திங்கள், 11 ஆகஸ்ட், 2014

அட கிறுக்குப்பய புள்ள!

இரயில் பயணங்களில் – 2

சென்ற வாரத்தில் ஒரு வாரப் பயணமாக தமிழகம் வந்தேன்.  வழக்கம் போல வெள்ளி அன்று தலைநகர் தில்லியிலிருந்து சென்னை வரை ராஜதானி விரைவு வண்டியில் பயணச் சீட்டு முன்பதிவு செய்திருந்தேன். மாலை நான்கு மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனி இரவு 08.15 மணிக்கு சென்னை வந்து சேரும் ரயில் அது. அந்த 29 மணி நேர பயணத்தில் நான் சந்தித்த ஒரு வித்தியாசமான மனிதர் பற்றி இந்த இரயில் பயணங்களில் பகுதியில் பார்க்கலாம்!

ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு விஷயத்தின் மீது மோகம் அதிகம் இருக்கும் – சிலருக்கு புத்தகம் மீது, சிலருக்கு எழுத்து மீது, பலருக்கு தொலைக்காட்சி மீது. ஒரு சிலருக்கு அலைபேசி மீது! இப்பயணத்தில் உடன் பயணித்த இளைஞருக்கு அலைபேசியில் பேசுவதில் – அதுவும் எல்லோருக்கும் கேட்கும்படி பேசுவதில் அலாதியான ஆனந்தம்!

இரயில் புறப்பட்ட நேரத்தில் பேச ஆரம்பித்தவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார் – வாய் தான் வலிக்காதோ, கேட்பவர் காது தான் வலிக்காதோ? காதலியிடம் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை அவளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் பேசுவதை ஆங்கிலத்தில் Sweet Nothings என்று சொல்வதுண்டு. இந்த இளைஞரும் Sweet Nothings விஷயங்களை அனைவருக்கும் கேட்கும்படி உளறியபடியே வந்தார்.

நன்றி: கூகிள்....

மாதிரிக்கு சில!  - யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

“அடியே, எனக்கு வர ஜனவரி மாசம் கல்யாணம் – யார் கூடன்னு கேக்க மாட்டியா? உன் கூட தாண்டி! அதுவரைக்கும் பேசிட்டே இருக்கலாம்! [அவரது அலைபேசி தொடர்பு தரும் நிறுவனத்திற்கு கொள்ளை லாபம் தான் இவரால்! இவருக்கென்றே சில சலுகைகள் தரலாம்!]

என்னடி பண்ணிட்டு இருக்கே! நீ ஒரு வேலையும் செய்ய மாட்டியா, எல்லாம் கேமு [இது யாரென்று தெரியவில்லை!] பண்ணிடறான்னா உனக்கு ஒரு வேலையும் இல்லையா? பாவாடை சட்டை தோய்க்க இவ்வளவு நேரமா? எங்க வீட்டுல எல்லா வேலையும் நானே செய்துடுவேன்! [மாட்டினாண்டா சேகரு! கல்யாணத்துக்கு அப்புறமும் இவன் தான் செய்யப்போறான்!]


நன்றி: கூகிள்....

அடுத்த அழைப்பில் – ஏண்டி சோறாக்கிட்டியா? சாப்பிட்டதுக்கு அப்புறம் மிஸ்டு கால் குடு! நான் கூப்பிடறேன். குளிக்கப் போறியா? சரி ஒண்ணு பண்ணு, என்னோட பேசிக்கிட்டே குளியேன்…..  நானும் பார்க்கறேன்! [அங்கிருந்து வெட்க வார்த்தைகள் பொழிந்தனவோ என்னமோ, இவன் முகத்திலும் வெட்க ரேகைகள்!]

அடுத்த அழைப்பில், “டி உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவண்டி நானு! மாமா, மாமான்னு நூறு தடவை கூப்பிடுடுடி! ம். ரெடியா, ஒண்ணு, ரெண்டு!, மூணு!.......    [ஏண்டா இப்படி படுத்தற – அந்த பொண்ணை மட்டுமல்ல! எங்களையும் தான்!]

