பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 18
[B]பேட்[t] த்வாரகாவில் கிருஷ்ணரை தரிசித்து
அங்கிருந்து புறப்பட்டோம் என்றாலும், தீவிற்குள் இருக்கும் அனுமன் கோவில்,
குருத்வாரா மற்றும் ஹாஜி கிர்மானி பீர் எனும் சூஃபியின் நினைவிடம் ஆகியவற்றை
பார்க்க முடியவில்லை. இத்தலங்கள்
அனைத்திற்கும் சில செவி வழி கதைகளும் உண்டு.
ஒவ்வொரு இடம் பற்றிய சில குறிப்புகளை பார்த்துவிட்டு, தீவிலிருந்து திரும்ப
படகுப் பயணம் மேற்கொள்ளலாம்....
ஹனுமன் கோவில்: லங்கா யுத்தத்தின்
போது, ராவணனின் சகோதரர்களான அஹி ராவணனும், மஹி ராவணனும் ராம லக்ஷ்மணர்களை கடத்திக்கொண்டு
போய் பாதாள லோகத்தில் அடைத்து வைத்ததாகவும், அவர்களை காப்பாற்ற ஹனுமன் பாதாள
லோகத்திற்கு இப்பகுதியில் உள்ள கடலுக்குள் சென்றதாகவும் நம்பிக்கை. பாதாள லோகத்தை காவல் புரிந்து கொண்டிருந்தது மகரத்வஜன் எனும் வானரம். தன்னிடம் சண்டையிட்டால் தான் பாதாள லோகத்திற்குள்
செல்ல அனுமதிக்க முடியும் என்று மகரத்வஜன் சொல்கிறார். அந்த மகரத்வஜன் ஹனுமனுடைய மகன்! அங்கே என்ன
நடந்தது ராமலக்ஷ்மணர்களை ஹனுமன் எப்படி மீட்டார் என்பதற்கும் கதை உண்டு. கதையை விஸ்தாரமாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில்
ஒரு தளம் உண்டு. அத்தளத்தில் எழுதுபவரும் தில்லி நண்பர் தான்..... படித்துப் பாருங்களேன் - DANDI SRI
HANUMAN TEMPLE, BET/BEYT DWARKA, DWARKA, GUJARAT....
தசரா
சமயத்தில் கிருஷ்ணருக்கு ராமர் வேஷம் போட்டு பல்லக்கில் அழைத்து வரும் வழக்கம்
இங்குண்டு. வேறு எங்கும் இது மாதிரி
இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா
தகவல்களும் மேலே குறிப்பிட்ட தளத்தில் ஆங்கிலத்தில் உண்டு. படித்து தகவல்களை தெரிந்து கொள்ளலாமே....
கச்சோரியு: கச்சோரியு என்பது ஒரு ராமர் கோவில். இக்கோவிலில் ராமர் சிலை தவிர,
கருடன், சங்கு, சக்கரம் ஆகியவற்றிற்கும் சிலைகள் உண்டு. வாயிலில் ஹனுமன் சிலையும்
உண்டு.
குருத்வாரா: ஹுகம்சந்த் எனும் சீக்கிய மதகுரு பிறந்த் இடம் [B]பேட்[t] த்வாரகா என்பதால் இங்கே ஒரு குருத்வாரா
அமைக்கப்பட்டிருக்கிறது. சீக்கியர்கள்
பலரும் இங்கே வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஹாஜி கிர்மானி பீர்: இரான் நாட்டில் இருக்கும் கிர்மான் எனும் இடத்திலிருந்து
வருகை புரிந்த சூஃபி ஒருவர் இங்கே இருந்ததாகவும், அவருடைய நினைவில் அமைக்கப்பட்ட
ஒரு தர்காவும் இங்கே உண்டு. இந்த நினைவிடத்திற்கும்
பலரும் வருகிறார்கள்.
