புதன், 19 ஆகஸ்ட், 2020

You Tube Channel – சில அறிமுகங்கள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

கற்றலை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்; ஏனென்றால் கற்பிப்பதை வாழ்க்கை ஒருபோதும் நிறுத்துவதில்லை! 

You Tube Channel – இப்பொழுது பலருக்கும் இந்த விஷயம் பிடித்தமானதாக இருக்கிறது. நிறைய பேர் புதிது புதிதாக ஒரு சேனல் ஆரம்பித்து, தத்தமது திறமைகளை உலகினருக்கு எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த விஷயத்தினை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் – உணவு, உணர்வு, சமையல், பயணம், சினிமா, பாடல், என எந்த விஷயத்தினை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! அந்த விஷயத்தினை யூவில் தேடினால் நூற்றுக் கணக்கில் யூவில் காணொளிகள் கொட்டிக் கிடக்கின்றன. பல சமயங்களில் நான் பயணிக்கும் முன்னர் எந்த இடத்தினைத் தேர்ந்தெடுக்கிறேனோ, அவ்விடம் பற்றிய சில காணொளிகளும் பார்ப்பதுண்டு! இந்த தீதுண்மி காலத்தில் எங்கேயும் பயணிக்க முடியாத காரணத்தினால் இப்படி காணொளிகள் வழியே பல இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கிறது! என்னிடம் கூட பயணம் குறித்த ஒரு யூ ட்யூப் சேனல் தொடங்கச் சொல்லி வீட்டிலும், நண்பர்கள் குழாமிலும் சொல்வதுண்டு. இது வரை அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை! அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள் செய்வது தவிர மீதம் கிடைக்கும் நேரம் பிளாக் எழுதவும், படிக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது. பார்க்கலாம் எப்போது என்னையும் இந்த யூ ட்யூப் ஈர்க்கிறது என! 

ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க முதல் தேவை Content! தொடர்ந்து பார்க்க வைக்கத் தேவையான Content நிச்சயம் தேவை! யூ ட்யூப் வழி பணம் சம்பாதிக்க சில வழிகள் உண்டு என்று அனைவருமே சொல்கிறார்கள். அதில் சில வழிமுறைகள் உண்டு – நீங்கள் Channel ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் 1000 Subscribers பெறுவதோடு, அந்த வருடத்திற்குள் நீங்கள் பதிவேற்றிய காணொளிகள் குறைந்தது 4000 மணி நேரம் பார்க்கப்பட வேண்டும் – அதாவது கிட்டத்தட்ட 2,40,000 நிமிடங்கள் உங்கள் காணொளிகள் பார்க்கப் பட வேண்டும் – நண்பர்களோ, நாமோ தொடர்ந்து ஒரு சில ஐ.டி. வழியாக மீண்டும் மீண்டும் பார்த்து கணக்கை அதிகரிக்கலாம் என்பது போன்ற Bபோங்கு ஆட்டமெல்லாம் யூவிடம் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! யூவில் நானும் சில காணொளிகளைச் சேமித்திருக்கிறேன் – கிட்டத்தட்ட 2500 Subscribers இருப்பதாக கணக்குக் காண்பிக்கிறது என்றாலும் நான் முறையான வழியில் இதில் ஈடுபாடு காண்பிக்கவில்லை – வலைப்பூவில் காணொளிகளைச் சேர்க்க ஒரு வழியாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன் இதுவரை! இந்தப் பக்கம் நானும் வந்து சில பல காணொளிகளைச் சேர்த்து உலா வருவேனா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! 

இன்றைக்கு நான் உங்களிடம் எனக்கு வேண்டிய சிலரின் யூ ட்யூப் சேனல் பற்றிய அறிமுகத்துடன் வந்திருக்கிறேன். முதலாவதாக சில நாட்களாக, எனது சகோதரிகளின் மகன்கள், சில நண்பர்களுடன் இணைந்து சில பாடல்களைப் பாடி, இயற்கைச்சூழலோடு காணொளியாக மாற்றி யூ ட்யூபில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்காவின் மகன், தங்கையின் மகன் இருவருமே கடந்த சில நாட்களாக இப்படி பாடல், கேமரா, என ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து பாடிய பாடல் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு – காணொளி படம் பிடிக்கப்பட்டது திருவரங்கத்தில்! முதலில் பாடியிருப்பது தங்கையின் மகன்! அடுத்ததாக பாடியிருப்பது அக்கா மகன்! கீ போர்ட் மற்றும் கஹோன் வாசிப்பது தங்கை மகனின் நண்பர்கள். பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்!


