வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கதம்பம் – ஊரடங்கு – ஓவியம் – கேரட் பராட்டா


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

காரணமின்றி அன்பு வைப்பது முதலாவது தவறு! எல்லோரிடமும் உண்மையாக இருப்பது நாம் செய்யும் இரண்டாவது தவறு!! மற்றவர்கள் நம்மைப் போல இருப்பார்கள் என நினைப்பது மூன்றாவது தவறு!!! 

ஊரடங்கு – 4 ஆகஸ்ட் 2020: மாதம் பிறந்து விட்டதால் நேற்று வெளியே சென்று வரும் வேலை இருந்தது..வழக்கம் போல் நாங்கள் தக்க பாதுகாப்புடன் தான் சென்று வந்தோம்..அதே போல் சாலையில் மக்களும் வழக்கம் போலவே முகக்கவசம் அணியாமலும், கைக்குட்டை, புடவை தலைப்பு, மேல்துண்டு போன்றவற்றால் யாரையேனும் பார்க்கும் போது மூடிக் கொள்வதாகவும் தான் இருக்கின்றனர்..:) 

வழக்கமாக வாங்கும் கடையில் நேற்று உள்ளே ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சொன்னதால் மகளை நிழலில் நிற்கும் படி சொல்லி விட்டு உள்ளே சென்றேன்..சேனிடைசரால் கைகளை சுத்தம் செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.. 

மகள் வெளியே ஓரமாக மர நிழலில் நின்றிருந்தாலும், அவளுக்குப் பின்னேயும் வரிசை என நினைத்து ஒருசிலர் நின்று கொண்டு "அடுத்து நீங்க போங்க! ஏன் நகர மாட்டேங்கறீங்க! என்று கேட்டதாகவும், அவள் அவர்களை போகச் சொல்லச் சொன்னதாகவும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்...:) அப்போது தான் எனக்குப் புரிந்தது...மகள் என்னுடைய உயரமும், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகும் இருப்பதால் அவளையும் பெரியவளாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என...:)) 

பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பே அவள் உயரத்தை வைத்து யாரேனும் "என்ன கிளாஸ் படிக்கிறா" என்று கேட்டால், அவளாகவே "ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்" என்று சொல்வாள்..அவர்களும் நம்பியுள்ளனர்..:))

நேற்றும் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சற்று சுற்ற வேண்டியிருந்தது..பணமில்லை, மெஷின் பழுது, குறிப்பிட்ட எண் பதிவாகவில்லை என்று சுற்றி விட்டு வீடு திரும்பினோம்.. இந்த வாரத்தில் மகளின் பள்ளியில் நோட்டு புத்தகங்கள் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்...அப்போது தான் எடுக்க வேண்டும்.. 

இந்த கொரோனா காலத்தில் சீதோஷ்ண மாற்றத்தால் சாதாரணமாக ஏற்படும் ஜலதோஷத்தைக் கூட யாரிடத்திலும் சொல்லக்கூடாது போல...:) உடனே அதை கொரோனாவாகவே சித்தரித்து விடுகிறார்கள்..:) ஒன்றும் சொல்வதற்கு இல்லை!! 

இதுவும் கடந்து போகும்!! 

ரோஷ்ணி கார்னர் – 5 ஆகஸ்ட் 2020: 


மகள் நேற்று வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! 

பின்னோக்கிப் பார்க்கலாம் – கேரட் பராட்டா! 


இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவிலிருந்து சில வரிகள்! 

காலையில் அவசரமாக சிற்றுண்டி தயார் செய்து குழந்தைகளுக்கும், கணவருக்கும் பேக் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். வீட்டில் கேரட்டும், கோதுமை மாவும் இருக்கிறதா? பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி எப்போதும் எல்லோர் வீட்டிலும் இருக்கும். இதை வைத்து சத்தான அதே சமயம் சுலபமாகவும் ஒரு சிற்றுண்டி செய்து அசத்தி விடலாம். வாருங்கள் அதன் செய்முறையை தெரிந்து கொள்வோம். 

