புதன், 13 பிப்ரவரி, 2019

கதம்பம் – சிறுகிழங்கு – மம்ஜாஸ் – NSB ரோட் உலா – உரத் தயாரிப்பு


வாங்க சாப்பிடலாம் - கூர்க்கங்கிழங்கு (அ) சிறுகிழங்கு – 29 January 2019வருடத்தில் இந்த தை மாதத்தில் மட்டுமே கிடைக்கும் கூர்க்கங்கிழங்கை சிறுவயதில் பாட்டி செய்து தந்து சுவைத்திருக்கிறேன்.

 
சென்ற வாரத்தில் காய்க்காரரிடம் எங்கள் குடியிருப்பில் உள்ள பாட்டி ஒருவர் இந்த கிழங்கைப் பற்றிச் சொல்லி வாங்கி வரச் சொன்னார். அதில் நானும் என் பாட்டியின் கைப்பக்குவத்தை நினைவுக்கு கொண்டு வந்து கால் கிலோ வாங்கிக் கொண்டேன்.

நேற்றைக்கு நம்ம அமைதிச்சாரல் சாந்தி சிறுகிழங்கு துவரன் செய்து என் சுவை நரம்புகளை தூண்டி விட்டுட்டாங்க. என்னவரும் இந்த கிழங்கை சுவைத்ததில்லை என்றும் சொல்லவும். இதோ மதிய உணவுக்காக சுடச்சுட தேங்காய் எண்ணெய் மணத்துடன் கூர்க்கங்கிழங்கு பிரட்டல்.

நேற்றைக்கே முடிவு செய்து விட்டதால் இரவே தண்ணீரில் கிழங்கை போட்டு வைத்துவிட்டேன். காலையில் மண்ணெல்லாம் சுத்தம் செய்து கத்தியால் தோலை சுரண்டி எடுத்தேன்.

சுத்தம் செய்த கிழங்கை சுடுநீரில் உப்பும், மஞ்சள் பொடியுடன் வேகவிட்டு, தண்ணீரை வடித்து, வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்புகளைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று. அதை தாளிப்புகளுடன் பிரட்டவும். இதனுடன் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டினால் தயார்.

உரத் தயாரிப்பு – 29 January 2019நம்ம உரத் தயாரிப்பை ஆரம்பிச்சு ஏறக்குறைய ஒரு வாரம் ஆகப் போகிறது. ஏற்கனவே சென்ற வருடத்திலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து தந்ததால் உரம் தயாரிக்க எளிதாக இருக்கிறது.

வாங்கிய Trust bin ல் கொடுத்துள்ள பொருட்கள். குழாய்களுடன் கூடிய இரண்டு பக்கெட்டுகள், கம்போஸ்ட் மேக்கர், வெல்லம் சிறிதளவு, ஒரு செங்கல் அளவு தேங்காய் நார்த்தூள் - இவ்வளவே.

முதலில் குழாய்களை பக்கெட்டுக்குள் சரியாக பொருத்த வேண்டும். அரை வாளித் தண்ணீரை பக்கெட்டுக்குள் விட்டுப் பார்த்தால் கசிவு ஏதேனும் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம்.

ஈரமில்லாத பக்கெட்டுக்குள் கொடுத்திருக்கும் சிறிதளவு வெல்லத்தை தூவிக் கொள்ளவும். அதன் மேல் வடிகட்டி போல் உள்ளதை வைத்து ஒரு செய்தித்தாளை போட்டு அன்றாட சமையலறைக் கழிவுகளை போட ஆரம்பிக்கலாம்.

நாலாப்புறமும் தூவினாற் போல் போட்டு அதன் மேல் கம்போஸ்ட் மேக்கரை தூவி விடவும். அழுத்தியும் விட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் காய்கறிக் கழிவுகளை கம்போஸ்டரில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

இதே போல் அன்றாடம் செய்து பக்கெட் நிரம்பியதும் பதினைந்து நாட்கள் வைத்திருந்தால் அவை உரமாக மாறியிருக்கும். அந்த பதினைந்து நாள் இடைவெளியில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குழாய் வழியே வெளிவரும் நீரை பிடித்துக் கொள்ளலாம். இவை சிறந்த பூச்சிக்கொல்லி.. இந்த நீருடன் 1:30 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து மரங்களுக்கும், செடிகளுக்கும் தெளிக்கலாம். இல்லையென்றால் உங்கள் வீட்டு சமையலறை சிங்க்கிலேயே விட்டு விடலாம். அடைப்புகள் நீங்கி சுத்தமாகும்.