இன்றைய இரண்டாவது அறிமுகம் தில்லி நண்பர் ஒருவரின் மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் ஒரு காணொளி! தலைநகர் தில்லி மட்டுமல்ல, வட இந்தியா முழுவதுமே சுதந்திர தினம் சமயத்தில் பட்டம் விடுவது மிகவும் பிரபலமான விஷயம். மொட்டை மாடிக்குச் சென்று நாள் முழுவதும் பட்டம் விடுவதும், டீல் போடுவதும், அடுத்தவர் பட்டம் அறுபட்டால் “காய் போச்சே!” என்று உற்சாகக் குரல் எழுப்புவதும் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும்! நானும் சில சமயம் இந்த மாதிரி கொண்டாட்டங்களில் பங்குகொண்டதுண்டு. இந்த சமயத்தில் நண்பரின் மகன் அனிருத் ஐயர் இசையமைப்பில் பங்கு கொண்ட, சிறு காணொளி உங்கள் பார்வைக்கு!


ன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட காணொளிகள் பற்றிய எண்ணங்களையும், பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமாகச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

42 கருத்துகள்:

 1. யூ டியூப் சேனல் தொடங்கும் எண்ணம் வந்துவிட்டதே இனிய தொடக்கம்தான்.   சகோதரி மக காணொளிகளை பின்னர் தான் பார்க்க வேண்டும்.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூ ட்யூப் சேனல் - பார்க்கலாம் ஸ்ரீராம்.

   காணொளி - முடிந்த போது பார்த்து, உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. பயணம் சார்ந்த யூ டியுப் நிகழ்ச்சிகள் நிச்சயம் வெற்றி அடையும். வாழ்த்துகள்.

   நீக்கு
  3. பயணம் சார்ந்த ய் ட்யூப் சேனல் - பார்க்கலாம் - தொடங்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்! நான் இன்னும் அந்தப் பக்கமே வரவில்லை ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நல்ல முயற்சி. பாராட்டுக்கள் &வாழ்த்துக்கள் . நீங்களும் சீக்கிரம் யூ டியூப் சானல் ஆரம்பிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி அபயா அருணா ஜி.

   யூ ட்யூப் சேனல் - பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஆஹா வெங்கட்ஜி என்ன ஒரு ஆச்சரியம்!!

  முதல் காணொளி உங்கள் சகோதரிகளின் மகன்களா!!! ஆஹா! இரு தினம் முன் தான் இதைப் பார்த்து இந்த லிங்கையும் எடுத்து வைத்துக் கொண்டேன். எதற்கு என்றால் நான் யுட்யூப் பற்றி பதிவு போட்டிருந்தேன் இல்லையா கண்டபடி போடுகிறார்கள், அசிங்கமானவையும் இருக்கு என்று....இப்ப அதில் உள்ள நல்லது என்று இப்படியும் இளைஞர்கள் இப்போதைய சூழலைத் தங்களுக்குச் சாதகமாக நல் வழியில் ஏதேனும் வருமானம் ஈட்ட பயன்படுத்துகிறார்கள் என்று வேறு சில லிங்கையும் எடுத்து வைத்துள்ளேன்.

  நான் யுட்யூபில், பாடல்கள், இளைஞர்களின் முயற்சினா ஆல்பங்கள், எல்லா நாட்டுக் குறும்படங்கள் என்று அவ்வப்ப்போது பார்ப்பதுண்டு. அதனால் எனக்கு கூகுளில் நான் பார்க்கும் டாப்பிக் சம்பந்தப்பட்ட காணொளிகள் வந்துவிடுவதால் இந்தக் காணொளியும் வந்தது. அப்படி மொபைலில் பார்த்தது. அங்கு ஒரு சஜஷன் கொடுத்து கமென்ட் போட்டேன் ஆனால் போகவில்லை நெட் பிரச்சனையால். அப்புறம் மறந்து விட்டேன்.

  உங்கள் சகோதரிக்களின் மகன்களின் குரல் நன்றாக இருக்கிறது. கீபோர்ட் அந்த தாளம் போடும் இளைஞர் எல்லாம் செம. நல்ல முயற்சி. சஜஷன் என்னவென்றால் கருவிகளின் ஒலி பாடுபவர்களின் குரல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாடுபவர்களின் குரல் அவ்வளவாகக் கேட்கவில்லை குறிப்பாக லோ பிச்சில். ஸோ அடுத்த முறை அதைக் கவனத்தில் வைத்தால் நல்லது என்பதுதான் சஜஷன். தாத்தாச்சாரி தோட்டமோ? உங்கள் அப்பார்ட்மென்டின் எதிரில் கூடத் தோட்டம் இருக்கிறதே...

