எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 20, 2015

ஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்! – குற்றம் கடிதல்நல்ல மனம் வாழ்க!

இவர் பெயர் ராஜ்குமார், டிரைவர் வேலை. நேற்று இரவு சுமார் 1.00 மணியளவில் தரகம்பட்டி-ல் இருந்து அய்யலூர்-க்கு திருமணதிற்காக பெண் அழைத்து வந்தார். அப்போது அய்யலூர் ரயில்வே கேட் போட்டு இருந்தது.

அங்கு 10 நிமிடம் வண்டி டிரைவர் ராஜ்குமார் கேட் திரபதற்காக காத்து இருந்தார். ரயில் சென்றது. பிறகு கேட் திறந்தது. வண்டியை ஒட்டிக் கொண்டு சுமார் 300 மீட்டர் சென்றார். அது முத்துனயக்கன்பட்டி பகுதி-யில் இரண்டு பெண்கள் நடு ரோடில் இருப்பதைக் கண்டார்.

ஒரு தாய் தனது நிறைமாத கர்ப்பிணி மகளுடன் அழுதுகொண்டு இருந்ததை பார்த்தார். சற்றும் தயங்காமல் வண்டியை நிறுத்தி அழுவதற்கான காரணத்தை கேட்டார். அவர்கள் அழுதுகொண்டே நிறைமாத கர்ப்பிணி-க்கு இடுப்பு வலி இருப்பதாக சொன்னார்கள்.

108 ஆம்புலன்ஸ்-க்கு சொல்லியாச்சா என்று ராஜ்குமார் கேட்டார் . அவர்கள் அதற்கு 108 வண்டி வருவதற்கு 1/2 மணிநேரம் ஆகுமாம் என்றார்கள். சற்றும் தயங்காமல் தனது வண்டியில் இருந்த 10 நபர்களை (மணப்பெண் உட்பட) அதே இடத்தில் இறக்கிவிட்டு அந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த பெண்-க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு 1/2 மணி நேரத்துக்கு பிறகு வந்து மணமகள் மற்றும் 10 நபர்களும் திருமண வீட்டுற்கு அழைத்துச் சென்றார்.

மனித நேயம் மிக்க திரு ராஜ்குமார் அவர்களை பாராட்டலாமே!

ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ம. ராஜா, அய்யலூர் என்பவர் பகிர்ந்தது இங்கே மீண்டும்.

நம் சார்பாகவும் திரு ராஜ்குமார் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!


புத்தகமும் அதன் ஒரு பக்கமும்:கோபம் கொள்வது என்ன நியாயம்?

தில்லிக்கு வந்த திருப்பதி:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்லியில் வைபவோத்ஸவம் நடந்தது. தினம் தினம் திருப்பதியில் என்னென்ன பூஜைகள் நடக்குமோ அவற்றை அப்படியே செய்தார்கள். அதற்காகவே தற்காலிகமாய் கோவில் அமைத்து தில்லி வாழ் மக்களும் திருப்பதி போகாமலேயே அங்கே நித்தம் நடக்கும் பூஜைகளைக் கண்டு மகிழ வசதி செய்திருந்தார்கள்.  அப்போது அங்கே எடுத்த திருப்பதி பாலாஜி சிற்பத்தின் புகைப்படம் இப்பதிவில்.....
எதையும் தாங்கும்!:

பத்து வருடங்களுக்கு முன்னர் வந்திருந்த விளம்பரம் – ஆனால் நான் இப்போது தான் பார்க்கிறேன் – வெளி நாட்டு விளம்பரம் என்பதாலோ! நீங்களும் பாருங்களேன்.  எத்தனை ஓட்டம் ஓடினாலும் தாங்கும் – ஒரு Hot Dog சாப்பிட எத்தனை ஓட்டம்!குற்றம் கடிதல்:

குற்றம் கடிதல் படம் பற்றி இணையத்தில் நிறையவே எழுதி விட்ட பிறகு இன்றைக்கு அப்படம் பற்றி சொல்ல என்ன இருக்கு?  சில நாட்களாகத் தான் அப்படத்தில் வரும் ஒரு பாடலைக் கேட்க முடிந்தது – காலை நிலா காலை நிலா பாடலைத் தான் சொல்கிறேன்.  அருமையாக படம் பிடித்திருக்கிறார்கள்.  நான் ரசித்த அப்பாடலை நீங்களும் ரசிக்க இதோ.....
படித்ததில் பிடித்தது:

