திங்கள், 12 ஏப்ரல், 2010

தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி!
தமிழ் மக்களே! நாம் எல்லோரும் சீக்கிரமாகவே இளைய தளபதி விஜய்யோட ”காவியங்களி”-லிருந்து தப்ப வேண்டுமா? அதுக்கு ஒரு நல்ல வழி சொல்றேன். அவரிடம் போய் நீங்க ஹிந்தி படத்துல நடிச்சீங்கன்னா உங்களுக்கு ஆஸ்கர் நிச்சயம்னு சொல்லி அவரை ஒரேயடியா புகழ்ந்து தள்ளி அவரை பாலிவுட் பக்கம் அனுப்பி வைக்கிற வழியைப் பாருங்க. அவர் ”நான் மறத்தமிழன், தமிழ் மக்களுக்காகவே வாழ்வேன், அவர்களுக்காகவே தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பேன்” அப்படி இப்படின்னு சொன்னாலும் விடவே விடாதீங்க.

அவர் அப்படி சொல்வதற்கும் காரணம் இருக்கலாம். “ஆமா, தமிழ்ல பேசி நான் நடிக்கிற படம் எல்லாமே ஊத்திக்கிது, இதுல ஹிந்தி படத்துல வேற நடிக்கணுமா? கேட்கவே வேணாம், கண்டிப்பா பெட்டிய உட்டு வெளில வரவே வராது” என்ற பயமும் இருக்கலாம்.

இப்படியெல்லாம் அவர் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்குன்னு பாவம் அவருக்குத் தெரியல! கண்டிப்பா அது மட்டும் அவருக்குத் தெரிஞ்சா உடனே மும்பைல ஒரு வீட்டை வாங்கிப் போட்டுட்டு பாலிவுட் படத்தில நடிக்க[!] ஹாயா கிளம்பிடுவார், நம்ம தமிழ் மக்களுக்கும் அவருடைய படத்தை பார்ப்பதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு விடுதலை கிடைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

கடந்த ஒரு வாரத்திலேயே நான் ஐந்து-ஆறு ஹிந்திக்காரங்க அவங்களோட மொபைல்ல இளைய தளபதியோட கில்லி படத்தில வர ”அப்படி போடு போடு கண்ணாலே” பாட்டைப் போட்டுக் கேட்டுட்டு இருந்ததைப் பார்த்தேன். அப்படி கேட்டவங்க யாருக்குமே தமிழ் சுட்டுப் போட்டாலும் வராது, ஆனாலும் அப்படி ஒரு ஈடுபாடோட, உணர்ச்சிவசப்பட்டு, பரவச நிலையில இருந்தாங்க. ”தில்லி மெட்ரோ”-ல ஒரு பையன் என்னடான்னா ஒரு படி மேலே போய் அந்த பாட்டை அலைபேசியில் இரண்டு மூன்று தடவை கேட்டபடியே கையக் காலை அசைச்சு, பக்கத்தில இருக்கவங்க கண்ணை பதம் பாத்துக்கிட்டிருந்தான்.

இதுவாவது பரவாயில்ல, நேத்து வீட்டுக்கு பின்னாடி ஒரு ஹிந்தி பையனுக்கு பிறந்த நாள் விழான்னு போனா, இந்த கருத்தாழமிக்கப் பாட்ட அலற விட்டுட்டு ஒரே ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்.

அதனால தாய்த் தமிழ் நாட்டுல இருக்கற மக்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். இளைய தளபதிக்கு ஹிந்தி மக்கள்கிட்ட இருக்கிற வரவேற்பை அவரிடம் சீக்கிரமாவே தெரிவிங்க! ஏதோ நம்மால ஆன உதவி செய்வோமே என்ற நல்லெண்ணம் தான் [கூடவே அவர்கிட்ட இருந்து நம்மை எல்லாம் காப்பாத்திக்கலாம் என்ற நப்பாசையும்!].

8 கருத்துகள்:

 1. நீங்கள் விஜயின் புகழை சொல்றிங்களா அல்லது புகழ்வதுபோல ஆப்படிக்கின்றிங்களா? நல்ல பதிவு. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. என்னோட முடிவை நானே நினைச்சாலும் மாத்திக்க முடியாது. நல்ல முடிவு. தமிழ் ரசிகர்களுக்கு விடிவு காலம் வரும்.

  பதிலளிநீக்கு
 3. அண்ணா உங்களோட நல்ல குணம் என்னன்னா , நம்பளை போல மும்பைகாரனும் அனுபவிக்கட்டுமே என்பதுதான். தமிழ் மக்களுக்கு நல்ல காலம் , வரப்போகிற பழைய புது ஆண்டிலிருந்து தொடங்கட்டுமே.!

  வேளச்சேரி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 4. ஹ்ம் நேத்து தான் ஒரு பையன், நாக்கமுக்க போட்டு .. யூ நோ திஸ் இஸ் ஃபோக் சாங் ந்னு பீத்திக்கிட்டு போனான்.. பாத்தா தமிழ் தெரியாதவங்களாத்தான் தெரிஞ்சுது ..

  ஆனா பாருங்க இது இசையமைப்பாளருக்கு போவேண்டிய க்ரெடிட்.. சொல்லிட்டேன் , இதை வச்சி எல்லாம் நீங்க விஜய் கிட்ட ஒரு விளையாட்டும் விளையாடமுடியாது.. அவர் கில்லி..

  பதிலளிநீக்கு
 5. ஹிஹி..! நல்ல யோசனை தான்! அது சரி, உங்களுக்கு திடீர்னு ஹிந்தி பட ரசிகர்கள் மேலே அப்படியென்ன கோபம்? :-))

  பதிலளிநீக்கு
 6. பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன் .

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....