எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 22, 2014

ஃப்ரூட் சாலட் – 103 – சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் – வாழ்க்கை – கவிதைப் போட்டிஇந்த வார செய்தி:

பீஹார் மாநிலம் – மிகவும் பின்தங்கிய இந்திய மாநிலங்களில் ஒன்று. பெரும்பாலான நகரங்களிலேயே மின்சாரப் பற்றாக்குறை இருக்கையில், கிராமங்களின் நிலை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாளின் 24 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் மின்சாரம் இருந்தாலே பெரிய விஷயம். அதிலும் பல வீடுகள் மின்சார இணைப்புகளே கிடையாது. வீதியிலும் விளக்குகள் கிடையாது.

இப்படி மின்சாரம் இல்லாத ஓர் கிராமம் தான் [Dh]தர்ணாய்சில மாதங்களுக்கு முன்னர் Greenpeace எனும் NGO இந்த கிராமத்தின் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க முன்வந்தது. கிராமம் முழுவதும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி அனைத்து வீடுகளுக்கும், பள்ளி, சுகாதார விடுதி என எல்லா இடங்களுக்கும் மின்சாரம் தரும் பணியைத் துவக்கியது.


இரண்டு மாதங்களுக்குள் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தினை பயன்படுத்தி, வீதி எங்கும் விளக்குகள், சூரிய சக்தி மூலம் இயங்கும் தண்ணீர் பம்புகள், அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு என கிராமத்தினை முழுவதும் மாற்றி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக மின்சாரப் பற்றாக்குறையால் தடுமாறிய இக்கிராமம் மிகவும் சந்தோஷம் தரும் ஒரு இடமாக இப்போது மாறியிருக்கிறது.100 கிலோ வாட் Micro-Grid மூலம் இக்கிராமத்தில் இருக்கும் 450 வீடுகள், 50 கடைகள், 2 பள்ளிகள், 60 தெரு விளக்குகள், 1 சுகாதார விடுதி மற்றும் 1 விவசாயிகளுக்கான பயிற்சி மையம் என அனைத்திற்கும் மின்சாரம் வழங்கியதன் மூலம் கிராமத்திலுள்ள சுமார் 2400 மக்கள் பயனடைந்துள்ளார்கள்.

இதன் மூலம் கிராமத்து மக்களுக்கு சில வேலை வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  ஒரு கிராமத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்த முடிகிறது என்றால், இந்தியாவின் பல்லாயிரம் கிராமங்களிலும் மாற்றம் கொண்டு வர முடியும் – முயன்றால் முடியாத விஷயம் ஒன்றுமே இல்லை.

இந்தச் செய்தியைப் படிக்கும்போதே மின்சாரம் இல்லாத பல கிராமங்கள் கண் முன்னே வந்து போனது.  ஒவ்வொரு கிராமத்திலும் மின்சார இணைப்பும் வசதிகளும் வரும் நாள் விரைவில் வரட்டும்!

நன்றி:      WWW.THEBETTERINDIA.COM

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:ரசித்த காணொளி:

சென்ற வார ஃப்ரூட் சாலட்-ல் வந்திருக்க வேண்டிய விளம்பரம்! இப்போது பார்த்தாலும் தவறில்லை!
ராஜா காது கழுதை காது:

திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு எதிரே ஒரு சிறிய குடும்பம் – அப்பா, அம்மா, 7-வது மற்றும் 2-வது படிக்கும் இரு பெண்கள்.  அம்மாவும் இரண்டு பெண்களும் பயணத்தினை மிகவும் ரசித்தபடி விளையாடிக் கொண்டிருக்க, அப்பா ரொம்பவும் கர்மசிரத்தையாக இந்த வார ஆனந்த விகடனை படித்துக் கொண்டிருந்தார். இரண்டொருமுறை பெண்கள் அவரையும் விளையாட்டிற்கு அழைக்க, பதிலேதும் சொல்லாது ஆனந்த விகடனில் மூழ்கி இருந்தார்.  சிறிது நேரம் கழித்து பெரிய பெண் அப்பாவிடம்  சொன்னார்

“வீட்டுக்குப் போனவுடனே உனக்கு பரீட்சை – ஆனந்த விகடன்லே வந்திருக்கும் விஷயங்கள் தான் கேள்வியாக இருக்கும்! – நீ மட்டும் ஒழுங்கா பதில் எழுதலையோ, முட்டி போடச் சொல்லிடுவேன்!