  வாழ்த்துகள் அனைவருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... உங்கள் பார்வைக்கு இந்த காணொளிகள் வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   சஜஷன் - நானும் அவர்களிடம் அதேதான் சொன்னேன் - கூடவே இன்னுமொன்றும் - ஹை பிட்ச் போகும்போது குரலில் தடுமாற்றம் உண்டாகிறது என்பதையும்! உங்கள் கருத்துகளையும் அவர்களிடம் சொல்கிறேன் கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆமாம் ஜி உங்கள் சஜஷன் சரிதான்.. ஹை பிச் கொஞ்சம் தடுமாற்றம்...மீண்டும் கேட்ட போது தெரிந்தது. ஹெட் செட் போட்டுக் கேட்டேன்.

   கீதா

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. உங்கள் நண்பரின் மகன் அனிருத் ஐயர் அந்தன் காணொளியும் அருமை அதில் கருத்தும் செம. நல்லாருக்கு. அந்த டீமிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  என் தங்கையின் (குருகிராம்) மகன் பெயரும் அனிருத் தான். தபெலா/மிருதங்கத்தில் மிளிர்கிறான். குறிப்பாக தபலா இந்திய அளவில் நிறைய பரிசுகள் வாங்கி வெளிநாட்டிற்கும் சென்று வாசித்திருக்கிறான். லா படித்துக் கொண்டிருக்கிறான் தில்லியிலேயே.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திறமையான இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் - அவர்களில் உங்கள் தங்கை மகன்களும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். பெயர் இருவருக்கும் ஒன்றே! ஆஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. ஒரு புறம் இளைஞர்கள் இப்படி தங்கள் திறமைகளை அழகாக வெளிக் கொணர்கிறார்கள். நல்ல வழியில் பயணிக்கிறார்கள்.மகிழ்வாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திறமைகளை வெளிப்படுத்தும் சில இளைஞர்கள் வியக்க வைக்கிறார்கள் கீதா ஜி. நல்ல வழியில் பயணிப்பது மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. காணொளி அருமை...

  யூவில் பணம் - அதற்கு நேர் வழியும், குறுக்கு வழியும் உள்ளன...

  AdSense-வுடன் AdWords போன்ற விவரங்களை தெரிந்து கொண்டால், உதவியாக இருக்கும்...

  முக்கியமாக வாசகர்களை "subscribe" செய்து "bell" பட்டனை அழுத்த வைக்க, பற்பல மெகா சீரியல்களை பார்த்த அனுபவ(மு)ம் இருக்க வேண்டும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நேர்வழியும் குறுக்கு வழி - குறுக்கு வழி - எனக்குப் பிடிக்காத ஒன்று.

   சீரியல் பார்த்த அனுபவம் - ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. யுடியூப் என்பதானது நல்ல தளங்களில் ஒன்று. கற்றவற்றைப் பகிர்ந்துகொள்ள நல்ல வாய்ப்பு. இதன்மூலமாக புதிய செய்திகளை அறிந்தேன். அறிமுகப்படுத்திய தளங்கள் சிறப்பு. அவர்களுக்கு வாழ்த்துகள். எழுதுவதில் கவனம் செலுத்துவதால் இதுபோன்றவற்றில் என் எண்ணம் ஈடுபடுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எழுதுவதில் கவனம் செலுத்துவதால் இது போன்றவற்றில் எண்ணம் ஈடுபடுவதில்லை// உண்மை. நேரமும் தேவையாயிற்றே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. நன்றாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துகள்.
  எனது அக்கா மகளும் கைவண்ணங்கள் செய்து காட்டுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

   உங்கள் அக்கா மகளுக்கும் வாழ்த்துகளும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. யூட்யூப் காணொளி விவரங்கள் அறியாதவை. அறியக் கொடுத்ததற்கு நன்றி.
  இளைஞர்கள் தங்கள் கல்விச்சாலை
  படிப்puகளிருந்து திசை மாறுவது ஒரு பக்கம் என்றால் ஸ்ரீராமின் ஆர்வத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக blogger பதிவுகளே அழிந்து போய் விடும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ளாக்கர் பதிவுகள் - இப்போதே மந்த நிலை தான் ஜீவி ஐயா.

   எழுதுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. முன்பு இருந்த அளவு பதிவர்கள் இப்போது இல்லை என்பது வருத்தமான உணமை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. காலையில் சொல்ல விட்டுவிட்டது. யுட்யூப் சானல் பற்றி நம் கூட்டான்சோறு செந்தில் இருக்கிறார் இல்லையா அவரிடம் தெரிந்து கொண்டேன். பானுக்கா தொடங்கும் போது.

  உங்கள் விவரங்களையும் அறிந்து கொண்டேன் ஜி.

  ஆதி கூட தொடங்க ஆசை இருக்கு என்ரு இங்கு சொல்லி பெயர் என்ன வைக்கலாம் என்றும் கூடக் கேட்ட நினைவு. அவங்க தொடங்கலாம்.