பெயர் உதிர்தல்கருவேல மரத்தின்
முள்ளடர்ந்த புதர்க் கிளையில்
பெயரறியாத மஞ்சள்குருவி
கட்டிமுடித்த கூட்டிற்கு
பெயரொன்றை சூட்டினேன்
பெயரை நிலைநாட்டத் துடிக்கும்
மனித இனத்தின் இயல்பில்.
முட்டைகள் இடப்பட்டு,
அடைகாக்கப்பட்டு
குதூகலமாய் வெளிவந்த குஞ்சுகள்
இதமாக இரை ஊட்டப்பட்டன
அன்பாக அரவணைக்கப்பட்டன
சிறகடிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
தானாக தனக்காக
குஞ்சுகள் பறக்க அறிந்ததும்
கூட்டினைச் சிறிதும்
சட்டை செய்யாமல் பறந்து போயின
அனைத்துக் குருவிகளும்
அதனதன் திசையில்
வாழ்வதற்கு வீடு அல்ல
தம் வாழ்வே வீடென்று
சொல்லாமல் சொல்லி.
அடுத்தொரு தினம்
காற்றுடன் கூடிப்பெய்த மழையில்
பறவைகளற்ற கூட்டோடு
சிதைந்து உதிரத் தொடங்கியது
மரத்திலிருந்து
நான் சூட்டிய பெயரும்!

-          கீர்த்தி.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….
நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 comments:

 1. நல்லமனம் வாழ்க! அவருக்கு எங்கள் பாராட்டுகள்!

  புத்தகம், கோபம் இரண்டும் மிக மிக அருமை...

  பாட்டு அருமை. விளம்பரம் அழகு..ஹாட் டாக் .....டாக் டாக்..

  படித்ததில் பிடித்தது ...அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. ராஜ் குமாரின் மனிதாபிமான உதவிக்கு வாழ்த்துக்கள் :)
  (உங்கள் தளத்தில் த ம வாக்கு போடுவதில் பிரச்சினை இல்லை ,தகவலுக்காக !நீங்களும் எனக்கு இப்படியொரு தகவலைச் சொல்லலாமே :)

  ReplyDelete
  Replies
  1. கடந்த சில நாட்களாகவே பதிவுகளைப் படிக்க முடிவதில்லை.... நாளைய விடுமுறையில் விடுபட்ட அனைத்து பதிவுகளையும் படித்து விடுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. முதல் செய்தி நேற்று முகநூலில் பார்த்தேன்...
  மற்றவை அனைத்தும் அருமை. அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 4. மனித நேயமிக்க புனித உள்ளம் கொண்டவருக்கு ராஜ்குமார், தலை சிறந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் இவரின் செயல் அனைவரும் கற்க வேண்டிய
  அரிச் சுவடி பாடம்!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 5. திரு ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மின்னஞ்சல் அனுப்பி விட்டேன் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. இன்றைய பழக்கலவையில் ராஜ்குமார் மனதில் நின்றார். முகநூலிலும் இவரது பணியைப் படித்தேன்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. =====================================================================

  தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ===========================================================================


  முதல் செய்தி நானும் பேஸ்புக்கில் படித்துப் பச்கிர்ந்துள்ளேன். வாழ்க ராஜ்குமார்.

  சில தவறுகள் நட்பு எனும் அந்தப் புத்தகத்தை அரித்து விடுவதையும் சொல்லத்தான் வேண்டும்!

  கோபம் குறித்த சமாதானம் ஏற்க முடிகிறது!

  ஓம் நமோ நாராயணாய!

  ஹா...ஹா...ஹா.. கடைசியில் ஓடும் வண்டியை நிறுத்தவில்லை பாருங்கள்!

  ஹிஹிஹி... பாடல் கேட்க இப்போது பொறுமை இல்லை!

  படித்ததில் பிடித்ததை ரசித்தேன்.

  இன்று என்னமோ தம நேற்றை விட சற்று வேகமாய் இருப்பது போல்ஸ் பிரமை! வோட்டட்! வாழ்க DD!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மண வாக்கு - மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. அத்தனையும் அருமையான சாலட்! சுவைத்தேன்.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 10. அருமையான தகவல்கள்! கவிதையை ரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. திரு ராஜ்குமாரின் மனித நேயத்தை பாராட்டி அவரை வாழ்த்துகிறேன். Hot Dog சாப்பிட ஓடியவர் பின்னர் அது கிடைத்ததும் Dogs களிடமிருந்து தப்பிக்க ஓடுவதை இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. நல்ல மனதை வாழ்த்துவோம்.பாடல் கேட்கும் நிலையில் இல்லை .கவிதை அருமை ரசித்தேன் அண்ணாச்சி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 13. நல்ல மனம் வாழ்க.

  ஹொட்டோக்கில்ஹெச்சப் போடலை எனில் இத்தனை ஓடணூமா? ஹாஹா இந்த ஓட்டத்துக்கு ஒரு ஹொட்டோக் போதுமா?

  காலை நிலா பாடலும் காட்சியும் அசத்தல்...

  உதிர்தல்,, அருமை.
  மொத்தத்தில் ப்ருட்சாலட் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 14. சுவையான சாலட்.....ரசிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 15. எப்பவும் போலஃப்ரூட் சாலட் இனிமைதான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 16. ’புத்தகமும் அதன் ஒரு பக்கமும்’ வாசகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....