இந்த
இடங்களை நாங்கள் பார்க்க முடியவில்லை என்று எங்களுக்கு வருத்தமுண்டு. இருந்தாலும்,
பஞ்ச் த்வாரகா பயணம் பற்றி சொல்லி வரும் இத்தொடரை படிக்கும் நண்பர்கள் அங்கு
செல்லும் போது இவற்றையும் பார்க்கலாமே எனும் நோக்கத்தில் இந்த தகவல்களையும் இங்கே
பகிர்ந்து கொண்டேன். இனி தீவிலிருந்து படகில்
பயணம் செய்யலாம்.... படகு கிளம்பத் தயாராக
இருக்கிறது. வாருங்கள் பயணிப்போம்......
படகில்
பயணிக்கும் போடு பத்து ரூபாய்க்கு வண்ணம் பூசப்பட்ட பொரி, கோதுமை உருண்டைகள்
போன்றவை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அவற்றை வாங்கி மீனுக்கு போடலாம் அல்லது
மீன்களை உண்ண வரும் பறவைகளுக்குப் போடலாம்! நாங்கள் சென்ற சமயத்தில் பறவைகள் அவ்வளவாக
இல்லை. சில மாதங்களில் அதிக அளவில்
பறவைகள் வரும். அக்காட்சி மிக மிக அழகாக
இருக்குமே என்று மனதில் தோன்றியது. நாங்கள் சென்ற போது ஒரு சில பறவைகள் மட்டுமே
இருந்தன. அவற்றில் ஒன்றை என்
காமிராவிற்குள் சிறைபிடித்தேன்!
சூரியனும்
மறையத் துவங்கி இருந்தான். படகில் பயணம் செய்தவாறே சூரியன் மறையும் காட்சியைப்
பார்ப்பது ஒரு சுகானுபவம்.... அந்த
இனிமையான அனுபவத்தினை அமைதியாக ரசித்தபடியே கரைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்காக ஓட்டுனர் வசந்த் [B]பாய் காத்திருந்தார். அவர் அடுத்ததாய் எங்களை அழைத்துச் சென்றது ருக்மிணி
தேவி கோவிலுக்கு. த்வாரகாதீஷ் கோவிலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்திருக்கிறது இக்கோவில். ருக்மிணி தேவி கிருஷ்ணரிடம் இருந்து இவ்வளவு தள்ளி
கோவில் கொண்டிருப்பது ஏன்? அதற்கும் ஒரு புராணக் கதை உண்டு.
கிருஷ்ணரும்,
ருக்மிணியும் துர்வாச முனிவரை சந்தித்து அவரை தங்களது இல்லத்திற்கு விருந்துக்கு
அழைக்கிறார்கள். அவர்கள் இல்லத்துக்கு வர சம்மதிக்கும் துர்வாசர் அதற்கு ஒரு
நிபந்தனை விதிக்கிறார். அவரை ஒரு தேரில் அமரவைத்து, அத்தேரினை விலங்குகள் கொண்டு செலுத்தாமல்,
கிருஷ்ணரும், ருக்மிணியும் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அப்படிச்
செய்தால்தான் வருவேன் என்றும் சொல்ல, கிருஷ்ணரும், ருக்மிணியும் தேரில் துர்வாசரை
அமரச் செய்து தேரை இழுத்துச் செல்கிறார்கள்.
படம்: இணையத்திலிருந்து....
தேரை
இழுத்துச் செல்வது கொஞ்சம் கடினமான வேலை தானே....
ருக்மிணி தேவிக்கு ஒரே தாகம்.
தண்ணீர் வேண்டுமே குடிக்க எனக் கேட்க, தாகத்தினை தீர்க்க கிருஷ்ணர் தனது
கட்டை விரலை பூமியில் அழுத்த அங்கிருந்து கங்கை ஊற்றாக பெருக்கெடுத்தது. இருந்த
தாகத்தில் ருக்மிணி தன்னை மறந்து தண்ணீரை குடித்து விட, துர்வாச முனிவருக்கு
மூக்குக்கு மேல் கோபம்! அவருடைய கோபம் தான் பிரபலமான ஒன்றாயிற்றே... தன்னை மதித்து தனக்கு முதலில் தண்ணீர் தராமல்
ருக்மிணியே தண்ணீரை முதலில் குடித்துவிட்டதால், ருக்மிணி தேவி கிருஷ்ணரை விட்டு
விலகியே இருக்க வேண்டும் என்று சாபம் கொடுத்துவிட்டாராம். கூடவே இப்பகுதியில் இனி நல்ல தண்ணீரே
கிடைக்காது என்றும் சாபம் கொடுத்துவிட்டாராம்!
