மார்க்கரெட் ஆயாம்மா:
கோவையின் அவினாசி சாலையில் உள்ள
YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும்
காணப்படும் இந்த ஆயாம்மாவிடம் எல்லா குழந்தைகளுமே அன்போடு வளைய வருவார்கள். சாப்பிட
மறுப்பவர்களுக்கு அன்போடு ஊட்டி விட்டு, கைகளை சுத்தம் செய்து வகுப்புக்கு அனுப்பி
வைப்பார். எங்களை சைக்கிளில் காலையில் கொண்டு விடும் அப்பா பணம் தந்து மதியம் எதிர்
சாலையில் கொட்டி கிடக்கும் தர்பூசணி பழக்கடைக்காரரிடம் எனக்கும் தம்பிக்கும் வாங்கி
தரும்படி சொல்லிவிட்டு செல்வார். மதியம் எங்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு ஆயாம்மா
வாங்கி வந்து தருவார். நாங்களும் அதை சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு செல்வோம்.
நாங்கள் அந்தப் பள்ளியை விட்டு மாறிய
பின்னரும் எங்கள் வீட்டு வழியே செல்ல நேர்ந்தால் கட்டாயம் எங்களை பார்த்து விட்டுத்
தான் செல்வார். அம்மாவும் அவருக்கு தன்னால் முடிந்த வகையில் அரிசி, துணிமணிகள் என்று
கொடுத்து உதவி செய்வார்.
இன்றும் மனதில் நிற்கும் ஆயாம்மாவின்
முகம். இது போல் பணத்திற்கு அப்பாற்பட்டு வேலையில் உண்மையாக இருக்கும் மனிதர்களை பார்ப்பது
அரிது தான்.
குட்டி தேவதை:
கீழ்வீட்டு குட்டிதேவதை
புதுச்சீருடையை காண்பித்து
துள்ளி குதித்து
ஓடிச் செல்வதைப்
பார்த்ததும்
அந்த உற்சாகம்
என்னுள்ளும்
ஒட்டிக்கொண்டது!!
இந்த நாளை
இனிமையாக்கிய
குட்டிப்பொண்ணுக்கு
அன்பு முத்தங்கள்!!!
போட்டிக்கு புகைப்படம்:
சமீபத்தில் க்ளிக்கிய ஒரு
புகைப்படம்!
ரோஷ்ணி கார்னர்:
மகள் சமீபத்தில் வரைந்த ஓவியம்
ஒன்று…
படமும் கவிதையும்…
என்னவர் எடுத்த படம் ஒன்றிற்கு
நான் பகிர்ந்து கொண்ட கவிதை!
குமிழ் குமிழாய்!!
நீர்க்குமிழியாய்!!
பறந்து வரும்!!
பட்டென்று உடைந்து
கரைந்து போகும் -
நம் கவலைகளும்…
புளியோதரையும்
புளிக்காய்ச்சலும்:
நெடுநாட்களுக்குப் பிறகு மகளுக்கு மதிய
உணவுக்கு கொடுப்பதற்காக புளிக்காய்ச்சல் செய்தேன்.
ஒரு உணவுக்குழுமத்தில் நடத்திய போட்டியில்
பரிசாகக் கிடைத்த மூங்கிலால் ஆன mat மேல் வைத்துள்ளேன். இது போல் ஆறு மேட்கள் கிடைத்தன.
விரைவில் வேறு சில கதம்பச்
செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
கதம்பத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குபள்ளிக்கால நினைவுகள் இனிமைதான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகுட்டி தேவதை - ஸூப்பர்.
பதிலளிநீக்குபுகைப்படம் தெளிவாக, அழகாக...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குரோஷ்ணியின் ஓவியங்கள் மேம்பட்டு வருகின்றன. வாழ்த்துகள். சிறுவர் மலர்களுக்கு அனுப்பலாமே வெங்கட்...
பதிலளிநீக்குஅவர் படமும், உங்கள் கவிதையும் அருமை.
சில படங்கள் அனுப்பி வெளியானது. பிறகு குறைந்து விட அனுப்புவதை நிறுத்தி விட்டோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்
புளிக்காய்ச்சல்... ஆஹா... சமீபத்திய குடந்தைப் பயணத்தில் மங்களாம்பிகாவில் பு.கா வாங்கி வந்து டேஸ்ட் செய்தோம். நன்றாயிருந்தது.
