புதன், 20 பிப்ரவரி, 2019

ஒரு தையல்நாயகி உருவாகிறார்…நம்முடைய உடையை நாமே தைத்துக் கொள்வது என்பது பெரிய விஷயம். நல்ல டெய்லர் அமைவது என்பது வரம்!!! திருமணத்திற்கு முன் கோவையில் பக்கத்து வீட்டு தனலட்சுமி என்கிற தனா அக்காவிடம் கொடுத்து வந்தேன். அக்கா வேறு வீடு மாறிப் போன பின்பும் அப்பா ஆஃபீஸுக்கு போகும் வழியில் கொடுத்து விட்டுச் செல்வார்.
 
திருமணத்திற்கு பின் என் மாமியாரே எனக்கு ப்ளவுஸ் தைத்து தர ஆரம்பித்தார். ஏறக்குறைய 40 வருடங்களாக தைத்து வருகிறார். எனக்கே நிறைய ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்திருக்கிறார். ஒவ்வொன்றும் அவ்வளவு கச்சிதமாக இருக்கும்.

ப்ளவுஸுக்கு வெட்டும் போது எனக்கு காண்பிப்பார். ஹூக்கு தைக்க, ஹெம்மிங் பண்ண சொல்லிக் கொடுத்தார். ஆனால் அவருடைய தையல் மிஷினை இதுவரை என்னை தொட அனுமதித்ததே இல்லை. அவர் தைக்கும் போது கண்ணால் பார்த்ததோடு சரி.

மகள் சிறு குழந்தையாக இருந்த போது டெல்லியில் எங்கள் வீட்டருகில் இருந்த தையற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றேன். மகளுக்கு வேண்டிய பால், பிஸ்கட், துணி என்று எல்லாவற்றையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு, மகளையும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு செல்வேன்.

வடக்கே பெடல் பண்ணும் மிஷின்களை யாரும் வைத்திருப்பதில்லை. அங்கு கைகளால் சுத்தும் மிஷின்கள் தான் இருந்தன. பாயில் அமரவைத்து சொல்லிக் கொடுத்தார் அந்தப் பயிற்சியாளர். இரண்டு, மூன்று நாட்கள் தான் சென்றிருப்பேன். என் கவனம் முழுவதும் மகள் கீழே கிடக்கும் கொக்கி, ஊசி என்று எதையாவது எடுத்து வாய்க்குள்ளோ, மூக்கு உள்ளேயோ, காது உள்ளேயோ போட்டுக் கொண்டு விடுவாளோ என்று தோன்றியது.

பெரியவர்கள் துணையில்லாமல் வளர்த்த குழந்தையல்லவா!!! கணவரும் காலையில் சென்றால் மாலை தானே வீடு திரும்புவார். தையலில் புத்தி செல்லவில்லை.

இப்படியிருக்க என்னவர் ஒரு தீபாவளி சமயம் USHA கம்பெனியின் "கையால் சுத்தும் மிஷின்" ஒன்று வாங்கி வந்தார். அம்மாவைப் பார்த்தே வளர்ந்ததால் என்னவருக்கு தையல் தெரிந்திருந்தது.

அவரே எனக்கு சொல்லித் தந்தார். தினமும் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து "இதை தைத்து வை" என்று சொல்லி அலுவலகம் செல்வார். மாலை வந்து பார்த்து தவறுகளை சுட்டிக் காட்டுவார்.

இப்படித் தான் புடவைகளுக்கு ஓரம் அடிக்கவும், உடைகளை சரி பண்ணிக் கொள்ளவும், தலையணை உறைகள் தைக்கவும் கற்றுக் கொண்டேன். டெல்லியை விட்டு இடம்பெயர்ந்ததும் மிஷினை அங்கேயே விட்டு வந்தாச்சு. எடுத்து வரவும் முடியலை.

இனி மாமியாரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே டெய்லரிடம் கொடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். என்னவென்று சொல்ல!!

வெறுத்துப் போய் புதிதாக ஒன்று வாங்க வேண்டும் என முடிவெடுத்து சிறுகச் சிறுக சேமிக்கத் துவங்கி, இதோ வாங்கியும் விட்டேன். எல்லா வித வசதிகளும் இதில் இருக்கு. YouTube ல் பார்த்து கற்று வருகிறேன்.

