பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 8
நாங்கள் சோம்நாத்திலிருந்து துவாரகா பயணித்தபோது வண்டி
ஓட்டி அசதியின் மிகுதியால் தூக்கத்தில் ஆழ்ந்து விடும் அபாயம் இருந்தமையால் நடு
இரவில் தங்க தேர்ந்தெடுத்த இடம் போர்[b]பந்தர்! இந்திய
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு, இந்தியர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க
முக்கியமான காரணம் வகித்த பலரில் ஒருவரான நமது தேசப் பிதா மஹாத்மா காந்தி
அவர்களின் பிறந்த ஊரான போர்[b]பந்தரில் தான் நாங்கள் அந்த இரவினைக்
கழித்தோம்.
காந்தி நினைவில்லம் - நுழைவாயில்
விடிகாலையில் எழுந்து எங்கள் பயணத்தினை தொடர தயார்
ஆனோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தின்
வெகு அருகிலேயே மஹாத்மா காந்தி பிறந்த வீடு இருப்பதைத் தெரிந்து கொண்டு அங்கே
சென்று அதன் பிறகு துவாரகா நோக்கி பயணிக்கலாம் என முடிவு செய்தோம். அந்த காலை நேரத்திலேயே போர்பந்தர் கடைகளில் சில
திறந்திருந்தன. பெரும்பாலும் பூக்கடைகள்! காந்தி மஹான் பிறந்த வீட்டில் அஞ்சலி
செலுத்த பூக்கள் வாங்குபவர்களைப் பார்க்க முடிந்தது. காந்தி பிறந்த வீடு பற்றிய
சில செய்திகளையும், படங்களையும் இங்கே பார்க்கலாம்.
காந்தி பிறந்த இந்த வீட்டினை 1777-ஆம் ஆண்டு அவரது
முப்பாட்டன் காலத்தில் வாங்கி இருக்கிறார்கள்.
திரு ஹரிவன்ஜி ராஹிதாஸ்ஜி காந்தி அவர்கள் மன்[B]பாய் என்பவரிடம் வாங்கிய இவ்வீட்டினை காந்தியின் தாத்தா உத்தம்சந்த்ஜி
அவர்கள் காலத்தில் சில மாற்றங்களைச் செய்து ஒரு மாடியும் கட்டி இருக்கிறார்கள்.
1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காந்தி பிறந்த சமயத்தில் இவ்வீட்டில்
தரைத் தளம் தவிர இரண்டு மாடிகளும், 22 அறைகளும் இருந்ததாக இங்கே இருக்கும் சில
குறிப்புகள் தெரிவிக்கின்றன.
காந்திஜியின் நினைவாக காந்தி பிறந்த வீட்டிற்கு அருகே
கீர்த்தி மந்திர் என்பதை நிர்மாணிக்க முடிவு செய்து 1947-ஆம் ஆண்டு அடிக்கல்
நாட்டப்பட்டது. காந்திஜி இருக்கும்போதே அவரிடமிருந்தும் அவரது மற்ற
உறவினர்களிடமிருந்தும் இவ்வீட்டினை சேட்ஜி நான்ஜிபாய் காளிதாஸ் மேஹ்தா என்பவர் வாங்கி
இருக்கிறார். ”கீர்த்தி மந்திர்” என்ற பெயரில் மஹாத்மா காந்தியின் நினைவில்லமும் பக்கத்திலேயே கட்டப்பட்டது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்
27-05-1950 அன்று திறந்து வைத்திருக்கிறார் என்பதை இங்கே இருக்கும் குறிப்புகளில்
இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. சாலையிலிருந்து உள்ளே நுழையும் போது ஒரு பெரிய
வாயில். அதில் கதவுகள் சற்றே மூடி ஒரு
சின்ன வாயில் வழியே தான் நாங்கள் உள்ளே நுழைய முடிந்தது. மக்கள் அதிகம் வரும்
நாட்களில் பெரிய கதவுகளையும் திறப்பார்கள் போலும்!
அண்ணலின் பெற்றோர்கள்
நினைவில்லம் பற்றிய குறிப்புகளைப் படித்து உள்ளே
நுழைந்தால், எதிரே பெரிய அளவு புகைப்படங்களில் அண்ணல் காந்தியும் அவரது துணைவியும்
நம்மை நோக்கி புன்னகைக்கிறார்கள்.
