வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கல்கோனா!

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

யானைக்குக் கரும்புத் தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையாய் இரு. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

***** 



கல்கோனா – ஆஹா பெயரைப் படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறினால் நீங்கள் நிச்சயம் 40+ வயதினராகவே இருக்க முடியும்! இந்த கல்கோனா சாப்பிடாதவர்கள் யார்? சிறு நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, பட்டணமாக இருந்தாலும் சரி இந்த கல்கோனா கிடைக்காத பெட்டிக் கடைகள் இல்லை! பாட்டிலில் வைக்கப்பட்ட கல்கோனா உருண்டையும் ஐந்து பைசாவில் வாங்கி வாயில் அடக்கிக் கொண்டால் குறைந்தது அரை மணி நேரமாவது வாயில் ஊறினால் தான் முழுவதும் கரையும்! கொஞ்சம் கொஞ்சமாக கரையக் கரைய அதைச் சாப்பிடுவது அலாதியான இன்பம் – அந்த வயதில்! இப்போது கூட கல்கோனா கிடைத்தால் நான் சாப்பிடத் தயார்! ஆனால் தலைநகர் தில்லியில் எங்கே சென்று கல்கோனாவினைத் தேடுவது? ஊரில் கூட கிடைப்பதாகத் தெரியவில்லை – அப்படியே கிடைத்தாலும் முன்பு கிடைத்த அளவு சுவையுடன் கிடைக்குமா என்பது சந்தேகமே! சரி இப்போது எதற்கு கல்கோனா பற்றிய நினைவலைகள் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம்! விஷயத்திற்கு வருகிறேன். 

சமீபத்தில் நண்பர் ரிஷபன் அவர்கள், “ரங்க விலாசம்” எனும் அவரது புதிய தொடர்கதை ‘கல்கோனா’-வில் வெளிவருகிறது என்று முகநூலில் தெரிவித்து இருந்தார். அதே சமயத்தில் நண்பர் பால கணேஷ் அவர்களும் தனது ஒரு தொடர் (சிகரம் தொட்ட சினிமாக்கள்) கல்கோனாவில் வெளிவருகிறது என்று எழுதி இருந்தார்! கல்கோனாவில் எப்படி தொடர் என்று மேலும் படித்த போது தான் தெரிந்தது “கல்கோனா” என்பது ஒரு மின்னிதழ் என்பது! திரு பெ. கருணாகரன் – குமுதம் ஜங்ஷன் இதழில் பொறுப்பாசிரியராக இருந்து பின்னர் புதிய தலைமுறையில் பணியாற்றியவர்! தற்போது ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருப்பவர் – இவரது ஒரு சில படைப்புகளை படித்து ரசித்திருக்கிறேன். அவர் தற்போது மாதமிருமுறை வெளிவரப் போகும் மின்னிதழ் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார் – அந்த மின்னிதழின் பெயர் தான் “கல்கோனா”. சிறப்பான பல பகுதிகளை தன்னகத்தே கொண்டு ஆரம்பித்து இருக்கிறது “கல்கோனா” மின்னிதழ். முதல் கல்கோனா மின்னிதழ் சுதந்திர தினம் (15 ஆகஸ்ட்) வெளியாகி இருக்கிறது. 

ரிஷபன் ஜி, பால கணேஷ் தவிர இன்னும் சில நண்பர்களுடைய படைப்புகளும் இந்த மின்னிதழில் வெளி வந்திருக்கிறது – கவிதை, நகைச்சுவை, கட்டுரைகள், என பல பகுதிகளை இந்த கல்கோனா இதழ் உள்ளடக்கியிருக்கிறது. கல்கோனா மின்னிதழ் தொடர்ந்து வெளிவர எனது வாழ்த்துகளும்! மின்னிதழில் தங்களது படைப்புகளை வெளியிடும் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். 

தற்போதைக்கு இந்த மின்னிதழ் PDF-இல் வெளிவருகிறது. முதல் மின்னிதழை வாசிக்க முடிந்தது. படைப்புகளை வரவேற்றிருக்கிறார்கள். படைப்புகள் அனுப்ப விரும்புபவர்கள் kalkonaeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மற்ற தொடர்பிற்கு kalkonasweet@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். ”திரையும் புதிரும்” என்ற தலைப்பில் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட புதிரும் உண்டு. அதற்கான பரிசுத் தொகையும் உண்டு! ஒரு கடிதப் போட்டி பற்றிய தகவலும் இந்த முதல் கல்கோனா மின்னிதழில் இருக்கிறது! முதல் மின்னிதழைப் படித்ததில் ஸ்வாரஸ்யமாகவே துவங்கியிருக்கிறது இவர்களின் மின்னிதழ் பயணம்! மின்னிதழ் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மின்னிதழில் பங்களித்திருக்கும் நண்பர்கள் ரிஷபன் ஜி, பால கணேஷ், திருமதி செல்வி சங்கர் ஆகியோருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்! 

இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட தகவல் பற்றிய எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டமாகச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

40 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் அருமை...

    யானையாக இருந்தாலும்
    எறும்பாக இருந்தாலும்

    நமக்கென்று ஒரு இயல்பு உண்டு...
    அது மாறாமல் வாழ்வதே நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இயல்பு மாறாமல் வாழ்வதே நலம். உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. கமர்கட்டைதான் கல்கோனா என்று சொல்வார்களோ...

