சனி, 23 பிப்ரவரி, 2019

காஃபி வித் கிட்டு – வனமாலி – சிமெண்ட் விளம்பரம் – முட்டை வியாபாரி - கலைஞர்காஃபி வித் கிட்டு – பகுதி – 21

ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாக பணிச்சுமை ரொம்பவே அதிகம். நண்பர்களின் பதிவுகளைப் படிக்கவோ, இந்த வலைத்தளத்தில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து எழுதவோ முடியாத நிலை. விரைவில் பணிச்சுமை தீர வேண்டும். பார்க்கலாம். வாருங்கள்… இன்றைய காஃபி வித் கிட்டு பதிவில் சில விஷயங்களைப் பார்க்கலாம்!


வனமாலி – படித்ததில் பிடித்தது:சமீபத்திய தமிழகப் பயணத்தில் நண்பர் ரிஷபன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது அவரது புதிய கவிதைத் தொகுப்பான “வனமாலி”யில் “அன்புடன் ரி” என்று கையொப்பமிட்டுத் தந்தார். இத்தனை திறமை வாய்ந்த ஒருவருடன் நட்பில் இருப்பதில் மகிழ்ச்சி. புத்தகத்தில் இருக்கும் அனைத்து கவிதைகளுமே சிறப்பு என்றாலும், ஒரு கவிதை மட்டும் இங்கே – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக….

பாஞ்சஜன்யன்

இவ்வுலகை ப்ருந்தாவனமாக்கும்
ஆசையில்தான் நீ வந்தாய்.
உன் கையில் குழல் தான் முதலில்.
கற்றினம் இல்லோம் நாங்கள்.
செவிடன் காதிசையாச்சு….
மேய்ச்சலின் போது கூட
கூர்வேல்… மிரட்டும் சவுக்கில்லை உன்னிடம்.
நகருக்கு வந்தாய்…
கோபியரும் வெண்ணையும்
கோதுகலமும் கொண்டாட்டமும் இங்கில்லை…
கீதை…. பாடத்தில் கூட வராதெனப் புரிந்தாய்….
கையில் குதிரைச் சவுக்கு….
போரொலிக்கும் பாஞ்சஜன்யம்…
அவசியமெனில் சக்கரம்…
அவதார புருஷா…
அன்பைக் கூட அதட்டலாய்ச் சொன்னால்தான்
கேட்போம் நாங்கள்.
கல்கி வரும்போது வரட்டும்.
இடைக்கால நிவாரணமாய்
இடையா… நீயே வா மீண்டும்.

ஒரு சிமெண்ட் விளம்பரம் – இது கொஞ்சம் ஓவரா இல்ல?:

ஸ்ரீலங்காவில் விற்பனையாகும் மிட்சூய் சிமெண்ட் விளம்பரம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன் – கொஞ்சம் ஓவரா இல்லை இது!கதை மாந்தர் – முட்டை வியாபாரி – பேருந்துப் பயணத்தில்:

சமீபத்தில் தமிழகம் வந்தபோது, ஒரு நாள் நெய்வேலி சென்று வந்தேன். நெய்வேலிக்கு பேருந்தில் செல்லும்போது, அலுமினிய கூடையில் எடுத்து வந்து விற்பனை செய்யும் முதியவர் என் அருகில் அமர்ந்து வந்தார். ஆத்தூர் அருகே பண்ணையிலிருந்து நாட்டுக்கோழி முட்டை வாங்கி திட்டக்குடியில் விற்பனை செய்கிறாராம். பெரம்பலூரில் ஏறி திட்டக்குடியில் இறங்கிக் கொண்டார். முட்டைகள் கொண்ட கூடைக்கு பேருந்தில் லக்கேஜ் 25/- வாங்கிக் கொண்டார் கைலி கட்டிய அரசுப் பேருந்து நடத்துனர்! என்ன கணக்கோ? இரண்டு வாரத்திற்கு ஒருமுறை முட்டை வாங்கி விற்பாராம். பேச்சுக் கொடுத்தபடியே வந்தேன். வாயில் புகையிலை அடக்கிகொண்டதால் அவரிடமிருந்து விஷயம் எதுவும் கறக்க முடியவில்லை எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு – அவருக்கோ முட்டை உடையாமல் எடுத்துக் கொண்டு போக வேண்டுமே என்ற பதட்டம். ஓட்டுனர் ப்ரேக் பிடிக்கும்போதெல்லாம் கூடையைப் பிடித்துக் கொண்டார். நடுநடுவே ஏதேனும் ஒரு முட்டையை எடுத்து பார்த்தபடி வந்தார். திட்டக்குடி சினிமா கொட்டா ஸ்டாப்பிங்கில் இறங்கும் முன்னர் – அலைபேசியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த என்னை நோக்கி, “அதை என்னமோ நோண்டிக்கிட்டே இருக்கியே... என்னதான் பண்ணற?” என்ற கேள்வி அவரிடமிருந்து.....

