எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 29, 2015

மாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்

சமீபத்தில் திருமதி மாலினி அவஸ்தி அவர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் மாலினி. அவத்[dh] எனும் மொழியில் பல பாடல்களை பாடிக்கொண்டே ஆடுவார். அவத்[dh] மொழியும் ஹிந்தி மொழி போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசங்கள் உண்டு. போலவே [b]புண்டேல்கண்ட், [b]போஜ்புரி போன்ற மொழிகளிலும் பாடக்கூடியவர்.  தும்ரி, கஜ்ரி என விதம் விதமான பாடல்களால் கேட்பவர்கள் அனைவரையும் மகிழச் செய்யும் வித்தை தெரிந்தவர். பாடுவது மட்டுமன்றி பாடியபடியே சின்னச்சின்னதாய் சில நடன நடைகளும் உண்டு.  நமது கிராமியப் பாடல்களைப் போலவே வடக்கில் பல கிராமியப் பாடல்கள் அழிந்து வருகிறது. கிராமியப் பாடல்கள் பலவற்றில் ஆங்காங்கே விரசம் இருந்தாலும், கேட்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு இருக்காது. இன்றைக்கும் வட இந்தியாவின் சில கிராமங்களில் பாடப்பட்டு வந்தாலும், பலர் அதற்கு வேறு ஒரு வண்ணம் கொடுத்து மிட்நைட் மசாலாவைப் போல ஆக்கிவிட்டார்கள். கஜ்ரி எனும் வகைப்பாடல்கள் மழைக்காலங்களில் பாடப்படும் பாடல். கருமேகம் சூழ்ந்து வரும்போதே கிராமங்களில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மாஞ்சோலைகளுக்கு ஓடுவார்களாம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது ஆடலும் பாடலும் என சந்தோஷமாக இருப்பார்களாம். இன்றைக்கு கிராமிய வாழ்க்கையை விட்டு நகரங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழும் நாமும் மழை வந்தால் ஓடுகிறோம், பலகணியில் உலர்த்தியிருக்கும் துணிகளை எடுப்பதற்கும், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கும்!

ஒரு கஜ்ரி பாடலைக் கேட்கலாமா?
பணி நிமித்தம் வெளியூருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட்ட தனது கணவனைப் பற்றி பாடும் பாடல், அவர் எப்படி ரயில் [g]காடியில் ஏறிப் புறப்பட்டார் என்றெல்லாம் சொல்லி, ரயில் [g]காடி என்று திரும்பி வரும், தனது ஆசைக்கணவனை மீண்டும் அதில் அழைத்து வரும் என்றெல்லாம் ஏக்கத்துடன் படும் பாடல் பற்றி பாடும் போது அங்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்து ரயில் வண்டியைப் போலவே அங்கு ஓடிக்கொண்டே பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் திறமை அவருக்கு இருக்கிறது.ரயிலில் புறப்பட்டுப் போன ஆசைக் கணவனைப் பற்றிய பாடல் கேட்கலாம் வாங்க!


  

தசரத மஹாராஜாவின் அரண்மனை – ராமர் ஜனனம் நடக்கிறது. அந்த சமயத்தில் பிரசவத்திற்கு உதவி செய்ய வந்த தாதி தனக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதாக ஒரு பாடல் பாடினார் – மன்னனிடம் தைரியமாக தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அந்தக் காலத்தில் உரிமை இருந்திருக்கிறது – இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன!

ராமரின் ஜனனம் பற்றிய பாடல் கேட்கலாம் வாருங்கள்! 
[ch]ச்சட் பூஜா சமயத்தில் பாடப்படும் பாடல்கள் பல உண்டு. அதிலிருந்தும் ஒரு பாடல் பாடினார். இப்படி பல பாடல்களைக் கேட்டு ரசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கிராமிய பாடல்களின் இசை மழையில் நனைந்து வந்தோம்.  அந்த நேரத்தில் எடுத்த சில படங்களை இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  பாடல் காட்சிகளும் யூட்யூபிலிருந்து உங்களுக்காகவே சேர்த்திருக்கிறேன். 

ச்சட் பூஜா பாடல் ஒன்று இதோ உங்களுக்காக!பாடலின் மொழி உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், கேட்டு ரசிக்க முடியும்.  ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்!

இன்றைக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

36 comments:

 1. நல்ல அறிமுகம், சுவாரஸ்யமான பகிர்வு.

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. புகைப்படங்கள், அதனோடு தங்கள் விளக்கம் அருமை, ஆம் கிராமியப் பாடங்கள் குறைந்து வரும் காலக்கட்டம் தான்,,,,,
  வாழ்த்துக்கள் சகோ,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் இரசிபிற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. பூவரசம்பூ பூத்தாச்சு பெண்ணுக்குச் செய்தியும் வந்தாச்சு என்பது போலவா

  ReplyDelete
  Replies
  1. ரயில் பாடலா.... இது கொஞ்சம் சோகம் கலந்த பாடல்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. மாலினி பற்றிய பதிவு....நல்லது....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. மாலினி அவஸ்தி பற்றிய பதிவும், பாடல்களும் மனத்தைக் கவர்ந்தன. நல்லதொரு பதிவு.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 9. காணொளி அனைத்தும் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி....

   Delete
 10. மொழி புரியவில்லை என்றாலும்
  இரசித்துப் பார்க்க முடிந்தது
  இசை குதுகலிக்கச் செய்தது
  குறிப்பாக ட்ரைன் பாடல்
  மிக மிக அருமை

  ஏதாவது ஒரு பாடலை வரிக்கு வரி
  பதிவிட முடிந்தால் மிகச் சரியாகப்
  புரிந்து இரசிக்க முடியும்

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பாடல் வரிகள் முழுவதும் கிடைத்தால் தமிழில் பதிவிட முயற்சிக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. காணொளியும் புகைப்படங்களும் தங்களின் எழுத்திற்கு மென்மேலும் மெருகு சேர்க்கின்றன.

  தொடர்கிறேன்.

  நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.....

   Delete
 12. அவஸ்தை தரவில்லை மாலினி அவஸ்தியின் பாடல்கள் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 13. மாலினி பூரணமான கலைஞர் தான்! அழகான புகைப்படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 14. பாடல்களைக் கேட்கும் போது மனசு துள்ளல் போடுகிறது அண்ணா...
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 15. இவரைப் பற்றிக் கேட்டதில்லை. என்றாலும் வாழ்க்கையை நிதானமாக எவ்விதமான மன அழுத்தமும் இன்றி ரசிப்பதில் வட மாநிலத்தவரைப் போல் தென் மாநிலத்தவர் இல்லை! இங்கே எப்போதும் கூச்சல், குழப்பம்! அவசரம்! ஓட்டம்! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 16. மாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும் - அருமையான பகிர்வு. கஜ்ரி பாடல், ரயில் பாடல், ராமரின் ஜனனம் பாடல், ச்சட் பூஜா பாடல் எல்லாமே மிக அருமை. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.
  அன்புடன்
  தில்லி விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 17. நல்ல சுவாஸ்யமான பதிவு மிகவும் ரசித்தோம்...ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 18. ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.... சுகம்.... சுகம்.... :)

  பளிச்சென்ற படங்களுடன் நல்ல பகிர்வு. பாராட்டுகள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....