விரைவில் என்னுடைய உடைகளை நானே தைத்துக் கொண்டால் போதும். மகளுக்கும் இதில் ஆர்வமிருக்கு.

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்...

என்றென்றும் அன்புடன்

ஆதி வெங்கட்

முகநூலில் பகிர்ந்தபோது கிடைத்த சில கருத்துகள் இங்கே பதிவின் ஒரு பகுதியாக…..

S MalarVizhi Amudhan: சூப்பர் அசத்துறிங்க எல்லாத்துலயும்.

Jayashree Seshadri: செம நாம் தைத்த ஆடையை அணிவதே சுகம் தான்.

Sreemathi Ravi: உங்கள் மாமியார் தைக்கும் போது அருகிலிருந்து பார்த்தவள் நான். அவர் பாடிக்கொண்டே வேலை செய்வது ... எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது, எல்லா வேலைகளையும் தன்னந்தனியே செய்தது, வாழ்க்கையைப் பற்றிக் குறையேதும் சொல்லாமலிருந்தது, எல்லாம் எனக்கு மிகுந்த inspiration ஆக இருந்தது என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது..!!

Geetha Sambasivam: என்னோட துணிகளை நானும் ஒரு காலத்தில் நானே தைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் மிஷினை விற்கும்படி ஆயிற்று. பெடல் மிஷின்! மெரிட். சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக என்னுடன் இருந்தது. அன்னிக்கு அழுதிருக்கேன்! :( கல்யாணத்துக்கு முன்னாடியே தைப்பேன். இப்போ எந்த டெயலர் தைத்துக் கொடுத்தாலும் பிடிப்பதில்லை. ஒரே ஒரு டெய்லர் மட்டும் ஶ்ரீரங்கத்தில் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

Jeysri Ramesh Deisti: இப்ப வரைக்கும் என்னோட ப்ளவுஸ், சுடிதார் எல்லாமே நானேதான். இப்ப கூட ஒரு ப்ளவுஸ் முடிச்சு கை embroidery செய்யறேன் முடிஞ்சதும் போஸ்ட் போடுறேன்.

Kumar Chandramouli: ஓ… வெங்கட்டுக்கு தைக்கத் தெரியுமா.

Shanthy Mariappan: என் துணிகளையும் நானே தைத்துக்கொண்டிருந்தேன். அப்ப எங்கிட்ட பெடலிங் மெஷின் இருந்தது. சுமார் பதினைந்து வருடங்கள் வரை நன்றாக உழைத்தது. அப்புறம் முதுகு வலி காரணமாக அதிக நேரம் அதில் உட்கார முடியாது போனதால் எக்சேஞ் ஆஃபரில் அதைப் போட்டு விட்டு மோட்டார் வைத்த டேபிள் டாப் மெஷின் வாங்கி விட்டேன். இப்போதெல்லாம் துணிகளில் சின்னச்சின்ன ரிப்பேர் வேலைகளைச் செய்வதோடு சரி. ப்ளவுஸ் தைக்க இங்கே கடை வைத்திருக்கும் ஒரு பஞ்சாபிப் பெண்ணிடம் கொடுக்கிறேன். நல்லா தைக்கறாங்க.

Rishaban Srinivasan: உங்களவருக்குத் தெரியாதது இன்னும் என்ன பாக்கி இருக்கு?! திருஷ்டி சுத்திப் போடவும்!

40 கருத்துகள்:

