ஞாயிறு, 7 ஜூன், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி நான்கு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



சும்மா சொல்லக்கூடாது அப்பா வேஷத்துல ஜம்முனு நல்லாவே இருக்க கணேசா… முகத்த மட்டும் கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சுக்கிட்டா perfect ஆ இருக்கும்....😊(கன்னத்துல ரூஜ் (rouge) தடவிக்கிட்டா பத்தாது...)


சும்மா இரு மூஞ்சூறு bro.. அப்பா மாதிரி நான் ஆகணும்னு சொன்னதை அம்மா தப்பா புரிஞ்சுக்கிட்டு இந்த வேஷம் போட்டு என்னை உக்கார வெச்சிட்டாங்க.... கழுத்துல உஷ் உஷ்..😟 காலுக்கடில கபாலம்… ரெண்டு கைலயும்  உடுக்கை அப்பப்போ மாறி மாறி அதை ஆட்ட வேண்டியிருக்கு.

காமிரா கொண்டுவரேன்னுட்டு போன அம்மா... எப்போ வருவாரோ எந்தன் கலி தீர.... (வேஷம் களைய)..😒


ஆஹா பிரமாதமா பாடற விநாயகா...👏🏻


இதோ வரேன் உன்ன.....🤨


ஓம் விக்னேஷ்வராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******




செல்லம், அம்மா குடுத்த வேலை அப்படித்தான் விடாம எப்பவும் கையில வெச்சுக்கணும், good boy🥰..... ஆனா அப்பா மடில உக்காச்சிக்கும்போது பக்கத்துல வைக்கலாம் தப்பில்ல.... என்ன? தா இப்பிடி.. சமத்து..😘


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



கணேசண்ணா இன்னும் பக்கத்துல வாங்க.. பாறை வழுக்காது, ஆடாது ஆனா கொஞ்சம் சின்னது.... அதான்..

பார்க்கவும் நாம அழகா ஒத்துமையா போஸ் குடுக்கற மாதிரி இருக்கும்.. இல்லயா? என்ன நான் சொல்றது???


ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



நானா support இல்லாம நிக்கறேன்னு சொன்னாலும் அம்மாக்கு மனசு வராது, என்னைப் பிடிச்சுப்பா. பாசக்கார மனுஷி😍.. (விட்டா ஓடிடுவேன்னு பயமோ??🤔) ஆனா அந்தக் கரம் எங்கிருந்து வேணாலும் வரும்… ஆராய்ச்சி பண்ணக் கூடாது.....😊


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா நான் உன் மடில தாச்சிக்கட்டுமா ஒரே தூக்கம் தூக்கமா வருது...🥱


என்ன கிருஷ்ணா, பாதி விளையாட்டுல இப்படி ஓடி வந்து மடில விழற???? 


வா கமலி....என்ன இந்தப் பக்கம்?


அது ஒண்ணுமில்ல யசோதா நேத்து உன்

புத்திர ரத்தினம் என் வீட்டுல....


(ஓ இத்தானா......சரி சரி...😏)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



நந்தி தலையில மான் கொம்பை நட்டுட்டு என் தலைல திரிசூலத்த சொருகி வச்சிருக்காரு?அது என்ன ஆன்டெனாவா? உடுக்கு வேற இருக்கு,  அசைய முடியாது, தவம் கலஞ்சிரும்.... எப்ப

விழிப்பாரோ... வேடிக்க பாக்க வந்தது தப்போ...😟


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



ஏன் முருகா இந்த மாதிரி hairstyle & சாந்தமான முகத்தோட  நீ இருக்கும்போது எப்பவும் காவி உடை, ருத்ராக்ஷ மாலைல தான இருப்ப? இன்னிக்கி dress, நகையெல்லாம் அமக்கர்களமா இருக்கு?


அதுவா மயில் bro, இந்த அம்மாதான் இன்னிக்கி வைகாசி விசாகம் அதனால இப்படித்தான் போகணும்னு கலர் டிரஸ் +  தன் நகையெல்லாமும் போட்டு விட்டுட்டா… கையில ஒரு miniature சூலம் வேற குடுத்துட்டா… காது தோடு இழுக்கத்தான் இழுக்குது.. என்ன செய்யறது? அம்மாவையும் திருப்திப் படுத்தணுமில்ல...


ஆமாமா, படுத்தணும்...😕.


(என்ன sound வேற மாதிரி வருது??🤨)


🦚ஓம் சரவண பவாய நமஹ🦚🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

7 ஜூன் 2026


6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. படங்களும் அதற்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் - அதே...

    விநாயகர் பாவம்! ஹாஹா அடுத்தாப்ல முருகனுக்கும் அம்மா வேஷம் போட்டிடுவாரோ? இல்லை அவர் அப்பாவை மாதிரின்னு சொல்லிருக்கமாட்டார்.....என் வழி தனி வழின்னு போனவராச்சே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் சொல்லும் கருத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. என் வேலைச் சொல்லற...முதல்ல உன் பாம்பைத் தள்ளி வை!

    கணேசண்ணாவை நடுல வைச்சிருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்காது பாருங்க!!!

    ஏஐ படங்கள் சிரிக்க வைக்கிர்து இந்த போனஸ் கையைச் சொல்றேன். அதுவும் குழந்தையின் கை போல இருக்கு!! போடுறவங்க அதையும் சரி செய்யலாமே...ஏஐ செஞ்சு கொடுக்குதே!

    கிச்சா ஐஸ் வைப்பதில் கில்லாடியாச்சே!

    அடுத்த படங்கள் எல்லாம் ஏஐ யின் விஷமங்கள்! இல்லைனா அப்படிக் கொடுக்கப்படும் instructions?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஐ படங்கள் - சில இப்படித்தான் - கொடுக்கும் ப்ராம்ப்ட் சரியாக இருந்தால் நல்லது. சரியாக வராத போது இன்னமும் மாற்றிக் கொடுக்க முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

      படங்களுக்கான தங்கள் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்தது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....