எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 6, 2015

ஃப்ரூட் சாலட் – 151 – திருநங்கை ப்ரித்திகா யாஷினி – குழந்தை – ஆசை மனைவி செய்த கேக்!


இந்த வார செய்தி:

இந்தியாவிலேயே முதல் காவல் உதவி ஆய்வாளராகப் போகும் திருநங்கை பிரித்திகா யாஷினி பற்றிய செய்தியை இந்த வாரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  சாதாரணமாக வந்துவிடல்லை இந்த பதவி. பல விதமான எதிர்ப்புகளையும் நிராகரிப்புகளையும், வழக்குகளையும் தாண்டி தான் இவருக்கு பதவி கிடைத்துள்ளது.  திருநங்கை என்ற காரணத்திற்காக தேர்வு எழுதவே அனுமதிக்க மறுக்க, நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்வு எழுத அனுமதி தர, சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அடுத்த கட்டத்திலும் தடைகள் – உடல் தகுதி தேர்விலும் தடைகள்.....  மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலை. இப்படி தொடர்ந்து வந்த தடைகளை தகர்த்து  தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரித்திகா யாஷினி அவர்களுக்கு இந்த வார பூங்கொத்தும் வாழ்த்துகளும். 

முழு செய்தியும் இங்கே......


இந்த வார முகப்புத்தக இற்றை:

நடக்கவே தெரியாதபோது இடுப்பிலிருந்து இறங்கி ஓட எத்தனிப்பதும், நடக்க ஆரம்பித்த பிறகு தூக்க சொல்லி அடம்பிடிப்பது தான் குழந்தை....

இந்த வார குறுஞ்செய்தி:

இப்ப என்ன சொன்னீங்க!ஒரு பெண் சண்டையை ஆரம்பிக்கும் துவக்கம்......

இப்ப என்னதாண்டீ சொல்ல வர்ரஒரு ஆண் சமாதானத்தை ஆரம்பிக்கும் துவக்கம்......

இந்த வார புகைப்படம்:

தலைநகர் தில்லியில் National Cultural Festival நடந்து கொண்டிருக்கிறது.  ஒரு வாரத்திற்கு [1 – 7 நவம்பர் 2015] இந்தியா முழுவதிலிருந்து வந்திருக்கும் பல்வேறு கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்று தான் முதல் முறையாக அங்கே செல்ல முடிந்தது. நாள் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது என்றாலும் அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக செல்ல முடியாது. நேற்று மாலை சென்ற போது ராஜஸ்தானிய கிராமிய நடனக் குழுவிலிருந்த ஒருவரை எடுத்த புகைப்படம் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  மற்ற படங்களும், நடனங்கள் பற்றிய விவரங்களும் புகைப்படங்களோடு வரும் ஞாயிறுகளில் பகிர்ந்து கொள்கிறேன்!


இசை:

தீபா திருச்செல்வம் மற்றும் மீரா திருச்செல்வம்.... என்ற இருவரின் இசை மழை.  சில நிமிடங்கள் தான் இக்காணொளி... இனிய இசையைக் கேட்டு மகிழுங்களேன்!


♫கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு ஆனா காதுக்கு இதமா இருக்கு♫
♫கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு ஆனா காதுக்கு இதமா இருக்கு♫#பார்த்து #கேட்டு #பகிர்ந்து கொள்ளுங்கள் ♫Like Tamil Mirror♫
Posted by Tamil Mirror on Thursday, April 30, 2015


விளம்பரம்:
சற்றே பழைய விளம்பரம் என்றாலும் நான் இப்போது தான் பார்க்கிறேன்!  இது ஒரு பற்பசை விளம்பரம் – பல் எவ்வளவு ஸ்ட்ராங்க்! :)
படித்ததில் பிடித்தது:


இரு,
இதோ வந்துவிடுகிறேன்
என்று சொல்லிவிட்டு
திடுதிடுவென
ஓடிப் போனாள் அவள்.

படாரென கதவிழுத்து
தலை தெறிக்க ஓடியதில்
சமநிலை திரும்பாமல்
இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது
பழைய தகரக் கதவு.

வழக்கம்போல
ஓடும் ஓட்டம் என்பதால்,
தெருவில் யாரும்
அவளைக் கவனிக்கவில்லை,
அவர்கள் யாருக்கும்
அதுபற்றிய
கவலையுமில்லை.

இடம் வந்தும்
இளைப்பாற நிற்காமல்
அங்கிருந்த
நெடும் வரிசையில்
தானும் நிற்கிறாள்,
அதற்காகவே
ஓடியும் வந்திருக்கிறாள்.

ஏன் ஓடினாள்
எங்கு ஓடினாள்
எதை வாங்க ஓடினாள்
யாரை இருக்கச் சொல்லி
ஓடினாள் என
எழும்பியிருக்கும்
ஏகப்பட்ட கேள்விகளின் பதில்
இறுதியில் கிடைக்கும்
பசியுடன் காத்திருப்போம்
அந்தத் தாய் வீடு திரும்பும்வரை.