அந்த இடைப்பட்ட நாட்களில் இன்னொரு பக்கெட்டில் இதே முறையில் போட்டுக் கொண்டு வரலாம்.

YouTube-ல் composting என்று தேடினால் ஏராளமான வீடியோக்கள் உள்ளது. அவற்றைப் பார்த்தாலே போதும். மிகவும் எளிது.

N.S.B ரோட்டில் ஒரு உலா – 30 January 2019நேற்றைக்கு மலைக்கோட்டை வரை சென்று வந்தோம். N.S.B ரோட்டில் எப்போதுமே ஜனநெருக்கடி இருக்கும். நேற்றைக்கு சற்றே நிதானமாக நடக்கலாம் என்கிற அளவில் தான் இருந்தது.

சாரதாஸில் அலைகடல் என மக்கள் கூட்டத்திற்குள் நீச்சலடித்து சென்றதுண்டு. இப்போது ஆங்காங்கே ஓரிருவர் தான் போணி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு துணியெடுத்தாலும் அதனுடன் பத்து பிளாஸ்டிக் கவர்களை திணித்து தந்த கடையில் நேற்று ஒரே ஒரு துணிப்பையில் போட்டு தந்ததும் மகிழ்ந்தேன்.

முன்பெல்லாம் மஞ்சப்பையில் தான் பட்டுப்புடவை பெட்டியையே வைத்து தருவார்கள். பிளாஸ்டிக் கவர்கள் வந்ததும் எல்லாம் தலைகீழாச்சு :(

மங்கள் & மங்கள் பாத்திரக்கடலிலும் வாயிலிலேயே மண் ஜாடிகளையும், மண்ணாலான தண்ணீர் பாட்டில்களையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். மக்கள் அலுமினியம், எவர்சில்வர் மற்றும் மரப்பொருட்களையும் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கும் எந்த பொருள் எடுத்தாலும் அதற்க்கேற்ற அளவில் பிளாஸ்டிக் கவர்களை தருவர். சின்ன டப்பாவானாலும் சரி பெரிய அண்டாவானாலும் சரி!!! ஆனால் இப்போது பொருட்களுக்கு தகுந்தாற்போல் துணிப்பைகள்.

வெளியே வந்ததும் வழக்கமாக செல்லும் ஜிகிர்தண்டா கடைக்குச் சென்றோம். காத்திருந்தால் தான் உட்கார இடம் கிடைக்கும். ஆனால் நேற்று அங்கும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

எப்போதும் முப்பது ரூபாய்க்கு பிளாஸ்டிக் தம்ளரில் ஐஸ்க்ரீம் மிதக்கும் ஜிகிர்தண்டாவை சுவைத்த நாங்கள் நேற்று கண்ணாடித் தம்ளரில் சுவைத்தோம். ஏனோ ஸ்பூன் மட்டும் பிளாஸ்டிக். தவிர்க்க முடியாதோ?

சாலையோரக் கடைகளில் மடல்களை நீக்கி ஆய்ந்து வைத்திருந்த வாழைப்பூ, பனங்கிழங்கு, மரவள்ளி, சிறுகிழங்கு, மிதிபாகல் என வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

அப்படியே தெப்பக்குளத்தை வலம் வந்து கடைகளை கண்களால் வியாபாரம் செய்து விட்டு பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

இதே நிலை நீடித்து மக்கள் தங்கள் கைகளில் துணிப்பைகளை எடுத்துக் கொண்டு தான் வெளியே கிளம்பணும். கடைகளிலும் எக்காரணத்தைக் கொண்டும் கவர்களை தந்துவிடக்கூடாது. இப்படியிருந்தால் தான் சிறிதளவேனும் இப்புவியைக் காப்பாற்றலாம்.