    புதிய மின்னிதழா?   வாழ்த்துகளும் பாராட்டுகளும்...   மென்மெலும் உயரட்டும்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. கல்கோனா என்பது கமெர்கட் மாதிரிதான் ஆனால் கல்கோனா என்பது உருண்டையாக இருக்கும் வாயில் ஊற ஊறத்தான் அதை கடிக்க முடியும் கொஞ்சம் கடினமாக இருக்கும்

      நீக்கு
    2. எனக்குத் தெரிந்து கமர்கட் என்பது 1 பைசாவுக்கு 1 என்று 72ல் விற்பார்கள். அது கடிக்க கஷ்டம். வாயில் ஊறவைத்து சாப்பிடணும். இப்போ மார்க்கெட்ல கிடைக்கும் கமர்கட்லாம் சட் சட்னு கடித்துச் சாப்பிடலாம். பாண்டிச்சேரில கிடைப்பது ஜவ்வு மாதிரி இருக்கும். (ஆனால் நிச்சயம் சாப்பிட்டு முடித்த பிறகு பல் தேய்க்கணும். இல்லைனா பல் கெட்டுப்போயிடும்).

      கல்கோனா என்பது கல் மாதிரியான நீள் உருண்டையான ஐஸ். பலவித பழ ஃப்ளேவர்ல கிடைக்கும். இதனை நெல்லையில் 79ல் சாப்பிட்டிருக்கேன். 1 ஐஸ் 5 பைசா?

      நீக்கு
    3. கமர்கட் வேறு கல்கோனா வேறு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. நான் கேட்க நினைச்ச கேள்வியை ஶ்ரீராம் கேட்டுவிட்டார். கல்கோனா என்றால் கமர்கட்டா? நான் கமர்கட்டே சாப்பிட்டது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் வேறு வேறு தான் கீதாம்மா...

      நான் இரண்டும் சுவைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை ஜி

    கல்கோனா இனி இனிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கல்கோனா அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி ரிஷபன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை. அதை பின்பற்றினால் உலகம் அமைதிப் பூங்கா ஆகிவிடும்.
    மின் இதள் வாங்கி படிக்கக் கூடிய சுட்டியையும் பகிருங்கள். ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இப்போதைக்கும் மின்னிதழை வாட்ஸப் வழி தான் பகிர்ந்து கொள்கிறார்கள் அரவிந்த். இணையத்தில் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கல்கோனா ஆஹா ஜி பழைய நினைவுகளை எழுப்பிவிட்டது. எவ்வளவு சாப்பிருக்கிறேன். ஆனால் இப்போது கிடைத்தாலும் சாப்பிட ஆசையாக இருந்தாலும் சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை. நான் "ஸ்வீட்டி" என்பதோடு பல் வீக்காகி வருதே!!!! ஹா ஹா ஹா ஹா

    வாசகம் செம.

    மின்னிதழ் பார்க்கிறேன் ஜி. அட அதில் ரிஷபன் அண்ணா எழுதும் தொடர்கதையா கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ரொம்ப நாளாகிவிட்டது அவர் எழுத்தைக் கண்டு.

    மிக்க நன்றி ஜி. அறிமுகத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கோனா இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது தேட வேண்டும் - மேலும் கீழும் பார்த்தாலும் பரவாயில்லை என்று!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  8. கல்கோனாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இனிதே வெற்றி நடை போடட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  9. ஜி இன்னும் மின்னிதழ் வரவில்லையோ? வலையில்

    தேடிப் பார்த்தேன் ப்ளாகில் சேர்த்துக் கொள்ள. கிடைக்கவில்லையே. ஓ பிடிஎஃப் ஆக வருவதால் கிடைக்க மாட்டெங்குதோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடிஎஃப் மட்டுமே இப்போதைக்கு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. ஆரம்ப வாசகம் அருமை கல்கோனா அறிமுகம் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. கல்கோனா.. இனிப்பான மின்னிதழ்.. அதன் அறிமுகம் பற்றிய தொகுப்பு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. மின்னிதழுக்கும், அதை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்.. நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கல்கோனா பிடிக்காதவர்கள் உண்டா? கல்கோனா மின்னிதழ் படிக்க அதன் சுட்டியை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். 
    வாசகம் நன்றாகத்தான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      கல்கோனா - பலருக்கும் பிடித்ததே. மின்னிதழ் - இப்போது பிடிஎஃப் வடிவில் மட்டுமே கிடைக்கிறது. இணையத்தில் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. கல்கோனா மின்னிதழ் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. மின்னூல் அறிமுகம் நன்று. பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அன்பு.

      நீக்கு
  17. உயிர் என்று ஒன்று. அதைக் காக்க எடுக்கும் கடைசி நடவடிக்கைகள்.
    இரு வாரங்கள் முன் இங்கேயும்
    அப்படி ஒரு நிலை வந்தது .20 நிமிடங்கள் கெடு கொடுத்தார்கள்.
    நீங்கள் சொன்னவற்றை எடுத்து வீட்டின் அடித்தளத்துக்கு விரைந்தோம். என்
    கையில் என் மருந்து டப்பா.

    ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்தப் பிரளயம்
    உயர் மட்ட அழுத்தம். எதுதான் நம் கையில்?
    மிகச் சிறப்பான எழுத்து.
    இறைவன் நமக்கு உணர்த்தும் நிலையாமை பற்றிய
    கணங்கள்.
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  18. கவிதைப் போட்டியின் முடிவுகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தால் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....