எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, November 10, 2015

[DH]தன்தேரஸ்

படம்: இணையத்திலிருந்து....

இன்றைக்கு நமக்கெல்லாம் தீபாவளி. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நலவாழ்த்துகள்.  இங்கே தில்லியில் நாளைக்கு தான் தீபாவளி. அதனால் நாளை தான் விடுமுறை. இன்றைக்கு அலுவலகம் உண்டு! தமிழகம் முழுவதும் தீபாவளி திருநாளை கொண்டாடிக்கொண்டு இருக்க, நாங்கள் அலுவலத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம்! ஊரோடு ஒத்து வாழ்என்ற எண்ணத்துடன் நாளைக்குத் தான் தீபாவளி கொண்டாட வேண்டும்!

படம்: இணையத்திலிருந்து....

தீபாவளி இங்கெல்லாம் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னர் [DH]தன்தேரஸ் என்று ஒரு கொண்டாட்டம். அதற்குப் பின் சில கதைகள். ஒரு கதையை முதலில் பார்க்கலாம்....

தேவர்களும் அசுரர்களுமாகச் சேர்ந்து பாற்கடலை கடைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி கடைந்து கொண்டிருக்கும்போது பலவித பொருட்கள் கடலிலிருந்து வெளி வந்துகொண்டிருக்கிறது.  திரயோதசி திதி அன்று பாற்கடலிலிருந்து மஹாலக்ஷ்மியும் செல்வத்திற்கு அதிபதியான குபேரனும் வருகிறார்கள்.  அன்றிலிருந்து தீபாவளிக்கு முன் வரும் திரயோதசி திதியை [DH]தன்திரயோதசி என்றும் அன்றைய நாள் [DH]தன்தேரஸ் என்றும் கொண்டாடுகிறார்கள்.

படம்: இணையத்திலிருந்து....

மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரதோஷ காலத்தில் பூஜை செய்கிறார்கள். இக்காலத்தில் ஸ்திரமான லக்னம் இருப்பதால் இந்நேரத்தில் பூஜை செய்தால், லக்ஷ்மியும் உங்கள் இல்லத்தில் ஸ்திரமாக அதாவது நிலையாக இருப்பாள் என்று நம்புகிறார்கள். இன்றைய தினத்தில் தங்கமோ, வெள்ளியோ வாங்குவார்கள். வாங்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு பொருளாவது வாங்கத் தவறுவதில்லை. பலர் புது பாத்திரங்கள் வாங்குவார்கள். இன்றைக்கு வடக்கில் இருக்கும் பல பாத்திரக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.   

இப்போது இரண்டாவது கதையையும் பார்க்கலாம். 

பகவான் விஷ்ணு அவ்வப்போது வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வருவதுண்டு. அப்படி வரும்போது தன்னையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என லக்ஷ்மி கேட்க, ஒரு நிபந்தனை விதிக்கிறார். அப்படி வரும்போது தென்திசையில் பார்க்கக் கூடாது என்று சொல்ல, அதற்கு ஒப்புக்கொண்ட லக்ஷ்மியுடன் விஷ்ணு பூமிக்கு வருகிறார்.  தென்திசையில் ஒரு விவசாயின் நிலத்தில் கடுகுப் பூக்கள் பூத்து இருக்க, அவற்றை பார்த்து மனம் லயித்து அதை தலையில் சூடிக்கொள்கிறார் லக்ஷ்மி. கூடவே அங்கிருந்த கரும்பையும் சுவைக்கிறார். 

ஒப்புக்கொண்ட மாதிரி நடந்து கொள்ளாது தென் திசையைப் பார்த்து விட்டதால், பன்னிரெண்டு வருடங்களுக்கு கடுகு விளைவித்த விவசாயியின் வீட்டிலேயே சாதாரண ரூபத்தில் வேலை செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டு தனியாக வைகுண்டம் திரும்புகிறார் மஹாவிஷ்ணு.  லக்ஷ்மியின் வருகைக்குப் பிறகு அந்த விவசாயியின் நிலத்தில் நல்ல மகசூல். தனவான் ஆகிவிடுகிறார் அந்த விவசாயி.  பன்னிரெண்டு வருடங்கள் கடக்க, லக்ஷ்மியை அழைத்துக் கொண்டு போக மாறுவேடத்தில் வருகிறார் விஷ்ணு.

விவசாயியோ, தான் லக்ஷ்மியை திருப்பி அனுப்ப முடியாது என்று சொல்ல, தனது சுய ரூபத்தினை காண்பிக்கிறார்கள். விவசாயிக்கு ஒரு வரமும் அளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்னர் வரும் திரயோதசி அன்று தான் வருவதாக லக்ஷ்மி சொல்லிவிட்டு மறைகிறார். அதிலிருந்து வருடா வருடம் அந்த விவசாயியின் வீட்டிற்கு லக்ஷ்மி வர விவசாயியும் நல்ல வசதியோடு இருக்கிறார்.  லக்ஷ்மியை வரவேற்க விவசாயி வீடு முழுவதும் சுத்தம் செய்து வைக்கிறார். நம் ஊரில் எப்படி போகி அன்று வீடு சுத்தம் செய்வோமோ அதே மாதிரி இங்கே தீபாவளி சமயத்தில் வீட்டை சுத்தம் செய்கிறார்கள்.

