திங்கள், 26 ஏப்ரல், 2010

இதுதாண்டா மைசூர்பாக்!
என் நண்பருக்கு சமையல்ல ரொம்பவுமே ஈடுபாடு! அவ்வப்போது எதாவது புதுப்புது முயற்சில இறங்கிப் பார்த்துடுவார். போன தீபாவளி சமயத்தில அவருக்கு மைசூர்பாகு பண்ணனும்னு ஆசையோ ஆசை. அதுனால வேட்டியை மடிச்சிக் கட்டிட்டு சமையல் களத்தில இறங்கிட்டாரு. இருக்கிற எல்லா சமையல் குறிப்பு புத்தகங்களையும் புரட்டிப்போட்டு “மைசூர்பாகு” செய்வது எப்படின்னு ஒரு சிறிய பேப்பர்ல அவரோட குறிப்ப எழுதி வைச்சுக்கிட்டு என்னவோ “கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” காரங்களுக்கே தான் தான் மைசூர்பாகு செய்ய சொல்லிக் கொடுத்த மாதிரி சமையலறைக்குள் நடிகர் பி.எஸ்.வீரப்பா மாதிரி வெகு வீராப்பா போனார்.

சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து பலவிதமான வாசனைகள். அதுல நெய் வாசனை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே வர ஆரம்பித்தது. அப்பப்ப வாணலில கரண்டி தட்டற சத்தமும் கூடவே முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை எல்லாம் நெய்ல வருத்து போட்டாதான் “மைசூர்பாகு” எடுப்பா இருக்கும்னு நடுநடுவுல அவரோட நிபுணர் கருத்து வேற எங்கள் காதில் விழுந்தது. பலமான எதிர்பார்ப்போடு நாங்க எல்லோரும் வெளியே காத்திட்டிருந்தோம்.

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வாணலியில் இருந்ததை நெய் தடவி வைத்த ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி வெளியே கொண்டு வந்து எங்களின் முன் வைத்துவிட்டு “கொஞ்ச நேரம் ஆறட்டும், அப்புறம் கத்தியால துண்டு போட்டு சாப்பிடலாம்” என்று சொன்னவரின் வாயிலிருந்து இன்னொரு முத்தான நிபுணர் கருத்தும் உதிர்ந்தது. “பாருங்க, பார்க்கும் போதே சாப்பிடணும்போல இருக்கு இல்ல!” என்று.

கொஞ்ச நேரத்துக்கப்புறம் ஒரு கத்தியில் நெய்யைத் தடவி தட்டுல இருந்ததைத் துண்டு போட களமிறங்கினார். கத்தி உள்ளே போகாததால இன்னும் கொஞ்சம் பலமா அழுத்தினதில் கத்தி உடைஞ்சு துண்டா போச்சு. “சே ஒரு கத்திகூட இந்த வீட்டுல சரியா இல்ல!”-ன்னு சலிச்சுக்கிட்டே வேறு ஒரு கத்தியால் முயற்சி பண்ணார். கொஞ்ச நேர போராட்டத்துக்குப் பின் அலைபேசியை எடுத்து யாரு கிட்டயோ பேசி இந்த கதையை சொல்லி இதை சரி செய்ய எதாவது வழி இருக்கான்னு கேட்டார்.

அவர் அதன் மேல் கொஞ்சம் பாலை விடச் சொன்னார் போல. சரின்னு அரை லிட்டர் பாலை விட்டா அது ஊறி வந்துடும், அப்புறம் துண்டு போடலாம்னு நினைச்சா தட்டில் இருந்த மைசூர்பாகு ‘உனக்கும் பெப்பே, நீ விட்ட பாலுக்கும் பெப்பே”னு நண்பரைப் பார்த்து சிரிச்சது. சோகத்தோடு அந்த தட்டை எடுத்து ஃப்ரிட்ஜ்ல வைச்சு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு திரும்பவும் முயற்சி பண்ணார். நாங்க வீட்டுல இருந்த சுத்தி, உளி எல்லாம் எடுத்து அதை உடைச்சா, சில்லு சில்லா வந்தது. அதை எடுத்துப் போட்டு மிக்ஸில ஒரு ஓட்டு ஓட்டி திரும்பவும் வாணலியில் நெய்யைக் கொட்டி அதில் போட்டு கிளறினார். அது ஒரு மாதிரி அல்வா பதத்துக்கு வந்ததும் சூட்டோட அதை உருண்டைகளா உருட்டி “இது தாண்டா மைசூர்பாகு”-னு எங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு குளிக்கப் போய்ட்டார்.

