ஒரு பெரிய மருத்துவமனை... அவற்றில் ஒரு அறையில் இரு
தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு
தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.
எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர்
கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி
சன்னல் நோயாளியிடம் சொன்னார்..
உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”
கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே
என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும்
உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக்
கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு..
ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை
மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில்
விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு
ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன.
மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”
ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு
கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும்
ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..
ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி
வந்தபோது, தன் படுக்கையை சன்னல்
ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.
இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன்
எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே
நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை
ஏற்றியபடியே சொன்னாள்..
நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு
தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ
இழந்துவிட்டிருந்தார் என்று.
அன்பு நண்பர்களே ..
தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு தன் நண்பனை சந்தோசமாக வைத்திருப்பவனே
நல்ல நண்பன்.
நட்புடன் உங்கள் நண்பன்.....
****
டிஸ்கி: இச்செய்தி மின்னஞ்சலில் ஆங்கிலத்தில்
வந்திருந்தது. தமிழில் மொழிபெயர்த்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று
நினைத்திருந்தேன். இப்போது
முகப்புத்தகத்தில் தமிழிலேயே ஒருவர் பகிர்ந்திருக்க, அதை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்! தமிழில் மொழிபெயர்த்த அந்த
நண்பருக்கு நன்றி!
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
நட்பென்றால் இதுவல்லவோ நட்பு
பதிலளிநீக்குதம 1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஏற்கெனவே படித்து நெகிழ்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குநட்பிற்கு வலிமை சேர்த்த படிக்க அலுக்காத கதை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
நீக்குஏற்கனவே படித்திருக்கேன்... தன் துன்பத்தையும் மறைத்து கொண்டு அடுத்தவரை சந்தோஷ படுத்த எவ்வளவு நல்ல குணம் வேண்டும்.... உண்மையிலேயே நல்ல பதிவு அண்ணா..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.
நீக்குநண்பேன்டா ,படித்ததுதான் என்றாலும் ஃபேண்டா போல் இனித்தது :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குநேர்மறைக் கருத்தும், நட்பின் மேன்மையும் நம்மை மென்மேலும் மேம்படுத்தும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமனம் கவரும் கதை நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள் த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஇது ஏற்கனவே படித்து ரசித்தது மீண்டும் பகிர்ந்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஅருமை! இவரல்லவோ நண்பர்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஜன்னலில் பெரிய சுவர்தான் தெரியும் என்பதை முதலிலேயே யூகித்துவிட்டேன். ஆனால், அவருக்கு பார்வையே இல்லை என்பது எதிர்பாரா திருப்பம். நல்ல கதை!
பதிலளிநீக்குத ம 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குகாப்பி பேஸ்ட் நட்புதான் உலகிலேயே மிகச் சிறந்த நட்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குமனதை நெகிழ்த்திவிட்டது. நண்பேண்டா தான்..சந்தேகமே இல்லை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குபடித்த கதையாய் இருந்தாலும் உங்கள் நடைக்காக மீண்டும் படித்தேன். அருமை அண்ணா!
பதிலளிநீக்குபடித்ததை பகிர்ந்து கொண்டேன் மைதிலி. இது நான் எழுதியதல்ல....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.
நானும் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.அருமையான பகிர்வு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குமனதை நெகிழ வைத்த கதை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குகற்றுக்கொள்கிறேன் நானும்!..
பதிலளிநீக்குநல்ல பகிர்வு சகோதரரே!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குநல்ல கதை.
பதிலளிநீக்குபகிர்விற்கு மிக்க நன்றி ஜிஃ
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குசெம
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாசிர் அசனப்பா....
நீக்குஉருக்கம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ”நான் ஒன்று சொல்வேன்”
நீக்குஉள்ளத்தை தொட்ட கதை. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஆங்கிலத்தில் படிச்சிருக்கேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஉண்மையான நட்பு அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு