எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 12, 2015

இடர் எனும் கிராமம் – 18 ரூபாய்க்கு தேநீர் – ராஜஸ்தானை நோக்கி.....

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 21

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20

ராஜஸ்தான் நோக்கி....

பஞ்ச் துவாரகாவில் நான்கு இடங்கள் குஜராத் மாநிலத்தில் இருந்தாலும், ஒன்று மட்டும் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில் இருக்கிறது.  ஆகையால் நாங்கள் சென்ற பதிவில் பார்த்த மாத்ரு கயாவிலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் பயணித்தது ராஜஸ்தான் மாநிலத்திற்குத் தான். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதைப்பூரை அடுத்து இருக்கும் இடம் நாத்து[dh]வாரா. அங்கேயும் பஞ்ச் துவாரகாவில் ஒன்றான ஷ்ரிநாத்ஜி என அழைக்கப்படும் கோவில் உண்டு. அதை நோக்கித் தான் எங்களது பயணம்.

ராஜஸ்தான் நோக்கி....

சித்தாபூர் [மாத்ரு கயா]விலிருந்து நாத்து[dh]வாரா செல்ல இரண்டு வழிகள் – ஒன்று தேசிய நெடுஞ்சாலை 14 [NH 14] மற்றும் 76 [NH 76] வழி – இந்த வழியில் சென்றால் பாலன்பூர், மௌண்ட் அபு, உதைப்பூர் வழியாக நாத்து[dh]வாரா அடைய முடியும்.  இதற்கு 4 மணி நேரங்கள் ஆகலாம். வழியில் நிறையவே சுங்கச் சாவடிகள் உண்டு.  மற்றொரு வழி மாநில நெடுஞ்சாலை GH SH 10  வழியே சென்று NH10 பிடித்து அம்பாஜி, உதைப்பூர் வழியே செல்வது. இதற்கு 6 மணி நேரங்கள் ஆகும். எங்கள் ஓட்டுனர் சென்றது இந்த வழி தான்! இதிலும் சுங்கச் சாவடிகள் உண்டு என்றாலும் இதைத் தான் தேர்ந்தெடுத்தார் – வண்டிகள் நிறைய இருக்காது என்ற காரணத்தினால் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.

ஓட்டுனர் [ch]சிராக்....

இன்றைக்கு வந்த ஓட்டுநர் வேறு ஒரு இளைஞர் என்பதால் வண்டியை ஓட்டிய விதம் வேறு! வசந்த் [bh]பாய் மிதமான வேகத்தில் ஓட்டுவார் என்றால் இவரோ எடுத்த எடுப்பிலேயே 90-ஐ தொட நினைக்கும் இளைஞர். வேகமான ஓட்டினாலும் நன்றாகவே ஓட்டினார். சில சமயங்களில் 110-ஐக் கூடத் தொட, அப்போதெல்லாம் வேக மானியைப் பார்த்தபடியே தான் வர முடிந்தது.  நல்ல சாலைகளாக இருப்பதால் இத்தனை வேகத்தில் சென்றாலும் பயணத்தில் அலுப்பு தெரியவில்லை. எத்தனை வேகமாகச் சென்றாலும், சராசரியாக ஒரு மணி நேரத்தில் 60-65 கிலோமீட்டரை கடக்க முடிவதில்லை!

மலைப்பாதையில் ஒரு பயணம்....

வழியிலே பல சிற்றூர்களையும், அங்கே இருக்கும் மனிதர்களைப் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது. வழியில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் “இடர்”! வித்தியாசமான பெயர் தான்.  ஆங்காங்கே வாகனங்களை அலங்கரிக்கப் பயன்படும் பொருட்களை கட்டித் தொங்கவிட்ட கடைகள் இருந்தது. கனரக வாகனங்கள், சகடா என எல்லா வாகனங்களும் இவ்விடங்களில் நிறுத்தி, கறுப்பு கயிறு [திருஷ்டி!] சிவப்பு கயிறு போன்றவற்றையும் ஜிகினா ஐட்டங்களையும் வாங்கி தங்களது வாகனங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். 