போவதற்கு முன்னாடி "இந்த மைசூர்பாகு அல்வாவை வாயில போட்டா நெய் மாதிரி கரையும்"-னு வேற சொன்னார். நாங்களும் அதை நம்பி வாயில போட்டு ஒரு கடி கடிக்க ரொம்ப நாளா ஆடிட்டு இருந்த என் இன்னொரு நண்பரின் ஒரு பல் "அய்யய்யோ நம்மால முடியாதுப்பா"-ன்னு வாயில இருந்து தாவி வெளியில் வந்து விழுந்ததுதான் மிச்சம்.

சரி பசிக்கு கொஞ்சம் தண்ணியையாவது குடிச்சு வைப்போம்னு சமையலறைக்குப் போனா – அது ஒரு யுத்த பூமி மாதிரி களேபரமா இருந்தது. அதைச் சுத்தம் செய்யவே இரண்டு மணி நேரம் ஆச்சுன்னா பாருங்களேன்.

இப்ப கொஞ்ச நாளா “ஜாங்கிரி” செய்யப்போறேன்னு எங்களை எல்லாம் கதி கலங்க வச்சிகிட்டு இருக்காரு. "யாராவது எங்களை காப்பாத்துங்களேன்!" ப்ளீஸ்.

36 கருத்துகள்:

 1. நல்லாக் கிண்டியிருக்கீங்க மைசூர் பாக்கை! கலக்கல்ஸ்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன்.

   நீக்கு
 2. பி.எஸ். வீரப்பா வீட்டுக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போயிருக்கக் கூடாதா? போன வாரம்தான் அனாவசியமாக பல் டாக்டருக்கு 500 ரூபாய் பீஸ் கட்டினேன். அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். (அந்த மாதிரி வித்தியாசமான மைசூர்பாக் அல்வா சாப்பிடவுந்தான்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... பல் டாக்டர் பாவம் - பிழைத்துப் போகட்டும். அவருக்கும் வருமானம் வர வேண்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 3. //////ஒரு கத்தியில் நெய்யைத் தடவி தட்டுல இருந்ததைத் துண்டு போட களமிறங்கினார். கத்தி உள்ளே போகாததால இன்னும் கொஞ்சம் பலமா அழுத்தினதில் கத்தி உடைஞ்சு துண்டா போச்சு. “சே ஒரு கத்திகூட இந்த வீட்டுல சரியா இல்ல!”-ன்னு சலிச்சுக்கிட்டே வேறு ஒரு கத்தியால் முயற்சி பண்ணார்/////////


  ஏலே மக்கா பார்த்துல !
  எதுக்கும் அடுத்த முறை அவர் இதுபோன்று பண்ணத்தொடங்கினால் முதல் நாளே நான் ஒரு ரம்பத்தோட அங்கே வந்துவிடுகிறேன்ல .

  கலக்கல் பாக்கு . பகிர்வுக்கு நன்றி .

  ஏலே மீண்டும் வருவேன்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பனித்துளி சங்கர்.

   நீக்கு
 4. அய்யா, மைசூர் பாக் . நமக்கும் ஒரு துண்டு கிடைக்கும் என நாவில் நீர் ஊற காத்துக்கொண்டிருந்த என் எண்ணத்தில் மண் விழுந்தது உமது நண்பர், .ஜாங்கிரியோ அல்லது ஜிகிர்தண்டவோ செய்ய ஆரம்பிக்கும்முன் ஒரு பதினைந்து நாட்கள் நீங்கள் விடுமுறையில் சென்னை வருவது நல்லது.

  செய்திகளை கோர்வையாகவும் அதே சமயத்தில் நகைச்சுவை கலந்தும் வழங்கிய உங்கள் எழுத்து திறமை மேன்மேலும் மிளிரட்டும்..

  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மந்தவெளி நடராஜன் சித்தப்பா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   நீக்கு
 6. அந்த மைசூர் பாக் மிச்சம் இருக்கா.. ரெண்டு பார்சல் அனுப்புங்க.. இங்கே ரெண்டு பேரை பழி வாங்கணும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுல நான் ஒருத்தனா இருக்கக்கூடாதா ரிஷபன் சார்...

   நீக்கு
  2. ரெண்டு பேரை பழி வாங்கணும்! ஹாஹா... பாவம் விட்டுடுங்க.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
  3. ஹாஹா... ஸ்வீட் பிடிக்கும் தான் - அதுக்காக இப்படியுமா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை சிவா.