இந்த வார புகைப்படம்:
படித்ததில் பிடித்தது:

வாழ்க்கை என்பது....

புத்தர் பிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவருடைய அருள்மொழி கேட்க சீடர்கள் காத்திருந்தனர். அவர்களிடம், “ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?என்று கேட்டார் புத்தர் பிரான்.

எழுபது ஆண்டுகள்என சீடர் ஒருவர் சொன்னதும், “தவறுஎன்று சொன்னார் புத்தர். 

“அறுபது ஆண்டுகள்என மற்றொரு சீடர் சொல்ல, அதையும் மறுத்தார் புத்தர்.

ஐம்பது ஆண்டுகள்என்று இன்னொருவர் கூற, அதையும் “இல்லைஎன்றார் புத்தர் பிரான்.

“ஐம்பது ஆண்டுகள் கூடவா ஒரு மனிதனால் வாழ முடியாது? என்ற சந்தேகத்தில் சீடர்கள் அமைதி காத்தனர். சிறிய மௌனத்திற்குப் பிறகு வாய் திறந்த புத்தர் பிரான், மனித வாழ்க்கை ஒரு நொடி தான்!என்றாராம்.

என்ன, ஒரே ஒரு நொடி தானா?என்று ஆச்சரியத்துடன் சீடர்கள் கேட்க, அதற்கு புத்தர் பிரான் சொன்ன விளக்கம் –

ஆம்.... வாழ்வு ஒரே ஒரு நொடியல்ல, ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ்வது தான் வாழ்க்கை

இந்த வார அறிவிப்பு:

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் படம் இங்கே.....
 
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


40 comments:

 1. Main picture mun varum documentary voice over enno en kathil olithathu...good blog venkat

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைத்தமைக்கு நன்றி ராஜு.... பெங்களூரில் அனைவரும் நலம் தானே!

   Delete
 2. ஒவ்வொரு கிராமத்திலும் மின்சார இணைப்பும் வசதிகளும் வரும் நாள் விரைவில் வரட்டும்!

  ஒளி நிறைந்த இந்தியாவாகட்டும்..
  காணொளி சிந்தை நிறைத்தது..
  அப்பாவுக்கு பரீட்சை..!
  அத்தனை கர்மசிரத்தையாகப்படித்தால் தேர்வு எழுதனும் தானே..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. முதல் செய்தி மிக நல்ல செய்தி.

  இற்றை தருகிறது நம்பிக்கை

  குறுஞ்செய்தி போதிக்கிறது.

  ராகாககா சிரிக்க வைத்தது.

  புப ஏதோ ஒரு வெறுமையைச் சுட்டுகிறது.

  பபி யோசிக்க வைத்தது.

  கவிதைப்போட்டி வாழ்த்த வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. பாஸிட்டிவ் செய்திகளுக்கு நல்ல ஒரு தளம் சுட்டினீர்கள் வெங்கட்... நன்றி. சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்காகவே தான் அத்தளத்தின் சுட்டியை இங்கே கொடுத்தேன்! - பாசிட்டிவ் செய்திகளுக்கு பயன்படுமே என்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. Sir, every week fruit salad is getting sweeter and sweeter. I love the video you have shared and the news about the electricity in the village a lot...... expecting more fruit salad bigger one from you :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   பல வித அலுவல்களுக்கு இடையே இணையம் பக்கம் வருவது மிகவும் குறைந்துவிட்டது சுரேஷ். முடிந்த போது பதிவிடுகிறேன்.

   Delete
 6. /ஒரு கிராமத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்த முடிகிறது என்றால், இந்தியாவின் பல்லாயிரம் கிராமங்களிலும் மாற்றம் கொண்டு வர முடியும்/ உண்மைதான்.

  நல்ல தொகுப்பு. விகடன் பரீட்சை இரசிக்க வைத்தது:).