முழு பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே… 


நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


ஆதி வெங்கட்

46 கருத்துகள்:

 1. முடிந்தவரை ஏ டி எம்மில் பணம் எடுக்காமல் டிஜிட்டல் முறையிலேயே சமாளித்து வருகிறோம்.  மிஃச்சில விஹாயங்களுக்குதான் பணமாய்த் தேவைபப்டுகிறது.

  கடைக்காரரின் எச்சரிக்கையும் செயல்பாடும் பாராட்டத்தக்கது.

  ரோஷ்ணியின் ஓவியம் அருமை.

  வாசகம் அருமை.  இரண்டாவது தவறும், மூன்றாவது தவறும் நான் செய்பவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் இங்கு சில்லறை செலவுகளுக்கு தான் ஏ.டி.எம்மில் எடுக்க வேண்டியுள்ளது.. மளிகைக்கடையில் கார்டில் ஸ்வைப் பண்ணிடுவேன்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. வாசகம் அருமை. ஆனால் இவற்றை தாமதமாகப் புரிந்து கொண்டதும் என் தவறு. எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு இப்போது மனம் நொந்து போயிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு
 3. ஹோம் ப்ளஸில் தான் நாங்களும் மளிகை சாமான், காஃபிப் பொடி வாங்குகிறோம். ஆனால் இந்த ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து அங்கே அத்தனை தூரம் மாமாவை அனுப்ப எனக்கு யோசனை. அதனால் சாமான்கள் எல்லாம் கீழேயே வாங்கிக்கறோம். காஃபி பவுடர் திருச்சியிலிருந்து ஒருத்தர் கொண்டு வந்து (வீட்டுக்கே) தருகிறார். நன்றாகவே இருக்கிறது. எண்ணெய்க்கு மட்டும் போகவேண்டித் தான் இருக்கு. அது மாத நடுவில் சாயங்காலங்களில் போய் வாங்கி வருவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லியுள்ளீர்களே.. நானும் கடந்த எட்டு வருடங்களாகவே ஹோம்ப்ளஸ் தான்..லிஸ்ட் எழுதி கொடுத்து விட்டால் ஹோம் டெலிவரி செய்து விடுவார்கள்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு
 4. ரோஷ்ணியின் படத்தை முகநூலிலும் பார்த்தேன். மற்றவையும் படித்தேன். காரட் பராட்ட செய்முறையும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சிவபார்கவி ஜி.

   நீக்கு
 6. ஆதி மேடம், எனக்கும் என் இரு மக்களுக்கும் வித்தியாசமான கஷ்டம். நாங்கள் மூவரும் ஐந்தடி உயரத்தை தாண்டாதவர்கள். எனவே எ௩்களுக்கு உயரமாக இல்லையே என்ற வருத்தம்.
  என் முதல் மகள் மருத்துவ கல்லூரி படிப்பின் போது நானும் கேரட் பராத்தாவைதான் சிற்றுண்டியாக செய்து அனுப்புவேன். பசுமை நிறைந்த நினைவுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயரமாக இருப்பது எங்கள் கவலை என்றால் உங்களுக்கு இல்லையே என்ற கவலையா! தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமா ஸ்ரீனிவாசன் ஜி..

   நீக்கு
 7. உங்கள் மகள் ரோஷ்ணியின் ஓவியம் மிக அழகாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 8. வாசகம் என் மனதை கலங்கடிக்க வைத்து விட்டது. இப்படியும் உண்மையை சொல்ல முடியுமா ?

  அருமை மிகவும் அருமை.

  கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட இறைவனை பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 9. ஓவியம் அருமை... சமீப காலமாக ATM இருக்கும் 'சுத்தத்தை' பார்த்தால், பயம் வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருசில செலவுகளுக்கு ரொக்கமாக வேண்டியுள்ளதே சகோ.. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..

   நீக்கு
 10. ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை..

  இங்கே முக கவசம் அணியாமல் தெருவில் பொறுக்கிக் கொண்டு திரியலாம்..

  கடைகளுக்குள் நுழைய முடியாது... பெரிய வணிக வளாகத்தினுள் முகமூடி இருந்தால் கையுறை தருகிறார்கள்.. இல்லையெனில் விரட்டி விடுகின்றனர்...

