எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 21, 2015

படமும் ‘ப”வில் வரும் பெயர்களும்!


சில வாரங்களுக்கு முன்னர் “பொக்கிஷம்பகுதியில் கவிதைப் போட்டி-2015 மற்றும் ஒரு போட்டியும்! என்ற பதிவில் ஆறுவது சினம் என்று படம் வெளியிட்டு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வார்த்தைகள் எழுதச் சொல்லி இருந்தேன்.  இன்று மீண்டும் ஒரு படம் – மீண்டும் ஒரு போட்டி!படத்தைப் பாருங்கள். “ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை உடைய பொருட்களாகச் சொல்லுங்கள். கவனமாகப் பார்த்தால் 20 பெயர்கள் வரையில் சொல்லலாம்!

எனக்குத் தெரிந்த வார்த்தைகள் நாளை மாலை இதே பதிவில் வெளியிடப்படும்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

30 comments:

 1. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நேற்றே ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  நல்ல போட்டி ... சிந்திக்க வைக்கிறது...த.ம 4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. பத்துத்தான் கண்டுபிடிக்க முடிந்தது...

  பட்டம்
  பனை
  படம்
  பசு
  பழம்
  பந்து
  பல்லாங்குழி
  பாவாடை
  பட்டுப்புடவை
  பறவை

  உங்கள் விடைக்காக வெயிட்டிங்க்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். விடைகளை விரைவில் வெளியிடுகிறேன்.

   Delete
  2. ஹய்ய்ய் குமார்! நான் 12 கண்டு பிடித்தேனே!

   நான் பார்க்கும் போது குமார் கண்டு பிடித்த பறவை இல்லையாம்.

   அடடா அது பனை மரத்துப்பக்கம் பறக்குதே!

   ஒரு வேளை அது பறந்துட்டே இருந்ததனால் நான் இரவு படம் பார்த்து ப தேடியதால் பறவை அதன் கூட்டில் போய் தூங்கி இருக்கும்.அது தான் இரவு எனக்கு தெரியவே இல்லை! அதை கழித்து விட்டு மீதிக்கு பரிசு கொடுங்க சார்!

   Delete
  3. விடை இன்னும், இதோ இப்போது வெளியிடப் போகிறேன்! பார்த்து யார் யார் சரியாக சொல்லி இருக்கிறார்கள் எனப் பார்க்கலாம்!

   கண்டுபிடித்த அனைவருக்கும் பூங்கொத்து!

   Delete
 4. தொடர் பதிவு போல இதுவும் ஒரு முயற்சியா?

  ReplyDelete
  Replies
  1. நான் படித்ததை பகிர்ந்து கொள்ளும் முயற்சி..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. பட்டம்
  படம்
  பயிர்
  பல்லாங்குழி
  பனை
  பந்து
  பத்திரிகை
  பலகை
  பசு
  பட்டுப்பாவாடை
  பகல்
  பசுமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.. விடைகள் மாலையில்.

   Delete
 6. படம்
  பட்டம்
  பசு
  பல்லாங்குழி
  பழம்
  பலகை (சிலேட்டு)
  பட்டுப்பாவாடை(கள்)
  பலகணி (ஜன்னல்)
  பயல் (பையன்)
  பசும்புல்
  பனைமரம்
  பறவைகள்
  பந்து
  பறத்தல்!!!(பறவைகளும், பட்டமும்)
  படிக்கட்டு
  பரிமளா
  பத்மா (ஹிஹிஹி... அந்தப் பெண்குழந்தைகளின் பெயர்கள்!)
  பசுபதி (ஹிஹிஹி.. பையனின் பெயர்!!!)
  பவழமணிமாலை (பெண் போட்டிருப்பது!!!)

  ReplyDelete
  Replies
  1. பரிமளா, பத்மா, பசுபதி - ஹா.ஹா.... :))) விடைகள் விரைவில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. இந்த மாதிரி கேள்வி கேட்டு பதிலை சொல்லும் பின்னுட்டங்களை நீங்கள் பதிலளிக்கும் வரையில் வெளியிட வேண்டாம் பதிலளிக்கும் சிறிது நேரத்திற்கு முன்பு மட்டும் வெளியிடவும்

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆகட்டும் மதுரைத் தமிழா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 8. ம்ம்ம்ம் படம், பட்டம், பல்லாங்குழி,பனைமரம், மிச்சம் அப்புறமா! இப்போ நேரம் ஆயிடுச்சு! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
  2. அட? மறந்தே போயிருக்கேன், பறவை, பசு, பழம், பட்டுப்பாவாடை/பட்டுச் சட்டை?பலகை, பலகணி, பந்து, புல்? அல்லது பசும்புல்?

   Delete
  3. மீள் வருகைக்கும் இன்னும் சில விடைகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

   Delete
 9. சுவாரஸ்யமான போட்டி! பலகை, பந்து, பட்டம், பட்டுச்சட்டை, பல்லாங்குழி, பசு, பட்டாம்பூச்சி,பனை, பறவை, பயிர், பலகணி, பழம், பவழமாலை,படம் இன்னும் ஆறு இருக்கா! அம்மாடியோவ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். இதுவரை அதிகமாகக் கண்டுபிடித்தது நீங்கள் தான்!

   Delete
 10. படத்தில் காணும் ‘ப’ வில் தொடங்கும் பொருள்கள்..... 1. படம், 2. பட்டம், 3. பசு, 4. பட்சி, 5. பட்டாம்பூச்சி, 6. பட்சணம், 7. பகோடா, 8. பணியாரம், 9. பட்டாஸ், 10. பகவத் கீதை, 11. பசும்புல், 12. பனைமரம், 13. பட்டு, 14. பழம், 15. பந்து, 16. பல்லாங்குழி, 17. பலகை, 18. பலகணி, 19. பதக்கம், 20. பயல், 21. பவளம்.

  யார் யார் எவ்வளவு விடை சரியாக எழுதி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்! :)

  ReplyDelete
 11. விடைகளைச் சொல்ல முயறிசித்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 12. தாமதமாக வந்தாலும் இதோ பதில்கள்...

  படம், பந்து, பல்லாங்குழி, பசு, பட்டம், பலகாரம், பழம், பலகை(சிலேட்டு), பறவை, பட்டு, பனைமரம்?, ம்ம் இவ்வளவுதான் கண்டுபிடிக்க முடிந்தது ஜி! நல்ல போட்டி...ரசித்தோம் ஜி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. இந்தப் ’ப’ விளையாட்டு சுவாரஸ்யமாக உள்ளது. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....