ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

EVERY MOUTHFUL IS MEANINGFUL – குறும்படம்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். இந்த ஞாயிறில் நாம் பார்க்கப் போவது ஒரு தாய்லாந்து நாட்டு குறும்படம். மிகவும் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். மொழி புரியாதே என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை – ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு. அம்மா அறிவுரைகள் சொல்லும்போது எல்லா பெண்களுக்குமே கோபம் வருவது வழக்கம் தான். இந்தக் குறும்படத்தில் வரும் பெண்ணுக்கும் கோபம் வருகிறது. அம்மா ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கிறார் எனக் கோபம் கொண்டு வீட்டினை விட்டு வெளியேறுகிறார். தனியே சென்ற பிறகு ஒரு உணவுக் கடை வாசலில் நின்று உணவுக்காக ஏங்குகிறாள் – கையில் காசில்லை! அப்போது அந்த உணவகத்தினை நடத்தும் பெண்மணி பெண்ணை அழைத்து உணவு தயாரித்துத் தருகிறார். அப்படித் தரும் உணவு அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்ததான முறையில் செய்யப்பட்டிருக்கிறது. “இப்படித் தான் எனக்குப் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க, உணவகப் பெண்மணி பெண்ணுக்கு புரிய வைக்கிறார் – எப்படி? நீங்களும் தெரிந்து கொள்ள குறும்படத்தினைப் பாருங்களேன்!


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்! 


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

18 கருத்துகள்:

 1. இரண்டு நிமிடங்களில் உணர்ச்சிகரமான காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - மனதைத் தொடும் விதமாக இருந்தது தானே கில்லர்ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. மிக அருமையான குறும்படம்.தாயின்
  பாசம் அந்த குழந்தை அம்மா என்று கூப்பிடும் போது கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
  எல்லோரும் நன்றாக நடித்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசியில் அம்மா என அழைக்கும்போது அத்தனை ஒரு நெகிழ்ச்சி தான் கோமதிம்மா.!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஒரு கோணத்தில் நடிப்பு எடிட்டிங் என அனைத்தும் அருமை என சொல்ல நினைத்தாலும்.........

  கண் கலங்கியது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நடிப்பு, எடிட்டிங் எனச் சொன்னாலும்... மனதைத் தொடும் விதமான காணொளி தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. மனம் ஏற்கனவே நெகிழ்ந்து தான் இருக்கிறது.. இப்படியான காணொளிகளைக் காணும் போது இன்னும் குழைந்து விடுகின்றது..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலமே விளையட்டும். //மனம் ஏற்கனவே நெகிழ்ந்து தான் இருக்கிறது// உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....