சென்ற வாரத்தில் Indira Gandhi National Centre for the Arts நடத்திய National Cultural Festival of India எனும் நிகழ்வில் பார்த்த தேரா தாலி நடனம் பற்றி எழுதி
சில புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டேன்.
இந்த வாரமும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடப்படும் இன்னுமொரு நடனம் பற்றியும்
அங்கே எடுத்த சில புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
சென்ற வாரம் பகிர்ந்து கொண்ட நடனம் முழுவதும் பெண்களால்
ஆடப்படும் நடனம் என்றால், இந்த நடனத்தில் ஆண்கள் மட்டும் தான் – நடுவே ஒரே ஒரு பெண்
[வேடமிட்ட ஆண்]. பின் புலத்தில் இசைக்கலைஞர்கள் தாளத்துடன் பாட்டுப் பாட தாளத்தின்
வேகத்திற்குத் தகுந்த மாதிரி சில சமயங்களில் வேகமாகவும், சில சமயங்களில்
மெதுவாகவும் நடனமாடுகிறார்கள். பெண் வேடமிட்ட ஆண் நடுவே ஆடிக்கொண்டிருக்க,
அவர்களைச் சுற்றிச் சுற்றி மற்றவர்கள் ஆடுகிறார்கள்.
நடனக் கலைஞர்கள் முகத்திலும் உடம்பிலும் பல்வேறு
வண்ணங்களைப் பூசிக்கொண்டு தலையில் மயிலிறகால் ஆன ஒரு தொப்பி அணிந்து கொண்டு
இருக்கிறார்கள். பல்வேறு முக பாவங்களைக்
காண்பிக்கிறார்கள். நாம் புகைப்படம்
எடுக்கும்போது அருகில் வந்து பலவித பாவங்களைக் காண்பித்து நம்மை புகைப்படம்
எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்படிக் காண்பிக்கும் [b]பாவங்கள் சில பயமாகவும், சில மகிழ்ச்சியாகவும்,
முகத்தில் இருக்கும் தசையைத் தனித்தனியே ஆட்டியும் காண்பிக்கிறார்கள்.
இதில் குரங்கு வேடமிட்ட ஒரு நபரும் உண்டு. அவர் உடல்,
முகம் முழுவதும் கருப்பு வண்ணம்!
தொடர்ந்து ஆடியபடியே இருக்கிறார்கள்.
அவர்கள் நடனம் முடிந்து வேறு ஒரு குழு நடனமாடத் தொடங்க, அவர்களைத் தனியே
சந்தித்து புகைப்படம் எடுத்தேன்.
நடனத்தின் பெயரைக் கேட்க, இது ஒரு வித பாரம்பரிய நடனம் – பல பெயர்களில்
அழைக்கப்படுகிறது என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போக, அத்தனை பெயர்கள் கேட்டதில்
கொஞ்சம் குழம்பி விட்டேன். இரண்டாவது முறை
பெயரைக் கேட்டுக் கொள்ள நினைத்த போது அங்கிருந்து ஓய்வெடுக்கச் சென்று
விட்டார்கள்.
இந்த நடனத்தின் பெயர் தெரியாது என்று சொன்னாலும்,
நடனத்தின் போது எடுத்த புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. படங்களை
ரசித்தீர்களா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நடனக் காட்சிகள்வியக்க வைக்கின்றன ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎன்ன ஒரு ஒப்பனை! மிரட்டும் படங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குரசித்”தேன்”
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நான் ஒன்று சொல்வேன்.
நீக்குகாலங்கள் மாறுகின்றன. கலைகளும் மாறியாக வேண்டும். பார்த்தால் இந்தக் கலைஞர்கள் இளமையாகத் தோற்றமளிக்கின்றனர். இவர்களுக்கு வெகுஜனங்களின் ஆதரவும் ஊடகங்களின் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன். புகைப்படங்களும் அவர்களின் முக பாவங்களும் அருமை.
பதிலளிநீக்குசில இடங்களில் ஆதரவு இருக்கின்றது என்றாலும் கலைஞர்களுக்கு ஊதியம் கிடைப்பது கடினம். வெறும் கைத்தட்டல்கள் மட்டுமே வயிற்றை நிறைக்க உதவாதே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
படங்கள் அருமை. நடனத்தின் பெயர் தெரியாவிட்டாலும் அவர்கள் உடலில் தீட்டியுள்ள வண்ணங்களும் அவர்களின் முகபாவங்களும் அந்த நடனத்தின் ‘வீச்சை’ சொல்லாமல் சொல்லின. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஇந்த நடனத்தின் பெயர் எனக்குத் தெரியுமே ! காட்டுமிராண்டி நடனம். படத்தைப் பார்த்தாலே தெரியுதே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குபுகைப்படங்கள் அனைத்தும் கலர் ஃபுல் அருமை ஜி பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅருமையான படங்கள் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஇந்த நடனத்தைப் பற்றிப் பகிர்தலுக்கு மிக்க நன்றி. கிராமீய நடனம்தான்...இல்லையா.
கிராமிய நடனமே தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
வித்தியாசமாக இருக்கிறது! சிறப்பானபுகைப்படங்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஇந்த நாட்டியத்தைப் பற்றி அறியவில்லை வெங்கட். புதுமையாக இருக்கிறது. :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
தங்களின் அனுபவங்களை மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.படங்கள் மிக அழகு. த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅருமையான படங்கள். ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇம்மாதிரி நடனங்களை ரசிப்பதற்கு இன்னும் மக்கள் இருக்கிறார்களா :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குபடங்கள் அட்டகாசம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குஆஹா... படங்கள் அருமை அண்ணா.
பதிலளிநீக்குஎத்தனை முகபாவங்கள்... அருமை.. அருமை..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு