடுவது மிகவும் அவசியமான ஒன்று. புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டுவது தவிர்த்து இருக்கும் பொக்கிஷங்களை பராமரிப்பது நல்ல விஷயம்.


படம்: எட்டு அலங்காரங்களில் ஒன்று - ஓவியத்தினை படமாக எடுத்தது.

ஸ்ரீநாத்ஜி: பஞ்ச துவாரகா என அழைக்கப்படுவதில் நான்கு இடங்கள் குஜராத் மாநிலத்தில் இருக்க, ஐந்தாவதான ஸ்ரீநாத்ஜி மட்டும் அடுத்த மாநிலமான ராஜஸ்தானில் [உதய்பூர் மாவட்டத்தில்] இருக்கிறது.  மிகவும் அருமையான கோவில்.  வருடம் முழுவதும் இங்கே பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எட்டு விதமான அலங்காரங்களில் இவரை அழகு படுத்துகிறார்கள். இங்கே வரும் பல பக்தர்கள் எட்டு விதமான அலங்காரங்களிலும் இவரைப் பார்ப்பதற்காக அங்கேயே நாள் முழுவதும் தங்கிவிடுவதுண்டு!  நாங்கள் ஒரே ஒரு அலங்காரத்தில் – நாளின் முதல் அலங்காரத்தில் மட்டுமே பார்த்தோம். அங்கே கிடைத்த அனுபவங்கள் கட்டுரையின் வரும் பாகங்களில்!

என்ன நண்பர்களே, பஞ்ச துவாரகா என அழைக்கபடும் இடங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டீர்களா? பயணம் ஆரம்பிக்கும் முன்னர் இது ஒரு முன்மாதிரி தான்! அடுத்த பகுதியில் தான் பயணம் ஆரம்பிக்கப் போகிறது! தில்லியிலிருந்து தொடங்கி முழுவதும் பார்க்கத்தானே வேண்டும்!....

ஆதலினால் பயணம் செய்வோம்!

நட்புடன்


   

58 கருத்துகள்:

 1. ஷாம்லாஜி கோவில் கவர்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. உடன் தெர்டர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறோம். புகைப்படங்களும் செய்திகளும் மிக அருமையாக உள்ளன. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 3. பயணக்கட்டுரைகளின் ஜாம்பவான் நீங்கள்.. உங்களை இந்த பகுதியில் அடிச்சுக்க ஆளே கிடையாது. அருமையான படங்களும் எளிமையான தெளிவான அழகான நடையும் உங்களுக்கு கை வந்தது உங்களின் பயணக் கட்டுரைகளை படிக்கும் போது சிறுவயதில் இதயம் பேசுகிறது வார இதழ் ஆசிரியர் எழுதிய பயணக்கட்டுரைகள் தான் ஞாபகம் வருகிறது... உங்களின் தளத்தில் சந்தித்ததும் சிந்தித்ததும் என்பதற்கு பதிலாக இதயம் பேசுகிறது என்றே நீங்கள் குறிப்பிடலாம் பாராட்டுகள் வெங்கட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை விட சிறப்பாக எழுதுபவர்கள் இங்கே உண்டு மதுரைத் தமிழன். :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அனைத்து தகவல்களும் அருமை + அறியாதவை... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டுவது தவிர்த்து இருக்கும் பொக்கிஷங்களை பராமரிப்பது நல்ல விஷயம்.// மிகவும் சரியே! ஷாம்லாஜி கோயில் மிக அழகாக இருக்கின்றது...கலை நுணுக்கம்.

  அழகான அறிமுகம் கோயில்களைப் பற்றி...தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 6. தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்...

  வழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையிலிருந்து ஏன் இப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!விடை அளித்து விட்டார் சித்தர்!!

   நீக்கு
  2. தகவலுக்கு நன்றி தனபாலன். மாலை வந்து நான் சரி செய்வதற்குள் தமிழ்மணம் சரியாகிவிட்டது!

   நீக்கு
  3. சென்னைப் பித்தன் ஐயா..... தன்பாலன் இப்படியான சிக்கல்களுக்கு விடையளிப்பதால் தான் அவர் வலைச்சித்தர்! :)

   நீக்கு
 7. புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டுவது தவிர்த்து இருக்கும் பொக்கிஷங்களை பராமரிப்பது நல்ல விஷயம்.//

  உண்மை.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. பதில்கள்
  1. தமிழ் மணத்தில் ஏதோ பிரச்சனை போலும். இப்போது சரியாகிவிட்டது கோமதிம்மா...