இந்த விஷயத்தினை கிராமத்தினரும் தெரிந்து கொள்ள அனைவருமே அந்த மாதிரி செய்து தன்தேரஸ் கொண்டாட ஆரம்பித்தார்களாம்!  இந்த நாளில் பூஜைகள் செய்து லக்ஷ்மியை தங்களது வீட்டிற்கு அழைக்க பண்டிகை கொண்டாட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த வருடம் தன்தேரஸ் நேற்று மாலை தான் கொண்டாடினார்கள்.

இதே நாளில் யமதீப்என்று விளக்கு ஏற்றும் பழக்கமும் உண்டு. அதாவது வீட்டின் வெளியே ஒரு தீபம் ஏற்றுவார்கள் – இது யமதர்மராஜனுக்கு.  இந்த நாளில் இப்படி தீபம் ஏற்றினால் வீட்டிலுள்ளவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது எனும் நம்பிக்கை.

ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னும் எத்தனை எத்தனை கதைகள்.....  நம்பிக்கைகள்....

நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.  புத்தாடை உடுத்தி, பலவித இனிப்புகளுடன் இப்பண்டிகையை கொண்டாடுவீர்களாக! மஹாலக்ஷ்மியின் அருளும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.....


நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

48 comments:

 1. தீபாவளி வீக்டேல வருவதால் யாருக்கும் நேரம் கிடைக்காது லீவும் கிடையாது.
  அதானல் இங்குள்ள நாங்கள் தீபாவளியை சனிக்கிழமையே கொண்டாடிவிட்டோம்.ஞாயிறு கொண்டாடலாம் என்றால் எல்லோரும் திங்கள்கிழமை வேலைக்கு செல்லவேண்டும் என்பதால்காரணம்தான் சனிக்கிழமை கொண்டாடினோம் ஊரோட ஒத்து போவது போல நாட்டோட ஒத்து போக வேண்டி இருக்குது

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான சமயங்களில் இப்படித்தான் விடுமுறை நாளில் பண்டிகை கொண்டாடுகிறோம் இங்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 3. வணக்கம் சகோதரரே.

  தீபாவளி அங்கு கொண்டாடும் முறை தங்கள் பதிவை படித்தறிந்தேன். கதைகள் நன்று. இதுவரை படித்ததில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் என் தளம் வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களது பதிவுகளையும் இப்போது தான் படித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   Delete
 4. தீபாவளி கதைகள் அறிந்தேன். நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 5. தீபாவளி நல் வாழ்த்துகள், வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. பண்டிகைக்கான கதை அருமை. தீபாவளிக்கு ஸ்ரீரங்கம் செல்லவில்லையா?

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அலுவலகத்தில் ஆணி அதிகம். விடுமுறை கிடைக்கவில்லை! :(

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு...

   Delete
 10. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சார்....ஆனால் தீபாவளியின் கதை அட்சயதிதியின் கதைபோல் தான் இருக்கவேண்டும். என்ற கருத்து எனக்குள் வருகிறது...இந்த மழையிலும் சென்னையின் ஒரு பகுதியில் 5000கோடி புழஙகு்கிததாம்.இந்த பணம் கண்டிப்பாய் நம் பணம் தான் ஆனால் போகுமிடம் வேறு....எனக்கொரு ஆசை உண்டு...ஒரு வருடமேனும் யாரும் தீபாவளியை கொண்டாடாமல் விடனும்,...யார் குடி மூழ்குகிறது என பார்க்கவேண்டும்...கண்டிப்பாய் நமக்கிருக்காது....ஏனெனில் நாங்கள் தீபாவளி கொண்டாடி 7 வருடங்கள் ஆகிறது......

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி பற்றிய பல்வேறு சிறப்பு தகவல்கள் பதிவில் கண்டேன்.
   அவசியம் அறிய வேண்டிய தகவல்.
   நன்றி நண்பரே§
   தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
   தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
   த ம +
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நான் ஒன்று சொல்வேன்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி யாதவன் நம்பி.....

   Delete
 11. தீபாவளி வந்த வரலாற்றை அறிந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடுவதை விட்டுட்டேன்.கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரன்கள் ஒழிக்கத்தான் எந்த சக்தியும் வரவில்லை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

 12. நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. பகிர்வு அருமை.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
  அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
  இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   Delete
 15. தீபாவளி கதை சிறப்பு! பகிர்வுக்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
  த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. தன்தேரஸ் கொண்டாடப்படுவதற்கான கதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி! தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 19. கதைகள் நன்று ஜி தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் தீபா வளி திருநாள் நலவாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 20. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 21. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா!
  நீங்களாவது நாளை கொண்டாடுவீர்கள்,இங்கே ஒரே போர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ட்ரூ ஃப்ரெண்ட்.

   Delete
 23. தெரிந்த விஷயங்களே என்றாலும் மீண்டும் படிக்கக் கிடைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....