இப்பகுதியில்
இன்றைக்கும் உப்புத் தண்ணீர் தான்! குடிக்க முடியாது. அதனால் என்ன, இருக்கவே இருக்கிறது மினரல்
வாட்டர் என்ற பெயரில் கிடைக்கும் சாதா தண்ணீர்! தண்ணீர் கஷ்டம் தீர்ந்தது!
கோவிலுக்கு
நாங்கள் சென்ற நேரம் மாலை நேர ஆரத்தி நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆரத்தி முடித்து கோவிலை மூட வேண்டிய
ஏற்பாடுகளில் இருக்க நாங்கள் பொறுமையாக ருக்மிணி தேவியை தரிசித்து வெளியே
வந்தோம். மிகவும் அற்புதமாக
வடிவமைக்கப்பட்ட கோவில். வெளிப்புறங்களில் பல சிற்பங்கள் இருந்தாலும் அவற்றின்
நுணுக்கமான வேலைப்பாடுகளை பார்த்து, ரசித்து புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.
இரவில், மங்கிய ஒளியில் அத்தனை தெளிவாக சிலைகளைப் பார்ப்பது கடினம். வெளியே வந்து சில புகைப்படங்களை எடுத்துக்
கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
அஹமதாபாத்
நகருக்கு மீண்டும் திரும்பவேண்டும். நாளை வேறு ஒரு இடத்திற்குச் செல்ல ஏற்பாடு
செய்திருந்தோம். இரவு முழுதும் பயணித்தால் விடியலுக்குள் அஹமதாபாத் சென்று விடலாம்.
இரவுப் பயணம் எப்படி இருந்தது, வழியில் என்ன சாப்பிட்டோம் என்பது பற்றி அடுத்த
பகுதியில் பார்க்கலாம்!
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
நமக்கு அங்கே இன்னும் சில இடங்களைப் பார்க்கவும் அவற்றைப்பற்றி எழுதவும் ஆர்டர் போட்டுட்டான் க்ருஷ். அவைகளை இங்கே பார்க்கலாம்:-)
பதிலளிநீக்குhttp://thulasidhalam.blogspot.co.nz/2010/02/13.html
http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/15.html
உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன் டீச்சர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
ஹனுமான்ஜி பிரம்மச்சாரி இல்லையோ?
பதிலளிநீக்குஅடப்பாவி மனுஷா துர்வாஸா... மக்களுக்கும் சேர்ந்து துன்பம்!
தம சுற்றிக் கொண்டே வாக்களித்தபிறகு இருக்கிறது. வாக்கு விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன், நம்புகிறேன்! :))
ஹனுமன் பிரம்மச்சாரி தான்.... ஹனுமனின் வியர்வைத் துளி ஒரு முதலையின் [மகர்] வாயில் விழ அதிலிருந்து பிறந்தவன் மகரத்வஜன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
என்னவொரு (தேவையில்லாத) கோபம்...!
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை...
கோபம் தேவையில்லாதது தான்......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
படங்கள் அழகு... வரலாறும் நன்றாக உள்ளது...
பதிலளிநீக்குகிருஷ்ணருக்கு ராமர் வேஷம் போடுவது புதிதாக இருக்கிறது. உங்களால் தெரிந்து கொண்டேன். நன்றி அண்ணா...
கிருஷ்ணருக்கு ராமர் வேஷம் - புதிது தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா....
நீங்க சுற்றி வந்ததை போலவே ,நானும் உங்க தளத்தில் வோட்டு போட சுற்றிவிட்டு வர வேண்டியுள்ளது :)
பதிலளிநீக்குசில சமயங்களில் தமிழ்மணம் இப்படித் தான் சுற்ற வைக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
அருமை வெங்கட் சகோ.