இந்த வாரத்தின் நிழற்படம்:

சமீபத்தில் தலைநகர் தில்லியின் Garden of Five Senses எனும் இடத்தில் Garden Festival நடந்தது. நானும் நண்பர் பத்மநாபனும் சென்று வந்தோம். பூக்கள், காய்கறிகள், செடிகள் என பலதும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். சில கலைஞர்களும் தங்களுடைய திறமையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான ஒரு இசைக்கலைஞர் – மூன்று அடிக்கும் மேல் உயரமுள்ள ஒரு பெரிய முரசினை வாசித்த கலைஞர் – இந்த வாரத்தின் நிழற்படமாக….இதே நாளில் – பின்னோக்கிப் பார்க்கலாம்:

2012-ஆம் ஆண்டு எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு இடத்திற்குச் சென்று வந்த பின் எழுதிய பகிர்வு. இந்த வருடம் கூட இங்கே உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம் – ஒரு நிகழ்வின் பகுதியாக… ஆனால் உணவு கொடுக்கும்போது செல்ல இயலவில்லை.


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

54 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  இதோ காஃபி ஆத்திட்டு காஃபியோடு வரேன்...பதிவு வாசிக்க...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி.

   பெங்களூர் திரும்பி விட்டீர்களா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ரிஷபன் அண்ணாவின் கவிதை அட்டகாசம் !!! இடைக்கால நிவாரணமாய்// ஆஹா செம...ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. விளம்பரம் ரசிக்கும்படியாக இல்லையே.ஜி! விளம்பரம் கவிதை போல இருக்கனும்...ஹிஹிஹி

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம் ரசிக்கும் படி இல்லை.. ஆமாம்... ரொம்பவே ஓவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. ரிஷபன் கவிதை அருமை. பகிர்வும் நன்றாக இருக்கிறது. விளம்பரக் காணொளியும், உங்கள் பழைய பதிவையும் அப்புறமாய்ப் பார்க்க/படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியும் பதிவும் நீங்கள் பார்த்து விட்டீர்கள்.... அதன் பிறகு தான் நான் இங்கே பதில் சொல்ல வருகிறேன்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 5. நெய்வேலிப் பயணம் ஜோர். நீங்கள் கேள்வி கேட்டால் பதில் இல்லை. உங்களை மட்டும் அவர் கேட்கலாமோ.
  ரிஷபன் ஜியின் கவிதை கண்ணன் காதில் விழுந்தால் தேவலை
  மிக மிக அருமை.
  மிட்சூயி விளம்பரம் யக்.ரசிக்கவே முடியவில்லை.
  ட்ரம் வாசிப்பவரின் ஓவியம் தத்ரூபமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ட்ரம் வாசிப்பவரின் ஓவியம் - ஓவியம் அல்ல நான் எடுத்த நிழற்படம்.....

   மிட்சூயி விளம்பரம் - யக்! அதே தான்!