மற்றுமொரு அழைப்பில் – அடியே, என்ன பண்ணிட்டு இருக்கே! நான் இங்கே டீயும் சமோசாவும் சாப்பிடறேன்….  உனக்கு வேணுமா? நீ காப்பி குடிக்கறயா? என்னை விட்டுட்டு குடிக்க எப்படி மனசு வருது உனக்கு! [டேய் நீ இங்கே டீயும் சமோசாவும் அவள விட்டுட்டு தானேடா சாப்பிடற? ஏண்டா உனக்கு இந்த கொலைவெறி!]

இதற்கு நடுவே அவரது அலைபேசியில் Balance குறைந்து விட அவரது அப்பாவிடம் “அப்பா balance இல்லை! 200 ரூபாய் ஏத்திவிடு! [recharge செய்வதை ஏத்திவிடு என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்பது புரியாத புதிர்!].  அவரது அப்பா “போடா உனக்கு வேற வேலை இல்லை! என்னால முடியாது!” என்று சொல்லி விட்டார் போலும். சரி நான் வேற யார்கிட்டயாவது சொல்லி ஏத்திக்கிறேன் என்று சொல்லி விட்டார்.

எதிரில் இருந்த சக பயணியிடம், “சார் உங்க ஃபோன்ல balance இருந்தா குடுங்க, நான் ஒரு கால் பண்ணிக்கறேன்!” என்று கேட்க அவரது முகத்தில் பய ரேகைகள்! ”நம்ம பேலன்ஸும் காலி பண்ணிடுவானோ!” என்ற எண்ணத்துடன் “பேலன்ஸ் இல்லை தம்பி!” என்று சொல்லி விட்டு கண்களை மூடி தூங்குவது போல நடிக்க ஆரம்பித்தார்!

வைத்திருந்த இரண்டாவது அலைபேசியிலிருந்து அடுத்து ஒருவருக்கு அழைப்பு விடுத்தார் – “டேய், என்னோட நம்பருக்கு ஒரு இருநூறு ரூபாய்க்கு ஏத்திவிடு! அப்பறம் ராத்திரி பத்து மணிக்கு மேலே KPN AC பஸ்ஸுல திருச்சிக்கு ஒரு டிக்கட் போட்டுடு! எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல! AC பஸ்ஸுல போடு!  காசு எங்கடா போயிடும்! நான் வந்து தரேன்!”

கேட்டுக்கொண்டிருந்த சக பயணிகள் அனைவருக்கும் ஒரு ஆசை! அந்தப் பயபுள்ள recharge பண்ணாம இருக்கணுமே! சிலர் ஆண்டவனை வேண்டிக்கொண்டது மாதிரி இருந்தது!   எப்பவுமே நாம ஆசைப்படறது நடக்காது! அடுத்த சில நொடிகளில் அவரது அலைபேசியில் “YOU HAVE A SMS…….” என்று ஒரு பெண் குரல் அலறியது! எடுத்துப்பார்த்த அவரும் மகிழ்ச்சியாக அழைத்து “ஏறிடுச்சுடா!” என்றார். 

அடுத்து என்ன? அடுத்த அழைப்பு தான்….. “டி என்ன பண்ணிட்டு இருக்கே!”

தூங்கிய சில மணி நேரங்கள் தவிர்த்து அலைபேசியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க அவருக்கு முடிகிறது….  கேட்கத்தான் எங்களால் முடியவில்லை! சக பயணிகளுக்கு தொந்தரவு தருகிறோமே என்ற எண்ணம் இல்லாது எப்படித் தான் இப்படி நடந்து கொள்ள முடிகிறதோ இவர்களால்!  பொது இடங்களில் எப்படி பேசுவது என்ற சராசரி அறிவு கூட இல்லாத இம்மாதிரி நபர்களை யார் திருத்துவது!

ஓரிரு முறை ”கொஞ்சம் மெதுவா பேசுப்பா” என்று சொன்னாலும் அவரது வேலையில் மும்மரமாய் இருந்த இம்மாதிரி நபர்களை திருத்த வழி?