மம்ஜாஸ் – 3 February 2019நேற்று கடைத்தெருவில் வாங்கிய கல் உரல்!!!  இதில் இஞ்சி போன்றவற்றை இடித்து நசுக்கலாம். ஆனா கரண்ட் இல்லன்னா அவசரத்துக்கு சட்னி, சாம்பாருக்கு அரைக்கலாம். புது கல்லா இருக்கேன்னு கொஞ்சமா அரிசி அரைச்சேன். ஹிந்தியில் இதன் பெயர் மம்ஜாஸ்!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

56 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  கூர்க்கங்க்கிழங்கு ஆஹா மிகவும் பிடிக்கும்...எங்கள் ஊர்ப்பகுதிகளில் வருடம் முழுவதும் கூடக் கிடைக்கும் அதுவும் திருவனந்தபுரத்தில்...கிடைக்கும் ஆனால் விலை கூடுதலாக இருக்கும் சீசன் தவிர நாட்களில் இதோ வரேன் பதிவுக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   நான் கூர்க்கங்கிழங்கு இப்போது தான் முதல் முறை உண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  2. திருவனந்தபுரத்தில் தற்போது கிலோ 60 ரூ. கிழங்குகள் உருளைக்கிழங்கு சைசில் கிடைக்கின்றன.
   Jayakumar

   நீக்கு
  3. திருச்சியில் எவ்வளவு என்று நினைவு இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. குட்மார்னிங்.

  இதுவரை நான் சாப்பிட்டே இராத இந்த சிறுக்கிழங்கு சமீபகாலமாய் அதிகம் என்னைக் கிராஸ் செய்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   நான் இப் பயணத்தில் தான் முதன் முதலாக கூர்க்கங்கிழங்கு சாப்பிட்டேன்

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. @ஸ்ரீராம் :)))))) இருங்க இன்னும் அதிகமா உங்களை க்ராஸ் செய்யபோது நான் நாளைக்கும் சேட்டன் கடைக்கு போய் வாஙிவாரேன்

   நீக்கு
  3. ஹாஹா.... தில்லியில் கிடைக்க வாய்ப்பில்லை. கிடைத்தால் நானும் செய்திடுவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 3. உரத்தயாரிப்பு : சென்ற உங்கள் ஒருபதிவில் உரம் பற்றி நான் ஒருகோ கேட்டிருந்தேனா, அதை கேஜிஎஸ் படித்திருக்கிறார். ''அதென்ன, நாமே உரத்தயாரிப்பு பற்றி எழுதி இருக்கிறோம்.. அங்கே கேள்வி கேட்டிருக்கிறாய்...'' என்று!

  இதில் இருந்து இரண்டு விஷயங்கள் எனக்குத் தெரிந்தது! ஒன்று நான் எங்கள் பதிவுகளை சரியாய் உள்வாங்கிப் படிக்கவில்லை! இரண்டாவது என்ன என்று நீங்கள் சொல்லுங்கள்பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் நான் அன்று னினைத்தேன் எபியில் கூட இந்த தோட்டக்கலை, மாடித்தோட்டம், உரம் பற்றி எல்லாம் வந்ததே என்று...அப்புறம் இங்கு கருத்து சொல்ல முடியாம போனது...

   எனக்கு என் பதிவுகள் கூட சில சமயம் நினைவு இருப்பதில்லை....துளசிதான் நன்றாக நினைவு வைத்து கரெக்ட்டாகச் சொல்லுவார்...ஹிஹிஹிஹிஹி

   ஆனால் மற்றவர்கள் எழுதியிருந்தால் அது மனதில் பதிந்திருந்தால் கண்டிப்பாக நினைவுக்கு வந்துவிடுகிறது!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  2. ஹாஹா..... சில பதிவுகளை மேலோட்டமாகப் படிக்கும்போது நினைவில் இருப்பதில்லை.