   கண்ணன் காதில் விழுந்தால் தேவலை! அவன் காதில் விழட்டும் என்பதே எனது எண்ணமும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 6. முட்டை வியாபாரி பாவம் தான்...முட்டைகள் உடையாமல் எடுத்துச் செல்லனுமே.

  அது சரி இப்படி நடத்துநர் கைலி கட்டிக் கொண்டு வரலாமோ?

  படத்தில் இருப்பவர் வயதானவர் போல இருக்கிறாரே இவரா அவ்வளவு பெரிய முரைசை வாசித்தார் வாவ்!! படம் மிக அழகா இருக்கு..அவரது அழகான சிரிப்பு!

  நானும் பின்னோக்கிப் போய்ட்டு வரேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முட்டை வியாபாரியின் பயம் நியாயமானது.

   கைலி கட்டிக் கொண்டு வரலாமா? வந்தார்... வரலாமா என்பது தெரியவில்லை. அவருக்கு ஏதாவது உடல் பிரச்சனையாக இருக்குமோ என்னவோ....

   முரசு வாசித்த பெரியவர் - பற்கள் இல்லாத காரணத்தினால் முரசை வாசிக்கும்போது அவரது முகத்திலுள்ள சதை பயங்கரமாக ஆட, அதுவே ரொம்பவே அழகாக இருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. குட்மார்னிங் கிட்டு! உங்கள் பணிச்சுமை தீர பிரார்த்திக்கிறேன். எனக்கும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

   உங்களுடைய பணிச்சுமையும் தீர எனது பிரார்த்தனைகள். சில சமயங்கள், பிரார்த்தனை செய்வதை விட வேறு ஒன்றுமே நம்மால் செய்ய முடிவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. இடைக்கால நிவாரணமாய்
  இடையா... நீயே வா மீண்டும்...

  ஆஹா...

  அருமை.

  //கல்கி வரும்போது வரட்டும் //

  இல்லீங்க சரியா சனிக்கிழமை அன்னிக்கி காலைல கல்கி கைக்கு வந்துடுது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இல்லீங்க... சரியா சனிக்கிழமை அன்னிக்கி காலைல கல்கி கைக்கு வந்துடுது!!///

   ஹாஹா.... இங்கே ஒரு கடையில் தமிழ் இதழ்கள் வருகிறது என்றாலும் நான் வாங்குவதோ, படிப்பதோ இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. மிட்சுய் சிமெண்ட் விளம்பரம் ரொம்பவே ஓவர். பெயரைப்பாத்தால் சீனவாசனை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பவே ஓவர் - அதே அதே.... ஸ்ரீலங்கா விளம்பரம் எனத் தெரிகிறது - சிமெண்ட் சீனாவிடமிருந்து வாங்குகிறார்களோ என்னமோ!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. //கைலி கட்டிய அரசுப்பேருந்து நடத்துனர் //

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  // அதை என்னதான் பண்றே...?"

  ...ஹா. ஹா.... ஹ்ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை என்னதான் பண்றே! :)))

   அவர் கேள்விக்கு அப்போது என்னிடம் பதில் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. ரிஷபன் அவர்கள் கவிதை அருமை.இடையனின் வரவை நாங்களும் எதிர்ப்பார்க்க செய்து விட்டார்.
  காணொளி மிகைதான். எவ்வளவு காலமாய் சுவற்றை ஓட்டை போடுவதில் காலத்தை தொலைத்து விட்டனர்.
  முட்டை வியாபாரி கேள்வி தான் முதியவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் முக்கியமான கேள்வி. நடத்துனர் பணியில் இருக்கும் போது சீருடை அணியாமல் லுங்கி!
  உங்கள் பணிச்சுமை , ஸ்ரீராம் பணிச்சுமை குறைய வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி மிகை - உண்மை.

   பலரின் கேள்வி தான் அந்த முட்டை வியாபாரியிடமும்....

