சனி, 22 ஆகஸ்ட், 2020

காஃபி வித் கிட்டு – சதுர்த்தி – முத்துக் குழம்பு – யூ ட்யூப் சேனல் – அந்தமானின் அழகு – அப்பாவின் நாற்காலி

 


காஃபி வித் கிட்டு – 82 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாகத் தெரியலாம்! தனக்கு வேண்டியதைக் கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாகவே இருக்க நேரிடலாம்! 


இந்த வாரத்தின் வாழ்த்து – பிள்ளையார் சதுர்த்தி: 


மகள் வரைந்த ஓவியம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 

முத்துக் குழம்பும் சவரன் துகையலும்: 




சமீபத்தில் பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தனது வலைப்பூவில் “முத்துக்குழம்பும் சவரன் துவையலும்”  என்ற தலைப்பில் சமையல் குறிப்பு ஒன்றை எழுதி இருந்தார். அதைப் பார்த்ததும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றவே, ஒரு விடுமுறை நாளில் சமைத்தேன்! நன்றாகவே இருந்தது. அவர் பதிவிடும்போது படம் எடுக்கவில்லை என்று சொல்லி இருந்தார்! நான் சமைத்தபோது படம் எடுத்தேன். அந்தப் படங்கள் மேலே! 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

சமீபத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகை வந்தது. பெரும்பாலும் சகோதர, சகோதரிகள் அன்று பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். சமீபத்திய தீதுண்மி காரணமாக, பலரால் இப்படி நேரில் சந்திக்க இயலாத சூழல். அந்தச் சமயத்தில் வந்த ஒரு விளம்பரம் இன்றைக்கு உங்கள் பார்வைக்கு! ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு! பாருங்களேன்!

 

இந்த வாரத்தின் தகவல் – ஆதியின் அடுக்களை மற்றும் ரோஷ்ணி’ஸ் க்ரியேட்டிவ் கார்னர்: 

சில நாட்களாகவே யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது பற்றிய பேச்சு அடிக்கடி வந்து கொண்டிருந்தது! இல்லத்தரசியின் ஆதியின் அடுக்களையிலிருந்து சமையல் குறிப்புகளை முடிந்தால் யூ ட்யூபில் காணொளியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தது இன்றைக்கு நனவாக மாறியிருக்கிறது! ஆமாம் – எனது இல்லத்தரசி “ஆதியின் அடுக்களை” என்ற பெயரில் புதியதொரு யூ ட்யூப் சேனலை துவங்கி இருக்கிறார். முதலாவது காணொளி இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது! இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் முதலாவது பதிவாக Bபட்டர் குக்கீஸ் செய்வது பற்றி பகிர்ந்து இருக்கிறார். தொடர்ந்து அவ்வப்போது இந்த யூ ட்யூப் சேனலில் காணொளிகள் பதிவாகும். 

மகளுக்காகவும் ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து அவரது ஓவியங்கள், மற்றும் கைவேலைகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். முதலாவது காணொளி – விநாயகருக்கு பிறந்த நாள் கொண்டாடும் விதமாக விநாயகர் ஓவியங்களைத் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். 

நண்பர்கள் முடிந்தால், விரும்பினால் “ஆதியின் அடுக்களை” மற்றும் “Roshni’s Creative Corner” யூ ட்யூப் சேனல்களுக்கு Subscribe செய்வதோடு Bell Icon-ஐயும் அழுத்தி தொடரலாம் – ஒவ்வொரு முறை புதிய காணொளி வெளியிடும்போது உங்களுக்குத் தகவல் வர அது உதவியாக இருக்கும்! உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் இந்த யூ ட்யூப் சேனல் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி! 

காணொளி எடுப்பது, எடிட் செய்வது, பின்குரல் என அனைத்தும் மனைவியும் மகளும் செய்திருக்கிறார்கள். இரண்டு புதிய யூ ட்யூப் சேனல்களின் முதல் காணொளிகளுக்கான முகவரி கீழே! 




பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2014-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – ஃப்ரூட் சாலட் பதிவு ஒன்று அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 

ராஜா காது கழுதை காது: 

திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு எதிரே ஒரு சிறிய குடும்பம் – அப்பா, அம்மா, 7-வது மற்றும் 2-வது படிக்கும் இரு பெண்கள். அம்மாவும் இரண்டு பெண்களும் பயணத்தினை மிகவும் ரசித்தபடி விளையாடிக் கொண்டிருக்க, அப்பா ரொம்பவும் கர்மசிரத்தையாக இந்த வார ஆனந்த விகடனை படித்துக் கொண்டிருந்தார். இரண்டொருமுறை பெண்கள் அவரையும் விளையாட்டிற்கு அழைக்க, பதிலேதும் சொல்லாது ஆனந்த விகடனில் மூழ்கி இருந்தார். சிறிது நேரம் கழித்து பெரிய பெண் அப்பாவிடம் சொன்னார் 

“வீட்டுக்குப் போனவுடனே உனக்கு பரீட்சை – ஆனந்த விகடன்லே வந்திருக்கும் விஷயங்கள் தான் கேள்வியாக இருக்கும்! – நீ மட்டும் ஒழுங்கா பதில் எழுதலையோ, முட்டி போடச் சொல்லிடுவேன்!”