 1. குட்மார்னிங். வெங்கட்.... உங்களுக்கு தையலும் வருமா? ரிஷபன்ஜியின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   அரைகுறையாக பலதையும் தெரிந்து கொள்வதில் என்ன பலன்! ஹாஹா Jack of all master of none!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. கையாலேயே தைக்கும் தையல் மெஷின்கள் பற்றி விளம்பரங்களில் பார்க்கும்போது இவ்வளவு சுலபமா என்று தோன்றும். விலையும் குறைவாய்த்தானே சொல்கிறார்கள் என்றும் தோன்றும். நான் கை ஊசி கொண்டு சிறு தையல்கள் சிறுவயதில் செய்ததுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கையால் தைக்கும் சிறு மெஷின்கள் தலைநகரில் நிறைய விற்பார்கள். அப்படி ஒன்றும் பலன் உடையது அல்ல அந்த மெஷின். சின்னச் சின்னதாக தையல் வேலைகள் செய்யலாம். அவ்வளவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. அம்மாவின் பெருமை தெரிகிறது. பாராட்டுகளும், நமஸ்காரங்களும். சீக்கிரமே திருமதி வெங்கட் தையலில் சிறந்துவிளங்க வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. இப்போவும் தைக்க முடியவில்லையே என்னும் வருத்தம் என்னிடம் இருக்கு! என்ன இருந்தாலும் நாமே தைத்துப் போட்டுக்கொள்வது போல் வருமா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமே தைத்துப் போட்டுக் கொள்வது போல் வருமா... நிச்சயம் வராது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. விரைவில் டெய்லரிங் ஷாப் திறக்க வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 7. டெய்லரிங் ஒரு கலை. ஆண்களின் சட்டை பேண்ட்டும் சிலரால் மட்டுமே சரியாக தைக்க முடிகிற்து ஆண்கள் எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து விடுகிறோம். அதில் என்ன குறை இருக்கிறது என்று தெரியாத அளவில்தான் இருக்கிறோம். யாராவது சொல்லும்போதுதான் தெரிகிறாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 8. சூப்பர் வாழ்த்துக்கள் ..

  என்கிட்டே சிங்கர் machine இருக்கு இது போலவே 13 வருடம் ஆச்சு வாங்கி ..என்னுடைய சுடிதார் , blouse மற்றும் அம்மா க்கும் நான் தான் டைலர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 9. எந்த வேலை என்றாலும் "கண்களால் பார்ப்பதை கைகள் வேலை செய்ய வேண்டும்" என்பார் எனது தந்தை... திறமை வாய்ந்த ஒரு தையற்காரர் தைப்பதை விட, எனது தந்தை அசத்துவார்...

  நானும் முயற்சி செய்து, எனக்கொரு சட்டை தைத்தேன்... அதை போடும் போதெல்லாம், மனம் வானத்தில் பறக்கும்...

  குறிப்பு : தைப்பதை விட, தைத்ததை பிரிப்பது சிரமம்... ஆனால், அதில் கற்றுக் கொள்வது தான் அதிகம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தைத்ததை பிரிப்பது சிரமம். உண்மை.

   உங்கள் தந்தை பற்றிய நினைவுகள் சிறப்பு. பாராட்டுகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. எந்த கிராஃப்டா இருந்தாலும் சீக்கிரத்துல கத்துப்பேன். ஆனா, இந்த தையல்மட்டும் எங்கிட்ட வருவேனாங்குது?! இத்தனைக்கும் மெஷின் இருக்கு. 3 கிளாசுக்கு போய் வந்தும் மெஷின்ல உக்காரனும்ன்னாலே வேப்பங்காயா கசக்குது..

  சீக்கிரத்துல தையல் பழகி எனக்கொரு பிளவுஸ் தைத்து கொடுங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விஷயங்கள் சுலபத்தில் வந்து விடுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 11. தையல் நாயகி என்று படித்ததும் எனக்கு வைத்தீஸ்வரன் கோவில் அருகே இருந்த தையல் நாயகி உணவு கடைதான் நினைவுக்கு வந்தது என்மனைவிக்கு தையல் தெரியும் ஆனால் தன் துணிகளை வேறு யாராவதுதான் தைத்துக் கொடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. வெங்கட் தையல் நாயகரா! வெரிகுட்!

  தமிழில் தையலர் என்பதுதான் ஆங்கிலத்தில் டெய்லர் என்று ஆகி இருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாவ் அண்ணாச்சி உங்க கமெண்டை ரொம்ப ரசித்தேன்!! தையல் நாயகர்! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. தையல் நாயகரா! ஹாஹா... :) ஏன் இந்த வார்த்தை விளையாட்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
  3. ஆஹா.. நீங்களும் அண்ணாச்சியோட சேர்ந்துட்டீங்களா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 13. சீக்கிரம் தைக்க கற்றுக்கொண்டு, இங்கே வந்து ஒரு கடையை திறங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... ஆஸ்திரேலியாவுக்கு கூப்பிடறீங்க! மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 14. ஆதி வணக்கம்..