   பணிச்சுமை குறைய உங்கள் வேண்டுதல்.... நன்றிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
  2. உங்கள் பணிச்சுமை விரைவில் தீரட்டும் ஸ்ரீராம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி,

   நீக்கு
 12. பெரியவர் படம் சாந்தம். பழைய பதிவை இப்போதுதான் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தில் சாந்தமாகத் தெரிந்தாலும், பெரியவர் உணர்வு பொங்க முரசினை வாசித்தார்! :)

   பழைய பதிவு படித்தது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 14. கவிஞர் ரிஷபனின் கவிதையும், முட்டை வியாபாரியுடன் தங்களின் பயணம் பற்றிய தகவலும், பதிவிட்ட நிழற்படமும் காபியின் சுவை போல் அருமையாக இருந்தன. பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் உள்ள பகுதிகள் அனைத்தையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 15. அந்த விளம்பரத்தை நானும் எடுத்து வச்சிருந்து இப்பதான் மாத்தினேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... சுட்ட படம் பதிவுக்காகவா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 16. பதில்கள்
  1. இங்கே உங்கள் வருகை கண்டு எனக்கும் மகிழ்ச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 17. இப்போத் தான் விளம்பரக் காணொளி பார்த்தேன். சிமென்ட் அவ்வளவு உறுதியானதா? இஃகி, இஃகி, எனக்குச் சிரிப்புத் தான் வந்தது! அவ்வளவு வருஷம் ரெண்டு பேரும் கல்யாணம் ஆகாமலும் இருந்திருக்காங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ரொம்ப ஓவரா இருக்கே! ))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு வருஷம் ரெண்டு பேரும் கல்யாணம் ஆகாமலும்.... ஹாஹா.... அதான் ஓவரா இருக்குன்னு சொன்னேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 18. ரிஷபனின் கவிதை வழக்கம்போல் அட்டகாசம்.முகநூலிலும் கவிதை மழை பொழிகிறார். இடைக்கால நிவாரணமாய் எதுக்கு? நிரந்தரமாய்த் தீர்வு காண வந்து அவதரிக்கணும். நல்ல மாற்றங்கள் ஏற்படணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரந்தரமாகத் தீர்வு காண வந்து அவதரிக்கணும்.... உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 19. அன்பைக் கூட அதட்டலாய்ச் சொன்னால்தான்
  கேட்போம் நாங்கள்.
  கல்கி வரும்போது வரட்டும்.
  இடைக்கால நிவாரணமாய்
  இடையா… நீயே வா மீண்டும்.


  கொஞ்சம் பொலிடிகலாக தோன்றுகிறது. காரணம் டயமிங் அப்படி. எலெக்சன்
  Jayakumar​​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... அரசியல்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 21. முட்டை வியாபாரியின் கேள்வி புன்னகைக்க வைத்தது.
  வயதான இசைக்கலைஞரின் புன்னகை மிக மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 22. மிட்சூய் சிமிண்ட் ஓட்டைபோட 25 வருடம் ஆகிடுச்சே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 25 வருடம்.... ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 23. காஃபி வித் கிட்டு அருமை...

  சும்மா ஒரு ஓட்டை போட 25 வருசமா?... நம்ம ஊர் ஊழல் பெருச்சாளிகளை விட்டிருந்தால் மிட்சூய் கம்பெனியே சூய்.. சூய் என்று போயிருக்கும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 24. நல்ல தொகுப்பு.

  ரிஷபன் அவர்களின் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 25. சிமெண்ட் விளம்பரம் ரொம்பவே ரொம்பவே ஓவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி!

   நீக்கு
 26. சிமெண்ட் விளம்பரம்..எனக்கு பிடிச்சது..லாஜிக் ஓட்டைன்னாலும் அந்த சுவரின் ஓட்டை அழகு..அப்றம் ரிஷபனின் கவிதை சொல்லாடல் அற்புதம்...முட்டையினை உடையாமல் கொண்டுசெல்லும் லாவகத்தில் பதிவினையும் உடையாமல் எடுத்து வந்திருக்கும் காபி வித் கிட்டுக்கு ஒரு ஷொட்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....