புகைப்படத்தின் கீழே ”சத்ய” என்றும் “அஹிம்சா” என்ற இரு
வார்த்தைகளும் ஒன்றன் கீழ் ஒன்றாய் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு
வார்த்தைகள் தான் அண்ணலுக்கு மிகவும் பிடித்தவை என்பதால் இங்கே எழுதி
வைத்திருக்கிறார்கள் போலும்!
அவர்களது புகைப்படத்தினை பார்த்து விட்டு முன்னேறினால்,
அண்ணல் காந்தி பிறந்த அறை, அவர் படிக்கும் அறை, வீட்டின் சமையல் அறை என பல அறைகளை
நாம் காண முடிகிறது. பழைய கால வீடு
என்பதால், மாடிகளுக்குச் செல்ல மரப்படிக்கட்டுகள் தான் அமைத்திருக்கிறார்கள். குறுகலான படிகளுக்கு பச்சை வண்ணம்
அடித்திருக்கிறார்கள் என்றாலும், நடந்து நடந்து பல இடங்களில் தடம் பதிந்து வண்ணம்
மறைந்திருக்கிறது. படிகளில் செல்லும்போது
பிடிமானத்திற்காக ஒரு தடிமனான கயிற்றையும் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்!
இந்த அறையில் தான் காந்திஜி படித்துக் கொண்டிருப்பாராம்! - அங்கே நிழலாய் நானும்!
சமையல் அறையில் பார்த்தால் அந்த காலத்திலேயே மேலே
விடப்படும் தண்ணீர் கீழே சென்று சேரும் வழியாக அமைத்திருக்கிறார்கள். சின்னச் சின்ன கதவுகள், ஜன்னல்கள் என பழையகால
வீட்டினை அப்படியே வைத்திருக்கிறார்கள். என்றாலும் முகப்பு மற்றும் மாடிகளில் சில
மாற்றங்கள் செய்திருப்பார்கள் போலும்!
ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே கீழே வந்து சேர்ந்தோம். கீர்த்தி மந்திர் என்று அழைக்கப்பட்டாலும் இது
கோவில் அல்ல.
மரப்படிக்கட்டுகளும், பிடித்துக் கொள்ள கயிறும்!
மாடி அறை ஒன்றின் பின்பக்க கதவு - ஆனால் வெளியே கால் வைத்தால் நேராக கீழே விழ வேண்டியது தான்!
சின்னதாய் Shelf ஒன்று - கதவுகளுடன்!
கீர்த்தி மந்திர் வடிவமைத்த கட்டிடக் கலைஞரான திரு
புருஷோத்தம் மிஸ்திரி இதில் ஆறு விதமான அதாவது இந்து, பார்சீய, ஜெயின், புத்த,
கிறிஸ்துவம், முஸ்லீம் கட்டிட வடிவங்களை ஒருங்கிணைத்து அமைத்ததாகவும் சொல்கிறார்கள்.
இதன் அருகிலேயே ஒரு நூலகமும் அருங்காட்சியகமும் அமைத்திருக்கிறார்கள். கீர்த்தி
மந்திரின் மொத்த உயரம் 79 அடிகள் – அண்ணல் காந்தி இப்பூவுலகில் வாழ்ந்த ஆண்டுகள்
79 என்பதால் இந்தக் கணக்கு! காந்திஜியின் புத்தகங்களும், அவரைப் பற்றி பலரும்
எழுதிய புத்தகங்களும் இங்கே உண்டு.
போர்பந்தர் நகரின் பழைய [B]பாட்டியா பஜார் என அழைக்கப்படும் இடத்தில் கஸ்தூரிபா சாலையில்
அமைந்திருக்கும் இந்த கீர்த்தி மந்திர் தினமும் காலை 07.30 மணி முதல் மாலை 07.00
மணி வரை திறந்திருக்கும். போர்பந்தர் நகருக்கு அம்தாவாத், ராஜ்கோட், மும்பை போன்ற
இடங்களிலிருந்து ரயில் வசதிகளும் உண்டு. மேலும்
குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.