  தையல் நாயகி என்றதும் அன்று பார்த்தாலும் கமென்ட் போட முடியலை பயணத்தில் இருந்ததால்...

  //திருமணத்திற்கு பின் என் மாமியாரே எனக்கு ப்ளவுஸ் தைத்து தர ஆரம்பித்தார். ஏறக்குறைய 40 வருடங்களாக தைத்து வருகிறார். எனக்கே நிறைய ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்திருக்கிறார். ஒவ்வொன்றும் அவ்வளவு கச்சிதமாக இருக்கும்.//

  சூப்பர்!!! வாவ்! மாமிக்கு என் வணக்கங்கள்.

  ஆதி தையல் மெஷின் மட்டும் பக்குவப்பட்டுவிட்டால் வேறு யாரேனும் பயன்படுத்தினால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் மீண்டும் நம் கைக்கு வரும் போது . எப்படி டூ வீலர், கார் போன்றவை நாம் ஓட்டிப் நம் பக்குவத்தில் இருப்பது வேறு ஒருவர் ஓட்டி விட்டு வந்தால் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும். ப்ரேக் பிடித்தல் என்று பலவற்றில். அதே போல தோசைக்கல்...ஆப்பச் சட்டி....நான் முன்பெல்லாம் தோசைக்கல் ஆப்பச்சட்டி இவற்றில் வேறு யாரையும் செய்ய விட மாட்டேன். ஆனால் இப்போதெல்லாம் பழகிவிட்டது...யாரேனும் அதில் செய்தாலும் மீண்டும் அதை பழக்கப்படுத்த...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி/கீதா, உண்மை நீங்க சொல்வது. நானும் அடுப்பை ரொம்ப எரிய விடாமல் தோசை வார்ப்பது, வறுப்பது, பொரிப்பது எனச் செய்வேன். எண்ணெய் நிறம் மாறாமல் கடைசிவரை இருக்கும். ஒரு சிலர் சீக்கிரமா ஆகணும்னு நினைப்பில் அடுப்பைப் பெரிசா எரிய விட்டு பக்ஷணங்கள் செய்கையில் எண்ணெயைக் கறுப்பா ஆக்கிடுவாங்க. அதுக்காகவே நானும் யாரையும் விட மாட்டேன். நம்ம ரனக்க்ஸ் இப்போக் கூட உனக்கு வேறே யார் செய்தாலும் பிடிக்காதுனு கிண்டல்/சில சமயம் உண்மையக/ சொல்லிட்டே இருக்கார். பண்டமும் பாழ், பாத்திரமும் பாழ்னு ஆயிடுமே, அது புரிய மாட்டேங்குதேனு நினைப்பேன். தையல் மிஷினும் அப்படித் தான் வைச்சிருந்தேன். :(

   நீக்கு
  2. ஆமாம் கீதாக்கா நானும் அடுப்பை நிதானமாக வைத்துதான் செய்வேன். எப்போதுமே..நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும்...அதே போல எண்ணைய்ப் பண்டங்களை பொரித்ததும் அப்படியே எடுத்து வடி தட்டிலோ இல்லை டப்பாவிலோ போடாமல் கரண்டியில் அந்த எண்ணெய் முழுவதும் வடிந்த பிறகுதான் வெளியில் பாத்திரத்தில் போடுவேன்...கண்/வடி தட்டில் கூட எண்ணெய் இருக்காது வடிதட்டின் அடியில் எதுவும் வைக்க வேண்டாம் என்பதாக...இது என் அம்மா வழிப்பாட்டிக்கு எண்னெய்ப்பண்டங்கள் வெளியில் எடுத்துப் போடும் போது எதில் போடுகிறோமோ அதில் எண்னெய் ஒட்டாமல் நன்றாக வடித்துப் போட வேண்டும் என்று பயிற்சி. அதனாலேயே வடி தட்டு கூட வைத்துக் கொள்ளாமல் செய்யச் சொல்லி அடுப்பிலும் எண்ணெய் சிந்தி எண்ணெய்ப் பண்டம் செய்திருக்கும் அடையாளமே தெரியக் கூடாது என்று பழக்கப்படுத்தி..அதுவே பழகிவிட்டது...