   நீக்கு
 8. பாவம்..உங்கள் நண்பர்..எதோ போனாபோகுது என்று உங்கள் எல்லோரையும் அழைத்து மைசூர்பாகு செய்து கொடுத்தால், அவரை இப்படியா தக்குவது...நல்ல காமடியான பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஆச்சல்.

   நீக்கு
 9. படித்து விட்டு கீ போர்டில் கமென்ட் அடிக்க விரலை வைக்கும்போது தன்னை அறியாமலேயே அழுத்தமா அடிக்குது விரல் அந்த மைசூர்பாகு ஞாபகத்தில்! (இதைவிட அழுத்தமான பாராட்டு உங்கள் பதிவுக்கு கிடைக்க முடியுமா?) அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழுத்தமாக அடிக்கும் விரல்! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனார்த்தனன் ஐயா.

   நீக்கு
 10. ஹாஹா, இதைச் சாப்பிடச் சொல்வீங்களோங்கற பயத்திலேயே யாரும் இங்கே எட்டிப் பார்க்கலை போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... சிலபேரைச் சொல்லுவாங்களே..... ஒட்டடைக் குச்சிக்கு புடவை கட்டிவிட்டாலும் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பாங்கன்னு.... அதுமாதிரி... எனக்கு எதில் இனிப்பு போட்டு ஸ்வீட் கொடுத்தாலும் சாப்பிடுவேன். கல் மாதிரி அருக்குன்னெல்லாம் நினைக்க மாட்டேன்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா நெல்லை எங்க வீட்டுலையும் அப்படி ஆட்கள் உண்டு. ஸ்வீட்டுனு சொல்லி சீனி அல்லது சர்க்கரை போட்டா போதும் அவ்வளவுதான்...

   கீதா

   நீக்கு
  3. பல பதிவுகள் இப்படித்தான் நிறைய பேர் வராமல் காத்து வாங்கும் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. இனிப்பாக இருப்பது அனைத்தும் பிடிக்குமா உங்களுக்கு! மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். எனக்கும் இனிப்பு பிடிக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. எங்கள் வீட்டிலும் இனிப்புப் ப்ரியர்கள் உண்டு கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கீதாக்கா பின்னூட்டத்தை நானும் வழிமொழிந்து ஆதரிக்கிறேன்! தலைப்பு ராஜசேகர் நடித்த தெலுங்கப்படத் தலைப்பு போல இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெலுங்குப் படத் தலைப்பு! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. முதல் பத்தியைப் படித்ததும் என்னை எதுக்கு வெங்கட் கலாய்த்திருக்கார் என்று யோசித்தேன்....

  பழைய இடுகையின் சுட்டி கொடுப்பது நல்ல உத்தி. படிக்காதவைகளைப் படிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பழைய இடுகையின் சுட்டி கொடுப்பது நல்ல உத்தி. படிக்காதவைகளைப் படிக்க முடியும்// உண்மை நெல்லைத் தமிழன். அதனால் தான் இப்படி தந்து வருகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. அப்போ கருத்துரை இட்டவங்கள்ல பெரும்பான்மை இணையத்துல இல்லை கவனிச்சீங்களா? சேட்டைக்கார்ர் போன்ற திறமைசாலிகள் எழுதறதையே அனேகமா நிறுத்திக்கிட்டாங்எ, நல்ல இனிப்புக் கடை கஸ்டமர்களைப் பத்திக் கவலைப்படாமல் கடையை இழுத்துமூடிவிடுவதைப் போல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் நெல்லைத் தமிழன். அப்போது எழுதியவர்களில் பலர் இப்போது எழுதுவதில்லை - அல்லது முகநூலில் மூழ்கி விட்டார்கள்.

   இனிப்புக்கடை கஸ்டமர்களைப் பத்திக் கவலைப்படாமல் கடையை இழுத்து மூடிவிடுவதைப் போல - நல்ல ஒப்பீடு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  மைசூர்பாகு கதை ரொம்பவே நகைச்சுவையாக இருந்தது. மறுபடியும் அந்த அல்வா போன்ற, இல்லையில்லை.. கமர்கட் போன்ற பதத்தை என்ன செய்தீர்கள்? ஹா ஹா ஹா ஹா. பதிவை படித்து மனம் விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 15. வெங்கட்ஜி சிரித்து விட்டேன்! வாசித்து. ஹா ஹா ஹா 2010 ல எழுதியிருக்கீங்க இனி உங்களை எப்படி ஜாங்கிரிலருந்து காப்பத்தறதாம்?!! காலம் கடந்து போச்சே!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாங்கிரியிலிருந்து எப்படி காப்பாத்தறது! ஹாஹா... அதிலிருந்தும் தப்பியாச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....