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் இலவச மின்னூல் தகவல்: 

இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை 26-ஆம் தேதி மதியம் 12.29 வரை எனது ”அந்தமானின் அழகு” மின்னூலினை அமேசான் தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலின் வழி பகிர்ந்து இருக்கிறேன்! விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் ரசித்த கவிதை: 

வலைப்பூவில் எழுதி வந்த நண்பர் சேஷாத்ரி அவர்களின் கவிதை! தற்போதெல்லாம் அவர் வலைப்பூவில் எழுதுவதே இல்லை. என்றாலும் வாட்ஸ் அப் வழி இப்போதும் தொடர்பில் இருப்பவர்! சமீபத்தில் www.agaramuthalaa.com தளத்தில் வெளிவந்த கவிதை ஒன்றினை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த கவிதை இதோ இங்கே – உங்கள் பார்வைக்கு! 



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

40 கருத்துகள்:

  1. யூ ட்யூப் சேனல் சிறப்புற வாழ்த்துகள்...

    மின்னூலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      மின்னூல் - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  3. யூ டியூப் சென்று பார்த்தேன் வாழ்த்துகள் ஜி மின்நூலுக்கும் வாழ்த்துகள்.

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. யூ டியூப் அருமை வாழ்த்துகள்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    மின் நூல்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

      மின்னூல் - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அன்பின் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. யூ ட்யூப் சிறப்புற நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மகளின் ஓவியம் மிக அழகு! நண்பரின் கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் மற்றும் கவிதை - நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாசகம் உட்பட அணைத்தும் அருமை.
    இலவச மின் நூலுக்கும் இரு யூட்டியூப் சேணல்களுக்கும் வாழ்த்துக்கள் ஐய்யா.
    மேடம் ஐ வரும் பதிவுகளில் எழுத்தில் உள்ளது போல், மேலும் உர்ச்சாகமாகவும், கலகலப்பாகவும் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      மின்னூல், யூ ட்யூப் சேனல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. யூடியூப் சேனலும் வலைப்பக்கம் போலவே சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. யூ ட்யூப் சேனலை துவங்கிஇருக்கும் ஆதிக்கும் ரோஷ்ணிக்கும் வாழ்த்துக்கள்.

    காணொளி அருமை.

    சேஷாத்ரி அவர்களின் கவிதை நெகிழ வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      காணொளி, கவிதை இரண்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இன்றைய காபி வித் கிட்டு அருமை. யூ டியூப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. யூ ட்யூப் சேனலை துவங்கிஇருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு பாராட்டுக்கள். நல்ல நாளில் ஆரம்பித்து இருப்பதால் அது மென்மேளும் வளரும் விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அன்பு.

      உங்கள் பதிவும் படிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. யூ ட்யூப் சேனல் தொடங்கி இருக்கும் உங்கள் துணைவியார் மற்றும் மகளுக்கும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வி. இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. இனிய பிள்ளையார் சதுர்ததி வாழ்த்துகள் வெங்கட். பதிய காணொளி சானல்களுக்கு என் வாழ்த்துகள் மேலும் மேலும் வளர வாழ்ததுகள்.

    திரு.சேஷாத்ரி அவர்களின் கவிதை நெகிழ்வு. தந்தை எப்போதும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா.

      கவிதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  16. ராஜா காது கழுதை காது படித்த நினைவு இருக்கிறது. ரோஷ்ணியின் பிள்ளையார் மிக அருமை.உங்களுக்கும் ஆதி ,ரோஷ்ணிக்கும் அமோக வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜா காது - :) நன்றி வல்லிம்மா.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. வாசகம் உண்மை. பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறது. You tubeல் ஆதியும், ரோஷ்ணியும் மற்றவர்களுக்கு inspiration ஆக இருப்பார்கள். ஆதியின் கிச்சன் தேவை ஏற்படும் போது பார்த்து கொள்ள உதவும். Follow பண்ணுவது எளிது. Ready reckoning. Congrats to both.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  19. என்னுடைய கவிதையினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!. மீண்டும் வலைப்பூ பக்கத்திற்கு வருகை தர உள்ளேன். தங்கள் மகள் வரைந்த ஓவியம் மிகவும் அழகு! என்னுடைய பாராட்டுகளும் ஆசிகளும்! யூ ட்யூப் சேனலை இன்று பார்த்து subscribe செய்கிறோம்! என்னுடைய கவிதையைப் பாராடிடிய அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      தொடர்ந்து வலைப்பூவில் எழுத நினைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....