   இரண்டாவது விஷயம் - எனக்குத் தோன்றியது - கேஜிஎஸ் அவர்களும் இங்கே வருவதுண்டு ஆனால் அவரது கருத்துக்களை சொல்வதில்லை என்பது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. //எனக்கு என் பதிவுகள் கூட நினைவில் இருப்பது இல்லை// ஹாஹா.... சமீபத்தில் என்னுடைய சில பழைய பதிவுகளை மீண்டும் படிக்க நேர்ந்தது. தலைப்பு பார்த்து என்ன எழுதி இருப்போம் என யோசித்து கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  4. //கேஜிஎஸ் அவர்களும் இங்கே வருவதுண்டு ஆனால் அவரது கருத்துக்களை சொல்வதில்லை என்பது!//

   அதே... அதே... கே ஜி ஒய், கேஜிஜி ,சுஜாதா போன்றோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

   நீக்கு
  5. ஹாஹா... சரியாக நீங்கள் நினைத்ததை நானும் நினைத்து இருக்கிறேன். மகிழ்ச்சி.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ஜிகர்தண்டா இதுவரை ஒரே முறை மதுரையில் சாப்பிட்டிருக்கிறேன். அது என்னவோ மதுரையில்தான் அதைச் சாப்பிடவேண்டும் என்று மனதில் தோன்றும்! அதேபோல நான் சாப்பிடாத இன்னொரு ஐட்டம் பலூடா! என்கூட வந்தவர்கள் அதை ஆர்டர் செய்து சாப்பிட்டால் கூட எனக்கு அதைச் சாப்பிடவேண்டும் என்று தோன்றியதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை வழியே ஒன்றிரண்டு முறை சென்றாலும் அங்கே தங்கியதோ, சுற்றியதோ நினைவு தெரிந்து இல்லை. சிறு வயதில் சென்றிருக்கலாம். அதனால் அந்த ஊரின் உணவுகளை வேறு ஊர்களில் தான் சுவைக்க முடிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. சிறு கல்லுரல் பார்க்க அழகாய் இருக்கிறியாது. பெரிதளவு பயன் படுத்துவோமா என்று தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவ்வளவு பயன்படும் என்பது போகப் போகத் தான் தெரியும்... ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. கூர்க்கங்கிழ்ங்கு பொரியல் பிரட்டல் இதே முறைதான்...

  இந்தக் கல்லுரல் நானும் வைத்த்ருக்கேன்....

  உரம் தயாரிக்கும் முறை சென்னையில் ஒரு நர்ஸரியில் இந்த கம்போஸ்ட் விக்கிறாங்க அதை வாங்கி ஒரு முறை நீங்க சொல்லியிருப்பது போலத்தான் ஆனால் அந்தக் குழாய் சமாச்சாரம் என்னவென்று புரியலை...செய்ய முயற்சித்ததுண்டு. உங்கள் முயற்சி சூப்பர் ஆதி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உரம் தயாரிக்க Trust Bin என்ற இரு பக்கெட் வாங்கி இருக்கிறோம். அதில் கீழ்ப்பக்கத்தில் ஒரு குழாய் உண்டு. அதன் மூலம் இரண்டு நாளுக்கு ஒரு முறை, குப்பையில் சேரும் நீரை வெளிநேற்ற முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 7. ஜிகிர்தண்டா சுவைத்ததுண்டு. ஆனால் என்ன அதில் சர்க்கரை மிக மிக அதிகம் போடுகிறார்கள் கடையில். நான் வீட்டில் தயாரிக்கும் போது அத்தனை போடுவதில்லை. எனக்குப் பிடித்திருந்தாலும் சாப்பிட முடியாதே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடித்து இருந்தாலும் சாப்பிட முடியாது! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 8. சிறுகிழங்கு கிராமத்தில் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெய்வேலி நகரில் சுவைத்தது இல்லை. தில்லியில் கிடைப்பதாக தெரியவில்லை. இம்முறை தான் சாப்பிட முடிந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. மிக்ஸியில் அரைப்பதற்கும் கல்லுரலில் இடித்து செய்வதிலும் ருசி வேறுபடுகின்றது. தொக்கு போனறவை கல்லுரலில் இடித்து செய்யும்போது கிடைக்கும் ருசி தனி. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சிறு துண்டு இஞ்சி, தேங்காய் துருவல், எல்லாம் சேர்த்து கல்லுரலில் இடித்து சம்பல் செய்து பாருங்கள்.அதன் ருசியே தனி. கல்லுரல் தற்போது அமெரிக்காவிலும் கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. கல்லுரலில் அறைக்கப்படும் போது சுவை அதிகம் தான்.