பதிலளிநீக்குஇது பத்தி நானும் எழுதி இருக்கேன் வெங்கட் சகோ :)
ஜலதான சிறப்பு பெற்ற ருக்ஷ்மணி தேவி ஆலயம்
http://honeylaksh.blogspot.in/2015/06/blog-post_27.html
உங்கள் பதிவினையும் படிக்கிறேன் சகோ.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.
துர்வாசர்னாலே கோபம்தானே1
பதிலளிநீக்குஆலய தரிசனம் அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குரிஷிகள் கோபப்பட்டு மக்களை அல்லல்பட வைத்து விடுகின்றனர்! சுவாரஸ்யமான அனுபவம்! படங்கள் அழகு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குசிறப்பான பயணப் பதிவு!
பதிலளிநீக்குத ம 5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குஅருமையான பயணம்
பதிலளிநீக்குஅருமையான படங்கள்
தொடருங்கள் ஐயா
தொடர்கிறேன்
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
காணாத இடங்களை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.. தொடருங்கள்... த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குநல்லதொரு பயணம் அண்ணா...
பதிலளிநீக்குபடங்கள் கலக்கல்,,,
தொடர்கிறேன் அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குநீங்கள் செல்லாத இடங்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்தமைக்கும் அதற்கான விளக்கத்திற்கும் நன்றி. சாதாரணமாக நாம் நம் பயணத்தின்போது பார்க்க முடியாததை இவ்வாறான பதிவுகளின் மூலமாகக் குறிப்பாகத் தரும்போது மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு அடுதத முறை செல்லும்போது உதவியாக இருக்கும். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஹும் இந்த துர்வாசர் கோபத்தினால் கொடுத்த சாபங்களினால் விளைந்த கதைகள்! பயணக் குறிப்புகள் அருமை. தொடர்கின்றோம்..
பதிலளிநீக்குகீதா: ஹனுமானுக்கு இப்படி ஒரு கதை இருக்கா. இங்கு காட்டாங்குளதிற்கு அருகில் ஒரு அனுமன் கோயில் அதுவும் குடும்ப சமேதராய்...அவர் இலங்கையை அடைய பறக்கும் போது இடையில் ஒரு இராட்சசி அவருக்குத் த்டங்கல் விளைவிக்க இவர் தன்னைச் சிறு உருவாக்கிக் கொண்டு அந்த இராட்சசியின் உடலுக்குள் புகுந்து புறப்பட்டு அவளுக்குச் சாப விமோசனம் கொடுத்ததாகவும் அதனால் அந்த இராட்சசி குழந்தை பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது. பெயர் நினைவில்லை. சுவர்ச்சாலா எனும், சூரியனின் மகளை மணந்ததாகவும், மணந்தாலும், ஆஞ்சநேயர் பேச்சுலராகவே இருப்பார் என்றும் சூரியன் சொல்லி தன் மகளை மண முடித்ததாகவும் கதை உண்டு..ம்ம் இப்படிப் பல கதைகள்
விதவிதமான கதைகள் - படிக்க அலுக்காத கதைகள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
இந்த மகரத்வஜன் குறித்தும் அனுமனோடு போரிட்டது குறித்தும் நைமிசாரண்யத்தில் உள்ள அனுமன் கோயிலிலும் காண முடியும். அங்கேயும் இதே கதை தான். இதைக் குறித்து எழுதியும் இருக்கேன். :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு..//http://image-thf.blogspot.in/2014/02/blog-post_5.html//
பதிலளிநீக்கு//http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_4.html//
ஒரு சின்ன விளம்பரந்தேன்! :)
இணைப்புகளை தந்தமைக்கு நன்றி. விரைவில் படிக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
மத்ததுக்கு அப்புறமா வரேன். :)
பதிலளிநீக்குமுடிந்த போது படியுங்கள் கீதாம்மா....
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குகொடுத்து வைச்சவர் !நன்றாக ஊர் சுற்றிப் பார்க! படங்களே தெளிவாக உள்ளன!
பதிலளிநீக்கு