செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

You Tube Channel – ஆதியின் அடுக்களை - நன்றி

 


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! விநாயகரின் துணையோடு தான் எதையும் செய்வது வழக்கம்! அவரின் சிறப்பான நாளான விநாயகர் சதுர்த்தி முதல் எங்கள் YouTube பயணத்தையும் அவர் துணையோடு துவக்குகிறோம். எங்கள் என்றால்? எனக்கு ஓரளவு தெரிந்த சமையலும், மகள் அவளுக்குத் தெரிந்த ஓவியம் மற்றும் கைவேலைகளையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம். 

ஏறக்குறைய இரண்டு வருடங்களாகவே அவ்வப்போது யாரேனும் ஒருவர் சேனல் ஆரம்பியுங்களேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் எனக்குத் தயக்கமாகவே இருந்தது..:) இரண்டு மாதங்களுக்கு முன்னால் கூட நெருங்கிய உறவில் ஒருவரிடம் பேசிய போது " YouTube channel வெச்சிருக்கியாமே! Amazonல கூட அப்லோட் பண்ணறியாமே! " என்று கேட்ட போது கூட "யார் அப்படி சொன்னது!" என்று சிரிப்புடன் மறுத்தேன்..:) 

அதன் பிறகு தான் Amazon மூலம் மூன்று மின்புத்தகங்கள் வெளியிட்டேன். இப்போது தயக்கத்துடன் YouTube channelம் ஆரம்பித்திருக்கிறேன் :) 

என்னவர் சேனல் க்ரியேட் செய்து தர, மகள் எடிட்டிங் செய்து தர, செய்முறையும், வாய்ஸ் ஓவரும் தான் என் பங்களிப்பு :) மகளுக்கும் என்னவர் சேனல் க்ரியேட் செய்து தர, எடிட்டிங்கும், ஓவியங்களும் அவளின் பங்களிப்பு. முதல்முறை என்பதால் கொஞ்சம் தடுமாற்றங்களும், சுமாராகவும் தான் இருக்கும். 

உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்..அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

என்னுடைய சேனல் ஆதியின் அடுக்களை! இணைப்பு இதோ! https://youtu.be/2wozSSmVKYo 

மகளின் சேனல் Roshni's creative corner! இணைப்பு இதோ! https://youtu.be/_GYCzAgaXvc 

வெளியிட்ட மூன்று நாட்களில் சில பல ஸப்ஸ்க்ரைபர்களும் நூற்றுக்கும் அதிகமான பக்கப் பார்வைகளும் கிடைத்திருக்கின்றன. ஸப்ஸ்க்ரைப் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி. ஸப்ஸ்க்ரைப் செய்து கொள்ளாதவர்களும் செய்து கொண்டால் மகிழ்ச்சி. முடிந்த வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு காணொளி வெளியிட எண்ணமிருக்கிறது. காணொளிகள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். தொடர்ந்து சந்திப்போம். 

நட்புடன், 


ஆதி வெங்கட்

பின் குறிப்பு - படத்தில் இருக்கும் ஓவியம் விநாயகர் சதுர்த்தி நாளுக்காக மகள் வரைந்தது!

28 கருத்துகள்:

 1. மிக மகிழ்ச்சியும் ...வாழ்த்துக்களும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்.

   நீக்கு
 2. இன்றைய சூழலுக்கு புதியவை நன்மையே...

  YouTube channel சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. வணக்கம் அன்றே அடுகளை சென்று பார்த்தேன். இன்று ஓவியக்கலையும் பார்த்தேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. வெங்கட் சார், புதுமை என்றும் வரவேற்க தக்கது. உங்கள் இருவரின் புதிய சிந்தனைகளை செயல் படுத்தி அசத்துவதற்கான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமா ஸ்ரீனிவாசன் மேடம்.

   நீக்கு
 5. இரண்டு காணொளிகளையும் கண்டேன்...
  நன்றாக வந்திருக்கின்றன...

  காணொளியின் பின்னணியில் சேர்க்கப்படும் இசைக்கு காபிரைட் பிரச்னை வராதா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூ ட்யூப் ஸ்டூடியோ பக்கத்தில் இருக்கும் இசை சேர்த்தால் பிரச்சனை இல்லை. மற்ற இடங்களிலிருந்து எடுத்தால் பிரச்சனை வரலாம் துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 6. மகிழ்ச்சி. உங்கள் மற்றும் ரோஷ்ணியின் புது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இணைய திண்ணை.

   நீக்கு
 7. Vவீடியோ ரெண்டுமே நன்றாக இருக்கிறது.ரோஷ்ணி விடியோ படு சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

   நீக்கு
 8. வீடியோ ரெண்டுமே நன்றாக இருக்கிறது.ரோஷ்ணி வீடியோ சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

   நீக்கு
 9. மகிழ்ச்சி. உங்கள் Youtube அடுக்களை களை கட்டவும் ரோஷ்ணியின் ஆக்கங்கள் அமர்களப்படுத்தவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இணைய திண்ணை.

   நீக்கு
 10. YOUTUBE தொடக்கமே இனிப்புடன், தொடருங்கள் களிப்புடன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

   நீக்கு
 11. வாழ்த்துக்கள் ஆதி, ரோஷ்ணி.
  ஸப்ஸ்க்ரைப் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. இரண்டு சேனல்களுக்கும் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  தாங்கள் மற்றும் தங்கள் மகளின் யூடியூப் சானல் ஆரம்பித்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். விநாயகர் சதுர்த்தியான நல்ல நாளில் சேனல்களை ஆரம்பித்திருக்கிறீர்கள். ஸ்ரீ விநாயகர் அருளால் நன்றாக திறமைகள் இருக்கும் நீங்களிருவரும் அதிலும் கண்டிப்பாக பிரகாசிப்பீர்கள். உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....