   சம்பல்... எனக்கும் பிடிக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. இந்தக் கல்லுரல் நானும் வைச்சிருக்கேன். ஆனால் வெறுமனே தேங்காய் உடைக்க மட்டும் பயன்படுத்துகிறேன். எதுவும் அரைச்சது இல்லை. ஆதி ஏற்கெனவே முகநூலில் போட்டிருந்தார். அப்போவோ சொல்ல நினைச்சுச் சொல்லலை. இதில் அரைத்தால் உரல் உள் ஆழம் அதிகம் இல்லாததால் வெளியே வழியுமோனு சந்தேகம். சிறுகிழங்கு இங்கே வாங்க முடிவதில்லை. அவருக்கெல்லாம் இது பற்றித் தெரியாது என்பதால் எப்போவானும் அதிசயமா வாங்கிட்டு வருவார். :) எனக்கு அந்த வாசனையே ரொம்பப் பிடிக்கும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லுரல் அல்ல! மிகச் சிறிய அளவிலானது இந்த மம்ஜாஸ்.

   சிறு கிழங்கு வாசனை எனக்கும் பிடித்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. சின்னது தான் வெங்கட். எங்களிடமும்! படம் எடுத்துப் போடறேன். ஏற்கெனவே ஆதி மூடி போட்ட ஜாடி ஃபோட்டோ கேட்டிருந்தார். எடுக்க மறந்தே போகிறது. இதை விடச் சின்னதாக மருந்துகள் அரைக்கும் கலுவமும் வட மாநிலங்களில்மார்பிளில் கிடைக்கும். என்னிடம் இருந்தது. பேத்திகள் வந்திருந்தப்போ உடைச்சுட்டாங்க! :)))) இப்போக் குட்டியான ஸ்டீல் உரல் (பாக்கு இடிக்கிறாப்போல்) வைச்சிருக்கேன். இங்கே கோயில் கடையில் வாங்கினது தான்.

   நீக்கு
  3. இங்கேயும் ஸ்டீல் உரல் கிடைக்கிறது. ஹிண்டாலியத்திலும் உண்டு. முன்னர் என்னிடமும் இருந்தது. யாருக்கோ கொடுத்துவிட்டேன் என நினைவு - வீட்டில் இல்லை என்பது நிச்சயம்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 13. I love Trichy. In Main guard gate area, we can buy whatever things we want with cheap and good quality. Your narration, brought me the fond memories of going with my family in those days. I feel refreshed.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ உங்களுக்கும் திருச்சி தான் ஊர் அல்லவா... உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 14. ஓ அஞ்சு பக்கம் பார்த்த சிறுகிழங்கு.. இதேபோலவே உருளையில் செய்வேன் நான். எங்காவது சிறுகிழங்குச் செடி வீடியோ அல்லது படமாவது கிடைத்தால் யாராவது போடுங்கோ, பார்க்க வேண்டும் அது எப்படி என, இலைகள், கொடி எப்படி என.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுகிழங்கு பற்றிய காணொளி, படம் இணையத்தில் இருக்கலாம். இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவி அமுதம் அதிரா..

   நீக்கு
 15. //

  //இதே போல் அன்றாடம் செய்து பக்கெட் நிரம்பியதும் பதினைந்து நாட்கள் வைத்திருந்தால் அவை உரமாக மாறியிருக்கும்.//

  இது ஏசியன் கன்றீஸ் க்கு மட்டுமே பொருந்தும், நானும் இப்படிச் சேர்த்துவிட்டு, பின்பு பார்த்தால்.. ஹையோஓஓஓஓஒ கை கால் எல்லாம் கூசுது ஒரே புழுவாக இருந்துதே....அய்க்க்க்க்:).. அத்தோடு அதனை விட்டு விட்டேன்.