கிறுக்குப் பயபுள்ள என்று மனது நிறைய திட்டினேன்.  நல்ல வேளை First Aid Kit Train Superintendent இடம் இருந்தது! அப்பெட்டியிலிருந்து பஞ்சு வாங்கி வந்து காதில் வைத்து அடைத்துக் கொண்டேன்.

பயணத்தில் சந்தித்த வேறு சில மனிதர்கள், சுவையான சம்பவங்களை பிறிதொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…….


76 கருத்துகள்:

 1. ரயில் பயணங்களில் அலைபேசி தொந்திரவு போல் வேறு சில தொந்திரவுகளும் உண்டு. உறவினர்கள் ஒன்று சேர்ந்து வந்தால் சிலர் மகிழ்ச்சியாக பேசி வருவார்கள், சிலர் எதிரில் இருப்பவரிடம் வேறு நபரை ப்பற்றி கூச்சல போட்டுக் சொல்லிக் கொண்டு வருவார்.( சண்டை போடும் நபர் வேறு எங்கோ ஒருப்பார் இவர் எதிரில் இருப்பது போல் கூச்சல் போட்டு வேசுவார்.)

  பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருப்பது நாகரீகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கு இந்த நாகரீகம் இருப்பதே இல்லை! அடுத்தவர்களுக்கு தொல்லை தருகிறோம் என்ற உணர்வு கூட இல்லையே அவர்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 2. பதில்கள்
  1. அதே அதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. சற்றுக் கண்டிப்புடனேயே சொல்லியிருக்கலாம். சிறிய பயணங்களிலேயே இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நீண்ட பயணங்களில்..? கொடுமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓரிரு முறை பூடகமாக சொல்லிப் பார்த்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. அந்த நபர் பேசியதை விட நீங்கள் எழுதிய கமெண்ட் தான் ரொம்ப சூப்பர்.

  "//எதிரில் இருந்த சக பயணியிடம், “சார் உங்க ஃபோன்ல balance இருந்தா குடுங்க, நான் ஒரு கால் பண்ணிக்கறேன்!” என்று கேட்க அவரது முகத்தில் பய ரேகைகள்!//" - என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன்.

   நீக்கு
 5. ஹாஹாஹாஹா...செம அனுபவம் போல!? சிவப்பு கலர்ல இருந்த உங்கள் கமென்ட்ஸ் எல்லாம் ரொம்ப ரசிச்சோம்.....நாங்க உங்க பதிவ ரசிக்கிறோம்...ஆனா உங்களுக்கு அந்த ஆளின் பேச்சு (சத்தமான பேச்சு) செம கடியா இருந்தாலும். அவரு உங்களுக்கு இந்தப் பதிவ எழுத ஹெல்ப் பண்ணியிருக்காரே ! ஹாஹாஹா.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பதிவு எழுத ஹெல்ப் பண்ணி இருக்காரே! :))) அதே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 6. ஹா ஹா ஹா சில நேரங்களில் சில மனிதர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நேரங்களில் சில மனிதர்கள்...... வெறுப்பு தரும் மனிதர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 8. பக்கத்தில் இருப்பவர் கவனிப்பார்கள் என்கிற கூச்சநாச்சம் இல்லாமல் இப்படிப் பேசுகிறார்களே என்று தோன்றும். நன்றாகவே கவனித்துக் கேட்டிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சக பயணிகள் இருப்பதே அவருக்கு தெரியாத மாதிரி அல்லவா பேசினார் அவர்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 9. வணக்கம்
  ஐயா
  பயண அனுபவத்தை மிக அருமையாக கூறியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 11. நிஜமாகவே காதில் பஞ்சு வைத்துக் கொண்டு தான் பயனித்தீர்களா? என்ன கொடுமை இது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :))))