  ஏதாயினும் முரண்டுபிடித்தால் காவல் துறையினர் வசம் ஒப்படைப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல விதிமுறைகள்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை சார்..

   நீக்கு
 11. பதிவைப் படித்துவிட்டேன். இன்று குறைவான செய்திகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்..சரக்கு இல்லை..:) தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க புவனா..

   நீக்கு
 13. வாசகம் நன்றாக இருக்கிறது

  ரோஷினியின் ஓவியம் அழகு. வாழ்த்துகள்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

   நீக்கு
 14. ஆதி ஏடிஎம் இங்கு எப்போதாவதுதான் பெரும்பாலும் கூகுள் பே என்பதால். அதுவும் என் வேலை இல்லை ஹா ஹா ஹா ஹா

  ரோஷிணி மிக நன்றாக வரைகிறாள். பாராட்டுகள்

  வாசகத்துல மூன்றாவது தவறுதான் ரொம்பவே தப்பு.!!

  ஹோம்ப்ளஸ் ரூல்ஸ் செம.

  காரட் பரோட்டா சூப்பர்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆன்லைன் பணப்பரிமாற்றம் பற்றி என்னவர் சொல்லித் தந்திருந்தாலும் எனக்கு அதை உபயோகப்படுத்துவதில் பயம்..:) மளிகைக் கடையில் கார்ட் ஸ்வைப் செய்திடுவேன்.. மற்ற செலவுகளுக்கு ரொக்கமாக தான் கொடுக்க வேண்டும்.. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி..

   நீக்கு
 15. கடைக்காரரின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

  ஓவியம் அழகு பிரமாதம். கேரட் பரோட்டா.. பேர கேட்டாலே சும்மா…… ஊறுதில்ல ….எச்சில்….)

  அனைத்தும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜி..

   நீக்கு
 16. வாசகம் அருமை.


  ரோஷணியின் ஓவியம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 17. நலமா ஆதி ..வாசகம் அருமை நூற்றுக்குநூறு உண்மை .எங்கள் மகளும் எங்களை விட உயரமாகிட்டா .நான் மார்ச்சிலிருந்து எல்லாம் கார்ட் ட்ரான்ஸாக்ஷன்தான் .முந்தி மினிமம் ஸ்பென்ட் 30 பவுண்ட் வரைக்கும்  இப்போ 45 பவுண்ட்ஸ் வரைக்கும் காண்டக்ட்லெஸ் swipe செய்யலாம் அதனால் atm பக்கம் போறதில்லரோஷினியின் ஓவியம் அழகு .கேரட் பராத்தா செஞ்சிடறேன்  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலம்ப்பா ஏஞ்சலின்..நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..ஒருசில விஷயங்களுக்கு இங்கு பணமாகத் தான் கொடுக்க வேண்டியுள்ளது..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   நீக்கு
 18. வாசகம் நன்று. ஓவியம் அருமை. நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராமலஷ்மி..

   நீக்கு
 19. மூன்று தவறுகளை இனி தவிர்க்கிறேன் மேடம்.
  கடைக்காரரின் செயல்பாடு பாராட்டுக்குரியது.
  இங்கு தன்னீர் கேன் கு கூட கூகிள் பே செய்ய ஆரம்பிச்சிட்டேன், இன்னைக்குதான் தொழில்நுட்பச்சிக்கல் என்னை மிகவும் படுத்தி எடுத்துவிட்டது.
  கேரட் பரோட்டா அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அர்விந்த் ஜி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. ஆமாம் ஐயா.தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 21. வாசகமும் ரோஷ்னியின் ஒவியமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 22. வாசக வரிகள் உண்மை. திருச்சி செய்திகள் எனக்கு உங்கள் மூலம் அறிய முடிகிறது. ரோஷ்ணி ஓவியம் ரசித்தேன். பரோட்டா சுவை தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருச்சி செய்திகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி ஜி.

   நீக்கு
 23. ஓவியம் அருமை
  தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....