-          இணையத்தில் படித்த கவிதை..... எழுதியவர் யாராயிருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகள்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

38 comments:

 1. பிரித்திகா யாஷினி அவர்களை வாழ்த்துவோம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. பிரித்திகா யாஷினிக்குப் பாராட்டுகள்.

  இற்றை, குறுஞ்செய்தி - ரசனை.

  புகைப்படம் - ரசித்தேன்.

  விளம்பரம் வரவில்லை. அறிவிப்பு மட்டும்!

  படித்ததில் பிடித்தது சூப்பர்!

  தம +1

  :)))))

  ReplyDelete
  Replies
  1. இணைப்பதில் ஏதோ பிரச்சனை..... நீங்கள் சுட்டிக் காட்டியபிறகு சரி செய்து விட்டேன். நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. பிரித்திகா விற்கு வாழ்த்துக்கள். நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.

   Delete
 4. தீபா, மீரா இரண்டு சகோதரிகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஜி அவர்கள் வறுமையானவர்கள் என்பதை பின்புலம் காட்டுகிறது
  விளம்பரத்தில் வரும் பல்கல் எனது பல்லைப்போலவே வெண்மையாக இருக்கிறதே.....
  படித்தில் பிடித்தது எனக்கும் பிடித்தது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேதுராமன் கிருஷ்ணன்.

   Delete
 6. பிரித்திகாவுக்கு வாழ்த்துகள்,

  பற்பசை விளம்பரம் சிரிக்க வைத்தது...,

  சண்டை ஆரம்பமும், சமாதான ஆரம்பமும் நிஜம்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவைத்தது.பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. வழக்கம் போல நல்ல தகவல்கள். பிரித்திகா யாஷினி அவர்களைக் கவுரவிக்கும் விதமாக, அவரது புகைப்படத்தை இந்த பதிவினில் வெளியிட்டு இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மேலே கொடுத்திருந்த இணைப்பில் புகைப்படம் இருக்கிறது...... அதனால் வெளியிடத் தோன்றவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 9. அருமையான தொகுப்பு!
  பிரித்திகா யாஷினிக்கு வாழ்த்துக்கள்!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 10. பிரித்திகா யாஷினிக்குப் பாராட்டுகள். அனைத்தும் அருமை, கடைசி கவிதை பசியின் கொடுமையை சொல்கிறது , அவர் நிற்கும் வரிசை ரேஷன் கடையா? அல்லது கோவில் பிரசாதம் கொடுக்கும் வரிசையா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. அருமையான பழக்கலவை! பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 12. excellent musical bit by meera and deepa hats off to them

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேதுராமன் கிருஷ்ணன்.

   Delete
 13. வழக்கம் போல் அனைத்தும் இனிமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. வணக்கம்
  ஐயா
  அனைத்தும் அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 15. ப்ரிதிகாவுக்கு வாழ்த்துகள்!

  இற்றை, குறுஞ்செய்தி மிகவும் ரசித்தேன்.

  விளம்பரம் ஹாஹ் புகைப்படம் அழகு...

  டீபா, மீரா அருமையாக வாசிக்கின்றார்கள். அந்த தாளம்/லயம் எதில் வாசிக்கின்றார்கள்? தெரியவில்லை. ஃப்ளூட்டில் வாசிப்பது கஷ்டம். ரஞ்சனி ம்ருது பங்கஜ லோசனி..ராகமாலிகை பாட்டு அருமையாக வாசிக்கின்றார். தீபா மீரா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது.

  படித்ததில் பிடித்தது...பிடித்தது..அதை எழுடியவருக்கும் வாழ்த்துகள்.

  கீதா
  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 16. புதுமை இசையை ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 17. முதலில் வாழ்த்துக்கள் தீபா திருச்செல்வம் மற்றும் மீரா திருச்செல்வம் அவர்களின் இசை விருந்திற்கு, இன்னும் பிரபலமடைய யு டூபில் வெளியிடவேண்டும் , பதிவிட்டமைக்கு நன்றி சுரேந்திரன் குண்டூர்

  ReplyDelete
  Replies
  1. நான் ரசித்த ஒரு இசையை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் யூவிலும் வெளியிட்டு இருக்கலாம்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விழித்துக்கொள்!

   Delete
 18. சுவையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 19. ப்ரித்திக்காவிற்கு நல்வாழ்த்துகள்! தடைகளை தாண்டி சாதித்திருக்கும் அவரை ரொம்ப ரொம்பப் பாராட்ட வேண்டும்.
  குறும்செய்தி ரொம்ப சுவாரஸ்யம். குழந்தைகள்!
  திருச்செல்வம் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
  நிறைந்த பழக்கலவை, சுவை மிகுந்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....