இந்த வார செய்தி:
செங்கல்லுக்கு
பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சுவர்
கரூர் : வெளிநாட்டில் உள்ள ஒரு
தனியார் நிறுவனம் “டிசைன் பார் சேஞ்ச்” என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி
நடத்துகிறது. இப்போட்டிகள், எதிர்கால உலகை தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், மாசில்லாத வகையிலும் உருவாக்கும்
அடிப்படையில் இருக்கும். இப்போட்டியில் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஒன்றியம்
ஆட்சிமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்கள்
கலந்து கொண்டனர் என்பதை விட அவர்கள் செய்த போட்டிக்கான பணி சிறப்பானது!
கட்டிடத்துக்கு மிக முக்கியமான
அடிப்படை தேவையான செங்கல்லுக்கு பதிலாக ஏன் பிளாஸ்டிக் பாட்டிலைகளை பயன்படுத்தக்
கூடாது என இவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினர்.
பள்ளியை சுற்றிலும் குறிப்பிட்ட து£ரம் வரை சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்க,
சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்காக, நான்கு நாட்களாக, மாணவர்கள் தங்களின் வீடுகளில்
இருந்தும், மற்ற வீடுகளுக்கு சென்றும் 1,300 குடிநீர் மற்றும் குளிர்பான காலி பாட்டில்களை சேகரித்தனர். முதல்கட்டமாக இந்த
பாட்டில்களில் மணல் நிரப்பப்பட்டது. பின்னர், வழக்கம் போல் கொஞ்சம் தண்ணீர், மண் கலவையை வைத்து, அதன் மேல் செங்கலுக்கு பதிலாக இந்த
மணல் நிரப்பிய பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்து,
அதன் மேல் மீண்டும் மண் கரைசலை வைத்து சுற்றுச்சுவரை 3 நாட்களில் உருவாக்கினர். இந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவனின் தந்தை
கொத்தனராக இருப்பதால் அவர் தனது குடும்பத்துடன் வந்து சுற்றுச்சுவர் எழுப்ப
உதவியாக இருந்தார். மொத்தம் ஸீ5500 செலவில்,
25 அடி நீளம், 4 அடி அகலத்தில் ஒரு
சுற்றுச்சுவரும், மற்றொரு பகுதியில் 4 அடி நீளம், 4 அடி அகலத்தில் மற்றொரு சுவரும்
உருவாக்கப்பட்டது.
இதே அளவு சுற்றுச்சுவர் செங்கல்
கொண்டு கட்டப்படும் பட்சத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ.200
என்ற அடிப்படையில் ரூ.23ஆயிரத்துக்கும் அதிகமான செலவு
பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை
செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தியதால் ரூ.5500ல் பணிகள் முடிவடைந்தது. நான்கில்
ஒரு மடங்கு செலவு செய்தாலே போதும். நீண்ட ஆயுளும் கிடைக்கும். சுற்றுச்சூழல்
மாசுபடாத வகையில் மக்காத பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களும், நகரை மாசுப்படுத்தாமல், பாதுகாப்பு அரணாக திகழ்ந்து
விளங்கும் என்றனர்.
நன்றி:
தினகரன்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
THE ABILITY
TO SPEAK SEVERAL LANGUAGES IS AN ASSET, BUT THE ABILITY TO KEEP YOUR MOUTH SHUT
IN ANY LANGUAGE IS PRICELESS.
இந்த வார குறுஞ்செய்தி:
எழுந்து
நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும்
நம்மை சிறை பிடிக்கும்...
ரசித்த விளம்பரம்:
சரக்கடித்து
விட்டு வாகனங்களை ஓட்டும் மனிதர்களை தங்களது நிறுவனத்தின் ஓட்டுனர்களை
அமர்த்திக்கொள்ள சிபாரிசு செய்யும் இந்த விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன். விளம்பரம் சோமபானம் அருந்தியவர்களை திருத்தி
இருக்குமோ இல்லையோ, என்னை நிச்சயம் கவர்ந்தது! நீங்களும் பாருங்களேன்!
ரசித்த பாடல்:
தங்க மீன்கள்
படத்திலிருந்து ”ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடல் இந்த வார ரசித்த பாடலாய். சில
நாட்கள் முன்னர் தான் முதல் முறையாகக் கேட்டேன். அதன் பின்னர் பலமுறை! நீங்களும்
கேட்க!
இந்த வார புகைப்படம்:
ஒரு
தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகளை வைத்து என்ன செய்யலாம்? ”அடுப்பு/விளக்கு பத்த
வைக்கலாம்” என்று தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்! இல்லை என்கிறது இப்படம்! தீக்குச்சி
எதிலிருந்து வந்ததோ அதையே செய்யலாம் என்கிறது படம்! பாருங்களேன்....
படித்ததில் பிடித்தது:
இன்றைக்கு ”படித்ததில் பிடித்தது” பகுதியில் ஒரு கவிதை! கவிதை எழுதியவர்
”ஸ்ரீ”.
உன்
மௌனத்தை ஒரு கரையாகவும்
என் எழுத்தை [ஏக்கத்தை]
மறுகரையாகவும் கொண்டு
நகர்கிறது
வாழ்க்கை நதி
உன் மௌனம்
உன்னை எனக்கு
உணர்த்துவதை விட
என்னை
எனக்கு
அதிகமாய் உணர்த்துகிறது
நீ
என்னை என்னவாக
உணர்கிறாய் என்பது
உள்பட!
உன் மௌனங்களின் வெளியில்
என் எண்ணங்கள்
இப்போது நடக்கத்தொடங்கிவிட்டன!