   பஞ்சு வாங்கி வந்து அவருக்குத் தெரிகிற மாதிரி வைத்துக் கொண்டு பிறகு எடுத்து விட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 12. ரொம்ப கஷ்டம்தான் இது மாதிரி மனிதர்களிடம் மாட்டிக்கொண்டால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பவே கஷ்டம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 13. நீங்கள் சந்தித்தது ஒரு பேசத் தெரிந்த எருமை! ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசத் தெரிந்த எருமை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   நீக்கு
 14. ஹையோ ஹையோ.. உங்களுக்கு கடுப்பு.. எங்களுக்கு சிரிப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதும்போது எனக்கும் சிரிப்பு தான்! இப்படியும் சில மனிதர்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 15. அப்ப்ப்ப்பா.... ரொம்ம்ம்ம்ப கஷ்டம் தான்!!!

  எனக்கும் இதே போன்ற அனுபவம்.... ஒரு முறை பாண்டிச்சேரியில்
  ஒரு நெட் சென்டருக்கச் சென்றிருந்தேன். என் பின்னால் இருந்த காபினினல் இருந்தவன்
  விட்ட ஜொல்லு இருக்கே..... வார்த்தையால் சொல்ல முடியாது.
  அதிலும் இண்டர் காமிராவில் படம் பார்த்துக்கொண்டே பேசியது.....

  இவனுங்களை எல்லாம் என்ன செய்யலாம்...?

  பதிவில் உங்களின் கமெட்ண்ட்ஸ் எல்லாம் சூப்பர் நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பயணத்திலும் சில மனிதர்களை இப்படிச் சந்திக்க நேர்ந்து விடுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 16. படிக்க படிக்க சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.சக பயணிகளும் பாவம்.எங்கேயாவது அவருக்கு தர்ம திட்டு கிடைக்க வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தர்ம திட்டு என்பது தர்ம அடியாக இருந்தால் இன்னும் நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி.

   நீக்கு
 17. ஹா,,,ஹ..ஹா....
  முடிலன்னா! பாவம் தான் நீங்க:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீ ரொம்ப பாவம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 18. இந்த மாதிரி அறிவு கெட்ட ஜன்மங்கள் நிறைய இருக்கு அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறைவே இல்லை இவர் போன்றவர்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 19. அருமையான பயணத்தை
  அருவருப்பான பயணமாக அல்லவா மாற்றியிருக்கிறார் அம்மேதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 21. உங்கள் உடன் வருபவர்கள் அனைவரும் சேர்ந்து சத்தம் போட்டு அவனை ஒரு வழி பண்ணி இருக்கலாம் !
  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நல்ல ஐடியா. அடுத்த முறை இப்படி யாராவது மாட்டினால் செய்து விடலாம்!

   நீக்கு
 22. வெக்கமே இல்லாம பொது இடத்தில் எப்படி தான் இப்படி ரம்பம் போடுவாங்களோ?? ஃபோன் கம்பெனிக்காரன் நல்லா சம்பாதிக்கிறான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபோன் கம்பெனிக்காரன் நல்லா சம்பாதிக்கிறான். அதான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 23. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_12.html?showComment=1407801050208#c1570914913413368880
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 24. இந்த மாதிரியான நபர்களை சமாளிக்க நான் காதில் வாக்மேன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கத் தொடங்கிவிடுவேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு வாக்மேன் மாட்டிக்கொள்ள பிடிப்பதில்லை! இருந்தாலும் இதுவும் ஒரு நல்ல ஐடியா தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   நீக்கு
 25. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 26. மெல்லப் பேசினாலே கிரகிச்சுக்கற உங்க கூர்மையான செவிகளைப் பத்தித் தெரியாம உரக்க வேற பேசிருக்கான் ஃபூல். நல்ல எண்டர்டெயின்மென்டா இதை எடுத்துக்கணும். அவன் பக்கத்துல போயி, நீங்களும் அவளுக்கு கேக்கற மாதிரி எதாச்சும் கமெண்ட் பண்ணிருந்தா நிறுத்திருப்பான்.... (கொஞ்சம் அநாகரீகம்தான். ஆனாலும் உறைக்கணுமே...) அவன் பேச்சுக்கு இங்க உங்களோட கமெண்ட்ஸ் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜா காது கழுதைக் காதுன்னு அவருக்கு தெரியாம போயிடுச்சு.....

