எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....

செவ்வாய், 17 நவம்பர், 2015

ஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 22

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21

கோவில்/ஹவேலி முகப்பு

நாள் முழுவதும் பயணித்தது மட்டுமல்லாது முதல் நாள் இரவு முழுவதும் தூங்காத காரணத்தினால் நாத்து[dh]வாரா தங்குமிடத்தில் படுத்த உடனேயே தூக்கம் என் கண்களைத் தழுவியது. விடிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற நினைவுடனேயே படுத்துக் கொண்டேன்.  முதல் தரிசனம் காலை 05.45 மணிக்கு கோவில் திறந்த உடன் கிடைக்கும் தரிசனம்.  இக்கோவிலிலும் சாதாரண நாட்களில் ஆறு விதமான தரிசனங்கள் உண்டு. கோவிலுக்குச் சென்று தரிசிக்க ஆறு விதமான கால பூஜைகள் உண்டு.

மங்கள் தரிசனம்

மங்கள தரிசனம், ஷ்ரிங்கார் தரிசனம், ராஜ்[b]போக், உத்தாபன், ஆரத்தி, ஷயன் என்று ஆறு நேரங்களில் தரிசனம். இதைத் தவிர விசேஷ நாட்களில்  நாங்கள் விடிகாலை கோவில் [b]போக்[g] மற்றும் [g]க்வால் தரிசனம்.  ஒவ்வொரு தரிசனத்தின் போது ஒரு குறிப்பிட்ட அலங்காரம்.  பெரும்பாலான மக்கள் நாள் முழுவதும் இருந்து, ஒவ்வொரு அலங்காரத்தையும் பார்க்க நினைப்பது வழக்கமாக இருக்கிறது. அதற்காகவே ஒரு நாளோ, இரண்டு நாட்களோ இங்கே இருப்பதும் உண்டு.

ஷ்ரிங்கார் தரிசனம்

நாங்கள் கோவில் திறந்தவுடன் ஸ்ரீநாத்ஜி என அழைக்கப்படும் கிருஷ்ணனை மங்கள தரிசன சமயத்தில் தரிசிக்க முடிவு செய்தோம்.  அதனால் காலை நான்கரை மணிக்கே எழுந்திருந்து தயாரானோம்.  நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கோவில் வாசல் வெகு அருகில் தான் – ஐந்து நிமிட நடையில் கோவில் வாசலை அடைந்தோம். அங்கே எங்களுக்கு முன்னரே சிலர் நின்று கொண்டிருந்தார்கள் – கதவைத் திறந்ததும் உள்ளே செல்லும் வேகம் அவர்கள் அனைவரிடமும்.

[g]க்வால் தரிசனம்

பக்தர்கள் பலரும் ஸ்ரீநாத்ஜிக்கு தங்கள் பூமியில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்து கொடுத்தபடியே இருக்கிறார்கள். நிறைய பால்வியாபாரிகள் தங்கள் வீட்டிலிருந்து பால் கொண்டு வர அவற்றை வாங்கி, கோவிலுக்குக் கொடுக்கிறார்கள் சில பக்தர்கள். தொடர்ந்து இப்படி பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, கோவில் வாசலில் பக்தர்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தார்கள்.  கோவிலுக்கு இரு வாயில்கள் – ஒரு வாயிலில் ஆண்களை மட்டும் அனுமதிக்க, பெண்களுக்கென்று தனி வாயில்.

ராஜ்[b]போக்[g] தரிசனம்

கோவில் திறக்க காத்திருக்கும் நேரத்தில் ஸ்ரீநாத் கோவில் பற்றிய சில வரலாற்றையும் கதையையும் பார்க்கலாம்.  14-ஆம் நூற்றாண்டில் கோவர்த்தன் மலைக்கு மேல் ஸ்ரீநாத்ஜி முதன் முதலில் காட்சி தந்தார். சில காலத்திற்குப்பிறகு அங்கிருந்து அவரது உருவம் ராஜஸ்தானிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அவர் விக்ரகம் எடுத்துக் கொண்டு வந்த வண்டி சின்ஹார் எனும் கிராமத்தில் நின்றுவிட, அங்கிருந்து அகல மறுத்தது வண்டி. அங்கேயே கோவில் கொள்ள கிருஷ்ணர் முடிவு செய்துவிட்டதால், அங்கேயே ஒரு மாளிகையைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மாளிகை தான் இப்போது ஸ்ரீநாத்ஜி கோவில்.