   கீதா

   நீக்கு
  3. அம்மா நிறையவே தைத்திருக்கிறார். சில தீபாவளி நாட்களில் விடிகாலை நான்கு மணி வரை தைத்துக் கொண்டிருப்பார். உழைப்பு, கடின உழைப்பு அவருடையது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  4. உனக்கு யார் செய்தாலும் பிடிக்காது - ரங்க்ஸ்! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  5. நம்மை மாதிரியே அடுத்தவர்களும் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 15. நானும் என் சுடிதார், டாப்ஸ் நானேதான் தைத்துக் கொள்கிறேன் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வாவ்! தையல் உறைகள், வீட்டு மிதியடிகள், ஓரம் தைப்பது..குழந்தைகளுக்குப் விதம் விதமா ஃப்ராக் தைப்பது .என்று...பல செய்துள்ளேன். இப்போது ஃப்ராக்ஸ் தைப்பதில்லை...

  ப்ளௌஸ் மட்டும் தைக்க மாட்டேன். ஸாரி கட்டுவதும் அபூர்வம்...எப்போதேனும் கட்டுவதற்கு வெளியில் தான் கொடுக்கிறேன். அது எனக்கு டைட்டா இல்லாம இருக்கனும்..எந்த இடத்திலும் உடம்பைப் பிடிக்கக் கூடாது..அப்படி. இருந்தா போதும் என்பதால் மத்தபடி பார்ப்பதில்லை. அதுக்கே டெய்லரிடம் பல முறை சொல்லுவேன் டைட்டா இருக்கக் கூடாது என்று.

  இப்போதும் என்னிடம் இருப்பது ஓல்ட் இஸ் கோல்ட் எனும் பழைய மெரிட் காலால் ஓட்டும் மெஷின் பழைய மெஷின் தான். ஏனோ எனக்கு பல டிசைன் போடும் என்று சொல்லப்படும் மெஷின்கள் ப்ளாஸ்டிக் பாபின் இருப்பவை ஒத்துவரவில்லை...

  ஆதி தைக்க ஆரம்பிச்சுட்டீங்கல்ல....பூந்து விளையாடுங்க. உங்க கற்பனைக்கு ஏற்ற டிசைன்ஸ் எல்லாம் செய்யலாம்..தைக்க ஆரம்பித்துவிட்டால் மனம் அதில் லயித்துவிடும்......வாழ்த்துகள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 16. ஸ்ரீமதி ரவி அவர்கள் வெங்கட்ஜியின் அம்மா பற்றி சொல்லியிருப்பது மனம் நெகிழ்ந்து அப்படியே கண்ணில் நீர் மகிழ்ச்சியில்!! மாமிக்கு நமஸ்காரங்களைச் சொல்லிடுங்க ஆதி..

  வெங்கட்ஜிக்கும் தையல் நுணுக்கங்கள் தெரிந்த்ருப்பது வாவ்!! கலக்கறீங்கப்பா ரெண்டு பேரும்!!! வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீமதி ரவி - எங்கள் நெய்வேலி வீட்டில் அடுத்த வீடு.... சிறு வயதிலிருந்தே நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக பழகி இருக்கிறோம். அந்த மாதிரி இப்போது எங்கும் இருப்பதில்லை. அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று தெரியாமல் இருக்கிறோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 17. தையலும் கற்றுக் கொண்டுவிட்டீர்களா சகோதரி! வாழ்த்துகள். மிக மிக நல்ல விஷயம். வெங்கட்ஜிக்கும் தையல் கலை தெரிந்திருக்கிறதே! இருவருமே எல்லாவற்றிலும் திறமையுடன் இருக்கின்றீர்கள் அதனால்தான் ரோஷிணியும் மிகுந்த திறமை பெற்றவராக இருக்கிறார். வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....