வழியிலே ஒரு சிறிய வீடு. சாலையை ஒட்டிய பகுதியில் வீடு இருப்பதில் ஒரு வசதி. வாசலில் அமர்ந்து கொண்டு போக்குவரத்தைக் கவனித்தாலே பொழுது போய் விடும்.  அப்படி ஒரு குடிசை வீட்டின் வாசலில் ஒரு ப்ளாஸ்டிக் இருக்கையில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான்.  எங்கள் வண்டி அவ்விடத்தில் சற்றே மெதுவாக வந்து கொண்டிருக்க, அந்தச் சிறுவனை நோக்கிக் கையசைத்தேன். அவனும் மிகவும் மகிழ்ச்சியோடு புன்னகைத்தபடியே கை அசைத்து எங்களுக்கு விடை கொடுத்தான். அவனால் மட்டும் நடக்க முடிந்திருந்தால் எங்காவது சென்று இருக்க முடியும் – ஆனால் முடியாது. இருக்கையின் பக்கத்தில் அவனது கால் கட்டைகள் சாய்த்து வைத்திருந்தது.

தொடர்ந்து பயணிப்போம்.....

செல்லும் வழியில் இருந்த Aashish Highway Motel-ல் சற்றே நிறுத்தி இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு தேநீர் அருந்தினோம். ஒரு சாய் 18 ரூபாய் என்றாலும் நல்ல ருசியுடன் இருந்தது. இப்படி குஜராத் மாநிலத்தில் இருக்கும் பல நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் இருக்கின்றன.  ஒரு சில இடங்களில் இல்லாவிட்டாலும், இருக்கும் உணவகங்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கின்றன. இது நல்லதொரு வசதி. தேநீரை அருந்தி சற்றே ஓய்வுக்குப் பிறகு பயணத்தினை தொடர்ந்தோம்.


மேகங்களில் விளையாட்டு....

ராஜஸ்தானிற்குள் நுழைந்த பிறகு மலைப்பாதைகள். அங்கேயும் நிறைய வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருந்தன.  அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணத்தினை தொடர்ந்து கொண்டிருந்தோம். எப்படியும் இரவு தங்கப் போவது நாத்து[dh]வாராவில் தான். சில இடங்களில் மேகக் கூட்டங்கள் வித விதமான உருவங்களை நினைவு படுத்திக் கொண்டிருந்தன. அனைத்தையும் ரசித்தபடியே பயணித்து நாத்து[dh]வாரா வந்து சேர்ந்தோம்.

தங்குமிடங்கள்.....

இங்கே பல தனியார் தங்குமிடங்கள் இருக்கின்றன. கோவிலை நிர்வாகம் செய்யும் Nathdwara Temple Board அழகான தங்குமிடங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அங்கே நேரே சென்று நாங்கள் தங்க வசதிகளை பெற்றுக் கொண்டோம்.  அவர்களே பல தங்குமிடங்களை கட்டிவிட்டிருக்கிறார்கள். எங்களுக்கு New Cottage என்ற இடத்தில் தான் தங்குமிடம் கிடைத்தது. கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது என்றாலும் ஓர் இரவு மட்டுமே தங்கப் போவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை.  அதனுள்ளேயே வாகனங்கள் நிறுத்தவும் வசதி உண்டு என்பதால் கூடுதல் வசதி.

கோவில் நிர்வாகமே நடத்தும் இரவு உணவினை முடித்துக் கொள்ளலாம் என அங்கே சென்றோம். சப்பாத்தி, தால், என simple உணவு. அதை முடித்து நாள் முழுவதும் பயணம் செய்த அசதியைப் போக்க தங்குமிடம் சென்றோம்.  முந்தைய இரவும் தூங்கவில்லையே அதனால் படுத்தவுடன் தூக்கம் என்னை அணைத்துக் கொண்டது. விடிகாலை கோவில் திறந்தவுடன் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால் விரைவில் எழுந்திருக்க வேண்டும் என்ற நினைவுடன் உறக்கத்தைத் தழுவினேன். 

ஒரு செய்தி – நாத்து[dh]வாரா செல்லும் வாய்ப்பு அமைந்தால் சென்று வாருங்கள்.  இந்தத் தங்குமிடத்திற்கு இணையம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். என்று தேவையோ அதற்கு பன்னிரண்டு நாட்கள் முன்னர் தான் பதிவு செய்ய முடியும்.

அடுத்த பகுதியில் உங்களுக்கும் ஸ்ரீநாத்ஜியின் தரிசனம் தான்! அது வரை காத்திருங்கள்.

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

42 comments:

 1. தங்களுடன் இணைந்து பயணித்த உணர்வு
  பயணம் தொடர காத்திருக்கிறேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 3. அழகான விவரிப்புடன் பயணம் அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. தேநீர் 18ரூபாய்ங்குறது கொஞ்சம் அதிகமில்ல!