இப்படியாக, இரவில் பயணித்து துவாரகா சென்றடைய நாங்கள்
நினைத்திருந்தாலும், நடுவே காந்தி பிறந்த மண்ணில் சில மணித்துளிகள் தங்கி,
கீர்த்தி மந்திரையும் தரிசிக்க வேண்டும் என இருக்கும் போது அதை மாற்றவா
முடியும்! இங்கே இருக்கும்
புகைப்படங்களையும் தகவல்களையும் பார்த்துவிட்டு, சில புகைப்படங்களையும் எடுத்துக்
கொண்ட பிறகு வெளியே வந்தோம். கொஞ்சம்
தேநீர் அருந்தி சுறுசுறுப்புடன் துவாரகை நோக்கிய பயணத்தினை துவங்கினோம். பயணம் எப்படி இருந்தது, வழியில் பார்த்த
விஷயங்கள் என்ன என்பவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாமே!
நட்புடன்
காந்தியின் அப்பாவுக்குத்தான் எவ்வளோ பெரிய மீசை!
பதிலளிநீக்கும்ம்ம்.... அந்தக் காலத்து மீசை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்
ஆஹா..... அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குகாந்தி பிறந்து வளர்ந்த இல்லத்தை பார்க்க உதவிய தங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவெகு சிலருக்கே இம்மாதிரி வாய்ப்பு கிடைக்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குகாலையிலேயே மொபைலில் படித்து வாக்கும் போட்டு விட்டேன் ஜி அருமையான பதிவுக்கு நன்றி
நீக்குஆத்தாடி தாத்தாவின் அப்பாவுக்கு எவ்வோ பெரிய மூச் ? அடுத்து நானும் இப்படி வைக்கலாம் என்று நினைக்கிறேன் ஸூப்பர் மூச்.
ஸாரி மூஜ் 80 மூச் என்று வந்து விட்டது காரணம் எழுதும் பொழுது ஆச் என்று தும்மி விட்டேன்.
நீக்குஎனக்கும் அந்த மீசை பிடித்தது! நானும் வைச்சுக்க நினைத்தேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
ஹிந்தியில் எழுதும் போது मूंछ [மூன்ச்] என்று தான் எழுதுவார்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
காந்தி பிறந்த மண்ணுக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. நாட்டின் தலைவர்கள் வாழ்ந்த இதுபோன்ற நினைவிடங்களைப் பார்ப்பது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாகும். அதனைப் பகிர்ந்த தங்களின் பேரன்பு பிரமிக்கவைக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குநாங்களும் போயிருக்கோம்! ஆனால் தொண்ணூறுகளில். மனதில் அந்தப் பச்சை நிறம் மட்டுமே தங்கி இருக்கிறது. மற்றவை நிழல் போல் நினைவில்! :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குதங்கள் உதவியால் நாங்களும் பார்த்தோம்,,
பதிலளிநீக்குஅழகிய அருமையான புகைப்படங்கள், தொடருங்கள்,,,,,,,நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குகாந்தி பிறந்த வீட்டை தங்கள் தயவில் தரிசித்தேன்! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குமிக அருமையான பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅருமையான பயணம் தொடரட்டும்;தொற்றிக் கொண்டு நானும் வருகிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குஇப்போதைய அரசியல்வாதிகள் சம்பாதித்து பணக்காரன் ஆகிறார்கள் ,காந்திஜி உண்மையில் மகான்தான் ,பரம்பரையே செல்வந்தர் குடும்பமாயிருக்கே :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குகாந்தி பிறந்த வீட்டை நாங்களும் பார்த்துவிட்டோம் என்ற திருப்தி !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.
நீக்குநாம் கீர்த்திமந்திர் போனபோது, காந்தி பிறந்த வீட்டுக்குள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்ப நீங்க போட்டுருக்கும் படங்கள் அருமையா இருக்கு!
பதிலளிநீக்குநம்ம அனுபவம் இங்கே. அது அஞ்சு வருசங்களுக்கு முந்தி.
http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/18.html
படம் எடுக்க அனுமதி மறுக்கவில்லை. ஒரு வேளை காலை திறந்த சமயத்தில் சென்றதால் மறுக்க யாரும் இல்லை போல! :) உங்கள் அனுபவங்களையும் இதோ படிக்கிறேன்...
நீக்குதங்களது மறு வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
காந்தி பிறந்த இடத்தைப் பார்க்க உங்கள் தளம் மூலம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி அண்ணா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நீக்கு