உத்தாபன் தரிசனம்

சரியாக 05.45 மணிக்குக் கோவில் திறக்கப்பட அந்தச் சிறிய வாயில் வழியே அத்தனை பேரும் உள்ளே பாய்கிறார்கள்.  கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் உள்ளே நுழைகிறோம்.  முன்பே சொன்னது போல, பெண்களுக்குத் தனி வாயில் – அவர்கள் சன்னதியின் முன்பகுதிக்குச் செல்லும் படி அமைப்பு. அவர்களுக்கு நடுவே ஒரு கம்பித் தடுப்பு. அதன் பின்னர் தான் ஆண்கள் நிற்க முடியும். அங்கிருந்து தரிசனம் செய்து விட்டு வெளியே வர வேண்டியது தான். யாரும் உங்களை ஜருகண்டி ஜருகண்டிஎன வெளியே தள்ளிவிட வில்லை என்றாலும், கூட்டத்தில் சிக்கி நீங்களே வெளியே வர விரும்புவீர்கள்!

[b]போக்[g] தரிசனம்

பொதுவாகவே ஸ்வாமி நாராயண் கோவில்களில் [அக்ஷர்தாம்] ஆண்கள் முன் புறமும் பெண்கள் பின் புறமும் [அருகில் நின்று பார்க்கக் கூடிய வசதி அவர்களுக்குக் கொடுப்பதில்லை :(] இருக்க, இங்கே அப்படியே உல்டா! பெண்கள் முன் புறத்தில், கர்ப்பகிரகத்துக்கு அருகே இருக்க, அவர்களுக்குப் பிறகு தான் ஆண்களுக்கான இடம்! கோவில் இருக்கும் இடம் ஒரு ஹவேலி [அரண்மனை] என்பதால் எல்லாமே அறைகள் போலத்தான் இருக்கின்றன. சற்று நேரம் வரை நின்று இறைவனிடம் நேற்றைய பதிவில் சொன்னது போல “எல்லோருக்கும் நல்லதையே கொடு. எல்லோரையும் நல்லபடியாக வை!என்று வேண்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.

ஆர்த்தி தரிசனம் 

இங்கே இருக்கும் கிருஷ்ணர் சிலை விருந்தாவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதைப் பதிவின் முன் பகுதியில் சொல்லி இருந்தேன்.  இங்கே இருக்கும் கிருஷ்ணர் சிலை கோவர்த்தன மலையை தூக்கிக் கொண்டிருப்பது போலவே ஒரு கை மேல் நோக்கியும், ஒரு கை கீழேயும் இருக்கும். கருப்பு மார்பிள் கல்லில் செய்யப்பட்ட சிலை. சிலையில் இரண்டு பசு, ஒரு சிங்கம், இரண்டு மயில்கள் மற்றும் ஒரு கிளி ஆகியவற்றின் உருவங்களும் பதிக்கப்பட்டுள்ளது [சற்றே தொலைவில் இருந்து பார்ப்பதால் இவையெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாது!]

ஷயன் தரிசனம்

கோவில் நிர்வாகமே 500-க்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வருகிறது. அதில் ஒரு பசு மட்டும் கிருஷ்ணனுடையதாகவே சொல்கிறார்கள். விழாக்காலங்களில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூடை கூடையாக காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அவை அனைத்துமே கோவிலில் சமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் எனும்போது விழாக்காலங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.ஹோலி, ஜென்மாஷ்டமி, தீபாவளி போன்ற சமயங்களில் பெருமளவில் மக்கள் இங்கே தரிசனத்திற்காக வருகிறார்கள்.  இதைத்தவிர ‘அன்னக்கூட்என்று ஒரு விழாவும் நடப்பதுண்டு. அந்தச் சமயங்களில் விசேஷமான அலங்காரங்களையும், பூஜைகளையும் பார்க்க முடியும் என்றாலும், மக்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும் என்பதாலும், தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என்பதாலும், அச்சமயங்களில் இங்கே வருவதைத் தவிர்ப்பது நலம்.