  ReplyDelete
  Replies
  1. அப்பெண் சொன்னதைக் கேட்டவுடன் நான் சிரித்து விட்டேன்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. சூரிய ஒளி மின்சாரம் அருமையான செய்தி .. மற்ற துளிகளும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 8. வணக்கம்
  ஐயா
  கதையும் புத்த பிரானின் போதனையும் படங்களும் நன்றாக உள்ளது கவிதைப்போட்டிக்கான அறிவிப்பை தங்களின் தளத்தில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா
  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 9. அனைத்தும் அருமை..... ஆனந்தவிகடன் பரிட்சை ரசிக்க வைத்தன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. சூரிய ஒளியால் மின்சாரம் பெற்ற கிராமம்... ஒளிமயமான செய்தி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. இற்றையும், குறுஞ்செய்தியும் அசத்தல்!
  சூர்யமின்சக்தி நல்லவிசயம் தான் ஆனால் அதை அரசாங்கமே செய்யக்கூடிய அளவு தனிறைவு வராமல் இருக்கிறோமே என வருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. அரசாங்கம் செய்ய வேண்டிய பல பணிகளை தொண்டு நிறுவனங்களும், மற்றவர்களும் செய்ய வேண்டியிருப்பது வருத்தமான விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 12. எப்போதும் போல இந்த வாரமும் அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  அந்தப் புகைப்படத்தில் இருப்பது காய்ந்த இலைகள் தானே.....?

  ReplyDelete
  Replies
  1. அப்படத்தில் இருப்பது காய்ந்த இலைகள் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete

  2. http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_23.html
   இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

   Delete
  3. தங்களது வருகைக்கும் வலைச்சர அறிமுகம் பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 14. Relationshipsச் மிகவும் இரசித்தேன்! அருமையான சாலட். பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 15. //ஒரு கிராமத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்த முடிகிறது என்றால், இந்தியாவின் பல்லாயிரம் கிராமங்களிலும் மாற்றம் கொண்டு வர முடியும் – முயன்றால் முடியாத விஷயம் ஒன்றுமே இல்லை. //

  சிந்திக்கத் தூண்டும் - சிறப்பான வரிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 16. சூரிய ஒளியில் மின்சாரம் இப்போது பிரபலமடைந்து வருகின்றது. "எதிர்காலத்தின் வெளிச்சம் சூரியஒளியில்"தானோ?!!!

  இற்றையும்,குறுஞ்ச்செய்தியும் டாப் என்றால், ஆனந்தவிகடனில் மகள் அப்பாவிற்கு வைக்கும் பரீட்சை மிகவும் ரசித்தோம்.

  காணொளி ஆஹா! என்றாலும் அதில் ஏதோ ஒரு சோகம் இழையோடுகின்றது. புகைப்படம் ஹோ சூப்ப்ப்ப்பர் என்று சொல்ல வைத்தது.

  புத்தரின் தத்துவம் எல்லோரும் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டியது.

  இப்படி எல்லமே அருமையான கலவை!

  போட்டி நடத்துபவர்களுக்கும், பங்குபெறுவோர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   Delete
 17. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கிராம மக்களின் உறுதி நம்பிக்கை வியக்க வைத்தது! மற்றவை எல்லாம் அருமை! குறிப்பாக புத்தர் கதையும் ஆனந்தவிகடன் பரிட்சையும் ரசிக்க வைத்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. சூரிய ஒளி மின்சாரம்...
  காணொளி...
  ஆனந்த விகடன் பரிட்ச...
  புத்தர் கூற்று...
  முகப்புத்தக இற்றை...
  கவிதைப் போட்டி குறித்த பகிர்வு என எல்லாமே கலக்கலாய்....
  ப்ரூட் சாலட் அருமை அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 19. கிராமம் ஒளி பெற்றது மகிழ்ச்சி. தொடரட்டும் ஒளியின் வருகை.
  ஆனந்தவிகடன் பரீட்சை மிகவும் அற்புதம். இப்படித்தான் அம்மாகூய்யிடுவது காதில் விழாமல் படித்துக் கொண்டு இருந்தால் நாளைக்கு அந்த புத்தகத்தில் பரீட்சை வைக்க போகிறீர்களா? என்று அம்மா கேட்பார்கள்.
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....