  என்னிடம் மர உரல் இருக்கு குட்டி, இப்படி ஒரு கல்லுரல் வாங்க ஆசை, இப்போ சிறிய அம்மியும் கிடைக்குது, ஆகச் சிறியது அல்ல, ஓரளவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மர உரல் - இப்போதெல்லாம் மர உரல் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஆந்திராவில் இந்த மர உரல் பார்த்து பயன்படுத்தி இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவி அமுதம் அதிரா.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  சிறு கிழங்கு பொடித்துவல் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் சொல்வது போல் பொங்கலை ஒட்டித்தான் இதன் வரவு அதிகமாக இருக்கும். பொங்கலுக்கு மறுநாள் இதை கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென சேர்ப்போம். சில மாதங்களில் இது கிடைப்பதே அரிதாகி விடும். .தங்கள் செய்முறைப்படி தேங்காய் சேர்த்து பிரட்டல்தான். இதன் மண் வாசனை தின்னும் ஆசையை அதிகமாக்கும். ஆனால் வாயுத் தொல்லையை தரும் என்பதால் அதிகம் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

  முற்றம் இருந்தால்தான் குப்பையை உரமாக்கும் விஷயத்தை பற்றி யோசிக்க முடியும். விபரத்திற்கு நன்றிகள்.

  கல்லுரலில் அரைப்பது போல் எதுவும் வராது. அதன் மனமே தனிதான். கொஞ்ச நாளில் அம்மி, ஆட்டுக்கல் என்று பழைய உபயோகம் வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. கதம்பம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்ச நாளில் அம்மி, ஆட்டுக்கல் என பழைய உபயோகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! வரட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 17. கதம்பம் - திருநெல்வேலி கதம்ப அவியல்போல் அருமை.

  இந்த கல்லுரலைப் போல தில்லியில் பளிங்குக் கல்லுரல் கிடைக்கும். ஹிந்தியில் இதன் பெயர் மம்ஜாஸ் என்று இன்று தெரிந்து கொண்டேன். (நான் மும்தாஜ் - ன்னு படிச்சிட்டேன்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிந்தி பெயர் தெரிந்து கொண்டீர்களா? எனக்கு முன்னரே தில்லி வந்தவர் நீங்கள் அண்ணாச்சி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 18. சின்ன உரல் ஸ்ரீரங்கத்துலதான் வாங்கி வந்தேன். ஆனா, அது நடந்து 2 வருசமாச்சு. கூர்க்கிழங்கு எங்கூர்ல கிடைக்காதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி...

   நீக்கு
 19. இந்த சிறு கிழங்கை நானும் எதேச்சையா தமிழ்மணத்தில் சாந்தி அவர்களின் பிளாக்கில் பார்க்க அடுத்த நாளே கிடைச்சு கொஞ்ச்ம மாறுதலா செய்தேன் இந்த முறையில் செய்யணும் .செம ருசி இந்த கிழங்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமைதிச்சாரல் சாந்தி மாரியப்பன் அவர்கள் தளத்தில் நாங்களும் பார்த்தோம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 20. முந்திலாம் அருண் ஐஸுக்கு கப்போட மர ஸ்பூன் தருவாங்க அதுமாதிரி தரலாம் .கம்போஸ்ட் நானும் செய்றேன் ஆனா பக்கெட்டில் ஹோல்ஸ் போட்டுட்டு தோட்டத்தில் வச்சிட்டேன் நீர் தானா வெளியேறிடும் நிலத்துக்கு போய்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மர ஸ்பூன் நல்லது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்....

   நீக்கு
 21. இன்னும் திருச்சியில் இருகிறீர்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை மது... அடுத்த முறை சந்திப்போம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 22. கூர்க்கங்கிழங்கு எனக்குப் பிடிக்கும் அதன்வாசனையே அலாதி என் டகவல் சரியானால் செறு கிழங்கும் கூர்க்கங்கிழங்கும் வேறுவேறு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா...

   நீக்கு
 23. கூர்க்கங்கிழங்கை ஒரு துணிப்பொதியில் போட்டு துவைக்கிறமாதிரி அடித்தால்சுலபமாக தோல் வந்து விடும் என்பாட்டி செய்வதைப் பார்த்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல யுக்தி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....