சுதர்சன ரூபம்

அடுத்ததாய் சில குறுகிய படிக்கட்டுகள் வழியே மாடிக்குச் செல்ல வேண்டும். அங்கே தான் கர்ப்பக்கிரகத்துக்கு மேலுள்ள, இடத்தில் தான் ஸ்ரீநாத்ஜி பிரசாதம் கிடைக்கும். அப்பகுதியில் தான் கிருஷ்ணரின் சுதர்சன சக்கர தரிசனமும் கிடைக்கும். அங்கேயும் சென்று சுதர்தனரின் தரிசனம் கண்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டு படிகள் வழியே வெளியே வந்தோம்.  அளவு கடந்த கூட்டம் என்பதால் ஒவ்வொருவரும் வெளியே வரும்போது தான் பார்த்துக் கொள்ள முடிந்தது.

ஸ்ரீநாத்ஜி

கூட்டம் அதிகம், தள்ளு முள்ளு என்று சில பிடிக்காத விஷயங்கள் இருந்தாலும், இங்கே தரிசனம் செய்ததும், பார்த்த விஷயங்களும் சுவாரசியம். பொறுமையாக ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டு, எல்லா அலங்காரங்களையும் பார்க்க வேண்டுமெனில் இரண்டு நாட்களாவது இங்கே தங்க வேண்டும்.  மேலும் கோவில் இருக்கும் இடத்தின் அருகே இன்னும் சில அருமையான, பார்க்க வேண்டிய இடங்களும் உண்டு.  அவை எல்லாமும் பார்க்க வேண்டுமெனில் கொஞ்சம் தங்க வேண்டும்.  அதற்கு உதைப்பூரிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் [b]பனஸ் ஆற்றின் வலக்கரையில் இருகும் ஸ்ரீநாத்ஜி அருள் புரியட்டும்! பார்க்க வேண்டிய இடங்கள் என்ன, அங்கே என்ன சிறப்பு என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாமே!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

டிஸ்கி:  கோவிலுக்குள் புகைப்படக்கருவிகள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், இப்பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.  இதை வெளியிட்ட தளங்களுக்கு நன்றி. 

28 கருத்துகள்:

 1. அருமையான தரிசனங்கள் கிடைத்த உங்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 2. அருமையான கட்டுரைகளைத் தந்து எங்களை உங்களோடு பயணிக்கவைத்ததோடு உரிய புகைப்படங்களையும் இணைத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 3. நல்ல விவரிப்போடு கூடிய அருமையான கட்டுரை. பொருத்தமான படங்களும் அழகு!
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 4. நல்ல விவரணத்துடன் கூடிய தங்களது பயணங்கள் வழி எங்களையும் பயணிக்கவைத்துத் தகவல்களை அறியவைக்கின்றீர்கள் வெங்கட்ஜி.

  ஸ்ரீநாத்ஜி படம் வெகு அழகாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. இதுபோல் குருவாயூரிலும் அதிகாலை 3 மணிக்கு நிர்மால்ய தரிசனம் என்று உண்டு. தங்கள் உதவியால் ஸ்ரீநாத்ஜி யின் தரிசனத்தையும் காண முடிந்தது. அதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேதுராமன் கிருஷ்ணன்.

   நீக்கு
 8. ஸ்ரீநாத் ஜி தரிசனமும்கிடைத்தது! ஆலயத்தின் தகவல்களும் சுவாரஸ்யம்! தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 9. நிறைய விடயங்கள் நன்று தொடர்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 10. ஸ்ரீநாத் ஜி - திருக்கோயிலைப் பற்றி அழகிய படங்களுடன் நிறைய தகவல்கள்..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. கோவில் வாசல்வரை போய்ப் பார்த்துட்டு வந்தோம். உச்சிகால பூஜை முடிஞ்சு அஞ்சு நிமிசமா இருந்தது :-( அப்புறம் பகல் மூணரை வரை காத்திருக்கணும் என்றபடியால், நமக்கில்லைன்னு வாசக்கதவைப் பார்த்துக் கும்பிட்டுக்கிட்டு உதய்பூர் போயிட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும் என்பது சிக்கல். அதற்காகவே பலர் அங்கே தங்கி இருந்து ஒவ்வொரு தரிசனமும் பார்க்கிறார்கள். நமக்கு அத்தனை நேரமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 14. கோயில்கள் பற்றிய பதிவு அருமை. திவ்ய தரிஸனம் .... நிறைய தகவல்களுடன்.

  { நான் படிக்க வேண்டிய பதிவுகள் Backlog நிறைய சேர்ந்துவிட்டது போலிருக்கு .... மீதியை நாளைக்குப் பார்க்கிறேன் }

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுபட்ட பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....

Related Posts Plugin for WordPress, Blogger...