சென்ற 2-ஆம் தேதி
[02.08.2014] திருவானைக்கோவில் நகரத்தின் ”ஆரண்யநிவாஸ்” விழாக்கோலம் பூண்டிருந்தது!
தஞ்சாவூர் கவிராயர், திரு சுந்தர்ஜி, திரு வை.கோபாலகிருஷ்ணன், திரு ரிஷபன் போன்ற பிரபலங்கள்
ஆரண்யநிவாஸை முற்றுகை இட்டிருந்ததாக தகவல்கள் முகநூலிலும், பதிவுலகிலும் வந்த வண்ணம்
இருந்தது! தலைநகரில் இருந்த படியால் விழாவில்
கலந்து கொள்ள முடியாத சூழல்!
இந்த வாரம் திருச்சி
வந்ததும் “ஆரண்யநிவாஸ்” என் கைகளைத் தழுவ கைகளை விட்டு இறங்க மறுத்தது புத்தகம்/இறக்கி
வைக்க மறுத்தது மனம்! பதிவுலகில் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி எனும் பெயரில் எழுதி
வரும், சமீப காலமாக முகப்புத்தகத்தில் மூழ்கிவிட்ட மூவார் முத்து [நன்றி: வானவில் மனிதன்
மோகன் ஜி!] அவர்களின் சிறுகதைத் தொகுப்பு “ஆரண்ய நிவாஸ்”.
தொகுப்பில் மொத்தம்
இருபது முத்துகள் – சிறுகதைத் தொகுப்பு எனும்போது தொகுப்பில் இருக்கும் எல்லா கதைகளும்
பிடிக்கும்படி இருப்பது கடினம். ஆனால் இத்தொகுப்பில்
இருக்கும் அத்தனை கதைகளுமே அருமையான கதைகள். ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு நெருங்கிய
ஒருவரின் கதையைச் சொல்வது போல இருப்பது சிறப்பு! அவரது வார்த்தைகளிலே சொல்வதானால் ”இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருமே
நமக்கு மிகவும் பரிச்சயமான நம்முடைய எதிர்வீடு, பக்கத்து வீடு, ஏன் ரயிலில் நம்முடன்
பிரயாணம் செய்யும் சக பயணிகளில் ஒருவராகவும் கூட இருக்கலாம்!”
“ஆரண்யநிவாஸ்” எனும்
தலைப்பிட்ட முதல் கதை – “அந்த ஏத்தன் வாழைப்பழம் அன்னிக்கு
அந்த களியக்காவிளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவில் அந்த குடிசையில் குற்றுயிராய்க்
கிடந்த கிழவர், தன் தண்ணீர் தாகத்தை தியாகம் செய்து கீழே கிடந்த காய்ந்து போன வாழைக்கன்றுக்கு
ஊற்றினாரே, அதனோட பொண்ணோட பொண்ணுதான் இந்த கன்னு!” – ஓய்வு பெற்று வீட்டில்
இருக்கும் ஒருவர் தன்னுடைய நண்பருக்கு சொன்ன கதை. மனதைத் தொட்ட நெகிழ்வான கதை.
”பிரமோஷன்” எனும் தலைப்பில், சுந்தர் பதவி உயர்வுக்கான
நேர்காணலில் கலந்து கொண்ட பத்து பேரில் எல்லாரையும் விட அதிக தகுதி பெற்றிருந்த தனக்கு
பிரமோஷன் கிடைக்காத காரணத்தினை அறிந்து கொள்ள மேலதிகாரியிடம் கேட்க, அவர் சொன்ன பதில்
நமக்கும் ஒரு பாடம் – “தன் கூட வேலை பார்க்கிற ஆளுங்களோட
சுக, துக்கங்களைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படாதவன் மேலே வந்து ஒரு பிரயோஜனமும் இல்லே….
இந்த பிரமோஷன் உனக்குத்தான் என்று கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டோம். ஆனா, மத்தவங்களோட
உணர்வுகளை மதிக்கத் தெரியாத உன்னுடைய குணமே, உனக்கு எதிரா வேலை செஞ்சிடுச்சு…. ஸாரி….!”