நல்ல பயிற்சிக்குப் பின்பு!
எல்லையற்ற அந்த பரந்தவெளியில்
தொன்ம கனவுகளையும்
தொல்லை தரும் நினைவுகளையும்
விடவும் முடியாத,
அடையவும் முடியாத,
அவஸ்தையுடன் என்
அலைச்சல்கள்!
-
ஸ்ரீ
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
முகப் புத்தக இற்றை என்னை speechless ஆக்கிவிட்டது அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குவழக்கம் போல சுவையாக இருந்தது. இனிய விநாயக சதுர்த்தி தின் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பதினர் அனைவருக்கும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஉங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
செங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் சுவர்.... நல்ல பகிர்வு. நாட்டுக்கு அவசியம்.
பதிலளிநீக்குமரத்தை வெட்டி
மரம் செய்வான மனிதன்...
கவிதை அருமை.
ப்ஃரூட் சாலட் அருமை ...பாடல் மட்டும் வரவில்லை. விளம்பரம் வித்தியாசமாக இருக்கிறது.
நன்றி சகோதரரே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
நீக்குபாட்டில் காம்பவுண்ட் சுவர் நல்ல ஐடியா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குஎல்லாமே அருமை.
பதிலளிநீக்குபாட்டில் சுவர் முன்பே வேறு இடங்களில் முயற்சித்திருக்கிறார்கள். செய்தி படித்த நினைவு இருக்கிறது.
'ஆனந்த யாழை' பாடல் எனக்கும் பிடிக்கும். எனக்கு முதலில் முக நூலில் நண்பர் குருமூர்த்தி பாடி அறிமுகமானது இந்தப் பாடல்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்...//
பதிலளிநீக்குரசிக்கவைத்தது..
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
ஃப்ரூட் சலாட் இன்றும் அருமை! அத்தனையும் ரசிக்க வைத்தன!
என் மனதில் ஆழப் பதிந்தது ஈற்றுப் பகிர்வான கவிதை! அற்புதம்!
உணர்வுகளை மிக அழகாக நாசூக்காகச் சொல்லிய விதம் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஎப்பவும் போல கலக்கலான ப்ரூட் சாலட்... அந்த விளம்பரம் ரசித்து சிரித்தோம்... (என் தோழியுடன்)..முகப்புத்தக இற்றை எனக்கே எனக்காய்ச் சொன்ன மாதிரி இருந்தது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குஃப்ரூட் சாலட் மிக அருமை.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்ட அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமையான தொகுப்பு. பெங்களூரில் L&T தொழிற்சாலையின் உயரமான சுற்றுச்சுவர் முழுக்க முழுக்க பீர் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. குறுஞ்செய்தி சிறப்பான ஒன்று. பாடல் பகிர்வு நன்று.
பதிலளிநீக்குபீர் பாட்டில்கள் கொண்டு சுற்றுச் சுவர் - மேலதிகத் தகவலுக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
கலக்கலான சாலட்:)) சூப்பர் அண்ணா!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.
நீக்குபாட்டில்களால் சுற்றுச்சுவர்
பதிலளிநீக்குஅப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டியே ஆக வேண்டும் ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதம 6
பதிலளிநீக்குதமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரா !
பதிலளிநீக்குமுதற்கண் தீக்குச்சியால் செய்ப்பட்ட மரம் அருமை !அருமை! என்று பாராட்டத்
தோன்றுகிறது கூடவே இந்த வாரக் குறுஞ்செய்தியும் அனைத்துமே மனதை
கொள்ளை கொண்டன .தங்களின் தேடலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் சகோதரா .த .ம.7
தங்களை எனது இந்தப் பகிர்வைக் காண மகிழ்வோடு அழைக்கின்றேன் ,
http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குவிநாயக சதுர்த்தி விழா சிறப்பாக நடந்ததா? வாழ்த்துகள். தங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி. ஆனந்தயாழை பாடல் கேட்டேன் அருமை.படமும் அருமையாக இருந்தது.எழுந்து நடந்தால் இமயமலையும் வழி கொடுக்கும்.உறங்கிக் கிடந்தால் சிலந்திவலையும் நம்மை சிறை பிடிக்கும். அருமையான சொற்றொடர். வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....
நீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.
ஆனந்த யாழின் இசை இன்னும் மனதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது !சாலட் இனிமை !
பதிலளிநீக்குத ம 9
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குவெகு நாட்கள் கழித்து ஃப்ரூட்சாலட் படிக்கிறேன். சுவை குறையாமல் இருக்கிறது. குறிப்பாக எமன் வாகனத்துக்குள் வந்து அமர்ந்தது அருமை..எத்தனை நபர்கள் திருந்துகிறார்கள் என்று பார்க்கலாம். பாட்டில் சுற்றுச் சுவர் ஆக்கபூர்வமான யோசனை....இமயமலை சாதனையையும் சிலந்திவலை சோதனையையும் சொல்லிக் காட்டுகின்றன. மிக நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குஅனைத்தும் அருமை அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குஃப்ரூட் சாலட் அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஃப்ரூட் சாலட் அருமை !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஃப்ரூட் சலாட் அருமை.
பதிலளிநீக்குஆனந்தயாழ் பாடல் எனக்கும் பிடித்தமானது. பாட்டில்சுவர் நல்ல ஐடியா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குப்ளாஸ்டிக் சுவர் நல்ல யோசனைதான். இற்றை, குறுஞ்செய்தி, வீடியோ என எல்லாமும் அருமை. வத்திக்குச்சி மரம் சூப்பர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்கு