   நீக்கு
 9. #எட்டு அலங்காரங்களில் ஒன்று #

  இதுவே போதும் போதும் என்பது போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 10. அறியாத இடங்கள், வாயில் நுழையாதபெயர்கள் எல்லாமே கோவில் சம்பந்தப் பட்டது இருந்தும் தொடர்கிறேன் அழகிய படங்களுக்காக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் மட்டுமே இருக்கப்போவதில்லை.... மற்ற விஷயங்களும் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. பயணத்தொடர் கட்டுரையா?விருந்துதான்,தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 12. த்வார்க்கா, பேட் த்வார்க்கா மட்டும்தான் போகக்கிடைத்தது. ஸ்ரீநாத்ஜி வாசல்வரை போயும் பகலில் கோவில் மூடி இருந்ததால் தரிசனம் போச்:(

  பஞ்ச்லே மூணு உங்கள் கண்கள் மூலம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீநாத் ஜி! ஒவ்வொரு அலங்காரத்திற்கு நடுவிலும் இப்படி மூடி விடுவார்கள். இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்பவர்களும் உண்டு. கூட்டம் அப்படி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 13. உடன் பயணிக்க காத்திருக்கிறேன்! ஐந்து துவாரகைகளின் அறிமுக விளக்கம் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. பஞ்ச துவாரகா பயணத்திற்கு தயாராகிவிட்டேன். தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 15. அட! குஜராத் பயணமா! கொஞ்சம் இருங்க! வேட்டிய மாத்திக்கிட்டு நானும் வந்துவிடுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 16. அருமை நண்பரே அழகான விளக்கவுரையுடன்
  தொடர்கிறேன்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 17. செய்திகளும் படங்களும் அருமை ஐயா
  பயணியுங்கள் தங்களுடம் நாங்களும் பயணிக்கிறோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. படங்களும் தகவல்களும் அருமை. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 19. இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளன. உங்கள் பதிவுகள் மூலம் அவற்றைப்பற்றி அறிவதில் மிகக் மகிழ்ச்சி . படங்கள் உங்கள் பதிவுகளுக்கு கூடுதல் பலம் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 20. தகவலுக்காக பைவ் ஸ்டார் பதிவர் அறிமுகம் http://avargal-unmaigal.blogspot.com/2015/08/5-star-blogger-award.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 21. ஆரம்பமே சுவாரசியமாக அமர்க்களமாக இருக்கிறது .. தயாராக இருக்கிறோம் உங்களுடன் பயணிக்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   நீக்கு
 22. வணக்கம்,
  அழகிய புகைப்படங்களும், அருமையான கோர்வையும்,,,,,,,,,,,
  வாழ்த்துக்கள், நாங்களும் பயணிக்கிறோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 24. உங்களின் பயணத்தூடாக நானும் துவாரகாவை காணும் ஆசையில்.தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 25. முன்னுரையே அருமை! பயணம் தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 26. sir
  i read yr blog very nice explanation and good tamil . letter are very big and without mistake .it is easy to read. i am eargly waiting the next epsiode.i am also from neyveli.settlet at pune. i finished my 8 th std at block 24 .after i went to girls higher secondary school 1983-85 batch.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் நெய்வேலி என்பது அறிந்து மகிழ்ச்சி.

   வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா பாலாஜி.

   நீக்கு
 27. அடியேன் நவதுவாரகை என்று, முக்கிய துவாரகை, பெட் துவரகை, கோமதி துவாரகை, ருக்மணி துவாரகை, மூல துவாரகை, முக்தி துவாரகை, சுதாமா துவாரகை, ஸ்ரீநாத்ஜி, மற்றும் டாகோர்ஜி யாத்திரை செய்யும் பாக்கியம் கிட்டியது. மேலும் போர்பந்தர், கிர் காடுகள், அகமதபாத் ஆகிய இடங்களையும் பார்த்தோம். இன்னும் பயணக் கட்டுரை எழுத ஆரம்பிக்கவில்லை.

  தங்கள் பதிவு சுவாரஸ்யமானதாக உள்ளது. தொடர்ந்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

   உங்கள் தளத்தினை [கருடசேவை] திறந்தவுடன் வேறு தளத்திற்குச் சென்றுவிடுகிறது. முடிந்தால் சரி செய்யுங்கள்.

   தொடர்ந்து சந்திப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஜி!

   நீக்கு
 28. ஶ்ரீநாத் ஜியையும், ஷாம்லால்ஜியையும் பார்க்கவில்லை. ஆனால் அவர் பார்த்திருக்கிறார். :) மற்றவை பார்த்திருக்கிறேன். துவாரகைக்கும், முக்தி துவாரகைக்கும் இரண்டு, மூன்று முறை சென்றிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 29. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....