   சில முறை மற்றவர்கள் சேர்ந்து சொன்னாலும் அவனுக்கு உறைக்கலை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   நீக்கு
 27. அட ராமா! அந்தாளு வாயில் ஒரு ப்ளாஸ்த்ரி போட்டு விட்டுருந்தால் எல்லோருக்கும் நிம்மதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்டு.... பஞ்சு வாங்கிட்டு வந்ததுக்கு பதில் ப்ளாஸ்த்ரி வாங்கிட்டு வந்திருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 28. பயண அனுபவம் நல்ல நகைச்சுவையா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 29. என்னோட கருத்தைத் தூக்கிச் சென்ற காக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ காக்கா உஷ் ஆயிடுச்சா! நான் to continue மட்டும் தான் எழுதினீங்களோன்னு நினைச்சேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 30. நாங்க கஷ்டப்பட்டு சுரதாவில் எழுதிக் கருத்துப் போடுவோம். இந்த ப்ளாகர் காக்கா தூக்கிட்டுப் போகுமா? அநியாயமா இருக்கே! இல்லாட்டி இதுவும் அந்தக் கிறுக்குப் பயலின் வேலையோ? :))))

  அப்போ என்ன எழுதி இருந்தேன்னு தெரியலை. ஆனால் இம்மாதிரி பலரும் பேசி நானும் கேட்டிருக்கேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாம் முறை வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 31. அந்த கிறுக்குப்பய புள்ளமட்டும் கூட வரலைன்னா உங்கள் பயணம் ரொம்ப போரடித்து இருக்கலாம் அல்லவா...அதுமட்டுமல்ல இது போல சுவராஸ்யமான பதிவி படிக்க கிடைத்திருக்காது அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   அதுவும் சரிதான் - எனக்கு ஒரு பதிவு - படிக்கும் உங்களுக்கும் ரசிக்க ஒரு வாய்ப்பு!

   நீக்கு
 32. நல்லாப் பாத்தீங்களா தம்பி! அந்த பயபுள்ள அலைபேசியை ஆன் பண்ணாம்லேயே சும்மானாச்சும் ஒரு டகால்பாச்சிக்கு பேசிட்டு வந்திருக்கப் போறான். சரி மன்னிச்சிருவோம். திருச்சிக்காரப் பயபுள்ளயாப் போயிட்டாம்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி மன்னிச்சுருவோம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 33. 29மணிநேரம்...எப்படித்தான் சகிச்சுக்கிட்டீங்களோ!! ரொம்ப கஷ்டம்..பாவம் நீங்க.
  உங்க கமெண்ட்ஸ் ரசிக்கும் படி இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதில் பாதிக்கு மேல் உறக்கம். பாதி கேட்டதே இவ்வளவு தொல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு
 34. வரிக்கு வரி சுவாரசியம். குறை எதுவும் தென்படல வெங்கட்நாகராஜ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உலகளந்த நம்பி.

   உங்களது முதல் வருகையோ!

   நீக்கு
 35. //ஏண்டா இப்படி படுத்தற – அந்த பொண்ணை மட்டுமல்ல! எங்களையும் தான்!//

  சிரித்து மாளலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 36. இடைவெளி விட்டுத்தான் ஜொள்ளி இருக்கணும் . 29-மணிநேரம் என்றால் தாங்காதப்பா.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 37. இந்த அனுபவம் சென்ற மாதம் சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எனக்கும் ஏற்பட்டது.என் அருகே அமர்ந்திருந்த நபர்.உங்கள் வார்த்தைப்படி கிறுக்குப்பய புள்ளை தான் அவர்.
  இரவு வண்டி.குளிர்சாதன வண்டிவேறு அமைதியான நேரம் இவரது குரலோ இடிஇடிப்பது போன்ற சிம்மக் குரல். எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பேன் . உங்கள் பதிவு அதைத்தான் நினைவு படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....