  என்னை எங்கள் வீட்டில் என் தங்கை குறிப்பாகத் தில்லி தங்கை சொல்லிக் கொண்டே இருக்கிறாள் சமையல் சானல் நம் பாட்டியின் குறிப்புகள் எல்லாம் நீ தான் செய்யற நாங்கல்லாம் செய்வதில்லை ஸோ போடு என்று. அது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் தொடர்ச்சியாகப் போட வேண்டும். கன்டென்ட் தயார் செய்து கொள்ள வேண்டும். வீடியோ எடுப்பதற்கு எடிட் செய்வதற்கு எல்லாம் நேரம், ஆள் வேண்டும். நிறைய இருக்கிறது. எனக்கு நடைமுறையில் சாத்தியமில்லை. இப்போதைக்கு என்று சொன்னாலும் அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்காங்க!!!!!

  அனுப்ரேம் அழகா சிம்பிளா போடத் தொடங்கியிருக்காங்க. உமையாள் காயத்ரி கூட போட்டாங்க அப்புறம் இப்போ காணவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் செந்தில் நிறைய காணொளிகளை அங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

   சில மாதங்களாகவே தொடங்கும் எண்ணம் இருந்தாலும் செயல்படுத்தவில்லை. இப்போது தான் தொடங்கி இருக்கிறார்கள். நான் தொடங்குவேனா என்பது தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. இந்தப் பக்கம் நானும் வந்து சில பல காணொளிகளைச் சேர்த்து உலா வருவேனா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! //

  தொடங்குங்கள் ஜி. ஏற்கனவே கொஞ்சம் பதிவிற்காகப் போட்டிருக்கீங்களே. 2500 சப்ஸ்க்ரைபர்ஸ் சூப்பர் ஜி!!

  ஆதி சொல்லிட்டிருந்தாங்களே..இதற்கு முன் என் முந்தைய கமென்ட் வந்ததா தெரியவில்லையே..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2500 சப்ஸ்க்ரைபர்ஸ் - ஆனால் பக்கப் பார்வைகள் குறைவே. தொடர்ந்து அங்கே காணொளி பகிர்வதும் இல்லையே!

   உங்களது முந்தைய கருத்தும் வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 12. யுட்யூப் சானல் தொடங்குவது பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டேன் வெங்கட்ஜி. நல்ல பயனுள்ள தகவல்கள்.

  நீங்களும் தொடங்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  உங்கள் சகோதரிகளின் மகன்கள் மற்றும் நண்பரின் மகன் பங்கெடுத்த காணொளி எல்லாம் சிறப்பான அறிமுகங்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 13. வாசகம் அற்புதமானது.

  யுட்யூப் சானல் பற்றிய விவரங்கள் அறிந்தேன் ஜி.

  காணொளிகள் கண்டேன் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. இரண்டு காணொளிகளும் அருமை.உங்கள் சகோதரிகள் மகன்கள் நண்பர்களுடன் பாடிய பாடல் காட்சி அமைத்த விதம் எல்லாம் அருமை. அக்கா மகன் நன்றாக நடிக்கவும் செய்கிறார்.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் இரண்டு காணொளிகளை கொடுத்தவர்களுக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. காணொளி அருமை. உங்கள் சகோதரி மகன் அருமையாக பாடி இருக்கின்றார்.யு டியூப் சானல் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 16. விரைவில் யு டியூப் சானல் தொடங்க வாழ்த்துகள்
  நானும் பல வருடங்களாக ஒரு யு டியூப் சேனல், கரந்தை ஜெயக்குமார் என்ற பெயரில் வைத்துள்ளேன். அவ்வப்போது சில காணொலிகளை பதிவேற்றம் செய்வேன். ஆனால் இதுவரை சப்ஸ்கிரிப்சன் ஆயிரத்தைக் கூட எட்டவில்லை. காரணம் யாருக்கும் தெரியாது. அனாலும் கணக்கு நடைமுறையில் செயல்பாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கணக்கு பற்றிய தகவல் - தொடரட்டும் பதிவுகள் அங்கேயும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 17. வாசகம் உண்மை. தாங்கள் U tube ஆரம்பித்தால் நிறைய பேர் பயன் அடைவார்கள். தங்கள் சகோதரி மகன்கள் நன்றாக பாடி உள்ளார்கள். திறமை உள்ள எவரும் தங்கள் திறமைகளை சரியாக உபயோகம் செய்து கொள்ள u tube வழி செய்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. இப்போ கொரோனாவால கிட்டத்தட்ட எல்லோருமே யூ ரியூப் ஷனல் ஆரம்பித்து விட்டனர்தான். இரு விடியோக்களும் அழகு. அக்காவின்+தங்கையின் மகன்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். பலரும் யூவில் தான் பிசியாக இருக்கிறார்கள் அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....