பதிலளிநீக்குகும்பேஸ்வரர் கோயில் செல்லும் வழியில் உள்ள கடைத்தெருவில் உள்ள ஹோட்டலிலா? அவங்க வீட்டிலேயா? வீடுன்னா பச்சையப்ப முதலித் தெருனு நினைக்கிறேன். அங்கே ரொம்பத் தெரிஞ்சவங்களுக்குச் சாப்பாடு கூடப் போடுவதாய்ச் சொன்னார்கள்.
நீக்குஆமாம். கடைத்தெருவில்தான்.
நீக்குமங்களாம்பிகாவிலிருந்து புளிக்காய்ச்சல்... ஆஹா! ருசிக்க ஆசை வருகிறதே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எப்போதாவது வெளியில் சாப்பிடலாம் என்றால், இப்படி எல்லாம் சுவையான உணவு தர தில்லியில் யாரும் இல்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபள்ளிக் கால நினைவலைகள் என்றுமே இனிமைதான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகதம்பம் மணமும் சுவையும்
பதிலளிநீக்குநிறைந்த கதம்பச் சாதமாய்....
வாழ்த்துக்களுடன்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபள்ளிக்கூட இனிமையான நினைவுகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது. தங்களுடைய கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. தங்கள் மகளின் ஓவியம் மிகவும் அழகாக உள்ளது. அவருக்கு என் பாராட்டுக்கள். புளியோதரை படங்கள் நாவூறச் செய்கின்றன. நானும் இப்படித்தான் பளிக்காய்ச்சல் விழுது செய்து வைத்துக் கொண்டு வேண்டிய போது சாதத்துடன் கலந்து சாப்பிடுவோம். கதம்பம் இனிப்பும், முடிவில் காரமுமாக சுவையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குகதம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தாலும் ரோஸ்னியின் கைவண்ணம் மிக சிறப்பு. செல்லக்குட்டிக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குவெங்கட்ஜி அண்ட் ஆதி இனிய காலை வணக்கம். வலைப்பக்கம் வந்தாச்சு...
பதிலளிநீக்குரோஷ்ணி குட்டியின் கை வண்ணம் மிக நன்றாக டெவெலப் ஆகி வருதே...சூப்பர் ரோஷிணி!!!! வாழ்த்துகள்! பாராட்டுகள்.
புளியோதரை பார்க்கவே கண்ணைக் கவருதே. அப்படியே ரெசிப்பியும் போட்டிருக்கலாமோ...ஹிஹிஹி
இனிய நினைவுகள்.
புகைப்படம் அழகாக இருக்கிறதே!!!
குட்டி தேவதை அழகு!!! ஆதி அருமையா கவிதையும் எழுதுகின்றீர்களே!! கலக்குங்க
கீதா
வருக வருக.... சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை - மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
கதம்பம் அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎப்போதுமே பழைய நினைவுகள், மனிதர்களை நினைத்துப் பார்ப்பது ஒரு வித இனிமைதான்.
புளியோதரை தமிழ்நாட்டுக் கோயிலுக்கு வரும் சமயம் வாங்கிச் சாப்பிடுவதுதான். மற்றபடி அதிகம் பழக்கமில்லை.
ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமையாக இருக்கிறதே! பாராட்டுகள், வாழ்த்துகள்.
குட்டிதேவதை கவிதை அருமை.
படங்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கிறது. போட்டிக்கான படமா அந்த தேனீ போன்ற பூச்சி படம்.? வாழ்த்துகள் சகோதரி
துளசிதரன்
கேரளாவில் புளியோதரை பழக்கமில்லையே... தமிழகம் வந்தால் ருசிக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
முகநூலில் படித்தேன்.
பதிலளிநீக்குரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு.
மலரும் நினைவுகள் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகவிதை சூப்பர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குரோஷ்ணியின் கை வண்ணம் முகநூலிலும் பார்த்தேன். புளியோதரையும்! :) குட்டிப் பெண்ணின் சுட்டித் தனமும் அழாமல் பள்ளி செல்வதும் சந்தோஷமாய் இருக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குபடங்கள் தெளிவாக இருக்கின்றன. நன்கு பழகி விட்டது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குநிகழ்வுகள் நினைவுகளாகும்போது இனிமையானவை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்கு