”அபரகாரியம்” – மகாதேவ கனபாடிகள் அந்த எண்பத்தைந்து வயதிலும்
முடியாமல், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருக்கிறார். அவரிடம் வேதம் பயின்ற
ராமநாதன் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அவனது வீடு நோக்கி நடக்க, அவரது மனைவி அழுதபடியே
”மாமா உங்க சிஷ்யர் இப்படி பண்ணிட்டுப் போய்ட்டாரே!”, இவருக்கு நீங்க தான் மாமா காரியம்
பண்ணி வைக்கணும்” என்று சொன்னபோது அவரது மனதுக்குள் மீண்டும் வந்தான் ராமநாதன் ஒரு
வெறிச் சிரிப்புடன்!
“…..காசு
வாங்காதேன்னு என்னை சொல்லாதீர்…. என்னால முடியாது…. சம்பாதிக்கும் போது சம்பாதிச்சா தான் உண்டு….. வேணா ஒண்ணு பண்றேன்… உம்மோட காரியத்துக்கு நான்
ஃப்ரீயா வந்து பண்ணித்தரேன் ஒரு பைசா கூட தட்சணை வாங்காம நான்! நான் பண்றதா, நீர் நினைச்சுண்ட
அந்தப் பாவத்துக்கு ப்ராயச்சித்தமா இருக்கட்டும், ஓய்!”
இந்தத் தொகுப்பில்
இருந்த அத்தனை கதைகளுமே நல்ல கதைகள். அனைத்தையும்
இங்கே சொல்லி விட ஆசை தான்! இருந்தாலும் படிக்க இருக்கும் உங்கள் ரசனைக்காக மீதி கதைகளைப்
பற்றி இங்கே சொல்லப் போவதில்லை. அவருடைய வலைப்பூவில்
வந்தபோதே சில கதைகளை நீங்கள் படித்திருக்கக்கூடும். இருந்தாலும் புத்தக வடிவில் படிக்கும்போது
கிடைக்கும் இன்பம் கொஞ்சம் அலாதியானது தான்!
தொகுப்பில் உள்ள
கதைகளில் சில தினமணிக்கதிர், ராஜம், தேவி, ஓம் சக்தி, ஆனந்த விகடன், கல்கி, யூத்ஃபுல்
விகடன், சாவி ஆகிய புத்தகங்களில் அவ்வப்போது வெளியானவை என்பது கூடுதல் தகவல்.
புத்தகத்தினை ”நந்தி
பதிப்பக”த்தினர் மிக அழகாய் வெளியிட்டு இருக்கிறார்கள். புத்தகத்திற்கான அணிந்துரை
தந்திருப்பது வானவில் மனிதன் மோகன்ஜி! [அணிந்துரை இங்கே படிக்கலாம்!] புத்தக வெளியீட்டு விழாவில்
தஞ்சாவூர் கவிராயர் நிகழ்த்திய உரையினை நண்பர் ரிஷபன் அவர்கள் தனது தளத்தில் வெளியிட்டு
இருக்கிறார். அதைப் ”இங்கே” படிக்கலாம்! அட்டை ஓவியங்கள் ஆரண்யநிவாஸ்
ஆர். ராமமூர்த்தி அவர்களின் சகோதரர் எல்லென் வரைந்தவை.
புத்தகம் கிடைக்கும்
முகவரி:
நந்தி பதிப்பகம்
முதல் தளம்,
ஜி.டி. காம்பிளஸ்,
தெற்கலங்கம், [திலகர்
திடல் எதிரில்]
தஞ்சாவூர்-6.
தொலைபேசி:
04362-273636.
விலை: ரூபாய் 75/-
மொத்த பக்கங்கள்:
112.
புத்தகத்தினை நீங்களும்
படித்து ரசிக்கலாமே!
மீண்டும் வேறொரு
பதிவில் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..
மிக அழகான விமர்சனம். புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் அளவிற்கான அருமையான விமர்சனம்! வாசிக்க வேண்டும்!
பதிலளிநீக்குமிக்க நன்றி பகிர்வுக்கு வெங்கட் ஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குநிச்சயம் படியுங்கள். உங்களுக்கும் பிடிக்கும்!
