செவ்வாய், 24 நவம்பர், 2015

சாப்பிட வாங்க: டேகுவா

படம்: இணையத்திலிருந்து...

டேகுவா – பெயரைப் பார்த்தவுடன் ஏதோ சைனீஸ் உணவு வகை போல என நினைக்க வேண்டாம் நண்பர்களே.... இதுவும் ஒரு இந்திய உணவு வகை தான்.

சென்ற வாரத்தில் பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரமும் அதே சமயத்தில் அவர்கள் செய்யும் ஒரு இனிப்பு வகையைத் தான் பார்க்கப் போகிறோம். அந்த இனிப்பிற்கு டேகுவா [Thekua] என்று பெயர்.   லிட்டி [ch]சோக்கா போல இதைச் செய்வது கடினமான விஷயம் அல்ல! சுலபமாகச் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு [300 கிராம்], வெல்லம் [150 கிராம்], துருவிய தேங்காய் [50 கிராம்], நெய் [2 ஸ்பூன்], ஏலக்காய் [5] மற்றும் பொரிப்பதற்கு எண்ணெய்.

எப்படிச் செய்யணும் மாமு:


படம்: இணையத்திலிருந்து.....

ஒரு கப் தண்ணீல் வெல்லம் சேர்த்து அதைச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் அதில் ஏலக்காய் [தோல் நீக்கியது] பொடி செய்து போடவும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். கரைசல் சூடாக இருப்பதால் நெய் சுலபமாகக் கரைந்து விடும். கரைசலை கொஞ்சம் ஆறவிடவும். 

கோதுமை மாவில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.  சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே தான். அதிகமான வெல்லக் கரைசல் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும். பீஹார் மாநிலத்தில் இதற்கு சாஞ்சா எனும் மர அச்சு கிடைக்கிறது. மாவு உருண்டையை சாஞ்சாவில் அமுக்கி எடுத்தால் ஒரு வித design/pattern அதில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால், எதாவது ஒரு பிளாஸ்டிக் மூடி வைத்தும் அழுத்தி, செய்து கொள்ளலாம்!

சாஞ்சா எனும் மர அச்சு - படம் இணையத்திலிருந்து....

இதைச் செய்து முடிப்பதற்குள் எண்ணெயும் மிதமான சூடாகி இருக்கும். செய்து வைத்த டேகுவா-க்களை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரிக்க வேண்டும்.  பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாறியதும், சாப்பிடலாம்! ஒரு மாதம் வரை இந்த டேகுவா கெட்டுப் போகாது.

இந்த செய்முறை மட்டும் போதாது, காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் Thekua Recipe என்று தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்!

அலுவலகத்தில் நான்கு-ஐந்து பீஹார் மாநிலத்தவர்கள் உண்டு. அதனால் ச்சட் பூஜா சமயத்தில், வாரம் முழுவதும் யார் வீட்டிலிருந்தாவது இந்த டேகுவா கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் வருடா வருடம் இதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.  கொஞ்சம் கடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் – பல் ஆட்டம் இருந்தால் பார்த்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது!

மேலே கூறியது தவிர மாவுடன் முந்திரிப்பருப்பு, பாதாம் அல்லது பிஸ்தா போன்ற பருப்புகளையும் சிறிய துண்டுகளாக்கி சேர்த்தும் செய்து கொள்வது உங்கள் விருப்பம். இவை எதுவும் சேர்க்காத டேகுவா கூட நன்றாகவே இருக்கும்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

34 கருத்துகள்:

 1. டேகுவா சாப்பிட்டே ஆகவேண்டும்போல் இருக்கிறது ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிட்டு பாருங்கள்.... நன்றாகவே இருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. எளிமையாகத் தான் இருக்கின்றது - டேகுவா செய்முறை..

  பதிவில் வழங்கியமைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. செய்து பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. நிச்சயம் செய்து பார்த்து உங்களுக்கும் பார்சல் அனுப்பி வைக்கின்றேன் சார்!
  டிசம்பரில் கிறிஸ்மஸ் பலகாரத்தில் இதையும் சேர்த்து விட்டால் போச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்கள் நிஷா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நல்ல செயல் முறை விளக்கம்,
  பல்லு நல்லா ஸ்டாங்கா இருக்கறவங்களுக்குன்னு சொல்லுங்க சகோ,
  நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 6. சுலபமாக இருக்கிறது. நான் சிறு வயதில் படிக்கும் காலத்தில் அம்மா தூங்கும்போது இது போல மைதா மாவை வைத்து (தேங்காய் போடா மாட்டேன்) செய்து, தாளிக்கும் கரண்டியில் பொரித்து எடுத்துக் கொண்டு கொரிப்பேன். நான் இப்படி விஷமம் செய்வது அப்போதே வாசனை மூலமாகத் தெரியும் என்றாலும் அம்மா தூங்குவது போலவே இருந்து பின்னர் சிரிப்பார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... சிறு வயதிலேயே சமையலறைக்குள் புகுந்து கலக்கி இருக்கிறீர்கள் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. புதிய இடங்கள்,அங்குள்ள பிரபல உணவுகள் என்று பலவற்றை அறிமுகப்படுத்துகிறீர்கள்.அருமை வெங்கய்
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. நம்ம ஊரு பிஸ்கட் மாதிரி இருக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 10. நல்ல ரெசிப்பி தேங்க்ஸ் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா...

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா.

  அற்புத விளக்கமும் சுவையான உணவு பற்றிய விளக்கமும் சிறப்பு..ஐயா.த.ம 8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 12. பல இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு விதவிதமான பலகாரங்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கு சுவையான நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 13. படத்தைப் பார்த்ததும் பிஸ்கட்/குக்கீஸ் என்று நினைத்தால்..அட அழகான ஒரு பதார்த்தத்தின் குறிப்பு. இதுவும் புதிதுதான்..குறித்துக் கொண்டாயிற்று....ஜி..

  பகிர்வுக்கு நன்றி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 14. அம்மா கோதுமை இனிப்பு சீடை இப்படித்தான் செய்வார்கள்.பல் வலுவாய் இருக்கும் போது சாப்பிடவேண்டிய பண்டம். சம்பா கோதுமையை வறுத்து பொடி செய்த மாவில் வெல்லம் சேர்த்து சிறு பூரிகளாய் செய்து பூரி மீது முள் கரண்டியால் குத்தி அதை பொரித்து எடுத்தால் வலுவாய் இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 15. டேகுவா சுலபமான செய்முறையா இருக்கே அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 16. இது படிச்சேன், ஆனால் கருத்துச் சொல்லலை போல! தேங்காய் போட்டுச் சர்க்கரை போட்டு அவனில் இது போல் நிறையச் செய்திருக்கேன்! :) அதெல்லாம் ஒரு கனாக்காலம்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. பார்க்க நம்ம குட்-டே பிஸ்கட் போலவே உள்ளது. செய்முறை விளக்கங்களும், காட்டியுள்ள படங்களும் ஜோர் ஜோர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையில் வித்தியாசம் உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....