  ReplyDelete
  Replies
  1. சரவணபவன் காபி 35 ரூபாய்க்கு விற்கும் போது 18 ரூபாய் அதிகமில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 5. தங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. சுவாரஸ்யம்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. வணக்கம்
  ஐயா.
  தங்களின் பயண அனுபவத்தை மிக அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 8. நாத்து[dh]வாரா விற்கு ‘இடர்’ இன்றி பயணித்து களைத்து உறங்க சென்றிருக்கிறீர்கள். காத்திருக்கிறேன் நீங்கள் ஸ்ரீநாத்ஜியின் தரிசனம் காண அழைத்து செல்லும் வரை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. அலுப்பு தட்டாத பயணம், உங்களுடன் பயணிக்கும்போது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. தொடர்ந்து பயணிப்போம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. நாங்களும் பயணிக்கிறோம் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.

   Delete
 12. உங்கள் கார் வேகமாகச் சென்றது போல நாங்களும் வேகமாகவே பயணித்த உணர்வு உங்கள் பதிவை வாசித்த போது. நாளைய பதிவிற்கும், இதன் தொடர்ச்சிக்கும் காத்திருக்கின்றோம் வெங்கட் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. அருமையான பயணக்கட்டுரை .
  நான் உங்கள் பதிவின் மூலமாகவே பார்த்து விடுகிறேன்.
  நன்றி நாகராஜ் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 14. ஊர் பேர்தான் இடர் ,ஆனால் இடர் பாடின்றி செல்ல அருமையான சாலை வசதி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 15. பயணத்தில் நானும் வந்து கொண்டு இருக்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. உங்களுக்குப் பிறக்கும்போதே கால்ல சக்கரம் கட்டியிருக்கலை. வட'நாடு போனதிலிருந்து காலில் சக்கரம்தான். பயணம் மனிதனைப் புதுப்பிக்கிறது என்பதை நன்றாக அனுபவிக்கிறீர்கள். கோவில், இயற்கை என்று ஒன்றும் விடுவதில்லை. எனக்குப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. காலில் சக்கரம்! :) அப்படி எல்லாம் இல்லை நண்பரே.... பயணம் பிடித்தமானது.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. சுவாரஸ்யம்;தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 18. அற்புதமான பயணக்கையேடு.. இதைக் கையில் வைத்துக்கொண்டு பயமில்லாமல் புதிய ஊர்களுக்கும் சென்றுவந்துவிடலாம்.. அருமை வெங்கட். பாராட்டுகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 19. தேநீர் சாப்பிட்டால் ராஜஸ்தான், குஜராத்தில் சாப்பிடணும்! நான் நாத்துவாரா போனதில்லை நம்ம ரங்க்ஸ் இரண்டு , மூன்று முறை போயிருக்கார். துரோகி! :)))))

  ReplyDelete
  Replies
  1. துரோகி.... இது ரொம்பவே ஓவர்... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 20. //துரோகி.... இது ரொம்பவே ஓவர்... :(//

  மன்னிச்சுக்குங்க, உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கவில்லை. நாங்க இரண்டு பேரும் எங்களுக்குள்ளாக விளையாட்டுக்கு இப்படி அடிக்கடி சொல்லிக் கொள்வோம். அவர் என்னையும், நான் அவரையும் சொல்லுவது உண்டு. என்னையும் அறியாமல் வந்து விட்டது. சிரிப்பான் போட்டேன். ஆனாலும் உங்கள் மனதுக்குச் சமாதானம் ஆகவில்லை போலும்! :( பச்சை, சிவப்பு, மஞ்சள் கலர் துரோகி என்றெல்லாம் கூடச் சொல்லிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அடடா.... பாதிப்பெல்லாம் இல்லை! :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 21. சுவாரசியமாக இருக்கிறது..பயணிப்பது போல் உணர்வைத்தரும் படங்களுக்கு நன்றி. அந்த மேகத்தில் ஒரு மலை மீது சிறுத்தை அமர்ந்திருப்பது போல் இருக்கிறது..இன்னொரு பார்வையில் கரடி போல் தெரிகிறது. :) சரி சரி, அடுத்த பகுதிக்குப் போறேன்

  ReplyDelete
  Replies
  1. மேகங்கள் ஒவ்வொன்றும் சில உருவங்களைப் போல தோன்றுகிறது - ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு உருவம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....