இருந்தாலும் புத்தக வடிவில் படிக்கும்போது கிடைக்கும் இன்பம் கொஞ்சம் அலாதியானது தான்! // உண்மைதான் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஆரண்யநிவாஸ்” , ராமமூர்த்தி அவர்களின் சிறுகதை தொகுப்பு விமர்சனம் மிக அருமை.
பதிலளிநீக்குஅவர் சகோதரர் வரைந்த ஓவியம் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குநீங்களும் ஓவியங்களை ரசித்தமைக்கு நன்றி.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலக்கிட்டிங்க சகோ... சுடச்சுட உங்க விமர்சனமும் நூல் பற்றிய பிற பதிவுகளுக்கு வழிகாட்டலுமாக ... பிரம்மாதம்!
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
Aranya Nivas Chennail yengu kidaikkum ?
பதிலளிநீக்குPlz. send your address to my mail ID
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி. உங்கள் முகவரியை நூல் ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
நீக்குதகவல் தந்தமைக்கு நன்றி ஆர்.ஆர்.ஆர். :)
நீக்குஅருமையான விமர்சனங்கள்.!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் பார்வையில் புத்தகத்தின் விமர்சனத்தை சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது படிக்க வேண்டும் என்ற உணர்வு தூண்டுகிறதுபடங்கள் எல்லாம் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். முடிந்த போது படித்துப் பாருங்கள்.
நீக்குவிமர்சனம் மிக அருமை. புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும்.
பதிலளிநீக்குவிமர்சனத்துக்கு நன்றி
Plz send your address to my mail ID
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குவாசித்துப் பாருங்கள் நண்பரே. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
தகவல் தந்தமைக்கு நன்றி மூவார் முத்தே!.
நீக்குபடிக்க ஆவலைத்தூண்டும் விதமாக ஓர் அழகான விமர்சனம் ...... அருமை !
பதிலளிநீக்குபுத்தக வடிவில் படிக்கும்போது கிடைக்கும் இன்பம் கொஞ்சம் அலாதியானது தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குநல்ல அறிமுகம். பேஸ்புக்கில் இந்நிகழ்ச்ச்யின் அப்டேட்ஸ் புகைப்படங்களுடன் படித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குப்பா...அப்பா...அப்பப்பா....சூப்பரோ சூப்பர்பா........
பதிலளிநீக்குஉங்கள் கதைகளும் சூப்பரோ சூப்பர்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர். ஜி!
லேசாக கோடி காட்டினாற்போல் அழகான சுருக் விமர்சனம். சில கதைகளை வலையிலும் முகநூலிலும் வாசித்திருக்கிறேன் என்றாலும் புத்தகமாய் வாசிக்கும் ஆவல் எழுகிறது. நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நீக்குஅவரைச் சந்திக்க இருந்த ஒரு வாய்ப்பு கை நழுவி விட்டது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது படிக்க வேண்டும். விமரிசனத்துக்கு நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குஉங்களைச் சந்திக்கும் வாய்ப்பினை நானும் இழந்தேன்! நீங்கள் திருச்சி வரும் சமயத்தில் நானும் ரிஷபன் ஜி!, ஆர்.ஆர்.ஆர்., வை.கோ.ஜி! ஆகியோருடன் நானும் வருவதாக இருந்தேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை சந்திப்போம்.
நான் எழுதணும்னு ப்ளான் பண்ணிட்டிருக்கேன். நீங்க முந்திட்டீங்க. ரசிச்சதை ரொம்ப அழகா எழுதிட்டீங்க. படிக்காதவங்களை படிக்க வைக்கத் தூண்டுகிற விமர்சனம் நன்று.
பதிலளிநீக்குநீங்களும் எழுதுங்க கணேஷ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.
சிறப்பான விமர்சனம். தங்களுக்கும் ஆர். ராமமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடிக்கத் தூண்டும் விமர்சனம் நாகராஜ் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குஆர். ராமமூர்த்தி ஐயாவிற்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குஇன்றுதான் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. இனிமேலதான் படித்துவிட்டு எளியேனும் ஒரு பதிவு எழுத வேண்டும். தங்களின் முன்னோட்டத்திற்கு நன்றி!
பதிலளிநீக்குத.ம.9
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குஉங்கள் விமர்சனமும் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது உங்கள் விமர்சனம். பாராட்டுகள்.